இடுகைகள்

மனிதர்களும் இயற்கையில் ஒரு பகுதி என்பதை மறந்துவிடக்கூடாது

படம்
              மார்க் கார்னே Mark carney former central banker மார்க் கார்னே என்றால் என்ன ? இந்தப் பெயரைக் கேட்டதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ? ஏதோ பெரிய வங்கியை நடத்துகிற அல்லது தலைவராக இருக்க வாயப்புள்ள ஒருவரைத்தானே ? உண்மைதான் . 2008 ஆம் ஆண்டில் கனடாவின் பேங்க் ஆப் கனடா வங்கிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார் . 2011-2018 காலகட்டத்தில் குளோபல் ஃபினான்சியல் ஸ்டேபிளிட்டி போர்டின் தலைவராக செயல்பட்டார் . 2013 ஆம் ஆண்டு பேங்க் ஆப் இங்கிலாந்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் . 1694 ஆம் ஆண்டு தொடங்கி பிரிட்டிஷ்கார ர்களை மட்டுமே ஆளுநராக நியமித்த மரபை உடைத்தவர் மார்க் கார்னி தான் . 2020 ஆம் ஆண்டு தனது பதவியை விட்டு விலகியவர் கனடாவில் உள்ள ப்ரூக்ஃபீல்டு அசெஸ்மென்ட் என்ற தனியார் நிறுவனத்தில் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார் . வால்யூஸ் - பில்டிங் எ பெட்டர் வேர்ல்ட் ஃபார் ஆல் என்ற நூலை எழுதியுள்ளார் .    நீங்கள் எழுதியுள்ள நூலுக்கான அர்த்தம் என்ன? நான் பேங்க் ஆஃப் கனடாவில் வேலை செய்தபோது பொருளாதார சீர்குலைவு சூழ்நிலையைப் பார்த்திருக்கிறேன். பேங்க் ஆஃப் இங்கிலாந்திலு

தனது வாழ்க்கையை அழித்த தொழிலதிபரை பழிவாங்கும் மருத்துவரின் கதை! - டாக்டர் ப்ரீஸனர் 2019

படம்
  டாக்டர் ப்ரீஸனர் 2019 தென்கொரிய டிவி தொடர் நா யீ ஜே என்ற மருத்துவர், தொழிற்சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை எமர்ஜென்சி பிரிவு மருத்துவராக இருந்து காப்பாற்றுகிறார். இதன் விளைவாக, அவரது வேலை பறிபோகிறது. மருத்துவர் உரிமம் தடை செய்யப்பட சிறைக்குச் செல்கிறார்.  அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த அவரது அம்மா, கைவிடப்பட்ட நிலையில் இறக்கிறார். மருத்துவர் அரசியலால் பாதிக்கப்பட, மெல்ல அவரும் செல்வாக்கான ஆட்களின் உதவியைப் பெற்று தனது வாழ்க்கையை அழித்தவர்களை பழிவாங்கத் தொடங்க ஆட்டம் ஆரம்பம். அதுதான் டிவி தொடரின் பதினாறு எபிசோடுகள்.  தொடர் புனைவு என்றாலும் தென்கொரியா முழுக்கவே சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னால்தான் இருக்கிறது என காட்டுகிறார்கள். இது எந்தளவு நம்பகத்தன்மையானது என்று தெரியவில்லை.  எமர்ஜென்சி ஸ்பெஷலிஸ்டான நா யீ ஜே, தனது வாழ்க்கை அழிய காரணமான லீ ஜே ஜூன், வெஸ்டர்ன் சியோல் சிறை மருத்துவர் ஜூன் மின் சிக் ஆகியோரை எப்படி பழிவாங்கி ஓட ஓட விரட்டுகிறார் என்பதே கதை.  தொடரில் நீதி நேர்மை என்பதெல்லாம் நா யீ ஜே, எமர்ஜென்சி மருத்துவராக இருக்கும் வரைதான். மாற்றுத்திறனாளியை டேகான் நிறுவன கடைசி வா

வாடிக்கையாளர்களை உருவாக்குவதே நிறுவனத்தின் சாமர்த்தியம்!

படம்
  வாடிக்கையாளர் தான் தெய்வம்!   அண்மையில் ஊடகவியலாளர் கோகுலவாச நவநீதன் ஒரு புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், மளிகை கடை ஒன்றில் வாடிக்கையாளர்களே தெய்வம். தெய்வத்திற்கு கடன் கொடுக்கும் தகுதி எனக்கில்லை எழுதியிருந்தது. இந்த வாசகத்தை எளிமையாக கடன் கிடையாது என்று எழுதலாம். ஆனால்  என மளிகை கடைக்காரர் கிரியேட்டிவாக யோசித்து வாடிக்கையாளரையும் உயர்த்திப்பிடித்து, தனது கடன் கிடையாது கொள்கையையும் சொல்லிவிட்டார்.   ஹூவெய்யின் வணிக சூத்திரமே இதுதான். ரென்  நடத்தும் நிறுவனம் தொலைத்தொடர்பு சேவை தொடர்பானது. தினசரி ஏராளமான கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் நடக்கும் துறை. இதில் எப்படி அவர் வாடிக்கையாளர்களை பொருட்படுத்தாமல் இருக்க முடியும். அப்படி செய்தால், அவரது நிறுவனம் விரைவில் வீழ்ந்துவிடும் அல்லவா? இந்த வணிக கொள்கைக்கு பெயர்தான் கஸ்டமர் சென்ட்ரிசிட்டி.   வாடிக்கையாளரின் சூழல், குணம், தேவை புரிந்து பொருட்களை தயாரித்து வழங்குவது. இதைத்தான் ஹூவெய் ரென் தனது ஊழியர்களுக்கு வகுப்பெடுத்து சொல்லித் தருகிறார். அதிக மாறுதல்களை சந்திக்காத அணுசக்தி துறையில் சில முதலீடுகளை ரென் செய்துள்ளார

தோல்வியைக் கண்டு பயப்படாத மனோபாவம்!

படம்
  தோல்வியை நோக்கி திட்டமிடுவோம்!   தலைப்பிலுள்ளதைப் போல ஒருவர் கலந்துரையாடலில் பேச முடியுமா? ரென் அப்படித்தான் பேசினார். எதிர்காலத்தில் ஒருநாள் நாம் தோல்வியை சந்திக்கப் போகிறோம். எனவே, முன்கூட்டியே நாம் அதற்கு தயாராக இருப்போம் என்று பணியாளர்களிடம் பேசினார்.   நடிகர்களைப் பற்றி உலகத்தமிழர்  தேசிய நாளிதழ்களில் என்ன எழுதுவார்கள்? அவரே தன் கையால் தானே சொகுசு கார் கதவைத் திறந்தார். அவரே சோடாவை தன் கையில் வாங்கிக் குடித்தார். பிரியாணி லெக்பீசை தன் வாயால் தானே மென்றார் என எழுதுவார்கள். ரென்னைப் பொறுத்தவரை இப்படி யாராவது நிறுவனரை அல்லது அதிகாரிகளை புகழ்ந்தால் வீட்டுக்குச் சென்று வேறு வேலையைத் தேடுங்கள் என அனுப்பிவிடுவார்.   ரென்னைப் பொறுத்தவரை தனது வேலைகளை தானே செய்வதுதான் அவருக்குப் பிடித்தமானது. மூன்றுமணிநேர விமானப் பயணம் என்றால் கூட அவருக்கு புத்தகம் ஏதாவது இருந்தால் போதும். அதைப்படிப்பார். இடையில் ஒரு முக்கல் முனகல் கூட இருக்காது. ஏதாவது சந்திப்பு இருந்தால், நகரிலுள்ள ஹூவெய் அலுவலகத்திற்கு கூட சொல்ல மாட்டார். நேரடியாக யாரை சந்திக்கவேண்டுமோ அங்கேயே வாடகை டாக்சியைப் பிடித்துப் போய்விடுவார்

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் திட்டங்கள், அதன் பயன்கள்!

