இடுகைகள்

கல்வி, பொருளாதாரத்தில் கவனம் செலுத்தினால் தற்கொலைகளைத் தடுக்கலாம்! - சௌமித்ரா பதாரே

படம்
உளவியலாளர் சௌமித்ர பதாரே சௌமித்ர பதாரே மனநல சட்டம் மற்றும் கொள்கை மைய இயக்குநர் உலகளவில் நடைபெறும் தற்கொலைகளில் 20 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. பதாரே, இதுபற்றி லைஃப் இன்டரப்டட் அண்டர்ஸ்டாண்டிங்  இண்டியாஸ் சூசைட் கிரிசிஸ் என்ற நூலை எழுதியுள்ளார். இதில் அம்ரிதா திரிபாதி, அமிஜித் நட்கர்னி ஆகிய எழுத்தாளர்களும் பங்களித்துள்ளனர்.  இளைஞர்கள், பெண்கள், எழுபது வயதானவர்கள் ஆகிய பிரிவுகளில் தற்கொலைகள் அதிகமாகியுள்ளன என கூறியுள்ளீர்கள். இந்தியாவில் தற்கொலைகள் இப்படி அதிகரிக்க என்ன காரணம்? வயதானவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு அவர்கள் தனியாக இருப்பதுதான் காரணம். மேலும் அவர்கள் தங்கள் துணையை இழந்திருப்பார்கள். சமூகத்தில் புறக்கணிப்பையும் எதிர்கொண்டிருப்பார்கள். இதைப் பற்றிய தகவல் பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இளைஞர்கள் ஏன் அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வி.  குடும்ப பிரச்னைகள், உறவு சார்ந்த சிடுக்குகள் இதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. பிற நாடுகளில் நேரும் தற்கொலைகளுக்கு வேலைவாய்ப்பின்மை முக்கியமான காரணமாக உள்ளது. இளம் வயதில் கர்ப்பிணியாவது, பொருளாதார பற்றாக்குறை, ப

உக்ரைனில் உருவாக்கப்பட்ட முழுக்கியமான மென்பொருள் சேவைகள்!

படம்
  இப்போது இந்தியாவில் உள்ள தேசிய ஊடகங்களில் முக்கியமான விவாதம், உக்ரைனில் நடைபெறும் போர் காரணமாக அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் மருத்துவ மாணவர்கள்தான். இத்தனை பேர் ஏன் அங்கே போனார்கள் என இப்போதுதான் தூங்கி எழுந்தது போல உற்சாகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்தியாவில் அரசு மருத்துவக்கல்லூரி இடங்களுக்கான போட்டி அதிகம். அதில் போட்டியிட முடியாதவர்கள், தனியார் கல்லூரியில் பணம் கட்டி படிக்க முடியாத சூழல். இங்குதான் முக்கியமான விஷயம் உள்ளது. இந்த சவாலான சூழலுக்காக அவர்கள், கனவை கைவிடவில்லை. உக்ரைன் சென்று படித்து வருகிறார்கள். உக்ரைன் மருத்துவப் படிப்பிற்கு மட்டுமல்ல, டெக் முன்னேற்றங்களுக்கும் புகழ்பெற்றது. அங்கு உருவான முக்கியமான அப்ளிகேஷன்களை இப்போது பார்ப்போம்.  வாட்ஸ்அப் இப்போது மெட்டாவோடு சேர்ந்துவிட்டது. தொடக்கத்தில் இதனைத் தொடங்கிய ஜான் கூம் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் பிறந்தவர். ஃபாஸ்டிவ் நகரில் வளர்ந்துள்ளார். பிறகுதான் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு தனது அம்மா, பாட்டியுடன் இடம்பெயர்ந்திருக்கிறார். அப்படி இடம்பெயர்ந்தபோது அவரின் வயது 16.  பேபால் பணத்தை இணையம் வழியாக கட்டும் நிறு

அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கும் ஆங்கிலம் அவசியம்!

படம்
  ராதா கோயங்கா மும்பையிலுள்ள அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை கற்பிக்க ஆர்பிஜி நிறுவனம் முடிவெடுத்து செயல்பட்டு வருகிறது. தாய்மொழிக்கல்வியை பலரும் வலிமையாக பேசினாலும் வணிக மொழியாக வெற்றி பெற்றுள்ளது ஆங்கிலம்தான். அதனுடைய இடத்தை பிராந்திய மொழியோ, தேசியமொழியோ கூட பெறவில்லை என்பது நடைமுறை யதார்த்தம்.  அந்த வகையில் மும்பையிலுள்ள அரசுப்பள்ளிகளில் பெஹ்லாய் அக்சார் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனை ராதா கோயங்கா என்ற பெண்மணி திட்டம் தீட்டி அரசு ஆதரவுடன் செயல்படுத்தி வருகிறார்.  கட்டாய கல்விச்சட்டத்தை மதிய உணவுத்திட்டத்துடன் சேர்ந்து நடைமுறைப்படுத்தியது அதன் வெற்றிக்கு உதவியது. அதைப்போலத்தான், நான் ஆங்கிலத்தில் பேசும் வகுப்பையும் கருதுகிறேன். இது அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கு உள்ள தடையை நீக்கும் என நம்புகிறேன் என்கிறார் ராதா.  பெஹ்லாய் அக்சார் குழுவினர் இவர் இப்பணிக்காக, தனது வேலையைக் கூட கைவிட்டுவிட்டு முழுமையாக இதனைச் செய்துவருகிறார். 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஆங்கில கல்வித் திட்டம் இது. ஆனால் அப்போது வெறும் தன்னார்வலர்களின் உதவியை மட்டுமே பெற்றார். ஆனால் திட்டத்தை நடைமுறைப்

மகத்தான இலக்கிய எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர்!

படம்
  ஐரோப்பாவைப் பொறுத்தவரையில் வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகளுக்கு பெரிய மரியாதை உண்டு. அவரின் பல்வேறு நாடகங்கள்,கதைகளை வைத்து ஆங்கிலப் படங்களை உருவாக்கியுள்ளனர். இப்போது பார்க்கப்போவது அவரைப்பற்றித்தான்.  1564ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று, ஷேக்ஸ்பியர் பிறந்தார். ஜான் மற்றும் மேரி ஷேக்ஸ்பியர் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ஸ்ட்ராபோர்ட் கிராமர் பள்ளியில் படித்தார். தனது பதினெட்டு வயதில் அன்னா ஹாத்வே என்ற பெண்ணை மணந்தார். இத்தம்பதிக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். சூசன்னா, ஜூடித் , ஹாம்னட் என்பதுதான் பிள்ளைகளின் பெயர். சில ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியம் லண்டனுக்கு இடம்பெயர்ந்தார். இதற்குள்ளாகவே அவருக்கு கவிஞர், நடிகர், நாடக ஆசிரியர் என்ற அங்கீகாரம் கிடைத்திருந்தது.  இவர் எழுதிய வரலாற்று நாடகங்களில் ஜூலியஸ் சீசர், ஐந்தாம் ஹென்றி, ஓத்தெல்லோ, மெக்பத், ஆகியவை முக்கியமானவை. நகைச்சுவை நாடகங்களான ஏஸ் யு லைக் இட், எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம், காதல் நாடகங்களான ரோமியோ ஜூலியட், ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா ஆகியவையும் முக்கியமானவை.  ஷேக்ஸ்பியர் கிளாசிக்கான எழுத்தாளர். இன்றும் கூட அவர் தேர்ந்தெடுத்த பாத்திர

பெருந்தொற்று காலத்தில் க்யூஆர் கோட் மூலம் கல்வி கற்பித்த ஆசிரியர்!

படம்
  புதிய கற்பித்தல் முயற்சி! மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சோவநகர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஹரிஸ்வாமி தாஸ்.  இவர், பள்ளியில் படிக்கும் 2,900 மாணவர்களையும், அவர்களது குடும்ப நிலையையும் அறிந்தவர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டபோது மாணவர்களுக்கு எப்படி கற்றுக்கொடுப்பது என யோசித்தார். சோவநகரில் ஏற்பட்ட மண் அரிப்பு, குடியிருப்புகள் மாற்றம் ஆகிய பிரச்னைகளையும் சமாளித்து மாணவர்களுக்கு கற்பித்து வந்தார்.  பள்ளிகள் மூடப்பட்டு பொதுமுடக்க காலகட்டம் நடைமுறையில் இருந்தது. தனது மாணவர்கள் சிலரின் வீடுகளுக்கு போனில் அழைத்தார் ஹரிஸ்வாமி தாஸ். ஏழை மாணவர்களில் 30 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தமுடியாத சூழல் இருந்தது. படிப்பதற்கான நூல்களும் கிடைக்கவில்லை என்று புகார் கூறினர். “என்சிஇஆர்டி நூல்களில் க்யூஆர் கோட் இருந்தது. ஆனால் மேற்குவங்க  மாநில அரசு பாடநூல்களில் இந்த வசதி கிடையாது. எனவே, அரசு வலைத்தளங்களிலிருந்து பாட நூல்களை தரவிறக்கி க்யூஆர் கோட் மூலம் அதனை அணுகும்படி வசதிகளை செய்தோம் ”  என்றார்.   தாஸின் மாணவர்கள் வீடுகளில், ஸ்மார்ட்போன்களை அவர்களது தந்தை அல்லது சகோதரர்கள்

வித்தியாசமாக கட்டப்பட்ட டோக்கியோ கேப்சூல் டவர்!

படம்
  வினோதமான டோக்கியோ டவர் கட்டடம்! இந்த கட்டடத்தை முதலில் பார்ப்பவர்கள், தேவையில்லாமல் இருக்கும் கான்க்ரீட் கற்களை வரிசையாக அடுக்கி வைத்திருப்பார்கள் என்றே நினைப்பார்கள். கின்சா மாவட்டத்திலுள்ள டோக்கியோவில்  கேப்சூல் டவர் அமைக்கப்பட்டுள்ளது.  இதனை  1972ஆம் ஆண்டு கிஷோ குரோகாவா என்ற புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் உருவாக்கினார். நகரில் வேலை பார்ப்பவர்கள் வார இறுதிக்கு புறநகருக்கு அவசரமாக கிளம்புவதைத் தடுக்கும் வகையில் இந்த கட்டட அமைப்பை உருவாக்கினார். பார்க்க பெட்டி மாதிரி இருந்தாலும் இதில் பலர் தங்கலாம். ஒரு பெட்டியில் ஒருவர் என தங்கலாம். உலகப்போருக்கு கட்டப்பட்ட கட்டுமானது இது. ஒவ்வொரு கேப்சூலிலும் குளியலறை, டிவி, ரேடி, போன் ஆகியவை வைப்பதற்கான இடம் இருக்கும். கூடவே நகரை உள்ளிருந்து வெளியே பார்ப்பதற்கான ஜன்னலும் உண்டு. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் கேப்சூல் கட்டுமானம் மெல்ல சிதைவடைந்து வருகிறது.  இப்போது இங்கே தங்கி கேப்சூலை அலுவலகமாக வீடாக பயன்படுத்தி வருபவர்களுக்கும் நிலைமை புரிந்துவிட்டது. அடுத்த ஆண்டு இந்த கேப்சூல்கள் அழிக்கப்படும் என தெரிகிறது. ”நாங்கள் இந்த கட்டட ஐடியா

விவசாயிகளின் துயர் துடைக்கும் மிரிட்ஸா!

படம்
  விவசாயிகளுக்கு உதவும் மிரிட்ஸா! ஆந்திர விவசாயிகளுக்கு உதவ பள்ளி மாணவிகள் நால்வர் இணைந்து  திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். புராஜெக்ட் மிரிட்சா எனும் திட்டத்தை நந்தினி ராஜூ(16), ஸ்ரீலக்ஷ்மி ரெட்டி(16), சாரதா கோபாலகிருஷ்ணன் (14), அம்ருதா பொட்லூரி (16) ஆகிய மாணவிகள் தொடங்கியுள்ளனர். இதுவரை 1.5 லட்சம் ரூபாய் நிதி திரட்டி இயற்கை விவசாயம் செய்யவும் குளிர்பதனக்கிடங்குகளைக் கட்டவும் விவசாயிகளுக்கு உதவி வருகின்றனர். இதில் சாரதா கோபாலகிருஷ்ணன் சென்னையைச் சேர்ந்தவர். அம்ருதா, அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர்.  கடந்த ஜூன் மாதம் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டும் வீடியோக்களை  உருவாக்குவது, தானியங்களை சேமிப்பதற்கான கிடங்குகளை ஏற்படுத்துவது, இயற்கை விவசாய மாதிரிகளை பிரசாரம் செய்வது, அரசு திட்டங்களை விளக்குவது ஆகியவற்றை செய்து வருகின்றனர்.  ஆந்திரத்தின் குண்டூர் பகுதியில் இன்ஸ்டாகிராம், யூடியூப் என பல்வேறு சமூக வலைத்தளங்களையும் நான்கு மாணவிகளும் பயன்படுத்தி விழிப்புணர்வு பிரசாரங்களை செய்கின்றனர். இங்கு கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின

யுனைடெட் வே மும்பையின் தூய்மைப்பணி

படம்
  கடற்கரைகளை சுத்தம் செய்யும் குழு! மும்பையில் கடந்த செப்டம்பர் மாதம், 40 கல்லூரி மாணவர்கள் குழு, மஹிம் கடற்கரையிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். இக்கழிவுகள், மறுசுழற்சி செய்யும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. யுனைடெட் வே மும்பை என்ற தன்னார்வ நிறுவனத்தின் பெயரில் தூய்மை பணிகளை மாணவிகள் செய்தனர்.  2017ஆம் ஆண்டு யுனைடெட் வே மும்பை தன்னார்வ நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் யுனைடெட் வே வேர்ல்ட் என்ற உலகளாவிய அமைப்பின் இந்திய பிரிவு ஆகும். முமைபையிலுள்ள தன்னார்வ அமைப்பு, 11 ஆயிரம் தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது. கடற்கரைகளை சுத்தம் செய்து 98 ஆயிரம் கிலோ கழிவுகளை மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பியுள்ளது. ஒன்பது கடற்கரைப் பகுதிகளை இந்த அமைப்பு சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளது. ”கடலில் வந்து சேரும் ஆறுகளில் ஏகப்பட்ட கழிவுகள் உள்ளன. அவற்றைக் குறைத்தாலே கடற்கரையில் ஒதுங்கும் கழிவுகளை குறைக்கலாம். நாங்கள் மும்பை மாநகராட்சிக்கு தூய்மைப் பணியில் உதவுகிறோம்” என்றார்  யுனைடெட் வே மும்பை அமைப்பின் துணைத்தலைவர் அஜய் கோவலே.  கடற்கரையைச் சுற்றியுள்ள சுவர்களில் வண்ணம் தீட்டுவது, குப்பைகளை போடக

பதப்படுத்துதல் முறையைக் கண்டுபிடித்து 160 ஆண்டுகள்!

படம்
  லூயிஸ் பாஸ்டர் அமுல் தாஸா என்ற பால் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படுகிறது. 200 மி.லி. பதினைந்து ரூபாய்தான். இதனை காய்ச்சாமலேயே கடையில் வாங்கியவுடனே குடிக்கலாம். மொத்தம் 180 நாட்கள் கெடாது என கம்பெனியினர் சொல்லுகிறார்கள். எப்படி இந்த செயல்பாடு சாத்தியமானது.?  பதப்படுத்துதல்தான். அதன் முன்னேற்றம்தான் இந்த சாதனைக்கு காரணம். பாலில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லவே அதனை கொதிக்க வைக்கிறார்கள். ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்னர் இப்படி பாலை கொதிக்க வேண்டுமென யாருக்கும் தெரியாது.  பாலை 60 முதல் 100 டிகிரி செல்சியஸ் வரை கொதிக்க வைத்தால் அதிலுள்ள நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்த முடியும். இந்த முறையை கண்டுபிடித்தவர், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் லூயிஸ் பாஸ்டர். இவர், 1822ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி பிறந்தவர். ஈகோல் நார்மலே சுப்பீரியர் எனும் இடத்தில் படித்தார். படித்து முடித்து தொடக்க பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார்.  1856ஆம் ஆண்டு லூயிஸைப் பார்க்க, உள்ளூர் மனிதர் ஒருவர் வந்தார். அவர் தான் தயாரித்த பீட்ரூட் ஜூஸ்  கெட்டுப்போனதைப் பற்றி சொன்னார். அதனை ஆராய்ந்த லூயிஸ், அதில

மூழ்காது என்று சொல்லிக் கட்டப்பட்ட டைட்டானிக் கப்பல்!

படம்
  ஆர்எம்எஸ் டைட்டானிக் டைட்டானிக் கப்பல் இங்கிலாந்தில் கட்டுமானம் செய்யப்பட்ட கப்பல் இது. அன்றைய காலத்தில் கட்டுமானம் செய்யப்பட்ட ஆடம்பர கப்பல்களில் டைட்டானிக் கப்பல் மிகப்பெரியது.  1912ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று டைட்டானிக் கப்பலின் கட்டுமானம் நிறைவுபெற்றது. அந்த காலத்தில் அதிக ஆட்கள் வேலை செய்தது. இந்தக்கப்பலைக் கட்டத்தான். 14 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்த கப்பல் இது. உருவாக்கப்பட்டு எட்டே நாட்களில் அழிவை சந்தித்தது. இங்கிலாந்தின் சௌத்தாம்டனிலிருந்து கிளம்பிய கப்பல் திரும்ப வரவில்லை.  இங்கிலாந்திலிருந்து கிளம்பி பிரான்சுக்கு சென்றுகொண்டிருந்த கப்பல், ஏப்ரல் 14 அன்று இரவு 11.40க்கு பனிப்பாறை மீது மோதியது. இதன் விளைவாக கப்பல் உடைந்து மூழ்க இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் ஆனது. இந்த விபத்தில் அந்த கப்பலில் பயணித்த 2200 பேரில் 1500 பேர் மரணமடைந்தனர். கப்பல் விபத்துக்குள்ளான வரலாற்றில் டைட்டானிக் கப்பல் சோகமான சாதனை படைத்த கப்பல் என்றே சொல்லலாம்.  விபத்து ஏற்பட்டாலும் கூட முழுகாது என்று இந்தக்கப்பலைக் கூறினார்கள். ஆனால், மட்டமான இரும்பைப் பயன்படுத்தி கப்பலைக் கட்டியதால் பனிப்பாறையில் மோதியவுடனே

பறவைகள் வாசனையை வைத்துதான் உணவு தேடுகிறதா? - அறிவியல் நூல்கள் அறிமுகம்

படம்
  சீக்ரெட் பர்ஃஃப்யூம் ஆப் பேர்ட்ஸ் டேனியல்லா ஜே வொய்டேகர் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் 2022 பெரும்பாலான பறவை ஆராய்ச்சியாளர்கள் பறவைகளுக்கு சுவாசிக்கும் திறன் இல்லை என்று கூறுவார்கள். ஆனால் டேனியல்லா தனது ஆராய்ச்சி வழியாக பறவைகளுக்கு வாசனை அறியும் திறன் உண்டு என்று சொல்கிறார். மேலும், உணவுகளை கண்டுபிடிக்கவும், இணை சேரவும் கூட வாசனைகளை பயன்படுத்துவாக சொல்லுகிறார். எனவே ஆர்வம் இருப்பவர்கள் நூலை வாங்கி வாசியுங்கள்.  அனிமல் ரிசொல்யூஷன் ரோன் புரோக்லியோ மின்னசோட்டா பல்கலைக்கழகம் 2022 இதில் ஆங்கில பேராசிரியர் ரோன், விலங்குகளின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி கட்டுரைகளாக எழுதியுள்ளார்.  ஜர்னி ஆப் தி மைண்ட்  ஹவ் திங்கிங் எமர்ஜெட் ஃப்ரம் சாவோஸ்  ஆகி ஆகாஸ், சாய் கட்டாம் எப்போதும் நமது மூளையில் நடைபெறும் நிகழ்ச்சிகள், நியூரான்கள் பற்றிய சந்தேகங்கள் நமக்கு உண்டு. இந்த நூலில் பிரக்ஞை பற்றிய கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை அறியத் தருகிறார்கள். தவளை, மனிதன், குரங்கு ஆகியவற்றின் மூளைகளை படமாக வரைந்து விளக்கியிருக்கிறார்கள்.  தி கைஜூ பிரசர்வேஷன் சொசைட்டி ஜான் ஸ்கால்ஸி  2022 இது ஒரு நாவல். நாவலுக்கு முன்னா