இடுகைகள்

சேட்டன் பகத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணவுக்கான ரேஷன் தேவையா? சேட்டன் பகத்!

படம்
Giphy.com நாம் சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் ஆகிறது. இதை எப்போது உணர்ந்திருக்கிறீர்கள்? நிச்சயம் அது உங்கள் கவனத்திலேயே இருக்காது. காரணம், நாம் இன்னும் வறுமை நாடாகவே இருக்கிறோம். உங்களில் வீட்டில் எலக்ட்ரிக் பொருட்கள் வந்துவிட்டன. ஆனாலும் அரசு தரும் ரேஷன் பொருட்களை வாங்க வரிசையில் நிற்கிறீர்கள். அரசு குடிமகன்களுக்கான உணவு, உடை, வாழிடம் கொடுப்பது கடமை. இதில் கூடுதலாக மின்சாரத்தையும் சேர்க்கலாம்தானே? இவற்றை உருவாக்கிக்கொள்ளும் வேலை தந்துவிட்டால் மக்களுக்கு யாரையும் சார்ந்து நிற்க வேண்டியதில்லை. ஆனால் மக்களிடம் பிரச்னை எழுந்தால்தானே தேர்தலில் அரசியல்வாதிகள் வெல்ல முடியும்? pixabay எனவே அவர்கள் வறுமை ஒழிக்க வேலை பெற்றுத்தருவதை விட ரேஷனில் மாதம் அரிசி, காய்கறி, சர்க்கரை என வழங்குவது எளிது. நாமும் இந்த அவலத்தை மனப்பூர்வமாக ஏற்று இந்தியாவை தலைகுனிய வைக்கிறோம். அரசு வழங்கும் பொருட்களை பெறும் நிலையில் உள்ள வறுமையான குடும்பங்கள் ஒப்பீட்டளவில் குறைந்துள்ளன. ஆனாலும் நாம் ரேஷன் கார்டிலுள்ள பொருட்களை மனத்தயக்கமின்றி சென்று வாங்குகிறோமே ஏன்?  எனக்கு அரசின் இலவசப் பொருட்கள்

காலனி கால இந்தியாவில் ராஜாக்கள் யார்? -சேட்டன்பகத்

படம்
teluguone மும்பையின் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவேயில் காரில் காத்திருந்தேன். நான் மட்டுமல்ல; என்னைச்சுற்றி பல்வேறு வேலைகளுக்குச் சொல்லும் நூற்றுக் கணக்கான ஆட்கள் இருந்தனர். எதற்கு சாலையில் இத்தனை பேர் ஒன்றாக நிற்கிறோம். நாம் வாக்களித்து நம் பிரதிநிதியாக மக்கள் மன்றத்திற்கு தேர்ந்தெடுத்தோம் அல்லவா? அந்த மக்கள் பிரதிநிதி நகர்வலம் செல்கிறார். அவருக்கான விஐபி நேரத்திற்காகத்தான் மக்களான நாங்கள் போக்குவரத்து துறை மூலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம். உண்மையில் எனக்கு காலனி கால இந்தியாவில் இருக்கிறோமா என்று தோன்றியது. அதில்தான் ராஜாக்களுக்கு இப்படியொரு மரியாதையை மக்கள் அளிப்பார்கள். அதாவது கட்டாயம் அளித்தாக வேண்டும். இன்றும் கேரளத்தில் பத்மநாபசுவாமி கோயிலில் குறிப்பிட்ட காலவேளையை ராஜா வணங்கும் நேரம் என்கிறார்கள். அந்தவேளையில் மக்கள் தரிசனத்திற்கு வரக்கூடாது. அங்கு காத்திருந்தவர்களில் வேலைக்குச்செல்பவர்கள், முக்கியமான சந்திப்புக்காக ஆட்டோவில் காத்திருந்தவர்கள், மருத்துவமனை செல்பவர்கள் முகத்தில் என்னவென்றே தெரியாத தவிப்பும், எரிச்சலும் படர்ந்திருந்தன. ஆனால் அவர்களிடம் இனியும் என்ன

தவறுகளை சகித்துக் கொள்ளாதீர்கள் - சேட்டன் பகத்

படம்
கோவிலுக்குள் அரசியல்வாதி ஒருவர் செருப்புடன் செல்கிறார். அங்குள்ள சிலைகளுக்கு பாக்கெட்டிலிருந்து எடுத்த சாராயத்தை அபிஷேகம் செய்கிறார். இந்தக்காட்சி உங்களுக்குள் அனல் கிளப்புகிறதா? இப்படி ஒருவர் இன்று செய்தால் அவரின் அரசியல் எழுச்சி, எதிர்காலம் அதோடு முடிந்துவிடும். காரணம், வாக்காளர்களின் நம்பிக்கைதான். ஆனால் மற்ற விஷயங்களில் நமது கவனம் எங்கிருக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை.  நம் கண்ணெதிரே தொழிலதிபர்கள் கடன்களை கட்ட மறுக்கிறார்கள், அவர்களுக்கு அரசியல்வாதிகள் உதவி செய்து வல்லரசு நாடுகளில் அடைக்கலம் தேடித்தருகிறார்கள். நிழலான பல வணிக காரியங்களை தொழில் என்ற பேரில் இவர்கள் செய்கிறார்கள். இவற்றை மக்கள் நாளிதழ்களில் படித்து தெரிந்துகொண்டாலும் அமைதியாகவே இருக்கின்றனர். ஆனால் இது நல்லதல்ல. ஊழல் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டவர்களாக மாறி வருகிறார்களோ என்று தோன்றுகிறது. இதே காலத்தில்தான் ஊழல் நமக்கு பகை என்று சொல்லி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் ஆட்சியைப் பிடித்தார். காரணம், இயல்பாகவே நமக்கு ஊழல் மீதான கோபம் உள்ளது. ஆனால்,  அது அரசியல்வாதிகள் மீதான கோபமாக மாற்றத்தை ஏற்படுத்துவதாக

மோடியின் இந்தியா எப்படியிருக்கவேண்டும்? - சேட்டன் பகத்

படம்
மோடி என்ன செய்யவேண்டும்? - சேட்டன் பகத் மோடி, 2014 ஆம் ஆண்டில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு வாக்களித்த மக்கள், எதிர்கட்சிகள், அரசியல் சட்டங்கள் ஆகியவற்றையெல்லாம் தாண்டிவிட்டார் . இனி அவர் எதிர்பார்ப்பது, பயணிப்பது 2024 ஆம் ஆண்டு  நோக்கித்தான். ஏறத்தாழ அவரின் பயணம் தடங்கலற்று அவரே ஏற்படுத்திக்கொண்ட பாதையில் வேகமாக சென்று வருகிறது. அவர் ஆட்சிக்கு வந்தபோது சேட்டன் பகத் சில விஷயங்களை பரிந்துரைத்தார். வெளிநாட்டு இந்தியர்களுடன் பாஜக அரசுக்கு நல்லுறவு இருக்கிறது. அதன்மூலம் இந்தியா வளமடைவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனை உருவாக்க முயலலாம். மன் கீ பாத்  - மனதின் குரல் போன்ற நிகழ்ச்சிகள் ஒருவழிப்பாதையாக அமையக்கூடாது. மக்களிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளை அறிவது அவசியம். இதுவே ஜனநாயகப்பாதையில் பாஜகவை நடக்க வைக்கும். பாஜக வெற்றியடையும் அதே நேரத்தில் கட்சிக்குள்ளிருந்து இந்து மத வெறிக் கருத்துகளைக்  கேட்கிறோம். பாஜக, இந்துக்களை பெரும்பான்மைப்படுத்தினாலும் மோடிக்கு வாக்களித்தது நாட்டின் வளர்ச்சிக்காகத்தான். இதனை  அனைத்து மக்களுமே செய்தனர் என்பதை மறந்துவிடக்கூடாது.

