இடுகைகள்

சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜேம்ஸ்பாண்ட் படத்தை தெலுங்குமொழியில் பட்ஜெட்டே இல்லாமல் எடுத்தால்....

படம்
  த்ரீநேத்ரா சிரஞ்சீவி, ராதா, ரேகா, விஜயசாந்தி ஜேம்ஸ்பாண்ட் படத்தை மட்டமான தயாரிப்புத் தரத்தோடு தெலுங்கு மொழியில் எடுத்தால் எப்படியிருக்கும் அதுதான் இந்தப்படம்.  படத்தில் கொஞ்சமேனும் உயிர்ப்புடன் நடித்திருப்பவர், கோபால் ராவ் என்ற நடிகர்தான். இவர்தான் பெரும்பாலான சிரஞ்சீவி படங்களில் முக்கிய வில்லனாக வருபவர். சத்ய நாராயணா நாயகனின் அப்பாவாக நடிப்பார். இதெல்லாம் அதிகம் மாறாமல் வரும் காட்சி.  வில்லன்கள் எஸ்பிஆர். க்யூ ஆகியோர் விஷவாயு ஒன்றை தயாரித்து அதை ராக்கெட் மூலம் பரப்பி இந்தியாவை அழிக்க முயல்கிறார்கள். இதை எப்படி செய்யப்போகிறார்கள் என்பதை அறிய ஏஜெண்ட் நேத்ரா முயல்கிறார். இதற்காக எஸ்பிஆரின் மகள் ஸ்வர்ண லேகாவை காதலித்து ஏமாற்ற முயல்கிறார். ஆனால் தவறுதலாக அவரின் தங்கை ஹம்ச லேகாவை காதலிக்கிறார். இதில் எஸ்பிஆர், நேத்ராவை அடையாளம் கண்டுவிடுகிறார். இருவரும் ஒருவருக்கொருவர் யார் ஜெயிப்பது என சவால்விட்டுக்கொண்டே இருக்கிறார்கள். படத்தில் இதுபோன்ற காட்சிகள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன.  படத்தில் கடினமான உழைத்திருப்பவர் பாடல்காட்சிகளுக்கா உடை வடிவமைப்பாளரும், நடன இயக்குநரும்தான். வேறுயாரும் இந்தளவு

முன்கோபம் கொண்ட நீதியைக் காக்கும் இளைஞன் ராபின்ஹூட்டாக மாறி அநீதியை எதிர்க்கும் கதை!

படம்
  தர்மா  விஜயகாந்த், ப்ரீத்தா விஜயகுமார், தலைவாசல் விஜய், ஜெய்சங்கர் பணக்காரர்களைக் கொள்ளையடித்து அவர்களின் பணத்தை சேரி மக்களுக்கு பிரித்து கொடுக்கும் ராபின்ஹூட் கதை. அடிப்படைக் கதை இதுதான். இதை விரிவாக கூறவில்லை. குடும்ப பாசம், குடும்ப உறுப்பினர்களுக்கான முரண்பாடு, சண்டை என காட்டிவிட்டு படம் நகர்ந்துவிடுகிறது.  தர்மா, சாலை போடும் ஒப்பந்ததாரரிடம் சூப்பர்வைசராக வேலை செய்கிறார். வேலை பார்ட்டைம்தான். முக்கியமான வேலை சேரி மக்களுக்கு உதவி செய்வது. அங்கு காவல்நிலையத்தில் வல்லுறவு செய்த பெண்ணுக்காக இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொல்கிறார். இப்படித்தான் தர்மா நீதிமன்றம் செயல்படுகிறது. ஏழை மக்கள் தர்மாவை ஆதரிக்கிறார்கள். முஸ்லீம் பெண்மணி தர்மாவிற்காக பேசுகிறார். அவர் கண்பார்வையற்றவர். அவரின் பேத்தி, தர்மாவை ஒருதலையாக காதலிக்கிறாள். இவருக்கான காதல் காட்சி சற்று 18 பிளஸாக இருக்கும். அதனாலென்ன பார்த்து மகிழுங்கள். காதலை புரட்சிக்கலைஞர், கேப்டன் மறுத்துவிடுவார். ஆனால் அதைக் காரணமாக வைத்து இரண்டு, மூன்று பாடல்கள் வந்துவிடுகின்றன. கேப்டன் படம் என்றால் லியாகத் அலிகானின் பொறி பறக்கும் வசனங்களும், கோர்ட்டில் நின

கள்ளக்கடத்தல் செய்யும் நாயகன் திருந்தி வாழ நினைக்கும்போது ஏற்படும் விளைவுகள்!

