இடுகைகள்

பொடியனை அடக்கிய லக்கி லூக்! - ஜாலி அட்வென்ச்சர்

படம்
லக்கி ஸ்பெஷல்  லக்கி லூக் கலக்கும் சூப்பர் சர்க்கஸ், பொடியன் பில்லி! சன்ஷைன் லைப்ரரி ரூ.100 சீரியஸாக நாம் நிறைய காமிக்ஸ்களைப்  படித்தாச்சு ப்ரோ என விரக்தியாக நின்றோம். என்ன செய்யலாம் என யோசித்தோம்.  ஸோ, காமெடிதான் இனி என சுந்தர்.சி யாக காமிக்ஸ் குவியலுக்குள் பாய முயன்றோம். அதற்கு ஓனரான  ஓவியக்கலைஞர் பி உடனே தடுத்து, எடுத்து நீட்டிய புத்தகம்தான் லக்கி லூக். சூப்பர் சர்க்கஸ் கதையில், பழம் பஞ்சாங்கமான வயதான மிருகங்களை வைத்து சர்க்கஸ் என்ற பெயரில் ஏதோ ஒன்று செய்கிறார் கேப்டன் மோரிஸ். அவருக்கு உதவுகிறார் லக்கி லூக். காரணம்? அதையெல்லாம் நீங்கள் கேட்டால் காமிக்ஸ் ருசிக்காது. ஜாலிக்காக அட்வென்சருக்காக செய்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்களேன். லக்கியின் நோக்கம், அருகிலுள்ள நகரில் நடைபெறும்  குதிரை சாகசப் போட்டி. அங்கு செல்லுவதாக சொல்ல கேப்டன் மோரிஸ் நாங்களும் வருகிறோம் என்று வருகிறார். அங்கு பார்த்தால், அங்கு உள்ள தொழிலதிபரான ரீகன் என்பவருக்கும் லக்கி, கேப்டன் மோரிஸ ஆகியோருக்கும் மோதல் ஏற்படுகிறது. ரீகன், அந்த ஊரின் தொழிலதிபர். விஸ்கி, காய்கறிக்கடை, இடுகாடு, மின்சார

சிலர் பேசுவதை மட்டும் விரும்பிக் கேட்க காரணம் இதுதான்!

படம்
புத்தக விமர்சனம் உளவியலும் உண்மையும் நூல் ஆசிரியர், பல்வேறு கல்லூரிகளிலும் மருத்துவமனைகளிலும் உளவியலாளராக பணியாற்றியுள்ளார். இதில் தான் சந்தித்த விஷயங்களைப் பற்றி ஆழமாக பேசுகிறார். தந்தைக்கு சிறுநீரகம் கெட்டுவிட, மகன் அவருக்கு சிறுநீரகத்தை தானம் தர முன்வருகிறார். சோதனையில் மகனுடைய சிறுநீரகம் பொருந்துகிறது. இதன் விளைவாக, அவருடைய உயிரியல் ரீதியான மகன் அவரில்லை என்ற உண்மையும் வெளிவருகிறது.இதனால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றை அழகாக எழுதியுள்ளார் ஆசிரியர். செய்தி சொல் கிளியே! சிலர் சொல்வதை நாம் கவனித்துக் கேட்கிறோம். சிலர் சொல்ல வந்தால் வேறு பக்கம் கிளம்பி ஓடிவிடுகிறோம். அதற்கு என்ன காரணம்? அதைத்தான் இந்த நூல் கூறுகிறது. இதற்கான எடுத்துக்காட்டுகளை பிரெக்ஸிட் முதற்கொண்டு எடுத்து வைத்து கூறுகிறார்கள். படித்து பார்த்து வாழ்க்கையில் முயற்சித்து பாருங்கள். உதவக்கூடும். பழக்கங்கள் எனும் சங்கிலி! எப்படி பழக்கங்களுக்குள் நமது மனம் சிக்குகிறது? அதிலிருந்து வெளியே வருவது எப்படி? வாழ்க்கையை உருப்படியாக வாழச்செய்யும் பழக்கங்கள் எவை என ஆசிரியர் நம் கைபிடி

