இடுகைகள்

சாட்டிலைட் வரைபடங்களை உண்மையைக் கூறுகிறதா?

படம்
சாட்டிலைட்டை நம்பலாமா ? 1972 ஆம் ஆண்டு அப்பல்லோ 17 செயற்கைக்கோள் எடுத்த பூமியின் ப்ளூ மார்பிள் படம் இன்றுவரை புகழ் மங்காதிருக்கிறது . ஆனால் செயற்கைக்கோள் படங்களை முழுக்க நம்பலாமா ? 1973 ஆம் ஆண்டிலிருந்து பூமியின் பருவநிலை மாறுபாடுகளையும் காடுகளையும் கண்காணிக்கவும் செர்னோபில் கதிர்வீச்சு பாதிப்புகள் , எரிமலை பாதிப்பு ஆகியவற்றை அறியவும் செயற்கைக்கோள் படங்கள் உதவி வருகின்றன . செயற்கைக்கோள்கள் ரிமோட் சென்சார் தொழில்நுட்பம் மூலம் புகைப்படங்களை எடுத்து அனுப்புகின்றன . கூகுள் எர்த் மற்றும் எர்த் எக்ஸ்ப்ளோரர் உள்ளிட்ட சேவைகளை ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல மக்களும் பயன்படுத்தி வருகின்றனர் . இதில் பல்வேறு நாடுகளின் ரகசியமான ஆயுதக்கூடங்கள் , ஆராய்ச்சிகளையும் பிற நாடுகள் அறிந்துகொள்வது கடுமையான பூசல்களை ஏற்படுத்தக்கூடும் . வரைபடங்களில் உள்ள தெளிவு சாட்டிலைட் படங்களில் இருக்காது . எ . கா : தெருவின் பெயர் , கட்டிடங்களின் பயன்பாடு , நாட்டின் எல்லைக்கோடு போன்றவை .   

தவிக்கும் 9 லட்ச அகதிகள்!

படம்
அப்டேட்டாகும் ஐஐடி ! இந்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான ஐஐடிகளும் தன் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளன . தற்போது செயல்பட்டு வரும் 23 ஐஐடிக்கள் பாடத்திட்டத்தை வெறும் தொழில்நுட்பம் என மட்டும் அமைக்காமல் கலை , சமூகம் , மனிதநேயம் தொடர்பான விஷயங்களை உட்புகுத்த முடிவுசெய்துள்ளதாக ஐஐடி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது . " பொறியாளர்களை புதுமைத்திறன் கொண்டவர்களாக உருவாக்க இப்புதிய மாற்றங்கள் உதவும் " என்கிறார் டெல்லி ஐஐடி பேராசிரியர் ராம்கோபால் ராவ் . ஐஐடி இசை , இசைக்கருவிகள் தொடர்பான பாடங்களை உருவாக்க தொடங்கியுள்ளது . இதற்கு முக்கியக்காரணம் , பிற பட்டதாரிகளைப் போலவே ஐஐடியன்களுக்கும் வேலையின்றி தவித்ததுதான் காரணம் . பொருளாதார அறிவியல் , உளவியல் , தத்துவம் ஆகியவையும் தனிபடிப்புகளாக ஐஐடிகளில் விரைவில் இடம்பெறும் .  2 தாய்மண்ணை இழந்த ஒன்பது லட்சம் அகதிகள் ! சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போர் காரணமாக இவ்வாண்டில் இதுவரை 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் அகதிகளாக மாறியுள்ளனர் . கடந்த ஏழாண்டுகளில் இடம்பெயர்ந்த அகதிகளில் இந்த எண்ணிக்கையே அதிக

நெருப்பில் கருகிய காசு!

படம்
நெருப்பில் கருகிய காசு ! ராஜஸ்தானிலுள்ள ஆஜ்மீர் நகரிலுள்ள  பொதுத்துறை வங்கி ஏடிஎம்மில் நடைபெற்ற தில்லான திருட்டில் , திருடர்களின் எக்ஸ்பீரியன்ஸ் போதாமையால் கரன்சி மொத்தமும் கரியானது . அதிகாலை 3 மணிக்கு பர்பெக்ட்டாக காரில் வந்த திருடர்கள் கேஸ் கட்டருடன் ஏடிஎம் புகுந்தனர் . எஸ்பிஐ ஏடிஎம் அருகே நின்ற செக்யூரிட்டியை அடித்து சாய்த்துவிட்டு கேஸ் கட்டரின் மூலம் ஏடிஎம்மை அறுத்தனர் . ஆனால் பணப்பெட்டியின் இடத்தை சரியான கெஸ் செய்யாததால் நெருப்பு பட்டு 4 லட்சரூபாய் கரன்சியும் தீப்பிடித்து விட்டது . உடனே திருடர்கள் ஸ்பாட்டை விட்டு கிளம்பவும் ஏடிஎம் நெருப்பு அலாரம் அடிக்கவும் நேரம் சரியாக இருந்தது . உடனே உஷாரான போலீஸ் அங்கு வந்து சேரும்போது சிசிடிவி வீடியோவும் , கரன்சி சாம்பலும் மட்டுமே மிச்சமிருந்தது . தற்போது சிசிடிவி வீடியோவின் மூலம் திருடர்களை பிடிக்க வலைவீசி வருகிறது போலீஸ் .  

