இடுகைகள்

டைம் இளம் தலைவர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேடிக்கையோடு கால்பந்து விளையாடும் எகிப்து வீரர்! - முகமது சாலா

படம்
முகமது சாலா - மாலைமலர் முகமது சாலா பிரபலமான கால்பந்து வீரர் என்பதோடு சிறந்த மனிதநேய மனிதர் என்றும் முகமதுவை சொல்லலாம். புகழும் வெற்றியும் துரத்தும் மனிதர் பெரியளவு அழுத்தங்கள் இன்றி வாழ முடியுமா என்று தெரியவில்லை. எகிப்து நாட்டு மக்கள் முகமதுவை பாராட்டி புகழுகின்றனர். ஆனால் களத்தில் இறங்கி கால்பந்தை உதைத்து விளையாடும்போது முகமதுவின் முகம் குழந்தை போலாகிவிடுகிறது. அவர் புகழ், பிரபலம் என்பதையெல்லாம் கவனத்தில் கொள்வதில்லை விளையாட்டில் தான் நினைத்த விஷயங்களை செய்தால் உடனே முகமதின் முகம் பூப்போல குழந்தைபோல மலர்ச்சி அடைகிறது. விளையாட்டை வேடிக்கையான பொழுதுபோக்கு போல மாற்றிக்கொள்ளும் குணத்தை அவர் எங்கு கற்றார் என்று எனக்குப் புரியவில்லை. நான் அவரின் விளையாட்டுக்காக அவரை விரும்புகிறேன். 1992ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி எகிப்திலுள்ள நாகரிக் நகரில் பிறந்தார் முகமது. லிவர்பூல் கிளப் மற்றும் தேசிய அணிக்காகவும் விளையாடு வருகிறார். ஜான் ஆலிவர்.

சமூக பொருளாதார இடைவெளியை குறைக்க முயலும் கட்டடக் கலைஞர்! - ஜீன் கேங்

படம்
கட்டட கலைஞர் ஜீன் கேங் - தி ஆர்க்கிடெக்ட் நியூஸ்பேப்பர் ஜீன் கேங் அமெரிக்காவைச் சேர்ந்த கட்ட ட கலைஞர். அமெரிக்காவில் நான்கு அலுவலகங்களை நடத்தி வருகிறார். இவரது ஸ்டூடியோவின் பெயர், ஸ்டூடியோ கேங். 1964ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று இலினாய்ஸில் உள்ள பெல்விடேரே என்ற நகரத்தில் பிறந்தவர் கேங். சிகாகோ நகரில் ஜீன் கட்டியுள்ள அக்வா, என்ற கட்டடம் மிகவும புகழ்பெற்றது. ஒன்றை உருவாக்குவது என்பதை சுற்றியிருக்கும் சூழலோட தொடர்பு உட்கிரகித்து அதனை செய்கிறார். இதனால்தான் அவர் உருவாக்கி படகு வீடு மக்களால் பாராட்டப்பட்டது. அது நீரில் உள்ள மாசுக்களை குறைக்கும் தன்மையில் இருந்தது. அதுபோலவே இவர் உருவாக்கவிருந்த காவல்நிலையம் மக்கள் எளிதாக காவல்துறையினரை அணுகும் தன்மையைக் கொண்டிருந்தது. அதிக குற்றங்கள் நடந்த பகுதியில் இவர் காவல்நிலையத்தில் அமைத்து பேஸ்கட்பால் மைதானம் இவரின் சிந்தனைக்கு சான்று. சமூக, பொருளாதார இடைவெளியை தான் கற்றுள்ள திறன்கள் மூலம் குறைக்க முயலும் இவரது முயற்சி பாராட்டத்தக்கது. அன்னா டியாவர் ஸ்மித்  