காந்தி கேட்ட நான்கு கேள்விகள்! - காந்தி 150

படம்
பின்டிரெஸ்ட் காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய அரசு பல்வேறு விழாக்களை கொண்டாட முடிவு செய்துள்ளது. காந்தி, ஏன் பிற தலைவர்களை விட முன்னே நிற்கிறார்? காரணம் தான் வலியுறுத்திய கொள்கைகளை அடையாளமாக்கினார். அவரின் கண்ணாடி , இடுப்பில் உடுத்திய ஒற்றைத்துணி, பாக்கெட் வாட்ச், கைத்தடி என அனைத்துமே எளிய நாடோடி  மனிதருக்கானவை. அவரை சந்திக்கும் எந்த வெளிநாட்டவருமே அவரை நாடோடி பக்கிரியாகவே கருதுவார்கள். ஆனால் அவரின் எழுத்துகள், சிந்தனைகள் வழி அவரை அணுகுபவர்கள் அவர்மீதான நேசத்தில் விழுவார்கள். காரணம், யாரையும் கவர்ந்திழுக்கும் வசீகர எளிமையான எழுத்து அவருடையது. இன்றும் அவரது கொள்கைகளைப் படித்து அதன்பால் ஈர்ப்பு கொண்ட காந்தியர்கள் உண்டு. இவர்கள்தான் இன்று சமூகத்தை இயக்கி வருகிறார்கள். மதம் காந்தி இறுதிவரை இந்து மத சார்பானவராகவே இருந்தார். மத வர்ணங்களை ஆதரித்தார். அதில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது என்றார். மதம் என்பதை மக்களுக்கு வழிகாட்டும் பாதையாக, உண்மையை கண்டறிய உதவும் ஒளியாக அவர் கண்டார். ஆனால் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களை அவலத்திற்குள்ளாக்கும்

பேஸ்கட் பால் விளையாட்டில் சாதித்த ஓரினச்சேர்க்கையாளர்! - மைக்கேல் சாம்

படம்
மாற்றுப்பாலினச் சாதனையாளர்கள் மைக்கேல் சாம் மைக்கேல் ஆலன் சாம் ஜூனியர், அமெரிக்காவில் பேஸ்கட்பால் விளையாட்டு வீரர். மிசௌரி பல்கலைக்கழ கல்லூரியில் படித்து வந்தார். என்எஃப்எல்லில் இடம்பெறுவது பல விளையாட்டு வீர ர்களுக்கும் கனவு. இவருக்கு இடம் கிடைத்தது. அதுவும் இவர் தன் கல்லூரி படிப்பை முடித்தபிறகு, தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என அறிவித்துவிட்டார். அப்போதும் பேஸ்கட் பால் அணியில் விளையாடும் பேஸ்கட்பால் அணி நிர்வாகம் வழங்கியது ஆச்சரியமான ஒன்று. அமெரிக்காவில் சாம் அப்படி தன்னை வெளிப்படுத்தியபோது, பேஸ்கட்பால் விளையாட்டில்,  ஓரினச்சேர்க்கையாளர் யாரும் கிடையாது. நிலைமை எப்படி அழுத்தமாக இருந்ததோ தெரியவில்லை. ஆனால் சாம் விளையாடுவதை மட்டுமே தனக்கான அழுத்தமாக ஊக்கமாக கருதினார். இதுபற்றிய சர்ச்சை எழுந்தபோது, அமெரிக்க அரசு பாலினத்தை கேட்கவும் வேண்டாம் யாரும் சொல்லவும் வேண்டாம் என்று கூறி மாற்றுப்பாலினப் பிரச்னையை தீர்த்து வைத்தது. ”மாற்றுப்பாலினத்தவர்கள், அல்லது கருப்பினத்தவர்கள் இவர்களுக்கு நன்மை செய்வதற்காக என் அடையாளத்தை நான் வெளிப்படுத்தவில்லை. நான் உங்களைப்போல இயல்பான வாழ்க்கையை

மனிதநேயத்தை மறைய வைக்கும் பேராசை! - எவரு - குற்றவாளி யார்?

படம்
எவரு - தெலுங்கு  இயக்கம் - வெங்கட் ராம்ஜி ஒளிப்பதிவு  - வம்சி பச்சிபுலுசு இசை - ஸ்ரீசரண் பகலா சமீரா என்ற தொழிலதிபரின் மனைவி, குன்னூர் ரிசார்ட் ஒன்றில் வல்லுறவு செய்யப்படுகிறார். வல்லுறவில் ஈடுபடுபவர் டிஎஸ்பியான அசோக் கிருஷ்ணா என்ற உயரதிகாரி. அவரை சமீரா, துப்பாக்கியால் சுட்டுக்கொல்கிறார். அதாவது தன்னைக் கற்பழித்தார், அதனைத் தடுக்கும் முயற்சியால் அவரைக் கொன்றேன் என்கிறார். ஊடகங்களில் தன்னை பாவமாக காட்டிக்கொள்கிறார். விரைவில் தீர்ப்பு வரவிருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு உள்ளுக்குள் பதற்றம் அதிகரித்து வருகிறது. காரணம், வழக்கு நகரும் திகுதிகு வேகம்தான. இதற்கிடையே போலீஸ்துறை தங்கள் மீதான களங்கத்தைப்போக்க ரத்னாகர் எனும் தனியார் வக்கீலை  நியமிக்கின்றனர். இதனால் தான் பாதிக்கப்படுவோமோ என சமீரா பயப்படுகிறார். அப்போது அவரைக் காப்பாற்ற, வருகிறார் விக்ரம் வாசுதேவ்.ஆம் லஞ்ச லாவண்யம் வாங்கி குற்றவாளிகளுக்கு உதவுபவர் இவர். இருபது லட்சம் டோக்கன் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு சமீராவுக்கு உதவுகிறார். அரசு வழக்குரைஞரிடம்  எப்படி பேச வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும்போது வழக்கு தொடர்பான உண்மைய

பாட்காஸ்ட்சந்தை உயருகிறது! - இந்தியாவில் தோன்றும் புது மோகம்!

படம்
நகர வாழ்க்கை கிராமத்திலிருப்பவர்களுக்கு சொர்க்கமாக தோன்றும்.ஆனால் காரில், பைக்கில் செல்லும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் உங்களுக்கு எரிச்சலூட்டும். இதிலிருந்து காப்பாற்ற இநூல்கள் உதவும். ஆனால் பயணிக்கும்போது தற்போது பாட்காஸ்டுகள் இப்பணியைச் செய்கின்றன. இதனால் தினசரி செய்தி, காமெடி, சுயமுன்னேற்றம் என அனைத்தும் ஆடியோ வழியாக கேட்க முடிகிறது. “நாங்கள் உங்கள் நேரத்தை திருடுவதில்லை” என்கிறார் ஹப்ஹாப்பர் எனும் பாட்காஸ்ட் நிறுவனரான கௌதம் ராஜ் ஆனந்த். பாட்காஸ்ட் என்பது தொடரின் தனித்தனி கோப்புக்களை வெளியிட பயனர்கள் கேட்பதுதான். பாட்காஸ்ட் எனும் ஆடியோ ஒலிபரப்பு கோப்புகளை நீங்கள் தரவிறக்கி கேட்டு மகிழலாம். இது படிப்பது போன்ற சோர்வைத் தருவதில்லை என்கிறார்கள் மெட்ரோநகர வாசிகள். 2017 இல், 25.4 மில்லியன் பேர் பாட்காஸ்ட்டுகளை கேட்டு வந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டில் 176 மில்லியன் பேர் இதனைக் கேட்பார்கள் என திட்டமிடப்பட்டுள்ளது. உலகளவில் இங்கிலாந்தின் ஆடியோபூம், அமெரிக்காவின் ட்யூன் இன், சீனாவின் ஜிமலயா ஆகிய நிறுவனங்கள் பாட்காஸ்ட் வணிகத்தில் முன்னே நிற்கின்றன. ஜியோ சாவன், வின்க் மியூசிக் ஆ

சக்திவாய்ந்த இந்தியப் பெண்கள்! - பிசினஸ் டுடே கௌரவம்!

படம்
நாடியா சௌகான், பார்லே அக்ரோ பிசினஸ் டுடே சக்தி வாய்ந்த பெண்கள் என்ற அட்டைப்பட கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் சாதித்த பெண்கள் இளம் தலைமுறையினருக்கு என்ன சொல்கிறார்கள்? ஃபால்குனி நாயர், நிறுவனர், நைகா. பெண்கள் உயர்பதவிகளை அடைய தங்களை அர்ப்பணிக்க வேண்டும். அப்போதுதான் நிறுவனத்தின் முக்கியமான பதவிகளைப் பெறமுடியும். உங்கள் விதி நீங்கள் சுமக்கும் பொறுப்பில்தான் இருக்கிறது. மைலீட் அகா வில்லியம்ஸ், தெற்காசியத் தலைவர், பிபிசி ஸ்டூடியோஸ் பெண்ணாக நீங்கள் பணியில் நிறைய போராட வேண்டும். உங்கள் வேலை தரும் சுதந்திரத்தை நீங்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் குழுவில் உள்ளவர்களுக்கு அதனால் பாதிப்பு ஏற்படக்கூடாது. குழுவில் உள்ளவர்களையும் அரவணைத்துச் செல்லும் திறனை நீங்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். நாடியா சௌகான், தலைவர், பார்லே அக்ரோ இன்று தொழில்துறையில் பெண்கள் முன்னேற நிறைய வாய்ப்புகள் உள்ளன. தேவை கொஞ்சம் ஆர்வமும், உழைப்பும்தான். உங்கள் உழைப்பே உங்களின் பெயரை பிறருக்குச் சொல்லும். அபூர்வா புரோகித், தலைவர் ஜாக்ரன் குழுமம் பெண்கள், தம்மை புதுப்பித்துக்கொண்டே இரு

பெண் கல்வியாளர்களுக்காக பதிப்பகம்! - பார்பரா ஸ்மித்!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் பார்பரா ஸ்மித் அறிமுகம் தனது 72 ஆண்டு கால வாழ்க்கையில் கறுப்பினத்தவர்களுக்கான உரிமைகளைப் பேசுபவராக இருந்தார் பார்பரா.  காம்பாகி ஆற்றுப் பாதுகாப்பு மையத்தையும் உருவாக்கி, கறுப்பினத்தவரின் உரிமைகளைப் பேசினார். நான் என்னால் முடிந்த அனைத்து விஷயங்களையும் செய்ய முயற்சித்துள்ளேன் என்கிறார் பார்பரா. போராட்டம்தான் வாழ்க்கை!  1970 ஆம் ஆண்டு தொடங்கி, பார்பரா ஸ்மித் கறுப்பின மக்களுக்காக உழைத்து வருகிறார். மாற்றுப்பாலினத்தவர்களின் உரிமை, செயற்பாட்டாளர், பதிப்பாளர் என பல்வேறு விஷயங்களிலும் ஈடுபட்டு முத்திரை பதித்த பெண்மணி இவர்.  1946 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோவில் பிறந்தார். 1960 ஆம் ஆண்டிலிருந்து பள்ளியில் போராட்டம் என்றால் முன்னாடி நிற்பார். புறக்கணிப்பு, மறியல் என அனைத்து வகை போராட்டத்திலும் பங்கேற்பது பார்பராவின் முக்கியப் பணி. இவரது அம்மாவுக்கு கல்வியின் முக்கியத்துவம் புரிந்தது. குடும்பத்தில் பார்பரா படிக்கும்போது அவர்தான் முதல் பட்டதாரியாவார் என ஹில்டா நம்பினார். ஒன்பதுவயதில் அவர் மறைந்து விட, பார்பராவின் பாட்டி மற்றும் அத்தை படிப்பு ப

ஒரு நாடு, பல மொழிகள்! - மொழியை நொறுக்கும் அரசியல்!

