இடுகைகள்

சாதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தியும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குமான முரண்பாடு!

படம்
  வைரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் . அறிவியல் அடிப்படையில் அது சிக்கலான கார்பன் அணுக்களைக் கொண்டது . பல்வேறு அழுத்தங்களைத் தாங்கி உருவாகிறது . அதனை பட்டை தீட்டும்போது வைரமாக மாறுகிறது . காந்தியும் கூட அப்படிப்பட்ட இயல்புகளைக் கொண்டவர்தான் . அவரும் வைரத்தை ஒத்தவர்தான் . காந்தியும் பல்வேறு வாழ்க்கைச் சூழல்களை சந்தித்து நெருக்கடியில்தான் சிறந்த மனிதராக தலைவராக மாறினார் . தனது கொள்கை , செயல்பாடுகள் , செயல்பாடுகளை செய்யும்போது நேர்ந்த தவறுகள் என அனைத்தையுமே நூலாக பதிவு செய்துள்ளார் . பழமையான இந்தியாவில் இருந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து காந்திக்கு கருத்துகள் இருந்தன . அவற்றை எதிர்தரப்பிடமும் , மக்களிடமும் முன்வைத்துக்கொண்டே இருந்தார் . இதற்காக இந்தியன் ஒப்பீனியன் , யங் இந்தியா , நவஜீவன் , ஹரிஜன் ஆகிய பத்திரிகைகளைப் பயன்படுத்திக்கொண்டார் . இதைத் தாண்டியும் அவர் உலகிற்கு கூறும் செய்தி என்ன என்று கேட்டபோது , என்னுடைய வாழ்க்கை தான் என்று பதில் சொன்னார் . பிரிவினைவாதத்தை பல்வேறு வடிவங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்படுத்தி வருகிறது . ஆனால் வெளிப்படையான செய்திகளில் பார்த்தால் , இந்த அமைப்பு கல

சாதி குலம் தெரியாத ராயலசீமா ரௌடியின் கதை! சீமா சிங்கம் - பாலைய்யா, சிம்ரன், ரீமாசென்

படம்
  சீமா சிங்கம் பாலகிருஷ்ணா, சிம்ரன், ரீமாசென், ரகுவரன், சரண்ராஜ்  ஜி. ராம் பிரசாத் வசனம் - பாருச்சி பிரதர்ஸ்  கதை - சின்னி கிருஷ்ணா தனஞ்ஜெய ராவ் என்பவரின் மகனை அவரது நண்பர் சந்திரசேகர் தனது பதவியுயர்வுக்காக காப்பாற்றத் தவறுகிறார். இதன் விளைவாக தீவிரவாதிகள் தனஞ்ஜெய ராவின் மகனை சுட்டுக்கொல்கிறார்கள். மகன் கொல்லப்படுவதைப் பார்க்கும் தனஞ்ஜெய ராவின் மனைவி நோய்வாய்ப்படுகிறார். இதனால் கோபம் கொள்ளும் தனஞ்ஜெய ராவ், சந்திரசேகரின் மகனையும் இதேபோல கொன்று புத்திரசோகத்தில் தவிக்க வைப்பேன் என்று சொல்லி பழிக்குப்பழி வாங்க நினைக்கிறார். ஆனால் அவருக்கு அவரது மனைவியைக் கவனித்துப் பார்ப்பதே கடினமாக இருக்க அந்த வேலையை அவுட்சோர்ஸிங் செய்கிறார். அப்போதுதானே பாலைய்யா திரையில் வரமுடியும். பாலைய்யா தனஞ்ஜெய ராவின் கோரிக்கையை தீர்த்து வைத்தாரா என்பதே மீதிக்கதை.   முதல் காட்சியில் கடிதம் ஒன்று பறந்து வருகிறது. கிராபிக்ஸ் ப்ரோ.. ஏழைப்பெண்ணின் இடத்தை அபகரித்துதான் போலீஸ் நிலையம் உருவாகி இருக்கிறது. அதை அடித்து உதைத்து தட்டிக்கேட்கிறார் துர்கா பிரசாத். அவர்தான் அங்கே லோக்கல் ரௌடி.  ஏழைப்பெண்ணின் வீட்டை அபகரிக்க பார்க

மக்களின் உணர்ச்சி தான் எனக்கு முக்கியம்! - ராஜமௌலி, தெலுங்கு சினிமா இயக்குநர்

படம்
  ராஜமௌலி தெலுங்கு சினிமா இயக்குநர் கருத்தியல் ரீதியாக வலதுசாரிகளுக்கு ஆதரவாக படமெடுப்பவர். காட்சிரீதியாக பார்வையாளர்களுக்கு நிறைவான அனுபவம் தருபவர். பாகுபலி மூலம் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் தெரிய வந்தவர். அதற்குமுன்னர் தெலுங்கில் இயக்கிய ஸ்டூடண்ட் நம்பர் 1, சிம்மாத்ரி, எமதொங்கா, விக்ரமார்குடு, சத்ரபதி என அனைத்து படங்களிலும் ஏதாவதொரு புது விஷயத்தை முயற்சி செய்திருப்பதை பார்த்தாலே அறியலாம்.  நீங்கள் தெலுங்கு மொழியில் படம் எடுக்கிறீர்கள். ஆனால் அதை இந்தி மக்கள் வரவேற்கிறார்களே? நான் இந்தி, தெலுங்கு என எதையும் வேறுபடுத்தி பார்க்கவில்லை. காட்சிரீதியாக தான் நான் கதை சொல்லுகிறேன். மொழி ரீதியாக அல்ல. மொழி என்பது தகவல் தொடர்புக்கானது தான். அதை நடிகர்கள் பேசுகிறார்கள். எனது படங்களில் பெரும்பகுதி தகவல் தொடர்பு காட்சி ரீதியாகவே நடைபெறுகிறது. மொழியை நான் தடையாக நினைக்கவில்லை.  தென்னிந்தியப் படங்கள் இந்தி திரையுலகில் வெற்றி பெற காரணம், அவர்கள் சரியான முறையில் படங்களை எடுக்காததே காரணம். வெற்றிக்கான காரணம் என நம்மை நாமே கூறிக்கொள்ள முடியாது. 90களில் இந்தி திரையுலகம் அற்புதமாக கதை சொல்லும் ஏராளமா

கல்வியால் பெண்களை முன்னேற்றுவதே லட்சியம் - சுதா வர்க்கீஸ்

படம்
  தீண்டப்படாத சாதி பெண்களை முன்னேற்றும் கல்வி! கேரளத்தில்  வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் சுதா. பள்ளிமாணவியாக இருந்த போது சுதா,  நாளிதழ் ஒன்றில் வெளியான புகைப்படத்தைப் பார்த்தார்.  பீகாரின் சாலையோரத்தில் உள்ள குடிசையின் புகைப்படம் அது.  ஏழை மக்களின் குடியிருப்பு என பார்க்கும் யாரும் புரிந்துகொள்ளலாம். அந்த நொடியில் பள்ளி மாணவியான சுதா தீர்மானித்தார். நான் ஏழை மக்களின் நிலையை மாற்றுவேன் என உறுதியெடுத்துக்கொண்டார். பெற்றோர் ஏற்காதபோதும், சமூகசேவையைச் செய்ய கன்னியாஸ்த்ரீ வாழ்க்கையை ஏற்றார். பிறகு, இப்பணியில் திருப்தி இல்லாமல், தனது பணியை விட்டுவிலகினார். நேராக பீகாருக்குச் சென்றார்.  சிறுவயதில், அவர் புகைப்படத்தில் பார்த்த குடிசை, முசாகர் (Musahar)எனும் மக்களுக்குச் சொந்தமானது.  தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட, முசாகர் மக்களின் குழந்தைகளுக்கு கல்வியறிவும் கிடைக்கவில்லை. இச்சமுதாய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகவே, 2005ஆம் ஆண்டு ‘பிரேர்னா ’(Prerna)என்ற பெயரில் தானே பள்ளியைத் தொடங்கினார்.   சுதாவின் கல்வி உதவிகளால், 5 ஆயிரம் பெண் குழந்தைகள் படித்து பட்டம் பெற்றுள்ளனர். பீகாரில் முசாகர் இனப

ஊடகங்களைப் பயன்படுத்தி நீதியின் முதுகெலும்பை முறிக்கும் அதிகார அரசியல்- ஜனகனமண -2022

படம்
  ஜனகனமண பிரிதிவிராஜ் சுகுமாரன் (நடிப்பும், தயாரிப்பும்) மம்தா மோகன் தாஸ்  இசை - ஜேக்ஸ் பிஜாய்    கல்லூரி பேராசிரியர் சபா, வல்லுறவு செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்படுகிறார். அவர் சென்ட்ரல் யுனிவர்சிட்டியில் பணியாற்றி வருகிறார். அவரின் இரங்கல் கூட்டத்தை கூட  அதன் தலைவர் விட்டேத்தியாக நடத்துவதோடு அவமானப்படுத்தி பேசுகிறார். இதனால் பல்கலைக்கழகம் முழுக்க போர்க்களமாகிறது. காவல்துறை பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து தாக்க ரணகளமாகிறது சூழ்நிலை. இதை விசாரிக்க ஏசிபி சாஜன் குமார் நியமிக்கப்படுகிறார். சபா என்ற பெண்ணைக் கொன்றவர்களை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை.  படத்தின் நாயகன் சாஜன் குமாராக நடித்துள்ள சூரஜ் வெஞ்சரமூடுதான். தொடக்க காட்சியில் பிரிதிவிராஜை கைது செய்து சிறைக்கு அழைத்து செல்கிறார்கள். அதற்குப் பிறகு தொடரும் காட்சிகளில் சபாவின் வழக்கு வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு, பிரிதிவிராஜ் திரையில் வருகிறார். முதல்முறை வந்தது போல இளமையாக அல்ல. மத்திய வயது ஆளாக, ஒரு கால் செயலிழந்தவராக , வழக்குரைஞராக இருக்கிறார். படத்திற்கு இரண்டாவது பாகத்திற்கான முன்னோட்டத்தையும் கொடுத்து விட

சர்வாதிகார அதிபரின் கோமாளித்தனமான உரைகள்! - பன் பட்டர் ஜாம் - மின்னூல் வெளியீடு- அமேஸான்

படம்
  பொதுவாகவே சர்வாதிகாரிகள் ஊடகங்களை மிக திறமையாக தந்திரமாக கையாண்டு தங்கள் வசப்படுத்திக்கொள்வார்கள். இதன்படி மெகந்தியா நாட்டு அதிபர் ******** மாதம்தோறும் மக்களுக்கு வானொலி வழியாக உரையாற்றுகிறார். நாட்டின் பிரச்னைகளை பேசுவதை விட அதை மடைமாற்றி தனது கனவுகளைப் பற்றியும், தொழிலதிபராக உள்ள நண்பர்களின் முன்னேற்றங்களையும் பேசுகிறார். அதனை சாத்தியப்படுத்துவதால் என்ன நன்மை என்பதையும் வெளிப்படையாக சில சமயங்களில் உளறுகிறார்.  நாடு முழுக்க பிரிவினை, சீரழிவுகள் இருந்தாலும் அதிபரின் சொத்துக்களும் அவரின் இனாம் தாரர்களான தொழிலதிபர்களும் வளர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இதுபற்றிய பகடியான சில சமயம் கோபம் வரும்படியான பதினெட்டு உரைகளை இந்த நூல் கொண்டுள்ளது.  பன்பட்டர்ஜாம்  நூலை வாசிக்கும்போது, சமகால நிகழ்வுகள் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் அதற்கு காரணம், நாம் கேள்வி கேட்காமல் வரிசையில் நின்றுகொண்டிருப்பதே என்று உணருங்கள். சர்வாதிகார, ராணுவ ஆட்சி நடைபெறும் தேசங்களை உதாரணமாக கொண்டு எழுதப்பட்ட நூல் இது.  இதற்கான உத்வேகத்தை திரைப்படக் கலைஞர் சார்லி சாப்ளின் வழங்கினார். நூலின் அட்டைப்படத்தை அழகுற வரைந்த கதிர் அவர

மிருதங்க கைவினைஞர்களின் தாழ்வுணர்ச்சி கொண்ட வாழ்க்கை! - செபாஸ்டியன் குடும்பக்கலை - டிஎம் கிருஷ்ணா தமிழில் அரவிந்தன்

