இடுகைகள்

கடன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவதற்கான காரணங்கள், தீர்வுகள்!

படம்
  விவசாயிகளின் தற்கொலை, காரணங்கள், தீர்வுகள் இந்தியாவில், எழுபது சதவீத மக்கள் வேளாண்மையை நேரடியாக அல்லது மறைமுகமாக சார்ந்து உள்ளனர். ஆனால், அதிகரித்து வரும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை கவலையளிக்கும்படி உள்ளது. 2013ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரையில் ஆண்டுதோறும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்து வருகின்றனர். தற்கொலை மரணங்களில் விவசாயிகளின் அளவு 10 சதவீதமாக உள்ளது. வருவாய் மேம்பாடு, சமூக பாதுகாப்பு ஆகிய அம்சங்களை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் நிலைமை மாறலாம். (TOI) விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்து வருவது உண்மை. அவர்கள் இறப்பதற்கு என்ன காரணங்கள் என்று பார்ப்போம். இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் வேளாண்மைத்துறை, அத்துறை சார்ந்த விவசாய தொழிலாளர்கள் என 87.5 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகமாக உள்ளது. சிறு,குறு ஏழை விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். தற்கொலை செய்

11.அலுவலகமே இல்லாத நிறுவனத்தில் இருந்து கிடைத்த கடன் - மோசடி மன்னன் அதானி

படம்
  எப்படி ஏமாத்தினோம் பாத்தீங்களா? 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாத ஆவணங்களில் உள்ள தகவல்படி, ரேவார் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் முகவரி, மக்கள் வாழும் அடுக்கு குடியிருப்பில் அமைந்திருந்தது.   தற்போது மாற்றப்பட்டுவிட்ட அதன் புதிய முகவரியில் அலுவலகம் அகமதாபாத் நகரில் உள்ள கட்டிடத்திற்கு மாறிவிட்டது. இந்த நகரில்தான் அதானி குழுமம் இயங்கி வருகிறது.   ஹிண்டன்பர்க் அமைப்பு, புலனாய்வாளரை ரேவார் அலுவலக முகவரிக்கு   அனுப்பியது.   பெயின்ட் உதிர்ந்துகொண்டிருந்த பழைய கட்டிடத்தில்   ரேவார் அலுவலகம் அமைந்திருந்தது. வெள்ளி வணிகம் செய்யும்,   202 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கும் திறன் கொண்ட நிறுவனம், இப்படியொரு மோசமான இடத்தில் இயங்கி வருவது ஆச்சரியமாக இருந்தது. புலனாய்வாளர் அலுவலக நேரத்திலேயே, ரேவார் அலுவலகத்திற்குச் சென்றார், ஆனால் அப்போதே கதவில், ‘அலுவலகப் பார்வை நேரம் முடிந்துவிட்டது’ என தகவல் கூறப்பட்டிருந்தது. மேலும் தகவல் தேவை என்றால் அணுகும்படி, ஜிக்னேஷ் தேசாய் என்பவரின் பெயர், தொடர்புஎண் கையால் எழுதப்பட்டிருந்தது.     லிங்க்டுஇன் தளத்தில் ஜிக்னேஷ் தேசாய், அதானி என்டர்பிரைசஸ் நிறுவ

மோசடி மன்னன் அதானி - ராஜேஷ் அதானி, சமீர் வோரா, வினோத் அதானி செய்த குற்றங்கள்

படம்
  கௌதம் அதானி படம் - இந்தியா டுடே அதானி குழும நிறுவனங்கள், பொதுத்துறை   வங்கிகளில் பெருமளவு கடனைப் பெற்றுள்ளன. மொத்தமாக கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க முதலீட்டாளர்கள் தங்கள் ஈக்விட்டி பங்குகளை கொடுக்கலாம். ஆனால் இந்த பங்குகளை வைத்து கடனை எளிதாக தீர்க்க முடியாது. பங்குகளின் விலை குறைந்துபோனால், கடன் வழங்கியவர் உடனே கடனைத் திருப்பிக்கட்ட கோருவார். இச்சூழ்நிலையை சமாளிக்க நிறுவனம் ஈக்விட்டி பங்குகளை விற்று பணத்தை திரட்டும் நிலை உருவாகும். பங்குகளின் விலை குறைந்த நிலையில் அவற்றை தொடர்ந்து விற்கையில் அதன் விலை மேலும் குறையும். அதானி குழுமத்தில் வெளியே தெரிந்த கடன் அளவைத் தாண்டியும், அதிக கடனைப் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. ஒரு நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளை வாங்குபவர், அதன்   பகுதி உரிமையாளர் போல என புரிந்துகொள்ளலாம். இந்த பங்குதாரர்கள், நிர்வாக குழுவினர் எடுக்கும் தொழில்ரீதியான முடிவுகளுக்கு ஆதரவாக அல்லது   எதிராக வாக்களிக்க முடியும். நிறுவனம் பெறும் வருமானத்தில் ஈக்விட்டி பங்குகளைப் பெறுபவர்களுக்கு பங்குண்டு. அதானி குழுமம், கௌதம் அதானியின் குடும்ப உறுப

வெப்பத்தால் உருகும் உடல், மனம்!

படம்
  அரசு சொத்தை விற்பது சுலபம் ! அன்புள்ள கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? சென்னையில் பள்ளி , கல்லூரிகள் தொடங்கிவிட்டதால் வேலை பரபரப்பாக நகர்கிறது . புத்தக பதிப்பு என்பது அனைவருக்கும் ஏற்ற வேலை அல்ல . எனவே வேலைநேரம் மெதுவாக நகர்வது போலவே தெரிகிறது . அரசின் பொதுச்சொத்துகளை நிறுவனங்களை அடகு வைத்து பணம் பெறுவதைப் பற்றிய கட்டுரையை இந்து ஆங்கில நாளிதழில் படித்தேன் . எனக்கு இது சரியான கொள்கையாக படவில்லை . குறிப்பிட்ட நாட்களுக்கு சொத்துகளை தனியாருக்கு கொடுத்து அடிப்படை கட்டமைப்புக்கான நிதியைப் பெறுவது என்பது புத்திசாலித்தனமாக முடிவல்ல . இதன் காரணமாக தனியார் நிறுவனங்கள் மக்களிடம் அதிகளவு கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது . குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளும் என கட்டுரையில் கூறப்பட்டுள்ளது . நாளிதழ் பணியில் இருந்து உதவி ஆசிரியர் , எழுத்தாளர் பாலபாரதி விலகிக்கொண்டுவிட்டார் . வேறு ஏதோ அரசு இதழுக்கு ஆசிரியராகி வெளியேறுகிறார் . இவர் பொறுப்பேற்று பார்த்து வந்த பக்கங்கள் எனக்கு வரும் என நினைக்கிறேன் . நாங்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய சமூக பொறுப்புணர்வு பற்றிய நூல் ஒன்

சவால் விடும் காதலிக்காக நண்பர்களை ஏமாற்றி பாங்காங் செல்லும் அக்மார்க் காதலன்! -டிஸ்கோ -நிகில் சித்தார்த், சாரா சர்மா

படம்
                 டிஸ்கோ நிகில் சித்தார்த், சாரா சர்மா இன்னும் உங்களின் அபிமான நட்சத்திரங்கள் பலர் தெலுங்கு கதை, இயக்கம் - ஹரி கே சந்தூரி டிஸ்கோ, நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்க கூடியவன். அதேசமயம் அவனுக்குத் தேவையென்றால் நண்பர்களென்று பாராமல் சித்திரவதை செய்தாவது தேவையானதைப் பெற்றுக்கொள்ள தயங்காத ஆள். அப்படிப்பட்டவன், நண்பன் ஒருவனுக்கு ரௌடி ஒருவரின் குடும்பத்தில் திருமணத்தை செட் செய்கிறான். பிறகு, அதற்காக பார்ட்டி செய்வோம் என நண்பர்களை பாங்காங்கிற்கு அழைத்து செல்கிறான். இதற்கான பணம் வங்கியில் கடன் வசூலிக்கும் வேலையில் இருந்து கிடைக்கிறது. கிடைக்கிறது என்பதை விட பாஸ்கர பட்லா என்ற சிறு ரௌடியின் ஆட்களை அடித்துப் புரட்டி பணத்தைப் பெறுகிறார்கள். அந்தப் பணம் தெலுங்கு பேசும் டான் ஒருவருக்கு சொந்தம் என பில்ட் அப் கொடுக்கிறார்கள். உண்மையில் அந்த பணம் யாருடையது, அவர் பாங்காங்க் செல்லும் நான்கு நண்பர்களையும் பழிவாங்கினாரா என்பதே கதை. படம் பாதி நேரம் எதைநோக்கி செல்கிறது என்றே தெரியாமல் பயணிக்கிறது. அந்த நேரலத்தில் எல்லாம் நம்மை காப்பாற்றுவது நிகில் சித்தார்த்தான். அவர் தான் படத்தில் டிஸ்கோ. இவரின் அ