படம்
pinterest தெரிஞ்சுக்கோ! மொழித்தீ! உள்துறை அமைச்சர் இந்தி மொழியை மாநிலங்கள் இரண்டாவது மொழியாக கற்க வேண்டும் என்று இந்தி திவஸ் நிகழ்ச்சியில் அறிவிக்கிறார். மத்திய அரசு அமைச்சர்கள் ஆண்டுதோறும் இந்தி மொழி தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம்தான். ஆனால் இம்முறை அமித் ஷா உள்துறை அமைச்சராகி பங்கேற்று சர்ச்சைக்கு திரி கொளுத்தியிருக்கிறார். இந்தி என்றாலும் ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பொறுத்தவரை அது தற்காலிகம்தான். சமஸ்கிருதத்தை இந்தியின் இடத்தில் பொருத்துவது அவர்களின் லட்சியம். அதற்கான அடிக்கல்லை ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவுக்கு முன்பே நடத்தொடங்கிவிட்டனர். கல்வி விஷயத்தில் பாஜக அரசு ஏற்கனவே தன் கருத்துகளை நடவு செய்யத் தொடங்கிவிட்டது. வரலாற்றை திருத்தி தனக்கேற்றபடி மாற்றி எழுத தொடங்கிவிட்டனர். அதிகாரம் கையில் இருக்க கவலை என்ன? எனது சொல்லே  கட்டளை, அதுவே  சாசனம் என தினமொரு கட்டளை டெல்லியிலிருந்து வருகிறது.  நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை யாரும் விமர்சிக்காமலிருக்க ஏதேனும் ஒரு அறிவிப்பை வீசிக்கொண்டே இருக்கிறது மத்திய அரசு. ஓகே. மொழி பற்றிய டேட்டா இதோ! 22 மொழிகளை இந்திய அரசு அதிக

சூழலைக் காப்பாற்றுவது பாஜக அரசுதான்!

படம்
மினி நேர்காணல் பிரகாஷ் ஜாவேட்கர், சுற்றுச்சூழல் அமைச்சர் பஞ்ச பூதங்களை காப்போம் என்று கூறினீர்கள். எப்படி? நீரைக் காக்க ஜெய்சக்தி எனும் துறையைத் தொடங்கியுள்ளோம். உலக மக்கள் தொகையில் இந்தியர்கள் 17 சதவீதமும், விலங்குகள் உயிரினங்கள் அளவில் 20 சதவீதமும் உள்ளது. மழையில் இந்தியா 4 சதவீதம் மட்டுமே பெறுகிறது. டெல்லியில் ஏற்படும் காற்று மாசு பிரச்னையைக் குறைக்க முயற்சித்து வருகிறோம். நிலங்களைப் பாதுகாக்க 50 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க உள்ளோம். பாஜக அரசு பதவி ஏற்றதிலிருந்து சூழலைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறோம். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காற்றின் தரத்தை உயர்த்தியுள்ளதாக கூறியுள்ளாரே? அவர் செய்யாத விஷயத்திற்கு புகழைத் தேடுகிறார். நாங்கள் இதுபற்றி சரியான புள்ளிவிவரங்களுடன் அறிக்கையை வெளியிடுவோம். அப்போது அவர் கூறிய பொய் வெட்டவெளிச்சமாகும். வெப்பமயமாதல் இந்தியாவை பாதிக்கும் என்று கூறியிருக்கிறார்கள். நீங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லையா? ஆயிரம் ஆண்டுகளாக பூமி இதுபோல சூழலைச் சந்தித்து வருகிறது. நாம் உயிர்வாழவில்லையா?  இந்தியாவின் நடைமுறைக்கு ஏற்ப ச