படம்
  செபாஸ்டியன் குடும்பக்கலை - காலச்சுவடு செபாஸ்டியன் குடும்பக்கலை டிஎம் கிருஷ்ணா தமிழில் டிஐ அரவிந்தன் காலச்சுவடு பதிப்பகம் 195 ரூபாய் டிஎம் கிருஷ்ணா புகழ்பெற்ற வாய்ப்பாட்டு கலைஞர். கர்நாடக இசை உலகில் பலரும் இவரது பாடல்களை அறிவார்கள். பாடல்களை சபாக்களைக்  கடந்து பாடும் இடங்களும் கிருஷ்ணாவின் புகழ் பரப்பின. சூழலுக்கு ஆதரவான பாடல்களை பாடும் ஆர்வமும் திறனும் கொண்டவர். அவர், மிருதங்க கைவினைஞர்களைப் பற்றி ஆய்வுகள் செய்து, நான்கு ஆண்டுகள் உழைத்து எழுதிய நூல்தான் இது.  ஆங்கிலத்தில் வெளியான நூலின் தமிழ் வடிவம். நூலின் வெளியீடு மார்ச் 3 அன்று வெளியாகிறது. சென்னை புத்தகத் திருவிழாவில் நூலை வேகமாக அச்சிட்டு கொண்டு வந்திருக்கிறார்கள். நூலின் ஆராய்ச்சி தகவல்கள், ரோஹினி மணியின் ஓவியங்கள், கூறுப்படும் பல்வேறு சாதி பற்றிய ஆய்வுத் தகவல்கள் வாசகர்களை வியக்க வைக்கிறது.  பறையர்கள் எனும் சாதியினர் சாதிக் கொடுமை தாங்காமல் கிறிஸ்தவர்களாக மாறுகிறார்கள். இவர்கள்தான் மாடு, எருமை, ஆடு ஆகிய விலங்குகளின் தோல்களை வாங்கி மிருதங்கங்களை உருவாக்குகிறார்கள். இதனை வாசிக்கும் பிராமணர்கள், இசைவேளாளர்கள் இதற்கான அங்கீகாரத்தை

திரைப்பட இயக்குநர் எடுக்கும் புனர்ஜென்ம அவதாரம்! ஷியாம் சிங்கா ராய் - தெலுங்கு

படம்
  ஷியாம் சிங்கா ராய் -தெலுங்கு ஷியாம் சிங்கா ராய் தெலுங்கு ராகுல் சாங்கிருத்தியன் சானு வர்க்கீஸ் மிக்கி ஜே மேயர்  நாளைய இயக்குநராகும் ஆசையில் உள்ளவர், வாசு. எப்படியோ தனது குறும்படத்திற்கு கீர்த்தி என்று வெளிநாடு சென்று படிக்கும் ஆசையில் உள்ள பெண்ணை சரிகட்டி நடிக்க வைத்துவிடுகிறார். பிறகு கிடைக்கும் திரைப்பட வாய்ப்பிலும் வெல்கிறார். அந்த  படத்தை இந்தி மொழியில் உருவாக்க முயலும்போது தான் பிரச்னை தொடங்குகிறது. வாசு மீது கொல்கத்தாவை சேர்ந்த எஸ்ஆர் பதிப்பகம் கதை திருட்டு என வழக்கு போடுகிறது.  உண்மையில் வாசு கதையை திருடினாரா இல்லையா என்பதுதான் படமே... படம் புனர்ஜென்மம், ஹிப்னோதெரபி என நிறைய விஷயங்களைப் பேசுகிறது. எல்லாவற்றையும் விட படத்தில் கவருவது கல்கத்தாவில் சீர்திருத்தக்காரராக வரும் ராய் தான். அவர் பேசும் விஷயங்கள் அக்காலத்திற்கு மட்டுமல்ல, இப்போதும் முக்கியமானதாக இருக்கிறது. இப்போதும் தொன்மை இந்தியாவை நோக்கி செல்வதால் இப்படிப்பட்ட ராய்கள் தேவைப்படலாம்.  படத்தின் கதை நவீன காலம் 2021, 1969 என இரண்டு காலகட்டமாக உள்ளது. அதற்கேற்ப படக்குழு உழைத்திருக்கிறார்கள்.  படத்தை இரண்டு பாத்திரங்களிலும்

சர்ச்சையான விஷயங்களை கலந்து பேசுவோம் வாங்க! - வீனா பாட்காஸ்ட்

படம்
  வீனா பாட்காஸ்ட்  வீனா பாட்காஸ்டைக் கேட்கும்போது தோன்றுவது, இரண்டு நெருங்கிய நண்பர்கள் தங்களுக்குள், தங்களுக்கு தெரிந்த விஷயங்களை ஜாலியாக பேசிக்கொள்ளும் முறைதான். அதில் ஒருவர் என்ன பெறுகிறார் என்பது கேட்பவரின் விருப்பம் சார்ந்தது.  வீனா பாட்காஸ்ட் ஐடியா சென்னையில் ஐடி வேலை பார்க்கும் வினுஷ்குமாரின் மூளையில்தான் உதித்திருக்கிறது. இவரும் இவரது நண்பரான நவீனும் போனிலேயே ஏராளமான விஷயங்களை பேசி தீர்த்திருக்கிறார்கள். இப்படி பேசுவதை நாம் ஏன் பாட்காஸ்ட் வழியாக செய்யக்கூடாது என யோசித்து 2020 இல் தொடங்கியதுதான் வீனா பாட்காஸ்ட்.  பொதுவாக, பொது இடங்களில் சில விஷயங்களைப் பேசக்கூடாது என நாம் நினைப்போம். சிலர் அப்படி உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்றே கூறலாம். அப்படிப்பட்ட விஷயங்களைத் தேடி தேடி பேசுகிறார்கள் இரு நண்பர்களும். வினுஷ்குமார் சென்னையில் இருக்கிறார். நவீன் ஜெர்மனியில் வாழ்கிறார். இணையத்தில் கலந்துகொண்டு பாட்காஸ்ட் நிறுவனத்தை தொடங்கி நடத்துகிறார்கள்.  வினுஷ்குமார், நவீன் பேசிய  இன்னும் யார் சார் சாதி பாக்குறா என்ற பாட்காஸ்டைக் கேட்டோம். அதில் வினுஷ்குமார், சாதி சார்ந்த தனது சொந்த அனுபவங்க

மக்களின் அபிமானத்தை சம்பாதித்த ஓடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்! - கடிதங்கள்

படம்
  வெற்றிகரமான முதல்வர் நவீன் பட்நாயக் அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? பிரன்ட்லைன் இதழுக்கு சந்தாகட்டி வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன். வங்க எழுத்தாளர் மனோரஞ்சன் பியாபாரியின் நேர்காணலை சிறப்பாக எடுத்து எழுதியியுள்ளனர். ரிக்சா ஓட்டிக் கொண்டிருந்தவர் இப்போது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஆகிவிட்டார். வாழ வழியில்லாத நிலையில் மாநில அரசின் விருது எதற்கு என துணிச்சலாக சொல்லியிருக்கிறார் மனிதர்.  நவீன் பட்நாயக் பற்றிய கட்டுரையும் நன்றாக எழுதப்பட்டிருந்தது. ஒடிஷாவில் மத்திய அரசின் திட்டங்களை கைவிட்டுவிட்டு மாநில அரசின் திட்டங்களை எப்படி நடைமுறைக்கு கொண்டு வந்து மக்களின் அபிமானத்தை சம்பாதித்துள்ளார் என்பதை கட்டுரையில் ஏராளமான தகவல்களை கொண்டு பேசியிருந்தார்கள். இப்போது ஞாயிறு மட்டும் தி இந்து ஆங்கில நாளிதழை வாங்கிக்கொண்டிருக்கிறேன்.  நிறைய முக்கியமான விஷயங்களை நடுப்பக்க கட்டுரைகளில் எழுதுகிறார்கள். மொழிபெயர்த்து எழுதுவதை இன்னும் மேம்படுத்திக்கொள்ள இக்கட்டுரைகளை வாசிப்பதும், தமிழில் மொழிபெயர்ப்பதும் உதவும் என நம்புகிறேன்.  அண்மையில் வடபழனிக்கு சென்று

