இடுகைகள்

மோடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொழுதுபோக்குபூங்காகவாக மாற்றப்படும் காந்தியின் சபர்மதி ஆசிரமம்!

படம்
  2019ஆம் ஆண்டே காந்தியின் சபர்மதி ஆசிரமம் புத்துயிர் அளிக்கப்படும் என ஒன்றிய அரசு கூறி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இயற்கையான தடையாக கொரோனா வந்தது. இக்காலகட்டத்தில் தங்களுக்கு ஆதரவான பல்வேறு மசோதாக்களை சட்டமாக்கிய பிரதமர் மோடி, இப்போது காந்தியின் பக்கம் கவனம் திருப்பியுள்ளனர்.  1,200 கோடி மதிப்பில் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை நவீனப்படுத்தி புதுப்பிக்க உள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. காந்தியை தேசத்தந்தை என்ற இடத்திலிருந்து அகற்றி அதில் ஆர்எஸ்எஸ் பிரிவினைவாதிகளை பொருத்தும் பணியை பாஜக அரசு தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதற்கு அச்சாரமாக காந்தியை ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் அடையாளமாக்கி அசிங்கப்படுத்தியது. காந்தி வெறும் ஒருவரின் தூய்மை பற்றி மட்டும் பேசவில்லை. ஜனநாயகத்தன்மை, அகிம்சை, சுய ஒழுக்கம் பற்றியெல்லாம் கூட பேசியுள்ளார். இவற்றில் தன்னுடைய பங்கு பற்றி நூல்களைக் கூட எழுதியுள்ளார். ஆனால் அதையெல்லாம் படிக்க தெரிந்துகொள்ள ஒன்றிய அரசுக்கு எந்த விருப்பமுமில்லை. ஈடுபாடும் இல்லை.  சபர்மதி ஆசிரமத்தை ஏழு அறக்கட்டளைகள் நிர்வாகம் செய்து வருகின்றன. இந்த நிலையை சாதகமாக்கி மாநில அரசு மூலம்

சுகாதார அட்டை இந்திய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமா?

படம்
  அனைவருக்கும் சுகாதார அட்டை ஒன்றை தயாரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆயுஸ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் ஏபிடிஎம் என அழைக்கப்படும் திட்டம் கடந்த செப்டம்பர் 27 அன்று நடைமுறைக்கு வந்தது.  இதன் தொடக்க கால திட்டம் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று சோதனை முறையில் சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்த வகையில் ஒரு லட்சம் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இந்த சுகாதார அட்டையை பான் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் கொடுத்து பெறலாம். இதில் சேர விரும்புபவர் தனது பெயர், வயது. பிறந்த தேதி, முகவரி, ஆதார் எண் கொடுத்து விண்ணப்பத்து பூர்த்தி செய்யவேண்டும். உங்களிடம் ஆதார் இல்லையென்றாலும் கூட போன் நம்பர் கொடுத்துக்கூட பதிவு செய்துகொள்ளலாம்.  மக்களுக்கு எளிமையான முறையில் குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் கிடைக்கும் என ஒன்றிய  அரசு கூறியுள்ளது. பிரதமர் மோடி, மக்களின் வாழ்க்கை இனி எளிமையாகும் என திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசியுள்ளார்.  சுகாதார அட்டையை பதிவு செய்தால் பதினான்கு  எண்கள் கொண்ட அடையாள எண் வழங்கப்படும். இந்த எண்ணை ஒருவர் இதற்கான ஆப்பை போனில் நிறுவி பதிவு செய்து பெறலாம். நோய் பற்றிய தகவல்கள் ந

பருத்தி விவசாயின் தற்கொலை வழியாக விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டப் பார்வை! - நூல் அறிமுகம்