தனித்துவமான ஒப்பனைக்கலைஞர்! - பாட் மெக்ராத்

படம்
பாட் மெக்ராத் - dazed பாட் மெக்ராத் நான் மாடலிங் செய்யவரும்போது அத்துறையில் ஆப்ரோ அமெரிக்க ஒப்பனை கலைஞர்களே கிடையாது. பிற கலைஞர்களுக்கு கருப்பு நிறத்தவர்களுக்கு எப்படி ஒப்பனை செய்வது என்பது பற்றிய கவலை இருந்தது. அன்றிருந்த நிலைப்படி பலரும் ஆப்ரோ அமெரிக்கர்களை புகைப்படம் எடுக்க மாட்டார்கள். அவர்களை மாடலாகவு, திரைப்பட நடிகர்களாகவும் கூட கருதமாட்டார்கள். அந்த விஷயம் பாட் மெக்ராத் ஒப்பனை கலைஞரானபோது மாறியது. நாங்கள் இன்று அழகாக தெரிகிறோம் என்றால் அதற்கு பாட் மெக்ராத்தின் ஒப்பனைத்திறன்தான முக்கியக் காரணம். அவர் தான் செய்யும் தொழிலில் ஏறத்தாழ முன்னோடி என்ற அந்தஸ்தை அடைந்துவிட்டார். தனது பணி சார்ந்து தொடங்கிய தொழிலிலும் சிறப்பாக பேசப்படும் அளவு உழைத்திருக்கிறார் என்பது உண்மை. இங்கிலாந்தின் நார்த்தாம்டன் நகரில் 1970ஆம் ஆண்டு பிறந்த பாட் மெக்ராத், அங்கு முன்னணி ஒப்பனைக் கலைஞர். பெவர்லி ஜான்சன்

ராணுவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரபு ஆட்சியாளர்! - மொகமது பின் சையத்

படம்
மொகமது பின் சையத் வில்லியம் பார் the guadian வில்லியம் பார் அமெரிக்க அதிபர் டிரம்பினால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி. நீதியையும் அதைச்சுற்றிய அரசியலையும் கவனமாக கையாண்டுவருகிறார். விதிகளை கவனமாக கடைபிடிக்கும் புத்திசாலியான வழக்குரைஞர் இவர். 1991-93 ஆண்டுகளில் அட்டர்னி ஜெனராக வில்லியம் நியமிக்கப்பட்டார். அச்சமயங்களில் நாட்டின் பாதுகாப்பு, உணர்ச்சிகரமான பல்வேறு வழக்குகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை மிக சாதுர்யமாக கையாண்டு புகழ்பெற்றார். இதனால் தனியார் துறையில் இவருக்கு நல்ல புகழ் கிடைத்தது. இப்போது மீண்டும் பொதுத்துறைக்கு திரும்பியுள்ளார். அனைத்து ஊழியர்களையும் மதிப்பதோடு சரியான வழிமுறைகளை கடைபிடித்து நீதியை வழங்குவார் என்று அமெரிக்கா இவரை நம்புகிறது. நீதி அனைவருக்குமானதாக வழங்கப்படும், ஜனநாயகம் வில்லியமின் கரங்களில் பாதுகாப்பாக இருக்கும் என்றே மக்கள் நம்புகின்றனர். மொகமது பின் சையத் ஐக்கிய அரபு நாடுகளை காலித் பின் சையத் ஆளுகிறார். அவருடைய இளைய சகோதரர் மொகமது பின் சையத் அபுதாபியை ஆளுகிறார். இவர் இரானியர்களை வெறுப்பதோடு, கத்தார் மீதும் பகைமை கொண்டிருக்கிறார். இந்த பிரச்னைகளோடு

சீனாவின் விண்வெளி ஆராய்ச்சியை உயரத்திற்கு கொண்டு சென்றவர்! - ஸாங் கெஜியன்

படம்
ஸாங் கெஜியன் - யூட்யூப் ஸாங் கெஜியன் விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா என்ற இரு நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன. அதற்குப்பிறகு குறிப்பிடத்தக்க முயற்சியை எடுத்த நாடுகள் குறைவு. இதில் சீனா கடந்த ஆண்டுதான் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. அதற்கு ஸாங் கெஜியனின் பணிகள் முக்கியமானவை. சீனா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இயற்பியலாளராக பணியாற்றுகிறார் ஸாங். இவரின் முயற்சிகளால் புவியின் வட்டப்பாதையில் பல்வேறு செயற்கைக்கோள்களை செலுத்த தொடங்கியது சீனா. 2019ஆம் ஆண்டு நிலவின் மறுபுறத்திற்கு சாங் 4 என்ற விண்கலத்தை அனுப்பியது சீனா. இதுதான் உலக நாடுகளுக்கு சீனா வளர்ந்துவரும் தன்மையை எடுத்துக்காட்டியது. சீன விண்வெளி ஆராய்ச்சி மையம், இப்போது டஜன் கணக்கிலான விண்வெளித்திட்டங்களை குறித்து வைத்துக்கொண்டு பரபரவென வேலை பார்த்து வருகிறது. செவ்வாய், வியாழனுக்கு அனுப்பும் விண்கல பணிகளும் செயல்பாட்டில் உள்ளன. ஸாங்கின் முயற்சியால் அமெரிக்காவின் நாசாவின் ஒத்துழைப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நாசாவின் தொழில்நுட்ப உதவி கிடைத்தால் உலக நாடுகளுக்கும் அது முக்கியமான உதவியாக இருக்கும். ஸ்காட் கெல்லி