மதிப்பெண்ணால் வாழ்க்கையை மதிப்பிடாதீர்கள்! சேட்டன்பகத்

படம்
பத்தாண்டுகளுக்கும் முன்பு பத்தாவது வகுப்பில் நானூறு மதிப்பெண்கள் எடுப்பது ஆச்சரியமான விஷயம். இன்று பல்வேறு மாநிலங்களில் 460 மதிப்பெண்களுக்கு மேல் லட்சக்கணக்கானோர் எடுக்கின்றனர். இது ஒரு கட்டத்தில் தீவிரமான மன அழுத்தத்தில் மாணவர்களைத் தள்ளுகிறது. பிற மாணவர்களை விட வேகமாக முன்னேற வேண்டும், அவர்களைத் தாண்டவேண்டும் என்ற பெற்றோரின் அழுத்தம், சமூகத்தின் தூண்டுதல் ஆகியவை மாணவர்களை நேர்த்தியை நோக்கித் தள்ளுகிறது.  இதன் விளைவாக  குறைந்த மதிப்பெண்களையும், குறைந்த கட் ஆஃப் எடுத்த மாணவர்களையும் குப்பையாக உதாசீனமாக அவர்களின் பெற்றோர் நடத்துகின்றனர்.  இவ்வளவு செலவு செய்தும் எனக்கு அது லாபம் ஈட்டித் தரவில்லை என கல்வியை தொழிலாக, முதலீடாக மதித்து பேசும் பெற்றோர்களை நான் அறிவேன். இதேகாலத்தில் இக்கட்டுரையை எழுதுபவனான நான் 76 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவன்தான். ஆனால் மதிப்பெண்கள் என்னை அளவிடும் கருவியாக நினைக்கவில்லை. அதனால்தான் பல்வேறு விஷயங்களை என்னால் முயற்சிக்க முடிந்தது. இந்தியர்கள் ஜீரோ அளவுக்கு மட்டுமே வாழ்க்கையில் ரிஸ்குகளை எதிர்பார்ப்பவர்கள்.பிராண்ட் பள்ளி, பக்கத்து வீட்டுக்காரரி

அட்மிஷன் நேரத்து ஆபத்து! - மக்கப் மகேஷ்கள் வேண்டாம் - சேட்டன் பகத்

படம்
அட்மிஷன் நேரத்து முட்டாள்தனம்! பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்க்கும் நேரம் இது. டெல்லி பல்கலைக்கழகம், சில இடங்கள் மட்டுமே அங்கு உள்ளது என்று கூறியுள்ளது. நாளிதழ்களில் நிறைய விளம்பரங்கள் இடைவிடாமல் வருகின்றன. அவற்றில் பலவும் அட்மிஷன் தங்கள் கல்லூரிகளில் நடைபெறுகிறது. விரைவீர் என தங்க நகைக்கடை போல விளம்பரங்கள் கொடுக்கின்றனர். இதனால் என்ன பிரயோஜனம் என்று தெரியவில்லை. டெல்லி பல்கலைக்கழகம் போன்ற கல்வி அமைப்புகள் சிறிதேனும் விதிவிலக்கான முயற்சிகள் ஏதேனும் செய்யலாம். இப்போது, இரண்டு மாணவர்கள் படிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அம்மாணவருக்கு நிறைய திறன்கள் உண்டு. என்எஸ்எஸ் அமைப்பில் இருக்கிறார். பல்வேறு சமூக நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறார். நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆர்வம் உண்டு. இவர் பள்ளியில் பெற்ற மதிப்பெண்கள் 87 சதவீதம்தான். ஆனால் இன்னொரு மாணவருக்கு இத்திறன்கள் ஏதும் கிடையாது. பள்ளிக்குச் செல்வார். அதைவிட்டு வீட்டுக்கு வருவார். அவர் 94 சதவீதம் மதிப்பெண்கள் பெறுகிறார். இவர்களில் யாருக்கு பல்கலையில் இடம் கிடைக்கும்? 94 சதவீதம் மதிப்பெண் எடுத்தவருக்குத்தானே.

மாற்றம் மக்களை உள்ளடக்கியதுதான் - சேட்டன் பகத்!