படம்
  நூல்கள் அறிமுகம் ராம்ராவ் ஜெய்தீப் ஹர்டிகர் ஹார்பர் கோலின்ஸ் 2014ஆம் ஆண்டு ராம்ராவ் பான்செல்னிவர் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். பூச்சிக்கொல்லியை குடித்து இறந்துபோன இவர்தான், விவசாயிகளின் தற்கொலையை தொடங்கி வைத்த பெருமையைக் கொண்டவர். அன்றிலிருந்து இன்றுவரை 30 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.  கடந்த இருபது ஆண்டுகளில் 60 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.  எழுத்தாளர் ஜெய்தீப், ராம்ராவ் வாழ்க்கை வழியாக விவசாயிகளின் வாழ்க்கை இந்தியாவில் எப்படி இருக்கிறது என்பதை விளக்குகிறார்.  ஆர்ட் சினிமா அண்ட் இந்தியாஸ் பார்காட்டன் ஃபியூச்சர் ரோச்சனா மஜூம்தார் கொலம்பியா யுனிவர்சிட்டி பிரஸ் இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு சினிமா உலகம் எப்படி வளர்ந்தது, கலைப்படங்களுக்கான இடம், வணிக படங்களின் சந்தை, சத்ய ஜித்ரே, மிருணாள் சென், ரித்விக் கடக் ஆகிய இயக்குநர்களின் பங்களிப்பு பற்றி நூல் பேசுகிறது.  தி மிட் வே பேட்டில்  கௌதம் சிந்தாமணி ப்ளூம்ஸ்பரி 2019ஆம் ஆண்டில் மோடி மீண்டும் பிரதமரானார்.  முதல் முறை ஆட்சியில் தயங்கியவற்றை இந்த முறை பெரும்பான்மை உதவ

இந்திய பன்மைத்துவத்தை நொறுக்கும் வெறுப்புவாதம்! - குஜராத் இந்துத்துவம் மோடி - மருதன்

படம்
                குஜராத் இந்துத்துவம் மோடி மருதன் கிழக்கு மோடி , குஜராத்தில் பெற்ற வளர்ச்சி எப்படிப்பட்டது , அது உண்மையானதா என்பதை இந்த நூல் மூலம் அறியலாம் . இந்த நூலை ஆசிரியர் குஜராத்திற்கு சென்று பல்வேறு இடங்களை பார்வையிட்டு எழுதியிருக்கிறார் . கூடவே ஏராளமான தகவல்களையும் கூறியுள்ளார் . கூடுதலாக நூலை எழுத தான் படித்த நூல்களிலிருந்து முக்கியமான கருத்துகளையும் முன்வைத்து எப்படி பிரிவினை மூலம் பாஜக குஜராத்தை தனது கைபிடிக்குள் கொண்டு வந்தது என்பதையும் விளக்கியுள்ளார் . உண்மையில் குஜராத் வளர்ச்சி அடைந்துவிட்டது என்பதை விட அப்படி பிறரை நம்ப வைக்க மோடி மெனக்கெடுகிறார் என்ற வார்த்தை முக்கியமானது . ஏறத்தாழ இந்த வரியைப் படித்தபிறகு மோடி ஊடகங்களில் தன்னை எப்படி காண்பித்துக்கொள்கிறார் . தன்னுடைய எதிரிகளை எப்படி ஒழித்துக்கட்டுகிறார் என்பதை ஹரன் பாண்டே எடுத்துக்காட்டு மூலம் அதிர்ச்சியுறும்படி காட்டியுள்ளார் . உயர்சாதி இந்துக்களுக்கான இடமாக குஜராத் மாறியுள்ளதோடு , சிறுபான்மையினரை எப்படி அடிப்படை வசதிகள் கூட கிடைக்காதபடி அச்சுறுத்தி வைத்துள்ளார் என்பது களப்

ஏழு ஆண்டு கால ஆட்சியில் நோய்களும் மரணங்களும்!

