இடுகைகள்

மனமறிந்து பழகு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனநல குறைபாடுகளுக்கான பல்வேறு சிகிச்சை முறைகள்!

படம்
pixabay சைகோடைனமிக் தெரபி ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த உளவியல் மருத்துவரான சிக்மண்ட் ஃப்ராய்டின் விழிப்புற்ற மனம், விழிப்புணர்வற்ற மனம் எனும் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது இந்த தெரபி. நோயாளியின் விழிப்புணர்வற்ற மனநிலையில் அவரின் குழந்தைப் பருவ, பள்ளிப்பருவ நினைவுகள் இருக்கும். ஆனால் இவற்றில் நடந்த ஏதாவது விஷயங்கள் தற்கால வாழ்க்கையை வாழவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கும். அந்த சம்பவம் சார்ந்த கோபம், ஆற்றாமை, விரக்தி, துயரம், வலி, வேதனை மனதில் இருப்பது ஒருவரின் நிகழ்காலத்தை நாசமாக்கும் திறன் பெற்றது. எனவே உளவியல் வல்லுநர்கள் தெரபியில் நோயாளியை பேச வைத்து அவரின் மனதிலுள்ள வலியை துல்லியமாக தெரிந்துகொண்டு, அந்நினைவுகள் அவரின் வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன என்பதை பேசி புரிய வைக்கின்றனர். தெரபி வகுப்பை உளவியல் வல்லுநர் ஒருவர் நடத்துவர். ஒருவரை மட்டுமே அவர் சந்தித்து பேசுவார். அவருக்காக ஒதுக்கும் நேரம் ஒரு மணிநேரம். நோயாளி தனக்கு வரும் கனவுகளைப் பற்றி சொல்லவேண்டும். இதன் விளைவாக, அவர் மனதில் உள்ள எண்ணங்களை உளவியலாளர் குறிப்புகள் எடுத்துக்கொள்வார். கனவுகள் உணர்ச்சிகளின் குறியீடு என்பது ஃப

ஏழைமக்களை காக்க இந்திய அரசு தவறிவிட்டது! முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்

படம்
r.k.laxman cartoon மொழிபெயர்ப்பு நேர்காணல் ப.சிதம்பரம் முன்னாள் நிதி அமைச்சர் பொருளாதாரத்தை மீண்டெழச்செய்ய என்ன செய்ய வேண்டும்? ஊரடங்கு காலத்திற்கு பிறகு தொழில்துறை மீண்டு வருமா? தற்போது வேலை இல்லாமல் இருக்கிற தொழிலாளர்களுக்கு இந்திய அரசு மானிய உதவியாக குறிப்பிட தொகையை வழங்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் அதனைப் பயன்படுத்தி பல்வேறு பொருட்களை வாங்குவார்கள். அடுத்து சிறு,குறு தொழிற்சாலைகளுக்கு பல்வேறு வரிச்சலுகைகளையும், நிதியையும் அளிக்கவேண்டும். நிதியை வங்கிக்கடன் மூலம் அரசு வழங்கமுடியும். இவற்றை வழங்கினால் மட்டுமே அரசு திரும்ப பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்ய முடியும். தொழிலுக்கான ஆதாரங்களை எப்படி திரட்டுவது? திரும்ப பல்வேறு தொழில்களை மறுகட்டமைப்பு செய்வதற்கு ஆறு லட்சம் கோடி உறுதியாக தேவைப்படும். அதனை திரட்டி பல்வேறு தேவையில்லாத செலவுகளை குறைத்தால் மட்டுமே அரசு தொழில்துறையைக் காப்பாற்ற முடியும். இதுதவிர, உலகவங்கி நூறு கோடி ரூபாயை அரசுக்கு வழங்கவிருக்கிறது. ஊரடங்கு காலம் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை எப்படி பாதித்திருக்கிறது? உள்நாட்டு உற்பத்தி இரண்டு காலாண்டுகளில் குற

மனநலனை சோதித்துக்கொள்ளும் கேள்விகள் இதோ!