படம்
மாற்றத்தின் நாயகர்களுக்கு சில வார்த்தைகள் அன்புள்ள நண்பர்களே, டெல்லியில் நடந்த மாணவியின் கற்பழிப்புக்காக இளைஞர்கள்  நீதிகோரி போராடியது முக்கியமான ஜனநாயக அம்சம். அதற்கான நீதி கிடைத்ததா, அதற்கான முனைப்பை அவர்கள் கொண்டிருந்தார்களா என்பதில் வேறு விஷயம்.  காரணம், அதில் அவர்கள் நினைத்ததை அடைந்தார்களா என்பதில் சந்தேகம் இருக்கிறது. பெண்களின் பாதுகாப்பு பற்றிய கவனத்தை மக்களிடையே ஏற்படுத்தினர் என்று கூறலாம். ஆனால் இது இந்தியாவில் 90 சதவீத மக்களுக்கும் போய் சேர்ந்ததா என்று தெரியவில்லை. இந்தியா ஒற்றுமையான, பன்மைத்துவம் கொண்ட ஒரே நாடு என்பதில் எனக்கு சம்மதமில்லை. இந்தியாவில் நான்கு முக்கிய பிரிவுகள் உண்டு.  அரசியல்வாதிகள் இந்தியாவில் பல்வேறு கொள்கைகளை உருவாக்குகிறார்கள். தங்களது சம்பாத்தியத்தை இரண்டாவது பிரிவினரிடம் கொடுத்து பதுக்குகிறார்கள். நான்காவது பிரிவினரிடமும், மூன்றாவது பிரிவினரிடமும் வரும் கருத்துகளை எதிர்கொள்வது இவர்கள்தான். இரண்டாவது பிரிவினர், தொழிலதிபர்கள். இவர்கள் இயல்பாகவே அரசியல்வாதிகளிடம் நெருக்கம் கொண்டவர்கள். இல்லையெனில் தொழிற்சாலைகளுக்கான அனுமதியை எப்படி பெறு

தடைகள் ஜனநாயக நாட்டை உருவாக்காது - சேட்டன் பகத்!

படம்
ஆபாச வலைத்தளங்களுக்கு தடை உதவாது! இந்திய அரசு, ஆபாச வலைத்தளங்களைத் தடைசெய்து உத்தரவிட்டது எனக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. காரணம் வளர்ந்த ஜனநாயக நாடுகள் இதுபோன்ற தடைகளை மக்கள் மீது விதிப்பதில்லை. காரணம், ஒன்றைப் பார்ப்பது, பார்க்காமல் இருப்பது என்பது தனிநபர் சுதந்திரம் தொடர்பானது. அதில் பெரும்பாலான உலக நாடுகள் தலையிடுவதில்லை. மக்களுக்கு பெரும் பிரச்னையாக இருப்பது,போதைப்பொருள் விற்பனை, ஆபாசப் படங்களில் குழந்தைகளை நடிக்க வைப்பது போன்றவைதான். இவற்றை அரசு சட்டங்கள் மூலம் தடுப்பது பயனளிக்கும். ஆனால் அரசு மக்கள் முடிவெடுக்கவேண்டிய விஷயங்களில் தடை போன்றவற்றை கொண்டு வரக்கூடாது. காரணம், நாம் இஸ்லாமிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இன்றுள்ள தொழில்நுட்பபடி, அரசின் தடை உத்தரவை மிக எளிமையாக உடைத்தெறிய முடியும். இதனை அரசு உணர்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை. உலகமயமாதல், தாராளமயமாக்கல் விதிகளால் உலகம் என்பது நெருக்கமாகி வருகிறது. இதில் எல்லைக்கோடுகள் நிலப்பரப்பில்தானே ஒழிய இணையத்தில் கிடையாது. இந்த நேரத்தில் மக்களின் தனிநபர் சுதந்திரத்தில் தடை என்பது தேவையி

அகதிகளை மரியாதையாக நடத்த கற்பது அவசியம் - சேட்டன் பகத்

படம்
மியான்மரில் புத்த பெரும்பான்மையினர் சிறுபான்மையினரான ரோஹிங்கயா முஸ்லீம்களை கொடுமைப்படுத்தி இனப்படுகொலை முயற்சிகளை அரங்கேற்றினர். இதன் விளைவாக, வாழ வழியற்ற அம்மக்கள் வங்காளதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் மிளகு ஸ்ப்ரே அடித்து விரட்டினர். உண்மையில் இந்த விவகாரத்தில் இந்தியா இப்படி நடந்துகொள்ளும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா. முக்கியமான விவகாரத்தில் இப்படி முதிர்ச்சியற்று நடந்துகொண்டது என்னை வேதனைப்படுத்தியது. உலகம் முழுக்க போர்களால் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். சில நாடுகள் அகதி மக்களை ஏற்கின்றனர். உதாரணம்  -கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள். சிலர் தீவிரமாக அவர்களை ஏற்க மறுக்கின்றனர். உதாரணம் - ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள்.  அவரவருக்கு ஏற்பதா, இல்லையா என்பதில் கருத்துகள் உண்டு. இந்தியா ரோஹிங்கயா முஸ்லீம்களை தங்க வைப்பதில் பெரிய பிரச்னை வந்துவிடாது. ஏற்கனவே இங்கு 40 ஆயிரம் பேர் உள்ளனர் என்பது அரசுக்கு பிரச்னையாக இருக்காது. பாதுகாப்பு தொடர்பான பிரச்னை என்றாலும் அரசு, அம்மக

கருத்து சொல்றோம் ப்ரோ! - ஆங்கில இந்தியர்கள் அட்டூழியம்- சேட்டன் பகத்!

படம்
பெட்ரோல், டீசல் விலை, மாணவி வல்லுறவு, கள்ள உறவு, அந்நிய செலாவணி கையிருப்பு, புதிய மசோதா, பட்ஜெட் ஆகிய விவகாரங்கள் சூடுபிடிப்பது எங்கு தெரியுமா? மாநில மொழி ஊடகங்களில் அல்ல; முழுக்க ஆங்கில மீடியத்தில் படித்து ஆங்கிலேய நாவல்களை படித்து அதிலேயே கனவுகண்டு இந்தியாவில் வாழும் ஆட்களின் உலகம்தான் மேற்சொன்ன விவகாரங்களைப் பேசுகிறது. மக்களிடையே கொண்டு செல்கிறது. திரும்பத்திரும்ப அதனைப்பேசி, மக்களின் மனங்களில் பயத்தை புயலை உருவாக்கி வருகிறது. பிற மக்கள் எங்கே இருக்கிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என்பதையே இவர்கள் மறக்க வைத்துவிடுகிறார்கள். ஆங்கிலமொழியில் இயல்பான வசதி என்னவென்றால், எளிதாக உலகோடு தொடர்புகொள்ளமுடியும் என்பதுதான். இதன் விளைவாக, ஆங்கில ஊடகங்கள் எந்த டாபிக்கை எடுத்துப் பேசுகிறார்களோ அதைத்தான் உலகம் கவனிக்கிறது. இந்தியாவில் இப்படி நடக்கிறது என சிஎன்என், பிபிசி முதற்கொண்டு புரிந்துகொண்டு எழுதிவிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லுவது கந்தசாமி, பழனிச்சாமி கிடையாது . குறிப்பாக தந்தி போன்ற மாநில சார்பு கொண்ட அரசு சார்பு கொண்ட பத்திரிகைகளில் இதனைப் பார்க்க முடியாது. ஆனால்

அரசியல்வாதிகளின் பின்னே நிற்காதீர்கள் - சேட்டன் பகத்

படம்
சேட்டன் பகத் -  2016 ஆம் ஆண்டு பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை எனக்கு அதிர்ச்சி தந்தது. காரணம், காங்கிரஸ் அரசின் தவறையே இந்த அரசும் செய்கிறதோ என்று எனக்குத் தோன்றியது. ஓய்வூதிய சேமிப்புகளுக்கு கூட வரி போடுவதை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. அரசுகள் வரி போடுவதால் என்ன பயன்? வருவாய் அதிகரிப்போது ஏழைகளை நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்களை மேல்தட்டுக்கும் நகர்த்துவதற்கான முயற்சிகளை செய்யமுடியும். ஆனால், அளவுக்கு அதிகமான வரி என மக்களை நினைக்க வைப்பது இதற்கு எதிர்மறையான விளைவைத் தரும். மும்பையில் ஒரு கஃபே செயல்படுகிறது என வைத்துக்கொள்வோம். அங்கு அருகிலுள்ள அரசு அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் வந்து டீ, காபி, ஸ்நாக்ஸ் என நொறுக்கி எறிகின்றனர். பில்லிலும் வரி உண்டு. அந்த அதிகாரிகளின் சம்பளத்திலும் வரி பிடித்தம் உண்டு. அவர்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்களிலும் கல்வி வரி உள்ளிட்டவை அடங்கும். மேலும், பெட்ரோல் டீசலும் முக்கியமான வரிகள் உண்டு. இப்போது வரி அதிகமாவதால் கூட்டம் குறைகிறது. கஃபே மூடிவிடுகிறார்கள் எனில் என்னாகும்? அங்கு வேலைவாய்ப்புகள் குறைகிறது என்று பொருள்

சேட்டன் பகத்: வரி கொடுக்கும் மக்கள் குற்றவாளிகள் அல்ல!

படம்
2016 ஆம் ஆண்டு வருமான வரி கட்டிய இந்தியர்களின் எண்ணிக்கை 1.2 கோடி. இந்திய மக்கள் தொகை 120 கோடி எனும்போது இந்த வேறுபாட்டை நம்மால் உணர முடியும். இந்த வரி வருவாய் என்பது முழுக்க அலுவலக பணியாளர்களுடையது. ஆண்டு வருமானம் 50 இலட்சத்திற்கு மேலுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 1,50,000 என்று வருமானவரித்துறை கூறியுள்ளது ஆச்சரியமளிக்கிறது. மும்பையின் புறநகர் கட்டிடங்களை வாங்கி வசிப்பவர்கள் அப்போது யார்? அவர்கள் இந்த வரி வரம்பிற்குள் வருவார்களா? மாட்டார்களா என்று தெரியவில்லை. நிச்சயம் இந்த வரி ஏய்ப்பை மக்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் செய்திருக்க முடியும் என்றால் குழந்தை கூட நம்பாது. அதேசமயம் முன்கூட்டியவரி, முறையாக வரி கட்டுபவர்களை அதிகாரிகள் நடத்தும் விதம் என்பது மிக மோசமானது. உலகில் வேறெங்கும் இதுபோல மோசமான காட்சிகளை நாம் கண்டிருக்க முடியாது. காரணம், அதிகாரிகள் இந்தியாவில் வரி கட்டுபவர்களை குற்றவாளிகளைப் போல கருதுகிறார்கள். இது முறையாக வரி கட்டும் எண்ணமுடையவர்களுக்கு இன்றும் அச்சுறுத்தி வருகிறது. இவர்கள் என்ன நினைக்கிறார்கள்? இந்தியா போன்ற நாட்டில் பணக்கார ர்களாக இரு

அரசு மருத்துவமனைகளின் அவலம் தீர மோடிகேர் உதவும் - சேட்டன் பகத்

படம்
கடமையைச் செய்ய கையூட்டா? அரசு மருத்துவமனை அவலம்! உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற சாபகேட்டின் விளைவாக 72க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துபோயுள்ளன. இதற்கு தனிநபர் பணிமாற்றம் எந்தளவு சாத்தியமான மாற்றத்தை, விழிப்புணர்வை அங்கு கொண்டுவரும் என்று எனக்குப் புரியவில்லை. இந்திய அரசு இந்தியாவில் ஏராளமான மருத்துவக்கல்லூரிகள், மருத்துவமனைகள், சுகாதாரநிலையங்களை நடத்தி வருகிறது. மேலும் இவை மட்டுமன்றி எல்ஐசி போன்ற லாபத்தில் இயங்கும் நிதிநிறுவனங்களும் கூட கையில் இருக்கின்றன. ஆனால், குழந்தைகளுக்கு தேவையான ஆக்சிஜனுக்கு மட்டும் அரசிடம் பணம் இல்லை என்றால் நாம் இந்த நிலைக்கு வெட்கப்படவேண்டாமா?  இந்தியாவில் அரசுத்துறையில் அலங்கோலத்திற்கு அரசு ஹோட்டல்கள் மற்றும் எம்டிஎன்எல், ஏர் இந்தியா சாட்சியாக இருக்கின்றன. உலகில் வேலை செய்யாமலிருக்கு லஞ்சம் வாங்குகிறார்கள் என்றால் மருத்துவமனையில் தன் பணியைக் கடமையைச் செய்யவே காசு கேட்கிறார்கள். காந்தி காலத்து தர்மம் இதுதான்.  இந்த நிலையில் மருத்துவத்துறையை தனியாருக்கு கொடுப்பது சேவையை மேம்படுத்த உதவும். சேவையை க

சேட்டன் பகத் - வரி கட்டுப்பாட்டை விட தொழில்வளர்ச்சி முக்கியம்

படம்
2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முக்கியக் காரணம், காங்கிரஸ் முந்தைய காலத்தில் செய்த ஊழல்கள் முக்கியக்காரணம். ஆட்சிக்கு வந்த அரசு, உருவாக்கிய முக்கிய சீர்த்திருத்தங்களில் ஒன்று ஜிஎஸ்டி. ஆனால் ஒரே வரியாக இல்லாமல் ஜிஎஸ்டி5 எனும் ஐந்து வரி முறையாக சுழன்றடித்ததில், வணிகப்பட்டப்படிப்பு படித்த எனக்கே தலை சுற்றி போய்விட்டது. இத்தனைக்கும் வணிகப்படிப்பு படித்துவிட்டு வெளிநாடுகளில் முதலீட்டு வங்கியாளராகவும் பணியாற்றிவன். இந்திய அரசு அமல்படுத்திய 0,5,18,28 என சதவீத அளவுகளில் வரியை விதித்ததில் தொழில்துறைகளே பீதியடைந்து கிடக்கின்றன. அதிலும் சினிமா துறைக்கு 28 சதவீதம், டிடிஹெச் செட்டாப் பாக்ஸ்களுக்கு 18 சதவீத வரி என்பதில் என்ன நியாயம் உள்ளதோ? இதில் திருட்டுத்தனமாக இணையதளத்தில் தரவிறக்கிப் பார்ப்பவர்களுக்கு எந்த வரியும் இல்லை என்பது எப்படி சரியானதாக இருக்கும்? அதிலும் மாதந்தோறும் மூன்றுமுறை ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் விண்ணப்பங்களைப் பார்த்தாலே தலை கிறுகிறுக்கிறது. எனக்கே இப்படி என்றால் இதுபற்றி ஏதும் அறியாத தொழில்முனைவோர்களுக்கு எப்படி இருக்கும்? அமெரிக்காவில் தொழில்முயற்சிகள் தொ

அரசு தன் கடமைகளை ஒழுங்காக செய்தாலே போதும்! - சேட்டன் பகத்

படம்
ஹைதரபாத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை உயர்கல்வி நிறுவனங்கள் எப்படி அரசியல் முறையில் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது எடுத்துக்காட்டாக உள்ளது. அம்மாணவர், கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு, கல்விக்கட்டணம் கட்டாததற்கு மனிதவளத்துறையின் தூண்டுதல் மூலம் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரோஹித்தின் அரசியல் செயல்பாடுகள் பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது கல்லூரி நிர்வாகமே ஒழிய மனித வளத்துறை அல்ல. பண்டாரு தத்தாத்ரேயாவிடம், ஏபிவிபி மாணவர் அணி புகார் கொடுக்க அவர் உடனே மனித வளத்துறை அமைச்சரான ஸ்மிருதி ராணியிடம் தொடர்புகொண்டார். மனிதவளத்துறை கொடுத்த அழுத்தத்தால், கல்லூரி நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்ட ஐவரை விடுதியிலிருந்து நீக்கியிருக்கிறது. இந்த நடவடிக்கை ஏற்படுத்திய அழுத்த த்தால் மாணவர் ரோஹித்தின் உயிர் பறிபோயிருக்கிறது. இதில் அவர் தலித் என்பது அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. இதில் நாம் பேச ஏதுமில்லை. அரசு, தரவேண்டிய உதவித்தொகையை தாமதமின்றி அனுப்பி வைத்திருக்கலாம் என்பது பற்றி இந்த விவகாரத்தில் யாரும் பேசவில்லை. அரசு தன் தரப்பிலான பிரச்னைகளை சரி செய்திருந்தால் போதுமானத

சேட்டன் பகத் - படிக்கும்போது கட்சிகளுக்கு உழைக்காதீர்கள்!

படம்
டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கும், ஐஐடி ஆகிய இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஐஐடியில் வகுப்புகளை பங்க் செய்வது, கலாட்டா செய்வது, தேர்வில் பார்த்துக்கொள்ளலாம் என ஜாலியாக இருப்பது, போராட்டங்களில் ஈடுபடுவது, அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றுக்கு வேலையே கிடையாது.  அப்படி உள்ள மாணவர்கள் உடனே அந்நிறுவனத்திலிருந்து வெளியே தள்ளப்படுவார்கள். நாங்கள் படிக்கும்போது டெல்லி பல்கலைக்கழக மாணவர்களை ஏக்கமாக பார்ப்பது இதற்காகத்தான். எங்களுக்கு அப்படியே எதிர்மறையாக இருப்பார்கள். அவர்களும்  அங்கு படிக்கத்தான் வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அனுபவித்த சுதந்திரம் எங்களுக்கு பொறாமையாக இருந்தது. அரசியல் சினிமா என அவர்களுக்கு அனைத்திலும் சுதந்திரம், தனித்தனி கருத்துகள் இருந்தன. அதனை பகிரங்கமாக அவர்கள் கூறவும் முடிந்தது. ஆனால் அதேசமயம் அவர்கள் வளாகத்தில் செய்யும் அரசியல் ரீதியான போராட்டங்களை நான் ரசிக்கவில்லை. காரணம், மாணவர்கள் கல்லூரிக்கு வருவது தங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதற்காகவே. இதில் அரசியல் கட்சிகளுக்கு உதவும்படியான நடவடிக்கைகள் எதற்கு என்று எனக்குப் புரியவில்லை. கருத்து சுதந்திரத்தை

அரசியலுக்கு வரும் ஆசை எனக்கும் உண்டு!

படம்
நேர்காணல்! சேட்டன் பகத் பைவ் பாயிண்ட் சம்ஒன் என்ற நாவலுடன் தொடங்கிய இலக்கியப்பயணம் இன்று முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் பத்தி எழுத்துகளையும் எழுதி வருகிறார். அரசு திட்டங்கள், நாட்டின் பிரச்னைகள் என ஒன்றுவிடாமல் இவர் யோசித்து எழுதிய கட்டுரைகளை திரட்டி இந்தியா பாசிட்டிவ் என்று பெயரிட்டு நூலாக்கியுள்ளார். அனைத்து நாவல்களும் நாட்டின் பிரச்னைகளை பேசியவையே என்று கூறியிருக்கிறீர்கள். எப்படி? அது உண்மைதான். நீங்கள் என்னுடைய பைவ் பாயிண்ட் சம் ஒன்  நூலில் கல்வி முறைகளை கடுமையாக விமர்சித்து எழுதியிருப்பேன். 2 ஸ்டேட்ஸ் நாவலில் தென்னிந்தியா - வட இந்தியா வேறுபாடுகளை விமர்சித்து எழுதியிருப்பேன். தி கேர்ள் இன் ரூம் நெ.105 நூலில் காஷ்மீர் பிரச்னைகளைப் பேசியிருப்பேன். நான் எழுதும் நூல்கள் அனைத்திலும் நாட்டை உலுக்கும் ஏதாவது பிரச்னையைப் பற்றி பேசியிருக்கிறேன். இப்போது நீங்கள் இந்தியா பாசிட்டிவ் என்ற நூலை எழுதியிருக்கிறீர்கள். கட்டுரையாக நாட்டின் பிரச்னைகளை பேசலாம் என்று நினைக்கிறீர்களா? நாவல், கட்டுரை என்ற இருவடிவங்களுமே எனக்க

பெண்களுக்கு என்ன தேவை? குடும்பமா? செக்ஸா? - சேட்டன் பகத்

படம்
இளைஞர்களின் இந்தியாவுக்குப் பிறகு சேட்டன் பகத் கோமாளிமேடைக்கு வருகிறார். இந்த விமர்சனப் பதிவு மூலம்.  கதை, அதே லைன்தான். உயர் கல்லூரிகளில் படிப்பு, நட்பு, கோல்டன் சாக் எனும்  முதலீட்டு நிறுவனத்தில் வேலை, காதல், பாலுறவு, பிரிவு, திருமணம் என சேட்டனிடம் என்ன எதிர்பார்த்து கிராஸ்வேர்டு கடையில் வாங்கினோமோ அத்தனை விஷயங்களும் நூலில் உண்டு.  ராதிகா மேத்தா என்ற படிப்பில் பட்டையை கிளப்பும் சுமார் மூஞ்சிப் பெண் கோல்ட்மேன் சாக் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். தன் மீதான தாழ்வு மனப்பான்மையில் தடுமாறுபவர்,  டெபனீஸ் சென் என்ற விளம்பரத்துறை இளைஞர் மீது காதலில் விழுகிறார். ஆனால் அவர், டிபிக்கல் பெங்காலி ஆள். காதலிக்கும் பெண் தன்னை விட ஒரு ரூபாயேனும் குறைவாக சம்பாதிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்டவர். இதுதெரிய காதல் புட்டுக்கொள்கிறது. இது அமெரிக்காவில், ப்ரூக்ளின் நடைபெறுகிறது. உடனே ட்ரான்ஸ்பர் கேட்க, கம்பெனி ஹாங்காங் போங்களேன் என்று சொல்லுகிறது.  யெஸ். அங்கும் காதல்தான். ஆனால் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நீல் குப்தாவுடன் கிறுக்குத்தனமான ஆனால் ராதிகா மேத்தா