குழந்தை தொழிலாளர்களின் இறப்பு!

படம்
ஜூனியரைக் காப்பாற்றிய சீனியர் ! என்கவுண்டரில் சமூக விரோதிகளை கொல்லத்தயாராகும் போலீஸ் உயிரை தியாகம் செய்யவும் ரெடியாக இருக்கவேண்டும் என்பதை டெல்லி சீனியர் போலீஸ் தன் செயலின் மூலம் உணர்த்தியிருக்கிறார் . டெல்லியில் நடந்த என்கவுண்டரில் சப் இன்ஸ்பெக்டர் பிஜேந்தர்சிங் தேஸ்வால் தன் உடலை கவசமாக்கி சீறிய தோட்டாக்களை தடுத்து தன் ஜூனியர் கான்ஸ்டபிள் குர்தீப் சிங்கின் உயிர் காத்துள்ளார் .25 வயதான குர்தீப்சிங்குக்கு குழந்தை பிறந்து மூன்றுமாதமாகியுள்ளது . ராஜேஷ் பார்தி உள்ளிட்ட ரவுடிக்குழுவினர் நான்கு பேர் ஸ்பாட்டில் கொல்லப்பட்டனர் . இத்தாக்குதலில் சிறப்பு பிரிவைச் சேர்ந்த எட்டுபேர் காயமுற்றனர் . போலீசின் சிறப்பு பிரிவில் பதினைந்து ஆண்டுகளாக பணியாற்றிவரும் பிஜேந்தர்சிங் தேஸ்வால் இதுவரை இருமுறை குண்டடி பட்டுள்ளார் . நட்புக்காக தன் உயிரையும் கொடுக்க துணிந்த பிஜேந்தரின் வீரச்செயலை போலீஸ் வட்டாரம் புகழ்ந்து பேசிவருகிறது . மரணவிளிம்பில் குழந்தைகள் ! உலகம் முழுவதும் 5-17 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 15.2 கோடி . இதில் 7.3 கோடி குழந்தைகள் மிக ஆபத்தான த

ராஜஸ்தானில் மாணவர்களுக்கு சொற்பொழிவு வகுப்பு!

படம்
ஆன்மிகச் சொற்பொழிவு கட்டாயம் ! ராஜஸ்தானில் இனி மாதம் ஒருமுறை சாமியார்களின் புனித சொற்பொழிவுகளை கட்டாயம் கேட்டே ஆகவேண்டும் என ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டிருக்கிறது . மனிதர்களை விட பசுக்களை மீது பாசநேசமாக  உள்ள வசுந்தரா ராஜே தலைமையிலான ராஜஸ்தான் அரசு இப்போது பள்ளியின் கற்றல்முறைகளை சீர்திருத்த தொடங்கியுள்ளது . மாதம்தோறும் மூன்றாவது சனிக்கிழமை புனிதர்களின் சொற்பொழிவைக் கட்டாயம் செய்துள்ளது . மாதத்தின் முதல் சனிக்கிழமை , வரலாற்று நாயகர்களை அறிமுகப்படுத்துவதும் , இரண்டாவது சனிக்கிழமை அறநீதிக்கதைகளை கூறுவதும் , நான்காவது சனிக்கிழமை வினாடிவினா நிகழ்ச்சியும் , ஐந்தாவது சனிக்கிழமை தேசப்பக்தி பாடல்களை பாடுவதும் பள்ளியின் நிகழ்ச்சி நிரல்களாக பின்பற்றவேண்டுமென மேல்நிலைக்கல்வி வாரியம் உத்தரவிட்டு அறிவிப்பை தயாரித்து வெளியிட்டுள்ளது . அரசு , அரசு உதவிபெறும் , சிபிஎஸ்சி பள்ளிகளுக்கும் பொருந்தும் . ;

திங்கள் பிட்ஸ்! கோக்கோலா ஓனர் சர்பத் விற்றாரா?

