பழங்குடி மக்களின் விதைவங்கி!

 












பழங்குடி மக்களின் விதைவங்கி!


ஜார்க்கண்ட் மாநிலத்தில்  உள்ள மலைப்பகுதி மாவட்டங்கள் பாகுர், கோட்டா. இங்கு வாழும் பழங்குடி மக்கள் இனமான பகாரியா, விதை வங்கிகளை உருவாக்கியுள்ளனர். இந்த விதை வங்கியில், தாங்கள் பயிரிடும் தொன்மையான பயிர் ரகங்களைப் பாதுகாத்து வருகின்றனர். தொடக்கத்தில் நிலங்களில் பயிரிடுவதற்கான பயிர்களை உள்ளூர் வட்டிக்காரர்களிடம் பெற்று வந்தனர்.  பயிர்களை நடவு செய்து கடுமையாக உழைத்து பன்மடங்காக பெருக்கினாலும் கூட சரியான விலைக்கு விற்கமுடியவில்லை. மேலும் அவர்களின் உணவுக்காக கூட விளைந்த பயிர்களை பயன்படுத்தமுடியவில்லை. வட்டிக்காரர்களின்  பயிர்க்கடனை அடைக்க விளைந்த தானியங்களை மொத்தமாகவே விற்க வேண்டியிருந்தது. பல்லாண்டு காலமாக பாகுர், கோட்டா மாவட்டங்களில் வாழ்ந்த பழங்குடிகளின் வாழ்க்கை இப்படித்தான் நடந்து வந்தது. 

பழங்குடி மக்கள், 2019ஆம் ஆண்டு நான்கு விதை வங்கிகளை உருவாக்கினர். இதற்கு டிராய்ட் கிராஃப்ட், பத்லாவோ பௌண்டேஷன், சதி ஆகிய மூன்று நிறுவனங்கள் உதவியுள்ளனர். இதற்குப் பிறகு, பயிர்களை வட்டிக்காரர்களிடம் கடனுக்கு வாங்கும் பிரச்னை மெல்ல குறைந்துவிட்டது. 

 பழங்குடி மக்கள் நாட்டு ரகங்களைப் பயிரிடுவதால், இவற்றைத் தாக்கும் பூச்சிகளும் குறைவு. விதை வங்கி காரணமாக தங்களின் உணவுத்தேவைக்குப் போக மீதியிருப்பதைத்தான் விற்கிறார்கள்.  “ வியாபாரிகள் பழங்குடிகளுக்கு கடன் கொடுத்தால் அதிக வட்டிக்கும், நடவு செய்ய தரம் குறைந்த பயிர் ரகங்களையும் கொடுத்து வந்தனர். இதனால் பழங்குடிகள் தரமான பயிர் ரகங்களை நடவு செய்து,  பாதுகாப்பது கடினமாக இருந்தது” என்றார் டிராய்ட்கிராஃப்ட் எக்சேஞ்ச் தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த பவன் குமார்.  விதை வங்கிகள் மூலம்  90 கிராமங்களில் உள்ள 1,350 பழங்குடி மக்கள் பயன் பெற்றுள்ளனர். நவீன இயற்கை விவசாய முறைகளை மூன்று தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து, பழங்குடிகளுக்கு கற்பித்து வருகின்றனர். 




Seeds of solace 

down to earth 16 apr 2022 

https://traidcraftexchange.org/pahariya-sustainable-livelihoods

https://usingdiversity.wordpress.com/2018/06/28/community-seed-sowing-and-seed-distribution-in-paharia-villages-of-sundar-pahari-29th-june-2018/

http://satheengo.com/sathee-programs.html


கருத்துகள்