நூல் வாசிப்புக்கான நம்பிக்கை முனையம்! - கடிதங்கள்

படம்
  முருகு அண்ணாவிற்கு,  நலமறியவும், நலத்துடன் இருக்கவும் ஆவலும் வேண்டுதலும்.  தற்போது சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது 3வது அத்தியாயம் வரை படித்திருக்கிறேன். தங்களின் கடுமையான பணிநெருக்கடிகளுக்கு இடையில் நிறைய நூல்களை வாசித்து விடுகிறீர்கள். இதுதான் என்னை நூல்களை வாசிக்க செய்யும் நம்பிக்கை முனையம்.  அறச்சலூர் பிரகாஷ் அண்ணன், சில படங்களைக் கொடுத்தார். அதனை நாளொன்றுக்கு ஒருபடம் என முடிவு செய்து பார்த்து வருகிறேன்.  தி குட், தி பேட், அண்ட் தி அக்லி படத்தை நேற்று பார்த்து முடித்தேன். வறட்சியான பள்ளத்தாக்கு பகுதியில் வாழும் ஆட்களின் வாழ்க்கைதான் படம். படம் முடியும் வரை யாரெனும் ஒருவர் இன்னொருவரின் தலையிலுள்ள தொப்பி பறக்க சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.  பிரிதிவிராஜ் அவர்களின் திருமணத்திற்கு போய் வந்ததை சகோதரர் கூற அறிந்தேன். மணப்பாறை பயணம் எப்படியிருந்தது? பயணம் ஏதாவது ஒன்றை நமக்கு கற்றுத்தரும் என நினைக்கிறேன். புதிய செய்திகளை, மக்களை அறிய பயணம் தவிர வேறு என்ன வழி இருக்கிறது? வேலைக்காக ஓபிசி சான்றிதழ் வாங்கும் முயற்சிகளில் இருக்கிறேன். இதற்கு

இந்துத்துவா எனும் கொடூர அச்சுறுத்தல்! - இணைய மாநாட்டில் பேசப்பட்ட கருத்துகள் ஒரு பார்வை

படம்
  இந்துத்து வா எனும் கொடூர அச்சுறுத்தல் கடந்த மாதம் செப்டம்பர் 10-12 என மூன்று நாட்கள் ஆன்லைன் வழி மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இதில் இந்துத்துவா வேகமாக பரவி வரும் நிலையில் சமூகம், அரசியல், பாலினம், சாதி, மதம், சுகாதாரம், ஊடகம் ஆகியவற்றில் ஏற்படும் விளைவுகள் பற்றி விவாதிக்க ஏற்பாடானது.  இந்த நிகழ்ச்சியை சமூக அறிவியல் நிறுவனங்களும், ஐரோப்பிய அமெரிக்க பல்கலைக்கழகங்களும் இணைந்து ஏற்பாடு செய்தன. தோராயமாக உலகம் முழுக்க உள்ள 50 பல்கலைக்கழகங்கள் இந்த மாநாட்டிற்கு ஆதரவை வழங்கியிருந்தன. இப்படி ஒரு மாநாடு நடைபெறப்போகிறது என செய்தி பரவியதும், அதனை ஏற்பாடு செய்தவர்கள், அதில் பங்கேற்பவர்களுக்கு இந்துத்துவ தீவிரவாதிகள் கொலைமிரட்டல்களை அனுப்பத் தொடங்கினர். சமூக வலைத்தளத்தில் இப்போது அதிகளவு இந்துத்துவ பயங்கரவாதிகள் இருப்பதால், அதில் உள்ள பங்கேற்பாளர்களை கடுமையாக விமர்சித்து பேசத்தொடங்கினர்.  இந்த வகையில் அமெரிக்காவில் இந்து மந்திர் நிறுவன அதிகாரிகள், விஷ்வ ஹிந்து பரிஷத் நிறுவனம், ஹிந்து அமெரிக்க பௌண்டேஷன் ஆகியோர் இந்த மாநாட்டிற்கு நாங்கள் ஆதரவு வழங்கமாட்டோம் என தெரிவித்தன.  குடியரசு கட்சியைச் சேர்ந்த

சாதிரீதியான கணக்கெடுப்பு பயன்களை கொடுக்குமா?

படம்
  மத்திய அரசு சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை எடுக்க வேண்டுமென பீகாரின் நிதிஷ்குமார் குரல் எழுப்பினார். ஆனால் ஒன்றிய அரசு அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. செப்டம்பர் 23 அன்று மகாராஷ்டிர அரசு இதுபற்றி வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. அதாவது,ஒன்றிய அரசு சாதிரீதியான கணக்கெடுப்பை எடுக்க வேண்டுமென மகாராஷ்டிர மாநில அரசு கோரியுள்ளது 2011ஆம் ஆண்டு சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இதுபற்றிய தகவல்கள் வெளிப்படையாக மக்களுக்கு அளிக்கப்படவில்லை. ஒருங்கிணைந்த ஜனதாதளம் கட்சி ஒன்றிய அரசு தனது முடிவை பரிசீலனை செய்யவேண்டும் என்று கூறியுள்ளது. இதற்கு ஒடிஷாவின் நவீன் பட்நாயக்கும், ஜார்க்கண்டின் ஹேமந்த் சோரன் ஆகியோர் இதனை ஆதரிக்கின்றனர். பாஜக சாதி ரீதியான கணக்கெடுப்பிற்கு முழுக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாநில கட்சிகளின் குரல்களை ஆதரிக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது.  2011ஆம் ஆண்டு சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் அதுதொடர்பான விவரங்களை ஏன் தர முடியாது, நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடக்கூடாது, சாதிரீதியான கணக்கெடுப்புகளை நடத்துவதற்கான கட்டமைப்பு அரசிடம் இல்