படம்
  உள்ளத்தில் நல்ல உள்ளம்  விஜயகாந்த், ராதா, ராதாரவி, வினுசக்ரவர்த்தி இயக்கம் மணிவண்ணன் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து நைனாவின் உதவியால் கள்ளக்கடத்தல் தொழிலுக்குள் நுழையும் ஒருவன், காதல்வயப்பட்டு தனது தொழிலை கைவிட முயன்றால் என்ன நடக்கும் என்பதே கதை.  சுபமாக முடியும் கதை கிடையாது. அதை முதலிலேயே கூறிவிடுகிறேன். படத்தில் அந்தமோசமான முடிவுக்கு நைனா பாத்திரம் மூலம் ஏற்கெனவே நம்மை தயார்படுத்திவிடுகிறார்கள். அதனால் பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை, மைக்கேல்ராஜ் என்பவர், கடலை ஒட்டியுள்ள ஊரில் கள்ளக்கடத்தல் செய்கிறார். அதில் கிடைக்கும் பணத்தை காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கிறார். இதனால் அவர் செய்வதை காவல்துறை கண்டுகொள்வதில்லை. அங்கு புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் ஷீலா இதை தடுக்க நினைக்கிறார். இவரை மைக்கேல்ராஜ் பெரிதாக தடுக்கநினைப்பதில்லை. கல்யாணம் செய்துகொள்ள நினைக்கிறார். உண்மையில் அவர் யார் என்பது சற்று சுவாரசியமாக உள்ளது.  நைனாவிடம் தொழில் கற்றவரான மைக்கேல் ராஜ், தான்செய்யும் தொழிலை நியாயப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.இறுதியாக அவரோடு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த, இப்போதைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள ஷீலா சொல்

தனது காதலியைக் கொன்ற தேசவிரோத கூட்டத்தை ஒழிக்கும் சுமார் போலீஸ் - சூப்பர் போலீஸ் - வெங்கடேஷ், நக்மா

படம்
  சூப்பர் போலீஸ்  வெங்கடேஷ், சௌந்தர்யா, நக்மா தேசவிரோதிகளை சப் இன்ஸ்பெக்டர் எப்படி பிடிக்கிறார், தனது காதலி பாரதி கொலைக்கு காரணமான சக்திகளை அழிப்பது எப்படி என கதை சொல்லுகிறது.  அப்பண்ணா என்ற தொழிலதிபர் இருக்கிறார். அவர் உள்துறை அமைச்சரோடு சேர்ந்து பாக் தீவிரவாதிகளுக்கு பல்வேறு வேலைகளை செய்துகொடுத்து சம்பாதித்து வருகிறார். இவரது மகள் ஏழை ஒருவரை காதலிக்கிறாள். இதற்கு உதவி செய்வதன் வழியாக வெங்கடேஷ், அப்பண்ணாவின் உலகில் உள்ளே வருகிறார். அப்பண்ணா, வெங்கடேஷ் தங்கியுள்ள வீட்டு உரிமையாளரான பத்திரிகையாளரை மதுபான புட்டியில் குண்டு வைத்து கொல்கிறார். அது வெங்கடேஷூக்கு வைத்ததுதான். ஆனால் தவறி பத்திரிகையாளர் இறந்துபோகிறார். இதனால் கோபம் கொள்ளும் வெங்கடேஷ் அப்பண்ணாவைக் கொல்ல சபதம் எடுக்கிறார். ஆனால் அதிகார சக்திகளுடன் மோதி தனது வேலையை இழக்கிறார். அப்பண்ணா நாயகனது காலை முறித்துப்போடுகிறார். இதிலிருந்து மீண்டு வரும்போது தனது முன்னாள் காதலி பாரதி காரில் அடிபட்டு இறந்துபோனதற்கு அப்பண்ணா காரணம் என அறிகிறார். பிறகு எப்படி பழிவாங்கினார் என்பதே கதை.  படத்தில் நாயகன் இறந்துபோவதே யதார்த்த படமாக இருக்கும். ஆனா

ஒற்றை மனிதராக சென்று காஷ்மீர் பிரிவினைவாத தீவிரவாதிகளுடன் மோதி பணயக்கைதிகளை மீட்கும் நாயகன்!