படம்
கோககோலா ஓனர் யார்? டெல்லியில் ஓபிசி பிரிவு மக்களின் திறமைகள் குறித்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் , பன்னாட்டு நிறுவனங்களின் நிறுவனர்களைப் பற்றி வாய்க்கு வந்ததை பேசியது இணையத்தில் காமெடி வைரலாகி வருகிறது . எலுமிச்சை சர்பத்் விற்றவர் கோககோலா நிறுவனர் , மெக்டொனால்ட் உணவக தலைவர் முதலில் தாபா வைத்திருந்தார் என்று ஆளும் கட்சி அமைச்சர்களை விட உளறிக்கொட்டி , நெட்டிசன்களின் மீம்ஸில் வாலன்டியராகவே ராகுல்காந்தி அட்மிட் ஆனார் . காம்ப்ளான் நிறுவனர் கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா , கோககோலா நிறுவனர் இவர்தான் என மீம்ஸ்களை டஜன்கணக்கில் போட்டு ராகுலை கலாய்த்து தள்ளிவிட்டனர் . உண்மையில் கோக்கோலா ஓனர் அசா கிரிக்ஸ் கேண்ட்லர் , மருந்துக்கடையில் கிளர்க்காக இருந்து பின்னர் கோலா பார்முலாவை 550 டாலர்களுக்கு வாங்கினார் என்பதே உண்மை . எலக்‌ஷன் முடிஞ்சாச்சே ப்ரோ ?     2 மோடி பெயரில் மோசடி ! டெல்லியைச் சேர்ந்த நந்நிகிஷோர் சின்கா தன் தந்தையின் விபத்து செலவுக்கு அரசு உதவி கிடைக்குமா என்று இணையத்தில் தேடிவந்தார் . அப்போது கிடைத்த இணையதளம் அவரது வாழ்வில் மறக்கமுடியாத

லிங்காயத்துகளுக்கு தனிமத அந்தஸ்து!- வரலாற்று பார்வை

படம்

செய்திபரிமாற்றத்திற்கு புறாவை பயன்படுத்தும் இந்திய மாநிலம்!

படம்
புறாவிடு தூது !- ச . அன்பரசு ஒரு நிமிஷத்தில் பத்து மெசேஜ்களை வாட்ஸ்அப்பிலும் , டஜன் செல்பிகளை இன்ஸ்டாகிராமிலும் பறக்கவிடும் காலத்தில் தபால் அனுப்புவதே இன்று வினோதம்தான் . பரபரப்பான இந்தகாலத்தில் புறா மூலம் செய்தி அனுப்பினால் உலகம் நம்மை என்ன நினைக்கும் ? விநோதரச மஞ்சரியில் நம் பெயர் வந்துவிடும் . பகடிகளுக்கு அஞ்சாமல் அன்றிலிருந்து இன்றுவரை ஒடிஷாவில் புறாக்களை பேணிவளர்த்து தூது அனுப்பி வருகிறார்கள் . உலகிலேயே இன்று இந்தியாவில் ஒடிஷா மாநிலத்தில் மட்டுமே புறாக்களின் செய்தி சேவை செயல்பாட்டிலுள்ளது . 1946 ஆம் ஆண்டு  இந்திய ராணுவம் ஒடிஷா காவல்துறையிடம் சோதனைகளை செய்துபார்க்க 200 புறாக்களை கொடுத்தது . தகவல் தொடர்பு அற்றுப்போகும் அபாயகரமான சூழலில் காவல்துறை செய்திகளை பரிமாறிக்கொள்ள இப்புறாக்கள் உதவும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம் . கோரபுத் மாவட்டதில் தொடங்கி புறாக்களின் செய்திசேவை பிற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது . 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று , பிரதமர் ஜவகர்லால் நேரு கட்டாக் அலுவலகத்திலிருந்து புறா செய்தி சேவையை தொடங்கிவைத்து சம்பல்பூர் பகுதிக்கு