சூழலைக் காக்க உலக நாடுகளை தூண்டிய சிறுமி! - கிரேட்டா துன்பெர்க்

படம்
பொல்சனாரோ -பத்திரிகை ஜெய்ர் பொல்சனாரோ பிரேசிலைச் சேர்ந்த வலதுசாரி கருத்தியலைக் கொண்ட தலைவர். தனது முதல் மூன்று மாதங்களில் ஊழல்களை ஒழிப்பதற்கான முயற்சிகளை செய்துள்ளார். வாங்கியுள்ள கடன்களை அடைப்பதற்காக பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார். முன்னாள் ராணுவ வீரரான இவர் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர். எப்போதும் மக்களின் கருத்துக்கு எதிரான கருத்துகளை பேசும் குழப்பமான குணங்களைக் கொண்டவர். பிரேசில் ஜனநாயக நாடாக இதுவரை இருந்துள்ளது. இனிமேலும் அப்படி இருக்கமுடியுமா என்பதை பொல்சனாரோ தீர்மானிப்பார் என்றே தெரிகிறது. இருந்தாலும் அவரை மக்களே தேர்ந்தெடுத்து இருப்பதால், இச்சோதனையின் விளைவை மக்கள்தான் ஏற்கவேண்டும். இயான் பிரம்மர் கிரேட்டா துன்பெர்க் - தினமலர்  கிரேட்டா துன்பெர்க் ஸ்வீடனைச் சேர்ந்த கிரேட்டா துன்பெர்க், பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு சூழலுக்கு எதிராக போராடி பிரபலமானார். இப்படியெல்லாம் போராடலாம் என்று உலகு முழுக்க சூழல் போராட்டங்கள் நடைபெற காரணமாக இருந்தார். அரசின் விதிகளை மாற்றாமல் நாம் சூழல் பாதிப்பை குறைக்கமுடியாது என்று தில்லாக ப

மரியாதையான பொறுப்புமிக்க நீதிபதி! - பிரெட் கவனாஃப்

படம்
  பிரெட் கவனாஃப் ஆன்டனி கென்னடிக்குப்பிறகு அதிபரின் விருப்பத் தேர்வாக பிரெட் கவனாஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கல்வித்தகுதி, வழக்குரைஞர் அனுபவம் ஆகியவற்றை நாம் இதில் கருத்தில் கொண்டாலும் மரியாதையான பொறுப்புமிக்க நீதிபதி பதவியைப் பெற தகுதியானவர்தான். உச்சநீதிமன்ற நீதிபதியாக வருபவருக்கு தான் செய்யும் பணிமீதான அக்கறையும் பொறுப்புடமையும் இருக்கவேண்டும். இந்த அம்சங்களை பிரெட்டிடம் எளிதாக காண முடியும். நாட்டின் மீது கொண்டுள்ள வேட்கைக்கு சமமாக குடும்பம், நண்பர்கள் ஆகியோரிடம் அன்பும், நட்பும் கொண்டவர் இவர்.    