படம்
                தாயகம் விஜயகாந்த், ரஞ்சிதா இயக்கம் ஏ ஆர் ரமேஷ் இசை தேவா பாடல்கள் பிறைசூடன் காயமானால் வெளிவரும் ரத்தம் நொடியில் நின்றுபோகும் வகையில் மருந்து ஒன்றை இந்திய ஆராய்ச்சியாளர் கண்டுபிடிக்கிறார். இதைப்பற்றி அவரிடம் உள்ள உதவியாளர் தகவலை பாக். தீவிரவாதிக்கு கசியவிடுகிறார். இதனால் விஞ்ஞானி செல்லும் விமானம் கடத்தப்படுகிறது. காஷ்மீரில் தனி காஷ்மீர் கேட்கும் சிறு தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள் பயணிகள். அவர்களை சக்திவேல் என்ற மீனவர், விஞ்ஞானியின் மகளோடு சென்று தனிமனிதராக மீட்டு வருவதுதான் படத்தின் கதை. படத்தில் முப்பது நிமிடம் கழித்துத்தான் விஜயகாந்த் வருகிறார். அதுவரைக்குமான படத்தின் காட்சிகளை அருண் பாண்டியன் பார்த்துக்கொள்கிறார். அவருக்கு பக்க துணையாக விமான பைலட் பாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருக்கிறார். இன்று ஜாக்கி ஷெராஃபின் மகன் டைகர் நடித்து வரும் ஒன்மேன் ஆர்மி பாத்திரத்தில் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் வருகிறார். இது சண்டைப்படம் என்பதால் லாஜிக் பார்க்காதீர்கள். மேஜிக் மிஸ் ஆகிவிடும். படத்தில் வரும் எம்ஏ படித்த பெண் பாத்திரத்தில் வரும் ரஞ்சிதா, ஒன்பதாம் கிளாஸ் படித்த மீனவ

மாஃபியா கூட்ட கொலையாளிக்கு கிடைக்கும் காதலும், அதை தக்க வைக்க செய்யும் போராட்டமும்! அந்தம் - ஆர்ஜிவி

படம்
                  அந்தம்  telugu இயக்கம் ஆர்ஜிவி நாகார்ஜூனா, ஊர்மிளா மடோன்கர் ஷெட்டி என்ற மாஃபியா தலைவரின் குழுவில் முக்கியமான ஆள், ராகவ். தலைவர் சொல்லும் ஆட்களை போட்டுத்தள்ளுவதோடு கடத்தல் வேலைகளை செய்து வருகிறான். எதிர்தரப்பில் உள்ள சங்கர் நாராயணன் என்பவரின் கூட்டத்தையே தனியாளாக நின்று அழிக்கிறான் ராகவ். இதனால் காவல்துறையில் உள்ள கிருஷ்ணா என்ற கிரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர், ராகவை கைதுசெய்ய முயல்கிறார். இந்த நேரத்தில் ராகவிற்கு கிருஷ்ணாவின் தங்கை பாவனா மீது காதல் உருவாகிறது. இதன் விளைவுகள் என்னவாயின என்பதே கதை. இதே டெம்பிளேட்டை வைத்து பவன் கல்யாண் நடித்த பஞ்சா என்ற படத்தை விஷ்ணுவர்தன் என்ற இயக்குநர் இயக்கியிருக்கிறார். அந்த படத்தில் பவன் சற்று ஸ்டைலாக காட்டப்பட்டிருப்பார். மற்றபடிமூலக்கதை அந்தம் என்ற படத்தைப் போலவே இருக்கும். சில விஷயங்கள் மாற்றப்பட்டிருக்கும். நகலை விட்டுவிடுவோம். அசலைப் பார்ப்போம். ராகவ், ஒரு குடும்பத்தால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்படுகிறான். ஆனால் ஒருமுறை நகை காணாமல் போக அவனது குடும்பமே காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து சித்திரவதை செய்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்க

காஸனோவா, ஒரு பெண் மீது கொள்ளும் காதல் வழியாக உறவுகளின் மதிப்பை அறிந்துகொள்ளும் கதை!

படம்
                கிரேக்க வீருடு நாகார்ஜூனா , நயன்தாரா பெண்கள் என்றாலே உடல் இன்பத்திற்கு மட்டும்தான் என நம்பும் ஒருவர் சூழல்களால் மனம்மாறி குடும்பத்தை நேசிப்பதோடு , காதலித்த பெண்ணை திருமணம் செய்வதுதான் கதை . வெளிநாட்டு தொழிலதிபர் நாகார்ஜூனா . அவரும் , உறவு முறையில் மாமாவும் , நெருங்கிய நண்பன் என இணைந்து நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள் . தனது செல்வாக்கு , அழகு ஆகியவற்றைப் பயன்படுத்தி ஏறத்தாழ 99 பெண்களை படுக்கையில் வீழ்த்துகிறார் கிங் நாகார்ஜூனா . பெண்களை போகப்பொருளாக பார்க்கிறார் . நெருக்கமான உறவை அவர் விரும்புவதில்லை . இதனால் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் . இந்த நேரத்தில் அவரால் செக்சுக்காக பயன்படுத்தப்பட்ட பெண் ஒருத்தி , அவருடைய சிஎஸ்ஆர் திட்டம் ஒன்றை வன்மத்தோடு உருக்குலைக்கிறாள் . இதனால் , அந்த பணியை ஒப்படைத்த நிறுவனம் நாகார்ஜூனா மீது வழக்கு போட்டு வெல்கிறார்கள் . அதிக அளவு தொகையில் அபராதம் கட்ட வேண்டும் என்பதே பெரிய பிரச்னை . இந்த நேரத்தில் கிங்கிற்கு இந்தியாவில் பூர்விகமான தாத்தாவிடமிருந்து போன் வருகிறது . அவர் , மகன் வயிற்று பேரனான கிங்க