படம்
  மத்திய அரசு டிஜிட்டல் முறையில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி அதன் வழியாக செயல்படத்தொடங்கியிருக்கிறது. அரசு சேவைகள் பலவும் இன்று இணையம் வழியாக கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. அவை தொடர்பான புள்ளிவிவர டேட்டா ஒன்றைப் பார்ப்போம்.  மொத்தமுள்ள 130 கோடி மக்களில் ஆதார் கார்டு பெற்ற மக்களின் எண்ணிக்கை  123 கோடி இணையம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை  56 கோடி  ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை  44.6 கோடி  புதிய தொழில்நுட்ப திறன்களைப் பெற்றுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை  2,80,000 2021ஆம் ஆண்டு பல்வேறு டிஜிட்டல் சேவைகளை வழங்கிய வகையில் கிடைத்த வருமானம் 5 மடங்கு அதிகம். வளர்ச்சி வேகம் 28-30 சதவீதம்.  இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் ஐ.டி, பிபிஓ பகுதி ஊழியர்களின் பங்கு 8 சதவீதம் 2019 - 2021 ஆம் ஆண்டு டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ள அளவு 37 சதவீதம் தற்போதைய நிதித்துறை மதிப்பு 31 பில்லியன். 2025ஆம் ஆண்டு நிதித்துறை வளரும் என மதிப்பிடப்பட்டுள்ள அளவு 150 பில்லியன். அடுத்த ஆண்டு உயரவிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள மதிப்பு 138 பில்லியன்.  யுபிஐ வசதியை அறிமுக்ப்படுத்தியு

வேகமாக பரவி வரும் மங்கிஃபாக்ஸ் தொற்றுநோய்!

படம்
  சின்னம்மை ஏற்படுத்தும் வைரஸை ஒத்துள்ள வைரஸ்தான், மங்கிஃபாக்ஸை ஏற்படுத்துகிறது. இதன் பாதிப்பு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள குரங்குகளில் தொடங்கியது. கடந்த 7 ஆம் தேதி இங்கிலாந்து அரசு மங்கிஃபாக்ஸ் நோய் பாதிப்பை முதன்முறையாக அறிவித்தது. அண்மையல் அங்கு நைஜீரியாவிற்கு சென்று வந்த பயணி, மங்கி ஃபாக்ஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். அவர் இங்கிலாந்திற்கு வந்ததும் தோலில் அலர்ஜி போன்ற பாதிப்பு ஏற்பட மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார். இவரிடமிருந்து இன்னும் எத்தனை பேருக்கு பரவியுள்ளது என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இதுவரை இங்கிலாந்தில் மங்கிஃபாக்ஸால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.  2018ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மங்கிஃபாக்ஸ் தாக்குதல் அறியப்பட்டது. அப்போதும் நைஜீரியா சென்று வந்த பயணிகளால் தான் பாதிப்பு ஏற்பட்டது.  மங்கி ஃபாக்ஸ் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு சதவீதம் 1 முதல் 10 சதவீதம்தான். பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் இறந்துவிடுவார்கள். அதுதான் இதில் ஆபத்தான பயப்படும் அம்சம்.  எப்படி பரவுகிறது? நோய் பாதிக்கப்பட்ட விலங்கின் இறைச்சியை சரியாக சமைக்காமல் சாப்பிடுவதால். இன்னொன்று, நோய் பாதிக

ஏழை மாணவர்களுக்கு உதவும் முன்னாள் ராணுவ வீரர்

படம்
  மதுரையைச் சேர்ந்தவர் ஜிஎம் ராமச்சந்திரன். இவர் தேனி பெரியகுளத்தில் தங்கி இளைஞர்களுக்கு உடற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். ராமச்சந்திரன்,  ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றார். பிறகு, வருவாய்த்துறையில் வேலை செய்துள்ளார். பின்னாளில்தான் பழனிக்கு இடம் மாறி வாழ்ந்துகொண்டிருந்தார். அப்போது காலையில் ஜாக்கிங் பயிற்சிக்கு சென்றார். சாலையில் இவரைப் பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆன சிலர், ஃபிட்னெஸ் பற்றிய அறிவுரைகளைக் கேட்டிருக்கின்றனர். ஆகா, என  புளகாங்கிதம் அடைந்த ராமசந்திரன் உலகத்திற்கு ஏதாவது சொல்ல நினைத்தார். அதை ஆரோக்கியம் தொடர்பாக அமைத்துக்கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறார்.  ராமச்சந்திரனுக்கு விளையாட்டில்தான் தொடக்கம் முதலே ஆர்வம். இதனால் படிப்பில் சுமாராகவே இருந்தார். ஜிம்னாஸ்டிக்ஸ், தடகளப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். இதை வைத்துத்தான் 1976ஆம் ஆண்டு ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.  ராமச்சந்திரன் தடகளப் பயிற்சி கொடுப்பவர்கள் எல்லோருமே வறுமையான பின்புலத்தைக் கொண்டவர்கள். இவர்களுக்கு ஓடுவதற்கும், கயிற்றைப் பிடித்து ஏறுவதற்கும், நீளம் தாண்டுவதற்கும் பயிற்சி அ

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் முதியோர் இல்ல பெண்கள்!

படம்
  கோவையில் ஆர்எஸ் புரத்தில் உள்ளது ஆதரவற்றோர் இல்லம். அந்த இல்லத்தைச் சேர்ந்த முதியோர், தங்களுக்கு அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை உணவுகளை வழங்கி வருகின்றனர்.  கோவை கார்ப்பரேஷன், ஈர நெஞ்சம் என்ற தன்னார்வ அமைப்பு ஆகியவற்றின் ஆதரவு உதவியுடன் ஆதரவற்றோர் இல்லம், மாணவர்களுக்கு டீ, பிஸ்கெட், நீர்மோரை வழங்கிவருகிறது. தினசரி மாலை நான்கு மணிக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் இங்கு வருகின்றனர். இல்லத்தில் வாழ்பவர்கள் அனைவருமே குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள்தான். அவர்கள் இன்று தாங்கள் வாழும் சமூகத்தையே குடும்பமாக நினைக்கிறார்கள் என்றார் ஈர நெஞ்சம் அமைப்பின் தலைவரான மகேந்திரன்.  முதியோர் அமைப்பினர் முதலில் பள்ளிக்கே சென்று டீ, பிஸ்கெட், சுண்டல், ஆகியவற்றை வழங்கி வந்திருக்கின்றனர். பிறகுதான் மாணவர்களே முதியோரை தேடி வரத் தொடங்கியிருக்கின்றனர். காலை உணவு கூட நாங்கள் வழங்க நினைத்தோம். ஆனால் அதற்கான நிதி உதவிகளைப் பெற்றால்தான் சாத்தியம் என்கிறார் ஆதரவற்றோர் இல்லத்தில் வாழும் லஷ்மி அம்மாள். அண்மையில் தெருவில் ஆதரவற்று கிடந்த பெண்ணை மீட்டு இல்லத்தில் சேர்த்தனர். பிறகு அந்த பெண்ணின் உறவினர்களைத் தேடியப

மோசடிகளை தடுக்க க்யூஆர் கோடை ஏடிஎம் கார்டு போல பயன்படுத்தலாம்!

படம்
  க்யூஆர் கோட் மூலம் ஏடிஎம் மில் பணம் எடுக்கலாம்! பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் குறைவாக நிரப்பப்படுகிறது. இல்லையெனில் அவுட் ஆப் சர்வீஸில் இயந்திரம் இருக்கும். இதையெல்லாம் தாண்டி செயல்பட்டால் ஏடிஎம் இயந்திரம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் மெனு ஆப்சன்களைக் கொண்டிருக்கும். பணத்தை எடுக்க டெபிட் கார்டுகள் உதவுகின்றன. இதில் நிறைய மோசடிகள் நடந்து வந்தன. அதையெல்லாம் ஒழிக்க கார்டுகளைக் கூட நவீனப்படுத்தி ஒருவரின் பெயர் இல்லாமல் தயாரிப்பது, கார்டை ஸ்வைப் செய்யாமல் காட்டினாலே போதும் என நிறைய ஆப்சன்களை உருவாக்கினார்கள்.  இப்போது ஆர்பிஐ போனை ஏடிஎம் கார்டாக பயன்படுத்த யோசனை ஒன்றை சொல்லியிருக்கிறது. ஏடிஎம் சென்று யுபிஐ வசதியை இயக்கி, போனைத் திறந்து யுபிஐ வசதிக்காக பாரத் பே, சிட்டி யூனியன் மணி பிளஸ், அல்லது படுஸ்லோவாக வேலை செய்யும் யூனியன் பேங்க் ஆப்பைப் பயன்படுத்தலாம். ஏடிஎம் ஸ்க்ரீனில் உள்ள க்யூஆர் கோடை போனில் வெரிபை செய்தால் போதும். காசை மெஷினில் நிரப்பிப் பெற்றுக்கொள்ளலாம. இதற்கு முக்கியமாக இணைய வசதி கொண்ட போன் அவசியம். இல்லையெனில் பணத்தை எடுக்க முடியாது.  அதேசமயம் டெபிட், கிரடிட் கார்டுகளைப் பயன்ப

தனியாளாகப் போராடும் தொழிலதிபர்! - ரென் ஜெங்ஃபெய்

படம்
  நம்பிக்கையை சிதைத்த குற்றச்சாட்டு!   2019ஆம் ஆண்டு ஹூவெய் நிறுவனத்திற்கு கடுமையான சரிவு. அப்போது அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சியில் இருந்தார். நீதித்துறை, ஹூவெய் நிறுவனத்திற்கு எதிராக ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கியது. 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கனடாவில் இருந்த ரென்னின் மகள் மெங் வாங்சூவை விமானநிலையத்தில் கைது செய்து அவமானப்படுத்தினர்.   இதைப்பற்றி ரென் டைம் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,  எனக்கு அமெரிக்கா ஊக்க சக்தியை அளித்த நாடு. எனது தொழில்சார்ந்த அறிக்கையில் கூட அதைக் குறிப்பிட்டுள்ளேன். இன்று எங்கள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட நான் அமெரிக்காவை வெறுக்கவில்லை. நாங்கள் சீன நாட்டில் செயல்படும் நிறுவனம்தான். அரசின் விதிகளுக்கு உட்பட்டு நிறுவனத்தை நடத்துகிறோம். நாங்கள் அமெரிக்க அரசு கூறுகிற குற்றச்சாட்டுப்படி, கொல்லைப்புற வழியாக பிற நாடுகளை உளவு பார்க்கிறோம் என்றால் இத்தனை நாடுகளில் நாங்கள் எப்படி பணியாற்ற முடியும். நாங்கள் 170 நாடுகளில் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறோம் என்றார்.   ரென், சீன மொழியில் தான் பேசுகிறார். அதை பிபிசி, டைம் ஆகிய ஊடகங்கள் மொழிபெ

குஜராத்தில் சிறுபான்மையினரின் குரல்! - ஜிக்னேஷ் மேவானி

படம்
  மத்திய அரசின் தேசதுரோக குற்றச்சாட்டுக்காக குஜராத்தின் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி அசாம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு அலைகழிக்கப்பட்டவதை அறிவீர்கள். ஜிக்னேஷ் பற்றி சில விஷயங்களைப் பார்ப்போம்.  அவனுக்கு புரட்சியில் ஆர்வமிருக்கிறது. எப்போதும் அதை துடிப்பாக பேசிக்கொண்டிருப்பான். நான் புரட்சி என்பது நடந்தால் 1947க்கு முன் நடந்திருக்கவேண்டும் என்று கூறுவேன். ஆனால் அவன் புரட்சி காரணமாக சிறைக்கு போவதற்கும் தயார் என்றுதான் கூறுவான் என்றார் ஜிக்னேஷ் மேவானியின் தந்தை நட்வார்பாய் பார்மர்.  பிரதமர் மோடி பற்றி ஒரே ஒரு ட்வீட் பதிவை எழுதியதற்காக எம்எல்ஏவான ஜிக்னேஷை காவல்துறை அலைக்கழித்தது. அதுவும் மாநிலம் விட்டு மாநிலம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி மாநிலம் விட்டு மாநிலம் வந்து கைது செய்வது கொலை, கொள்ளை குற்றங்கள் என்றே இதுவரை இருந்தது. பாஜக அரசின் கைங்கர்யத்தில் இது  அரசியல்வாதிகளுக்கும் மாறியுள்ளது. ட்வீட் குற்றம் மட்டும் சிறையில் அடைக்க பத்தாதோ என நினைத்த காவல்துறை பெண் காவலரைத் தாக்கினார் என மற்றொரு குற்றச்சாட்டையும் பதிவு செய்தது. ஆனால் நீதிமன்றத்தில், வழக்குப்பதிவு பல் இளித்துவ