சாதி, பாலியல் சீண்டல் ஆகியவற்றை சமாளித்து காதலிக்கும் காதலர்களின் கதை! லவ் ஸ்டோரி -தெலுங்கு

படம்
  லவ் ஸ்டோரி தெலுங்கு  இயக்கம் சேகர் கம்முலா இசை பவன் சிஹெச் சாதி, குழந்தை மீதான பாலியல் சீண்டல் என இரண்டு விஷயங்களையும் இயக்குநர் சொல்ல முயன்றிருக்கிறார். நாயகனுக்கு சாதி, நாயகிக்கு பாலியல் சீண்டல் என இரண்டு பிரச்னைகளை சொல்ல முயன்றதில் படமா, பாடமா, சீரியலா என இழுத்துவிட்டது.  ஆஹா தலைப்பு லவ் ஸ்டோரி. அதற்காக கிரியேட்டிவிட்டியாக காதல் எல்லாம் கிடையாது. டான்ஸ் அதையொட்டி வரும் காதல்தான் உள்ளே இருக்கிறது. அதை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். ரேவந்த், மௌனிகா என்ற பாத்திரங்களில் நாக சைதன்யா, சாய் பல்லவி இருவருமே எனர்ஜியாக நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு போட்டி போட்டு இசை கொடுத்திருக்கிறார் பவன் சி.ஹெச். ரேவந்திற்கும், அவரது அம்மாவிற்கும் உள்ள உறவு இயல்பானதாக இருக்கிறது. படத்தின் உயிர்த்தன்மையே எதார்த்தம் குறையாத சில விஷயங்கள்தான்.  ஐயையோ சாதி, பாலியல் சீண்டல் என்ற இரு விஷயங்களுமே தனித்தனியே பார்க்கும்போது தீவிரமானவை. இதனை தனியாகவே படம் எடுக்கலாம். ஆனால் இரண்டையும் ஒன்றாக கொண்டு வரும்போது சிக்கலாகிறது.  ரேவந்த் பாத்திரம் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர். முடிவெட்டக்கூட அவருக்கு ஊரில் அனுமதி

வாழும் அலாரமாக மாறிய கதையை கேட்க ஆசையா? கடிதங்கள்

  வாழும் அலாரமாக மாறினேன்! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? உங்களது நாளிதழ் பணிகள் இப்போது எளிமையாகி இருக்கும் என நம்புகிறேன் . எங்கள் பத்திரிகையிலும் வேலைகள் எப்போதும்போல வேகம் பிடித்து நடந்து வருகின்றன . தினசரி நானும் அலுவலக சகாவுமான பாலபாரதி சாரும் ரயில்வே ஸ்டேஷன் வரை நடந்து வருவோம் . அவர் ரயில் ஏறி மடிப்பாக்கம் வரை செல்கிறார் . குங்குமத்தில் வேலை செய்தபோது பொறுப்பாசிரியராக இருந்தவர் என்னை அதிகாலை எழுந்து அவருக்கு போன் செய்யச் சொல்லி வற்புறுத்தியதை சொன்னேன் . உடனே பாரதி சார் , இது சாதிக்கொடுமை தானே என்று சொல்லி டிவியில் வேலை செய்தபோது அவர் பார்த்த விஷயங்களை பேசத் தொடங்கிவிட்டார் . இந்த விஷயத்தை உங்களிடமும் சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன் . அப்போது இருந்த சூழலில் இதுபோல பொறுப்பாசிரியர் பேசுவார் என்று நினைக்கவில்லை . பாரதி சார் சொன்னது உண்மையாகவும் இருக்கலாம் . நான் அந்த சமயத்தில் அந்த கோரிக்கை வினோதமாக இருந்ததை ஒப்புக்கொள்கிறேன் . ஆனால் அதன் பின்னணி இப்படி இருக்கும் என நினைக்கவில்லை . நான் அவர் அப்படி கூறியதும் , என்னடா சீனியர் இப்படி சொன்னார் எ