உலகின் பெரிய வங்கிகள் - 2022

படம்
  சீனாவின் தொழில்துறை மற்றும் வணிக வங்கி  நாடு - சீனா ரேங்க் -2 சொத்து - 5.5 ட்ரில்லியன் டாலர்கள் ஐசிபிசி - உலகின் பெரிய வங்கிகளில் முக்கியமானது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் தனது முதல் இடத்தை இழந்துள்ளது. வங்கியை பல்வேறு முதலீடுகள் மூலம் கட்டுப்படுத்துவது சீன அரசுதான்.  சென்ட்ரல் ஹியூஜின் இன்வெஸ்ட்மென்ட் லிட். என்ற நிறுவனம், ஐசிபிசி வங்கியில் முதலீடு செய்துள்ளது. சீன நிதி அமைச்சகம், வங்கியில் 31 சதவீதம் பங்குகளைக் கொண்டுள்ளது. ஹியூஜின் நிறுவனம், 35 சதவீதம் பங்குகளைக் கொண்டுள்ளது.  ஜேபி மோர்கன் சேஸ்  நாடு - அமெரிக்கா ரேங்க் -4  சொத்து மதிப்பு - 4 ட்ரில்லியன்  ரஷ்யா உக்ரைனால் பாதிக்கப்பட்ட வங்கி. 42 சதவீதம் வங்கி வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜேபி மோர்கன், ஒட்டுமொத்தமாக இரண்டு இடங்கள் பின்தங்கியுள்ளது. 8.3 பில்லியன் டாலர்கள் வரை வருமானத்தை அடைந்துள்ளது. 902 மில்லியன் டாலர்கள் வரை கடனை கொடுத்துள்ள வங்கி தான். இனிமேல் அமெரிக்காவில் பெரிய  பொதுத்துறை வங்கி என்ற பெயர் இதற்கு இருக்காது.  சீனா கன்ஸ்ட்ரக்ஷன் வங்கி நாடு - சீனா ரேங்க் - 5 சொத்து மதிப்பு - 4.7 ட்ரில்லியன் டாலர்கள் இதுவ

பழங்குடி மக்களின் விதைவங்கி!

படம்
  பழங்குடி மக்களின் விதைவங்கி! ஜார்க்கண்ட் மாநிலத்தில்  உள்ள மலைப்பகுதி மாவட்டங்கள் பாகுர், கோட்டா. இங்கு வாழும் பழங்குடி மக்கள் இனமான பகாரியா, விதை வங்கிகளை உருவாக்கியுள்ளனர். இந்த விதை வங்கியில், தாங்கள் பயிரிடும் தொன்மையான பயிர் ரகங்களைப் பாதுகாத்து வருகின்றனர். தொடக்கத்தில் நிலங்களில் பயிரிடுவதற்கான பயிர்களை உள்ளூர் வட்டிக்காரர்களிடம் பெற்று வந்தனர்.  பயிர்களை நடவு செய்து கடுமையாக உழைத்து பன்மடங்காக பெருக்கினாலும் கூட சரியான விலைக்கு விற்கமுடியவில்லை. மேலும் அவர்களின் உணவுக்காக கூட விளைந்த பயிர்களை பயன்படுத்தமுடியவில்லை. வட்டிக்காரர்களின்  பயிர்க்கடனை அடைக்க விளைந்த தானியங்களை மொத்தமாகவே விற்க வேண்டியிருந்தது. பல்லாண்டு காலமாக பாகுர், கோட்டா மாவட்டங்களில் வாழ்ந்த பழங்குடிகளின் வாழ்க்கை இப்படித்தான் நடந்து வந்தது.  பழங்குடி மக்கள், 2019ஆம் ஆண்டு நான்கு விதை வங்கிகளை உருவாக்கினர். இதற்கு டிராய்ட் கிராஃப்ட், பத்லாவோ பௌண்டேஷன், சதி ஆகிய மூன்று நிறுவனங்கள் உதவியுள்ளனர். இதற்குப் பிறகு, பயிர்களை வட்டிக்காரர்களிடம் கடனுக்கு வாங்கும் பிரச்னை மெல்ல குறைந்துவிட்டது.   பழங்குடி மக்கள் நாட்டு