இடுகைகள்

மாஃபியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாஃபியாவுக்கு எதிரான கோவை மனிதர்!

படம்
  கோவையிலுள்ள சௌரிபாளையத்தைச் சேர்ந்தவர், தியாகராஜன். 50 வயதாகும் இவர், சிட்டி முனிசிபல் கார்ப்பரேஷனுடன் இணைந்து நில ஆக்கிரமிப்பை எதிர்த்து செயல்பட்டு வருகிறார். ஆக்கிரமிப்பு நிலத்தில் கோவில், வீடு, நிறுவனம் என எது மாநகராட்சியால் அகற்றப்பட்டாலும் அதனை முழுமையாக ஏற்று சந்தோஷப்படும் ஆன்மா கோவையில் தியாகராஜனாகத்தான் இருக்க முடியும்.  ஆர்டிஐ தகவல்கள் மூலம் அரசு நிலங்களைக் கண்டுபிடித்து அதனை பிறர் ஆக்கிரமிக்காதபடி தடுத்து வருகிறார். அதனை வேலியிட செய்யுமளவு அக்கறை காட்டுகிறார். பெரும் சக்திகளின் எதிர்ப்புகளையும் மீறி  இந்த வேலையை கடந்த 16 ஆண்டுகளாக செய்துவருகிறார். இதுவரை 26 ஏக்கர்களுக்கு மேலான நிலங்களை மீட்டு அதற்கு சொந்தமானவர்களுக்கு கொடுத்திருக்கிறார். இதன் சந்தை மதிப்பு 300 கோடிக்கும் அதிகம். வீட்டுநலச்சங்கங்களுக்கு சொந்தமான நிலங்களை கூட தியாகராஜன் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டிருக்கிறார்.  கோவை மாநகராட்சியில் 50 ஆக்கிரமிப்புகளைக் கண்டுபிடித்து அதில் 40 இடங்களை மீட்டுக்கொடுத்துள்ளார். இதில் பத்து இடங்களில் சட்டரீதியான போராட்டங்கள் நடந்து வருகின்றன.  2004ஆம் ஆண்டு நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்

காட்ஃபாதர் படத்திலுள்ள நிறைய காட்சிகள் கிளிஷே ஆகிவிட்டன! - விக்கிரமாதித்த மோட்வானே - இந்திப்பட இயக்குநர்

படம்
  விக்கிரமாதித்ய மோட்வானே இந்திப்பட இயக்குநர் காட்ஃபாதர் படம் எடுக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனிதர்களைப் போலவே படத்திற்கும் நடுத்தர வயது ஆகியுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? படத்தில் எந்த ஒரு சிறிய காட்சியையும் நீங்கள் பழசாகிவிட்டது என்று கூறமுடியாது. இதைத்தான்  நேர்மையாக கூறவேண்டும். காட்ஃபாதர் படத்தில் வந்த பல்வேறு காட்சிகளை கிளிஷே என்றுதான் கூறவேண்டும. அந்தளவு படங்களில் பயன்படுத்திவிட்டார்கள். இன்று வரை காட்ஃபாதர் படங்களைப் பார்த்து மாணவர்கள், திரைப்பட இயக்குநர்கள் கற்றுக்கொண்டு இருக்கின்றனர். இதேபோல இந்தியில் எடுக்கப்பட்ட ஷோலே படத்தையும் சொல்லலாம். இந்த படமும் தனித்துவமான தன்மை கொண்டது. அன்றைய காலகட்டத்தில் இந்த படம் அதிக வசூலை செய்தது. அதேபோலத்தான் இன்று ஸ்பைடர்மேன் படமும் வசூலில் சாதனை செய்துள்ளது. இதெல்லாம் சினிமா விரும்பிகளைத் தாண்டி நடைபெறுகிறது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.  விக்கிரமாதித்த மோட்வானே திரைக்கதை எழுத்தாளராக காட்ஃபாதர் படத்தின் திரைக்கதையை எப்படி மதிப்பிடுவீர்கள்? படம் மூன்று மணிநேரம் நீளமானது. அதனை சற்று குறைத்திருக்கலாம் என நினைக்கிறேன். படம் இறுதிப்ப

மகளைப் பாதுகாக்க போதை மாபியாவோடு போராட்டம்! - ஹோம் ஃபிரன்ட்

படம்
ஹோம்ஃபிரன்ட் -2013 ஆங்கிலம் இயக்கம் ஹோம் ஃபிளெடர் திரைக்கதை சில்வஸ்டர் ஸ்டாலோன் மூலம் - ஹோம்ஃபிரன்ட் - சக் லோகன் ஒளிப்பதிவு  தியோ வான் டி சாண்டே இசை மார்க் இஷாம் அமெரிக்காவில் போதை கும்பலை பிடிக்கும் ஏஜெண்டாக இருக்கும் போலீஸ்காரர், தனது ஆபரேஷன் ஒன்றில் தோல்வியைத் தழுவ அதன் விளைவாக ஒரு உயிர் பலியாகிறது. இதன் விளைவாக, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன் செல்ல மகளோடு அமைதியாக சிறு நகரம் நோக்கி சென்று வீடுகட்டி வாழ்ந்து வருகிறார். ஆனால் அங்கும் அவரை சீண்டுகிற சூழ்நிலை திரும்ப அவரை துப்பாக்கி எடுக்க வைக்கிறது. அவரது மகளைக் காப்பாற்ற இதைச் செய்கிறார். இம்முறை பழைய பகையோடு உள்ளூர் எதிரிகளும் கைகோக்க என்னவானது போலீஸ்காரரின் நிலை மை என்பதுதான் படம். ஆஹா ஜேசன் ஸ்டாதம் பிரமாதப்படுத்தியிருக்கிறார். தன்னால் ஒரு உயிர் அநியாயமாக போனதை நினைத்து வேலையை விட்டு விலகியவர். மகளுக்காக அமைதியாக வாழ்கிறார். ஆனால் மகளுக்கு சொல்லிக் கொடுத்த தற்காப்புக்கலை அவருக்கு உள்ளூர் பகையை வலுவாக்குகிறது. கோபம், பொறுப்பு, வெறுப்பு, வன்மம், மகிழ்ச்சி என அனைத்திலும் அடக்கி வாசித்திருக்கி