படம்
                  ஏழு ஆண்டு கால ஆட்சியில் நோய்களும் மரணங்களும் ! ப . சிதம்பரம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக கட்சி , 303 சீட்டுகள் வென்று ஆட்சியைப் பிடித்தது . கூட்டணியாக 353 இடங்கள் கிடைத்தன . இப்போது மூன்றாவது ஆண்டாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறது . அக்கட்சியில் என்ன விஷயங்கள் நமக்கு கிடைத்துள்ளன என்பதைப் பார்ப்போம் . உணவு , பாதுகாப்பு , வேலை , வீடு , சுகாதாரம் , கல்வி ஆகியவை மக்களுக்கு சரியான முறையில் கிடைத்திருக்க வேண்டும் . உலகிலேயே இந்தியாதான் அதிகளவில் பருப்பு , தானியங்கள் , பால் , காய்கறிகள் , மீன்களை உற்பத்தி செய்கிறது . அனைத்து மக்களுக்கும் தேவையான உணவு கிடைக்கச்செய்வது அவசியமானது . ஆனால் அப்படி கிடைக்கவில்லை . 2015-16 ஆண்டு குடும்பநலத்துறை ஆய்வு அறிக்கையில் 58.6 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் தவித்து வருகின்றனர் . இவர்களுக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது . இதில் உணவு வீணாக்கப்படும் பிரச்னையும் உள்ளது . 22 மாநிலங்களில் ஆய்வு செய்ததில் 18 மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது . 12 மாநிலங்களில் உணவு வீணாக்கப்படுவது நடந்து

விவசாயிகளின் பிரச்னைகளை புரிந்துகொள்ளாமல் அறிவுரைகள் சொல்பவர்களே இங்கு அதிகம்! ஹன்னன் மொல்லா

                    ஹன்னன் மொல்லா , அனைத்திந்தியா விவசாய சங்கம் விவசாயிகள் மூன்று விவசாய சட்டங்களை மாற்றவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் . இப்போது போராட்டம் எப்படியுள்ளதுழ விவசாயிகள் கடந்த ஆறுமாதங்களாகவே விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள் . ஆனால் அரசு கவனிக்கவில்லை . விவசாயிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் சட்டங்களை நிறைவேற்றிவிட்டனர் . ஜனநாயக நாட்டில் அரசு இப்படி செயல்பட்டால் போராடங்களைத் தவிர வேறு என்ன வழி உள்ளது ? எனவே தலைநகருக்கு திரண்டு வந்து சட்டங்களுக்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் . அரசு சட்டங்களை மாற்றவில்லை என்றால் என்ன செய்வீர்கள் ? அரசு உருவாக்கிய மூன்று சட்டங்களை விலக்கிக்கொள்ளவேண்டும் . சிறு திருத்தங்கள் செய்வது சட்டங்களின் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காக்காது . போராட்டங்களுக்கு உலகளவிலான கவனம் கிடைப்பது அதனை பின்தங்க வைக்கிறதா ? குறிப்பாக காலிஸ்தான் தொடர்பான சர்ச்சை எழுகிறதே ? யாரும் விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி பேசுவது இல்லை . நாங்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்கவும் தயாராக இல்லை . ஆனால் ஏராளம

விளையாட்டுப்பொருட்களின் தலைமையிடமாக இந்தியா!- சீனாவை முந்தும் திறன் இந்தியாவிடம் உள்ளதா? ஒரு அலசல்