மக்களைக் கொல்லும் சால்டன் சீ ஏரி

படம்
நச்சு ஏரி ! கலிஃபோர்னியாவிலுள்ள ஏரி வேகமாக சுருங்கி வருவதோடு , நச்சு மாசுக்கள் மக்களின் வாழ்வை குலைத்து வருகின்றன . 2009 ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவிலுள்ள இம்பீரியல் கவுண்டியில் மிட்செல்லின் தங்கை மேரி ஆஸ்துமா தாக்குதல் ஏற்பட்டு சில மணிநேரத்தில் இறந்துபோனார் . காரணம் , நுரையீரலில் ஏற்பட்ட தொற்று . 27 வயதில் எண்பது வயதானவர் போல நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது . இம்பீரியல் கவுண்டியில் ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பிரச்னை இருக்கிறது . பூச்சிக்கொல்லிகள் , பயிர்களை எரிப்பது , கார்களில் வரும் புகை , மணல் புயல் என ஒவ்வொரு காற்றின் ஒவ்வொரு அங்குலத்திலும் மாசுக்கள் அதிகரித்து வருகின்றன . சால்டன் ஏரியில் தொடர்ச்சியாக நீர் குறைந்து மாசுக்கள் அதிகரித்துவருகிறது . இரானின் ஊர்மியா ஏரி , ஆப்பிரிக்காவின் சாட் ஏரி ஆகியவை இதுபோல 90% வறண்டுபோன நிலையை எட்டியவை . சால்டன் ஏரி நீர் குறைய குறைய வறண்ட அதன் நீர்ப்பரப்பிலிருந்து வரும நச்சு துகள்கள் காற்றில் பரவத்தொடங்கியதுதான் மேரி போன்றவர்கள் ஆஸ்துமா தீவிரமாகி இறக்க காரணம் .

டிஎன்ஏ லீக்!

படம்
டிஎன்ஏ லீக் ! டிஎன்ஏ சேவைகளை செய்து வந்த மைஹெரிடேஜ் , இணையக் கொள்ளையர்களிடம் 92 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்களை பறிகொடுத்திருக்கிறது . பணம் தொடர்பான தகவல்களை திருடினால் பிரயோஜனம் உண்டு எதற்கு டிஎன்ஏ தகவல்கள் தேவை ? " நீங்கள் வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்தால் உங்களின் ஜீன் தகவல்களின் மூலம் உங்களுக்கு வரவிருக்கும் அல்சீமர் போன்ற நோய்களை முன்கூட்டியே கணித்து கடனை வங்கி வழங்காது போகவும் சான்ஸ் உண்டு " என பீதி கிளப்புகிறார் லாஸ்ட்லைன்  பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த கியோவன்னி விக்னா . டிஎன்ஏ தகவல்களை பெறுவதன் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட நோய் வரும் வாய்ப்புள்ள மனிதர்களுக்கான காப்பீட்டுத்திட்டத்தை உருவாக்கி காசு பார்க்க அதிக வாய்ப்புண்டு . மருத்துவசேவை , இன்சூரன்ஸ் மற்றும் காவல்துறை ஆகிய அமைப்புகளுக்கு டிஎன்ஏ தகவல்கள் அதி அவசியம் . எதிர்காலத்தில் காவல்துறை டிஎன்ஏவை வைத்து தொடர் குற்றவாளிகளை அடையாளம் கண்டு பின்தொடரும் . ஒருவரின் மரபணு தொடர்பான தகவலை சாதாரண மக்கள் யாரும் புரிந்துகொள்ளமுடியாது . மருத்துவ வல்லுநர்கள் மட்டுமே புரிந

நம்பிக்கையின் பின்னே!- பாலஸ்தீன அவலம்

படம்
நம்பிக்கையின் பின்னே ! இஸ் ‌ ரேலின் ஜெருசலேமில் அமெரிக்க அரசு புதிய தூதரகத்தை மே 14 அன்று இவாங்கா ட்ரம்ப் திறந்து வைத்தபோது , காசா எல்லையில் படுகொலை நிகழ்த்தப்பட்டது . இஸ் ‌ ரேல் ராணுவம் நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதலில் அறுபது பாலஸ்தீனியர்கள் பலியாயினர் . இஸ் ‌ ரேல் எகிப்துக்கும் இடையிலுள்ள மத்தியதரைக்கடலை ஒட்டியுள்ள பகுதியில் 2 மில்லியன் பாலஸ்தீனியர்கள் அகதியாக தங்கியுள்ளனர் . இவர்களின் சொந்த நிலம் இன்று யூதர்களின் கையில் அகப்பட்டு இஸ் ‌ ரேலாக மாறியுள்ளது . காசாவில் தினசரி மின்சாரம் 4-6 மணிநேரமும் , குடிநீர் நான்கு நாட்களுக்கு ஒருமுறையும் அளிக்கப்படுகிறது . வேலைவாய்ப்பின்மையின் அளவு 60%.  காசாவை கட்டுப்படுத்தும் ஹமாஸ் , அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் தீவிரவாத அமைப்பு பட்டியலில் உள்ள அமைப்பு . இரானின் நிதியுதவியில் இஸ் ‌ ரேலை தீவிரமாக எதிர்க்கிறது ஹமாஸ் . " நாங்கள் கௌரவமாக வாழவேண்டும் அல்லது இறக்கவேண்டும் " என்கிறார் பாலஸ்தீனியரான கசன் வதான் . பாலஸ்தீனியர்களின் படுகொலைக