மருத்துவ சோதனையால் நோயுற்ற கிராம மக்களைக் காப்பாற்ற கொலைத்தாண்டவமாடும் பொதுநல நேசன்!

படம்
                பத்ராத்ரி தெலுங்கு ஶ்ரீஹரி , கஜாலா பத்ராத்ரி என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக மருந்துகளை பார்மசூட்டிகல் நிறுவன அதிபர் பரிசோதிக்கிறார் . இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் , அவரது துறைசார்ந்த பிற அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் . இதனால் அந்த கிராமத்தில் வாழும் பல நூறு மக்கள் வியாதி வந்து வாழும் பிணம் போல மாறுகிறார்கள் . இதை தடுக்க அந்த கிராமத்தில் உள்ள ரகுராம் என்பவர் முயல்கிறார் . அவரது தம்பியை மருத்துவம் படிக்க வைக்கிறார் . கிராமத்தினர் நோய்களிலிருந்து மீண்டனரா என்பதே கதை . தொடக்க காட்சியில் சிறைக்குள் சென்று குற்றவாளி ஒருவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொல்கிறார் ரகுராம் . அடுத்து , போலீசார் துரத்த அவர்களை பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்து பீதிக்குள்ளாக்கி தப்பித்து பத்ராத்ரி வருகிறார் . அங்குள்ள மக்களுக்கு தம்பி கொடுத்ததாக மாத்திரைகளை கொடுக்கிறார் . அவரது குடும்பத்தில் அம்மா , மாமா , அவரின் பெண் ஆகியோர் இருக்கிறார்கள் . மாமா பெண்ணை , மருத்துவரான பிறகு தம்பி திருமணம் செய்துகொள்வதுதான் ஏற்பாடு . அதைப்பற்றி பேசுகிறார்கள் . ஆனால் ரகுராம் சற்று மன

வில்லனின் வீட்டிற்கு சென்று கடத்தி வரப்பட்ட காதலியை கல்யாணம் செய்யும் தைரிய நாயகன்!

படம்
                சீதாராமுலு கல்யாணம் லங்காலோ நிதின் , ஹன்சிகா , சுமன் , அலி , பிரம்மானந்தம் கல்லூரியில் படிக்கும் நிதின் , அவரை சிகரெட் பிடிக்காதே என்று சொல்லும் நாயகியால் ஈர்க்கப்பட்டு காதலிக்கிறார் . காதல் செய்தவுடனே கல்யாணம் நடந்துவிட்டால் படத்தை குறும்படமாகவே முடிக்கவேண்டியது வரும் என காதலியின் அப்பா கிராமத்தில் பெரிய ரவுடி , அவருக்கு எதிரியாக ஒரு ரவுடிக்கூட்டம் இதற்கு இடையில் மாட்டிக்கொள்ளும் காதலர்கள் என கதையைக் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் . படத்தில் உருப்படியான விஷயம் பிரம்மானந்தம் மட்டுமே . அவரின் காமெடி மட்டுமே சற்று ஆறுதலாக உள்ளது . சுமன் பெரிய ரவுடி . சுருட்டி பிடித்தபடி அவர் நிதினை கேட்பது , உன்னால் என் மகளை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியுமா , அப்படி முடிந்தால் பெண்ணைக் கட்டித்தருகிறேன் என்கிறார் . உடனே நிதினும் முதுகில் மாட்டியுள்ள ரோஷன் பேக்கோடு வருங்கால மாமனாரின் ஆட்கள் நால்வரை உதைத்து மலைப்பாதையில் உருட்டிவிடுகிறார் . பிறகுதான் சுமன் மனம் மாறி சூப்பர் செலக்‌ஷன் என தைரியம்கொள்கிறார் . ஆனால் கர்மா ஈஸ் பூமராங் அல்லவா ? எதிரிகள் மாப்பி