இயற்கையை பாதிக்காமல் வணிகம் செய்வதை ஊக்கப்படுத்தியவர் - ஹோஸங் லீ

படம்
போப் பிரான்சிஸ் - தமிழ்வெப்துனியா போப் பிரான்சிஸ் 2019ஆம் ஆண்டு போப்புக்கு, கத்தோலிக்க தேவாலயங்களில் பூதாகரமாக கிளம்பிய பாலியல் புகார்களை ஆராய்ந்து அதனை தீர்ப்பதற்கே நேரம் சரியாக இருந்தது. இப்புகாரில் குழந்தைகள் சிக்கியது பெரிய சிக்கலாக மாறியது. இதனால் தேவாலயம் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து உண்மையைக் கண்டறிய சந்திப்புகளை நடத்தினார். இனிமேல் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது பற்றிய விதிகளை வகுக்கத் தொடங்கியுள்ளார். இந்த விவகாரத்தில் போப் பிரான்சிஸ் காட்டிய தீவிரம் அனைவரையும் வியக்க வைத்தது. பாதிப்பை ஏற்படுத்தியவர்களை விட பாதிக்கப்பட்டவர்களை இயேசுவாகவே கருதி நடத்தினார். இந்த சமூகத்தீமையான செயல்பாட்டிற்கான காரணத்தை இவர் விரைவில் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது. தனது புத்தியைக் கடந்து இதயம் சொல்லுவதைக் கேட்டு செயல்படுபவராக போப் மக்களின் கண்களுக்கு காட்சிதருகிறார். இம்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் மன்றத்தில் நீதிபெற்று தருவார் என நம்பலாம். ஜார்ஜ் சிசிகுலனா   ஹோஸங் லீ - கார்பன் ப்ரீப் ஹோஸங் லீ பருவச்சூழல் மாறுபாடு பற்றிய ஐபிசிசி அமைப்பின் தலைவராக உள்ளார் ஹோஸங்.

இடதுசாரி அரசை எதிர்த்து போராடும் துணிச்சலான அரசியல்வாதி! - ஜூவான் குவைடோ

படம்
ஜூவான் குவைடோ  ஜூவான் குவைடோ வெனிசுலாவைச் சேர்ந்த அரசியல்வாதி, தைரியமாக அளவில்லாத துணிச்சலுடன் வெனிசுலா அதிபர் மதுரோவை எதிர்த்து வருகிறார். 35 வயதான இவர் முன்னர் பாப்புலர் வில் என்ற கட்சியில் உறுப்பினராக இருந்தார். எழுத்தார் காப்ரியல் கார்சியா மார்க்வஸ், லத்தீன் அமெரிக்காவில் தனது தினசரி வாழ்க்கையில் பார்ப்பதை மாய எதார்த்தவாத எழுத்துக்களாக எழுதினார். அதற்கு வாழும் சாட்சியாக இருப்பவர், ஜூவான் குவைடோதான். ஆளும் அரசுக்கு எதிராக துணிச்சலுடன், உற்சாகமாக, ஊக்கத்துடன் செயல்பட்டு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து சாதனை செய்திருக்கிறார் குவைடோ. நாட்டிலுள்ள பலரும் சிறுபிள்ளைத்தனமான சுயநல அரசியலில் ஈடுபட்டு மறைமுகமாக மதுரோவுக்கு உதவிக்கொண்டிருந்தனர். ஆனால் குவைடோ எந்த இடத்திலும் மக்களின் ரத்தம் சிந்தாமல் போராட்டங்களின் வழியாக எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். மக்கள் மீதுள்ள நம்பிக்கை, உளச்சான்று கொண்ட அறிவுடன் செயல்பட்டு வருகிறார் குவைடோ. இது போதாதா மாற்றங்கள் நடைபெறுவதற்கு? ஜூவான் மானுவேல் சான்டோஸ்

மக்களுக்காக வன்முறை களமான நாட்டை சீர்திருத்த முயலும் இடதுசாரி அரசியல்வாதி! - அம்லோ(Amlo)

படம்
மிட்ச் மெக்கானல்- பயோகிராபி மிட்ச் மெக்கானல் அமெரிக்காவின் அலபாமாவில் பிறந்த குடியரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி. தற்போது அமெரிக்காவின் செனட்டராக இருக்கிறார். வாஷிங்டன் பல்வேறு சிதைவுகளை, குற்றச்சாட்டுகளை சந்தித்துவருகிறது. அமெரிக்காவில் கூடும் மக்களவையில் ஜனநாயகத்தை காப்பாற்ற உழைத்து வரும் முக்கியமான தலைவர்களின் மிட்ச் மெக்கானலும் ஒருவர். சில அரசியல்வாதிகளின் உழைப்பால் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நன்மை ஏற்படுகிறது என்றால் மிட்ச் மெக்கானல் மூலம் மக்களுக்கு நிறைய நன்மைகளை கிடைத்திருக்கின்றன. மக்களுக்கு உதவும் பல்வேறு மசோதாக்கள் நிறைவேறுவதற்கு உதவிகளைச் செய்தவர் இவர். ஜான் போஹ்னர் லோபஸ் ஆப்ரடார் - அம்லோ லோபஸ் ஆப்ரடார் 12 ஆண்டுகள் காத்திருந்து மெக்சிகோவின் அதிபராகி இருக்கிறார் அம்லோ. அவரின் நீளமான பெயரின் சுருக்கம்தான் அம்லோ. இடதுசாரி அரசியல்வாதி என்பதோடு எளிமை விரும்பியும் கூட. தனக்கு கொடுக்கப்பட்ட அதிபர் மாளிகை லாஸ் பினோஸைக் கூட வேண்டாம் என்று கூறி மறுத்துவிட்டார். தினசரி காலை ஏழுமணிக்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்துவிடுவார் என நிறைய பிளஸ் விஷயங்கள் உண்டு. தனது