படம்
    விளையாட்டுப்பொருட்களின் தலைமையிடமாக இந்தியா ! உலகளவில் உள்ள விளையாட்டுப் பொருட்களின் சந்தை 7 லட்சம் கோடி . அதில் இந்தியாவின் பங்கு 7 ஆயிரம் கோடியாக உள்ளது . பிரதமர் மோடி , இந்தியா விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பில் உலகளவில் முன்னணி வகிக்க பல்வேறு தொழில்நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று கூறியிருந்தார் . பொதுமுடக்க தளர்விலிருந்து வெளிவந்திருக்கும் நிறுவனங்கள் , பிரதமரின் கோரிக்கைப்படி உற்சாகமாக வேலை செய்யத் தொடங்கியுள்ளன . அரசு உத்தரவுப்படி பிஐஎஸ் சான்றிதழ் வாங்கும் பொம்மைகள் மட்டுமே , இனி சந்தையில் கிடைக்கும் என்ற விதி , புதிய சிக்கலாகியுள்ளது . ‘’’ அரசு உத்தரவுப்படி விளையாட்டுப் பொருட்களைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் .’’ என்கிறார் அனைந்திந்திய விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு அசோசியேஷனின் தலைவரான குக்ரேஜா . 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பிஐஎஸ் சான்றிதழ் பெற நிறுவனங்களுக்கு அவகாசம் உள்ளது . கொரானோ காலத்திற்கு பிறகு இப்போதுதான் விளையாட்டுப் பொருட்களின் தயாரிப்பு 40% இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது . பிஐஎஸ் சான்றிதழுக்கான கட்டணங்களை

குஜராத்தில் மர்மமாக பலியாகி வரும் சிங்கங்கள்!

படம்
  cc   மர்மமாக பலியாகும் ஆசிய சிங்கம் ! கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி இந்தியப் பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் காடுகளிலுள்ள சிங்கங்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது என்று கூறினார் . அவர் கூறாமல் விட்ட விஷயம் , நடப்பு ஆண்டின் ஜனவரி மாதம் வரை 92 சிங்கங்கள் பலியாகி உள்ளதுதான் . நாட்டில் வாழும் சிங்கங்களில் 40 சதவீத சிங்கங்கள் , கடந்த மே மாதத்தில் மட்டுமே பலியாகி உள்ளன என்பது அதிர்ச்சியான செய்தி . ஆசிய சிங்கங்களின் கணக்கெடுப்பு என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது . பதினைந்தாவது முறையாக நடக்கவிருந்த கணக்கெடுப்பு பணி , கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக கைவிடப்பட்டிருக்கிறது . இந்தியாவில் ஆசிய சிங்கங்கள் குஜராத்திலுள்ள கிர் காடுகளில்தான் வாழ்கின்றன . இதுபற்றி தகவல்களை அறிய மே 29 அன்று சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இதற்கென தனி கமிட்டையை அமைத்தது . இதில் பெறப்பட்ட அறிக்கைகள் சிங்கங்களின் இறப்பை உறுதிசெய்துள்ளன .. ” இங்கு வாழும் சிங்கங்களை தாக்கிய வைரஸ் தீவிரமாக பரவியதால் சிங்கங்களின் மரணம் நிகழ்ந்துள்ளது நாங்கள் நோயுற்று சிகிச்சை பெற்றுவரும் இரண்டு சிங்

தமிழகத்திற்கு ஏதாவது செய்வதற்கு கிடைத்துள்ள வாய்ப்புதான் இது! - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை

படம்
      முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை- விகடன்   அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கரூரைச் சேர்ந்த குப்புசாமி அண்ணாமலை அண்மையில் டில்லியில் தன்னை பாஜக கட்சியில் இணைத்துக்கொண்டார். பெங்களூருவில் பணியாற்றிய அண்ணாமலை, 2019ஆம் ஆண்டு தனது பணியிலிருந்து விலகிக்கொண்டார். வீ தி லீடர்ஸ் என்ற அமைப்பு உருவாக்கி இளைஞர்களுக்கு உதவி செய்து வந்தார். அவரிடம் பேசினோம். அரசியலில் சேருவதற்கான முடிவை எப்படி எடுத்தீர்கள்? பொதுமக்களின் வாழ்க்கை நலமாக இருக்கவேண்டும் என்று நான் நினைத்தேன். அரசியல் மூலம் மக்களின் வாழ்க்கை மாறுதல் அடையும் என்று நான் நம்புகிறேன். நான் முதலில்  அரசியல் சார்ந்து இயங்கவில்லை. சமூகசேவைகளை செய்து வந்தேன். அரசியல் மாற்றம் சமூகத்தையும் மாற்றும் என்று நம்பினேன். எனவே, நான் அரசியலுக்குள் நுழைந்தேன். இது சரியான நேரம் என்று நம்புகிறேன். பாஜகவை எதற்கு தேர்ந்தெடுத்தீர்கள்? அடுத்த நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நிற்கும் எண்ணம் இருக்கிறதா? நான் மனதளவில் தேசியவாதி. முன்னரே இந்திய பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமை, தொலைநோக்கு  பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளேன். தமிழகத்தில் திராவிட ஆட்சிகள்