படம்
pixabay மனநலனும் உடல்நலனும் நவீன காலத்தில் உளவியல் நலனை நாமே சோதித்துக்கொள்ள பல்வேறு ஆப்கள், கேள்வி பதில்களைக் கொண்ட ஆய்வு அறிக்கைகள் உள்ளன. உள்ளம் உடலை இயக்குகிறது என்பதால், உள்ள நலன் மிக முக்கியமாக உள்ளது. ஒருவரின் நடவடிக்கைகளை வைத்தே அவரின் மனதை அறிய முடியும். மனநலனையும், உடல் நலனையும் கவனமாக ஒருங்கிணைத்து வைத்திருப்பது சமூக வாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மிக அவசியம். மனநலனை எப்படி அறிவது? உங்கள் மனநிலை நேர்மறையாக எண்ணங்களோடு இருக்கிறதா உங்களுக்கு நண்பர்கள் உண்டா? அவர்கள் நேர்மறையான கருத்துகளைக் கொண்டவர்களா? நீங்கள் அறியும் செய்திகளை சரியாக புரிந்துகொள்கிறீர்களா? உங்கள் மனதில் பதற்றத்தை உணர்ந்திருக்கிறீர்களா? உணர்ச்சிகளை உங்களால் கட்டுப்படுத்த முடிகிறதா? கட்டுப்பாடுகளை இழந்து நடந்துகொள்கிறீர்களாழ மனச்சோர்வை உணர்ந்திருக்கிறீர்களாழ நீங்கள் மேற்சொன்ன கேள்விகளை கேட்டுக்கொண்டு எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இவற்றின் அடிப்படையில் உங்களை நீங்களே சோதித்து கொள்ளுங்கள். இவற்றை ஹெல்த் சைக்காலஜிஸ்ட் கேட்டு உங்களுக்கு பொருத்தமான உணவுமுறை, உடற்பயிற்சிகள், பழக்க வழக்கங்கள

மனநலக் குறைபாடுகளுக்கான சிகிச்சை முறைகள் , வல்லுநர் பிரிவுகள்!

படம்
pixabay உளவியல் சிகிச்சை முறைகள் உளவியல் பிர்சனைகளுக்கு அதற்கென படித்துள்ள அனுபவம் பெற்ற உளவியல் மருத்துவர்களை அணுக வேண்டும். அவர்கள் இதற்கான சரியான சிகிச்சைகள், கடைபிடிக்க வேண்டிய பழக்கங்களை பரிந்துரைக்கின்றனர். இதில் பல்வேறு வல்லுநர்கள் உள்ளனர்.அ வர்களைப் பார்ப்போம். சைக்காலஜிஸ்ட் இத்துறையைச் சேர்ந்தவர்கள் உளவியல் பிரச்னைக்கான தீர்வுகளையும், பழக்கவழக்கங்களையும் வழங்குகின்றனர். சைக்யாட்ரிஸ்ட் மனநல குறைபாடுகளுக்கான சிகிச்சைகளையம் மருந்துகளையும் இவர்களே நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனர். பொதுமருத்துவ வல்லுநர்கள் இவர்கள் மனநல பிரச்னைக்காக மருந்துகளையும், தெரபிகளையும் பரிந்துரைக்கின்றனர். பிற பணியாளர்கள் தன்னார்வலர்கள் தனியாக தெரபி வகுப்புகள், ஆலோசனை வகுப்புளை நடத்துகின்றனர். ஹெல்த் சைக்காலஜிஸ்ட் உளவியல் பிரச்னைகள் பற்றி ஆராய்ச்சி செய்து அதிலிருந்து நோயாளிகள் விடுபட உதவுகின்றனர். புகைபிடிப்பது, எடை குறைப்பது போன்ற விஷயங்களுக்கு உதவுவதோடு, நீரிழிவு, புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கான ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பரிந்துரைக்கின்றனர். நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட