இடுகைகள்

தொழில்நுட்பம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிக்கிம் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த வரலஙற்றை சொல்லும் நூல்! - புதிய புத்தகம் அறிமுகம்

படம்
                      பெ ஸ்ட் ஷார்ட் ஸ்டோரிஸ் எவர் டெர்ரி ஓ பிரையன் வெஸ்ட்லேண்ட் ரூ .199 உலகம் முழுக்க புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய 41 சிறுகதைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன . இதனை எழுத்தாளர் ஆசிரியர் டெர்ரி ஓ பிரையன் தொகுத்துள்ளார் . மொழிவளமும் , உணர்ச்சிகரமும் கொண்ட புதிய பாணி கதைகள் இதில் உள்ளன . எட்கர் ஆலன்போ எர்னஸ்ட் ஹெமிங்வே , சோமர்செட் மாகாம் , வர்ஜீனியா உல்ப் ஆகியோரின் கதைகள் இதில் உள்ளன . சுலை ஜான் கிரிசம் ஹாசெட் ரூ .699 17 வயது நிரம்பிய சாமுவேல் சுலைமான் தெற்கு சூடானைச் சேர்ந்தவன் . இவனுக்கு பேஸ்கட் பால் விளையாட்டில் திறமை இருக்கிறது . இவனை கவனித்த பயிற்சியாளர் அமெரிக்காவுக்கு அழைத்து செல்ல நினைக்கிறார் . அவன் அமெரிக்காவிற்கு சென்றானா , விளையாட்டில் சாதித்தானா என்பதே கதை . சிங் ஆப் லைப் பிரியா சருக்காய் வெஸ்ட்லேண்ட் ரூ .499 தாகூரின் கீதாஞ்சலி போலவே இதுவும் ஆன்மிகத்தை தேடும் முயற்சிதான் . தனக்குள் ஒருவர் கேட்டுக்கொள்ளும் கேள்விகளை உள்ளடக்கி நூல் உருவாகியுள்ளது . இந்த உலகத்தை மீண்டும் தாகூர் போல

கல்வியை மேம்படுத்தும் தொழில்நுட்பம்!

படம்
  கல்வியை மேம்படுத்தும் தொழில்நுட்பம்! கல்வித்துறையில் நுழைந்துள்ள பல்வேறு தொழில்நுட்பங்கள் கல்வி கற்றலை ஆச்சரியமூட்டும் வகையில் மாற்றியுள்ளன. கரும்பலகையில்  ஆசிரியர் மூளை பற்றிய படத்தை வரைந்து மாணவர்களுக்கு  விளக்கியது  அந்தக் காலம். இன்று அதே மூளை பற்றிய பாடத்தை 360 டிகிரி கோணத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் மாணவர்கள் கற்று வருகின்றனர். கூகுள் கார்டுபோர்டு போன்ற விஆர் தொழில்நுட்ப வசதிகள் இதனை எளிமையாக்கி உள்ளன.  தற்போது தனியார் பள்ளிகள் மட்டுமே கல்வி கற்பித்தலுக்கு ஏஆர், விஆர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் மூலமாக மாணவர்கள் கல்வி கற்கவும், தங்களுக்குத் தேவையான கல்லூரிகளை தேர்ந்தெடுக்கவும் முடியும். மேலும் இணையம் வழியான பல்வேறு படிப்புகளை படிக்கவும் இத்தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.  “ஏ.ஐ. மூலம் மாணவர்கள் படிப்பில் எந்த இடத்தில் சறுக்குகிறார்கள் என்பதை அறியலாம். ஏ.ஐ. என்பது மாணவர்களுக்கு கற்பிப்பதோடு, அவர்களின் கேள்விகளை அலசி ஆராய்ந்து அவர்களைப் புரிந்துகொள்கிறது. இம்முறையில் ஏ.ஐயை பொருட்களின் விலை நிர்ணயித்திற்கு அமேச

அடுத்த ஆண்டில் 50ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் சி புரோகிராமிங் மொழி! - மீண்டும் பிரபலமாவது எப்படி?

படம்
                  கணினிமொழி சி ! அடுத்த ஆண்டு சி மொழி , கண்டுபிடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றது . இன்று நாம் பயன்படுத்தும் டிவி , வாஷிங்மெஷின் , மைக்ரோவேவ் ஓவன் , ஸ்மார்ட் பல்புகள் , காரின் டாஷ்போ்ர்டு ஐஓஎஸ் , ஆண்ட்ராய்ட் ஓஎஸ்கள் அனைத்துக்குமே அடிப்படை சி மொழிதான் . 2015 ஆம் ஆண்டு ஜாவா மொழியிடம் தனது பிரபலத்தை சி மொழி பறிகொடுத்து தற்போது மீண்டிருக்கிறது . இணையம் சார்ந்த கருவிகளின் விளைவாக 2017 வாக்கில் சி மொழி முன்னுக்கு வந்திருக்கிறது . 1972 ஆம் ஆண்டு பெல் ஆய்வகத்தைச் சேர்ந்த டென்னிஸ் ரிட்சி என்பவர் சி மொழியைக் கண்டுபிடித்தார் . 1980 வாக்கில் சி மொழி வணிகத்திற்கு கூட பயன்படத் தொடங்கிவிட்டது . இதனை லோலெவல் லாங்குவேஜ் என்று கூறுகிறார்கள் . அப்போது ஹை லெவல் என்றால் ஜாவா , பைத்தான் ஆகியவை வரும் . கணினியின் கெர்னல் எனும் பகுதி சி மொழியால் எழுதப்பட்டு வருகிறது . இன்று ரஸ்ட் , சி பிளஸ் பிளஸ் மொழியில் பல்வேற பரிசோதனை முயற்சிகளை புரோகிராமர்கள் செய்து வருகிறார்கள் . ஆனாலும் கூட சி மொழியின் எளிமையும் திறனு்ம் அதற்கு கைகூடவில்லை . ஒரு செயலை செய்வதற்கான கோடிங்கை சி மொழி

தானியங்கி கார்களின் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பில் சுணக்கம் ஏன்? முக்கியமான காரணங்கள் இவைதான்!

படம்
              தானியங்கி கார் ஆராய்ச்சியில் தேக்கம் ! டெஸ்லா கார் நிறுவனம் அண்மையில் புதிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தியது . தானியங்கி முறையில் இயங்கும் டெஸ்லா காரில் எச்சரிக்கை வாசகம் ஊடகங்களில் கவனிக்கப்பட்டது . ’’’ தானியங்கி முறையில் இயங்கும் காரில் , தவறுகள் நேரவும் வாய்ப்புள்ளது . எனவே ஸ்டீரியங் வீலில் கைவைத்து வண்டியை இயக்குங்கள் . கவனமாக இருங்கள்’ ' என்று பொறுப்பு துறப்பு வாசகங்கள் கூறப்பட்டிருந்தன . தற்போதைய வாகனங்களில் டெஸ்லா நிறுவனம் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் முன்னிலை வகிக்கிறது . ஆனாலும் முழுமையாக தானியங்கி முறையில் கார்களை இயக்கும் முறையில் அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது . சில ஆண்டுகளுக்கு முன்னர் தானியங்கி கார்கள்தான் எதிர்காலம் என உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூறின . தானியங்கி கார்கள் தயாரிப்புக்கான காலக்கெடுவை விதித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கின . ஆனாலும் இன்றுவரை ஒரு நிறுவனம் கூட முழுமையான ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர முடியவில்லை . இதற்கு தடையாக இருக்கும் காரணங்கள் என்ன ? தானியங்கி

ஏ.ஐ. விவசாயம்! - உணவு உற்பத்தியை மேம்படுத்த உதவும் பல்வேறு ஏ.ஐ செயலிகள்

படம்
                  cc   ஏ . ஐ . விவசாயம் !   செயற்கை நுண்ணறிவு மூலம் வேளாண் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த , நீர் பாய்ச்ச , விலைகளை அறிய முடிகிறது . முன்னர் விவசாயப் பயிர்களை பூச்சிகள் தாக்கினால் , அவற்றைக் காப்பாற்ற அனுபவம் வாய்ந்த விவசாயி அல்லது வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உதவிகளை விவசாயிகளை நாடி வந்தனர் . இன்று ஸ்மார்ட்போனில் நிறுவும் ஆப் மூலம் பாதிக்கப்பட்ட பயிர்களை படமெடுத்து அனுப்பினாலே போதும் . பயிர் , எதனால் பாதிக்கப்பட்டுள்ளது , அதற்கான தீர்வு என அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடியும் . “ நான் எனது போனில் பிளான்ட்ரிக்ஸ் (plantrix) என்ற ஆப்பை நிறுவினேன் . இரண்டே நிமிடங்கள் பயிர்களில் ஏற்பட்டுள்ள நோய்த்தாக்குதலையும் , அதற்கான தீர்வையும் தெரிந்துகொண்டேன் . இதனால் விவசாயத்தில் நல்ல லாபம் கிடைத்து வருகிறது” என்கிறார் திருவாரூர் மாவட்ட விவசாயியான ரவிச்சந்திரன் . மகாராஷ்டிரத்தில் 2017 ஆம்ஆண்டு பருத்தி விவசாயிகளுக்கு பயிர்களில் ஏற்பட்ட புழுத்தாக்குதலால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது . ஏறத்தாழ 50 சதவீத விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டனர் . மகாராஷ்டிர அரசு

இந்தியா உருவாக்கும் சூப்பர் கணினிகள்!

படம்
இந்தியா, 2015ஆம் ஆண்டு முதலாக சூப்பர் கணினிகளை உருவாக்கும் முயற்சிகளைத் திட்டமிட்டது. இதற்காக நேஷனல் சூப்பர்கம்ப்யூட்டர் மிஷன் - என்எஸ்எம் தொடங்கப்பட்டது. இதற்காக 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக மின்னணு மற்றும் தகவல்தொடர்புத்துறை, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து பணிபுரிந்து வருகின்றன. ஏழு ஆண்டுகளில் மூன்று சூப்பர் கணினிகளை உருவாக்குவது திட்டமாகும். இதற்காக அரசு திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. ”அரசின் நோக்கம் சிறப்பானதுதான். ஆனால் அரசு இத்திட்டத்திற்காக நிதியை குறைத்து வழங்கியிருப்பதால், பணிகள் வேகம் பிடிக்கவில்லை ” என்கிறார் இத்திட்டத்திற்காக இயங்கும் அதிகாரிகளில் ஒருவர். கணினிகளை உருவாக்குவதில் பல்வேறு தொழில்நுட்ப இடர்பாடுகளை இக்குழு சந்தித்துள்ளது. இதன் விளைவாக அடிப்படையான மென்பொருட்களையும் வன்பொருட்களையும் என்எஸ்எம் திட்டக்குழுவினர் உருவாக்குவதில் தொடக்க காலங்களை செலவழித்து உள்ளனர். இன்று உலகளவில் சீனா சூப்பர் கம்ப்யூட்டர் போட்டியில் முதல் இடத்தில் உள்ளது. இந்த நாடு மொத்தம் 227 சூப்பர் கணினிகளை வைத்துள்ளது. அடுத்தபடியாக அம

அரசியல்வாதிகள் தம் பொறுப்பை உணர வேண்டும்!

படம்
          ”சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது   அரசியல்வாதிகள்தான்” உலக வங்கியின் சமூக பாதுகாப்பு மற்றும் வேலைகள் ஆகிய பிரிவின் இயக்குநர் மைக்கேல் ருட்கோவ்ஸ்கி. அவரிடம் எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றி பேசினோம். ஆங்கிலத்தில் - சுரோஜித் குப்தா வேலைவாய்ப்பு சந்தையில்   அரசியல்வாதிகளின் பங்கு என்ன? மக்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு, செல்வம் ஆகியவற்றுக்கு அரசியல்வாதிகள் முக்கியத்துவம் பெறவேண்டும். அவர்களே இதற்கு பொறுப்பு. உங்களது தாத்தா காலத்து வேலை வாய்ப்புச் சந்தை தற்போது கிடையாது. எதிர்காலத்தில் இந்த சந்தைக்கு மதிப்பும், பாதுகாப்பும் ஏற்படுத்துவது முக்கியம். இவற்றை பிரபலப்படுத்தி தொழில்முனைவோர்களை ஈர்ப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு. எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மக்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றி நான் நம்பிக்கையுடனே இருக்கிறேன். காரணம் தொழில்நுட்ப பாய்ச்சல் உலகில் புதிய தொழில்நுட்பங்கள் உள்ளே நுழையும் போது வேலையிழப்பு பற்றிய அச்சம் இருக்கும். ஆனால் பின்னாளில் அதே தொழில்நுட்பத்தால் அதிகவேலைவாய்ப்புகள் ஏற

தானியங்கி கார்களின் ஆண்டு தொடங்குமா?

படம்
giphy 2020 கேள்வி பதில்கள் தானியங்கி கார்கள் சாலையைத் தொடுமா? கூகுளின் வேமோ நிறுவனம் தானியங்கி கார்களுக்கான ஆராய்ச்சியில் உள்ளது. ஆனால் இதில் இன்னும் பல்வேறு கட்டங்களை கடக்க வேண்டியுள்ளது. பயணிகளை சரியானபடி கவனித்து கார்கள் செல்லவேண்டியதில் பயிற்சி தேவைப்படுகிறது. இல்லாதபோது விபத்துகளை சந்திக்கவேண்டும். இந்த ஆண்டில் சாலைக்கு வர தானியங்கி கார்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.ஆராய்ச்சிகள் வேகம் பிடித்துள்ளதுதான் காரணம். தகவல்களை பாதுகாப்பதில் இனி டெக் நிறுவனங்கள் விதிகளை பின்பற்றுமா? நமது தகவல்கள் பாதுகாக்கப்படுமா? இணைய உலகில் இப்படியொரு கேள்வியா?இலவசம் என்று வரும் சேவைகள் எப்படி தகவல்களை பாதுகாப்பவையாக இருக்கும் என நம்புகிறீர்கள். ஐரோப்பிய யூனியன் போன்ற பாதுகாப்பு விதிமுறைகள் இருந்தால்தான் அதெல்லாம் சாத்தியம்.விதிமுறைகளை கடைபிடித்தால்தானே அவையெல்லாம் நடைமுறைக்கு வரும். டெக் நிறுவனங்கள் அடிக்கடி அபராத பிரச்னையில் மாட்டுவதே விதிகளை கடைபிடிக்காத மூர்க்கமான வியாபார வெறிக்காகத்தான். பிரைவசி செட்டிங்குகளை நீங்களே செய்துகொள்ளுங்கள். நிறுவனங்களை அந்தளவுக்கு மட்டுமே நம்பலாம்.

கல்வியை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள்! - செய்திக்கட்டுரை

படம்
கல்வியை சிறப்பாக்கும் தொழில்நுட்பங்கள்! இந்தியாவிலுள்ள பள்ளிகள், தொழில்நுட்ப நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் செய்து கல்வி தொடர்பான சேவைகளைப் பெற்று வருகின்றனர். கரும்பலகையில் சாக்பீஸ் வைத்து எழுதும் பழக்கம் ஒழிந்து,  அரசுப்பள்ளிகளில் கூட ஸ்மார்ட் வகுப்பறை சாதனங்கள் அறிமுகமாகி வருகின்றன. புரஜெக்டர் மூலம் வகுப்பு எடுக்கப்படுவது, பாடத்திட்டங்களை டிஜிட்டல் முறையில் படிக்க அளிப்பது என பல்வேறு கல்வி தொடர்பான புதிய முயற்சிகள் உருவாகி வருகின்றன. 1995 முதல் 2010 காலகட்டத்திற்குள் பிறந்தவர்களை ஜென் இசட் என்று அழைக்கின்றனர். இத்தலைமுறையினர், முழுக்க டிஜிட்டல் உலகில்தான் வாழ்கின்றனர். இவர்களின் கல்வியும் அதைச்சார்ந்தே அமைகிறது. இணைய வகுப்புகள், பாட்காஸ்ட்கள், வி.ஆர். கருவிகள் என இவர்களின் வாழ்க்கையில் கற்றல் முறைகள் மிகவும் நவீனமாகி உள்ளன. பள்ளிகளின் டெக் தேவைகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் தீர்த்து வைக்கின்றன. 2015 ஆம் ஆண்டு இந்தியாவில்  உள்ள வகுப்புகளில் 26 சதவீதம் மட்டுமே கணினிகள் இருந்தன. ஆனால் இன்று வகுப்பறை மட்டுமல்ல பள்ளிகளே  டிஜிட்டல் வடிவில் மாறியுள்ளன. 2013 ஆம் ஆண்டு மத்திய அரசின்