புதிய இந்தியா பிறந்துவிட்டதா?

படம்
pixabay புதிய இந்தியா பிறந்துவிட்டதா? உலக நாடுகள் முழுக்க அரசியல் நிலையின்மை காரணமாக  போராட்டங்கள், கிளர்ச்சிகள் வெடித்துள்ளன. மக்களின் எண்ணங்களை போராட்டங்களாக வெடிக்கச் செய்ய சமூக வலைத்தளங்கள் பெருமளவு உதவி வருகின்றன. தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளில் அடிப்படைவாத, தேசியவாத கட்சிகள் வென்றுவருகின்றன. இந்த போராட்ட அலையில் இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் அமலான குடியுரிமை திருத்தச்சட்டம், நாடெங்கும் கடும் போராட்டங்களை கிளப்பியுள்ளது. இந்தியாவின் அண்டைநாடுகளிலுள்ள முஸ்லீம் அல்லாதவர்கள் அரசின் மூலம் குடியுரிமையை எளிதாகப் பெற முடியும் என்கிறது இச்சட்டம். ஏறத்தாழ முஸ்லீம்களை இரண்டாம் தர மக்களாக மாற்றும் இச்சட்டம் அமலாகிவிட்டது என உள்துறை அமைச்சககம் கூறிது.  இல்லை என பிரதமரும் பேச, விவகாரம் மேலும் குழப்பமாகிவிட்டது. தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அசாம் மாநிலத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் திட்டத்தின் முடிவில் லட்சக்கணக்கான இந்துகள் குடியுரிமை இல்லாத நிலைமையில் இருப்பது தெரியவர, இந்திய அரசின் திட்டம் தோல்வியுற்றது. திரும்பவும் இத்திட்டத்தை மாநிலம் முழுவத

ஏ டூ இசட் இந்தியா எப்படி இருக்கும்?

படம்
அரசியலமைப்புச் சட்டத்தில் ஏ முதல் இசட் வரையில் பல்வேறு அர்த்தங்கள் உண்டு. அவற்றை நாம் இப்போது பார்ப்போம். இவை மிகச்சரியானவையா என்பதைவிட சரியாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதே முக்கியம். ஏ –அம்பேத்கர் காந்தியின் மென்மையான இந்துத்துவத்திற்கு எதிராக போராடி சேகுவேரா. இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த குழுவின் தலைவர். அவர் ஏற்ற அரசியல் பணிகளிலும் தன் கருத்தை உள்ளே நுழைத்து சமூகத்தில் அனைவருக்குமான இடத்தை உறுதி செய்தார். தன் அரசியல் பணிகளுக்கு இடையில் ஏராளமாக எழுதியவர். பி – பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார். ஆனால் இதுபற்றிய எந்த ஆர்வமும் மக்களுக்கு கிடையாது. ஏனெனில் வெங்காயம் விலை ஏறியதிலிருந்து பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் வரை அம்மணி பேசிய அரிய கருத்துக்களை அவரது கட்சியினரே சகித்துக் கொள்ள முடியவில்லை. சட்டப்பிரிவு 112, இதனை ஆண்டுதோறும் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கை என்கிறது. இதனால் என்ன பயன்? பட்ஜெட் தயாரிப்பு அறிக்கை முடிந்தபின் அல்வா கிண்டி சாப்பிடுவார்கள். அதே அல்வாவில் மிஞ்சியதை மக்களுக்கு கொடு