இடியாப்ப சிக்கல்களைக் கொண்ட நாட்டின் தலைவர்! - இம்ரான்கான்

படம்
பாக். பிரதமர் இம்ரான்கான்/the week இம்ரான்கான் 1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தி உலக கோப்பை வெல்ல வழிவகுத்தவர். லாகூரில் உள்ள மிகச்சிறந்த புற்றுநோய் மருத்துவமனையைக் கட்டியவர்,   குழந்தைகள் படிப்பதற்கான பல்கலைக்கழகம் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார். இவற்றையெல்லாம் செய்தபிறகு இருபது ஆண்டுகள் கழித்துதான் அரசியலில் காலடி எடுத்து வைத்தார். பாகிஸ்தான் தெரீக் இன்சாஃப் என்ற கட்சியைத் தொடங்கி இன்று பாகிஸ்தான் பிரதமராக இருக்கிறார். தங்களின் அண்டைநாடுகளான சீனாவைப் போல வசதியான நாடு அல்ல பாகிஸ்தான். வளைகுடா நாடுகளைப் போல சிறப்பான கட்டமைப்புகளையும் ஏற்படுத்த முடியாமல், அரசு தனக்கான செலவுகளுக்கே பிற நாடுகளிடம் கையேந்தும் நிலையில் உள்ளது. ஆனாலும் பாகிஸ்தான் இளைஞர்கள் 67 வயதான இம்ரான்கானை நம்பித்தான் வாக்களித்திருக்கிறார்கள். ராணுவம், மத அடிப்படைவாதிகளிடம் நட்புகொண்டிருக்கிறார் என்று பல்வேறு விமர்சனங்கள் இவரைச் சுற்றி வலம்வருகிறது. சரியான ஆலோசகர்கள் இல்லாமல் நிர்வாகம் செய்கிறார் என்று பலரும் புகார்களைச் சொல்லுகிறார்கள். ஏராளமான முரண்பாடுகளைக் கொண்ட நாட்டை அவர் ஆண்டுகொண்டிருக

செயற்கை நுண்ணறிவை சமூக வலைத்தளத்தில் கொண்டு வந்த தலைவர்! - ஸாங் யீமிங்

படம்
ஸாங் யீமிங் இன்று உலகையே குறுகிய நேரம் கொண்ட வீடியோக்களால் ரசிக்க வைக்கும் பைட் டான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இவர்தான். செயற்கை நுண்ணறிவு கொண்ட சமூக வலைத்தளங்களின் இயக்கத்தை இவரே ஊக்கமுடன் தொடங்கி வெற்றிகண்டிருக்கிறார். இன்று இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக்டாக் செயலி இவருடையதுதான் அமெரிக்க நிறுவனங்களான கூகுள், ஃபேஸ்புக் ஆகியவற்றுக்கு முன்பே ஏ.ஐ முறையில் சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட விருப்ப அடிப்படையில் செய்திகளை வழங்கத் தொடங்கியவர் இவர். எளிமையாகவும் வசீகரமாகவும் பேசக்கூடிய தொழிலதிபர்களில் இவர் முக்கியமானவர். புதிய கண்டுபிடிப்புகளின் காதலன். புதிய கண்டுபிடிப்புகள் நடைமுறையில் சாத்தியமா இல்லையா என்பதை விட அவற்றைப் பற்றி கற்பனை செய்வது எனக்கு பிடிக்கும் என்று கூறுபவர், விரைவில் டிக்டாக் நிறுவன தலைமையகத்தை இங்கிலாந்தில் அமைக்க கூடும். கை ஃபு லீ benjamin பெஞ்சமின் நேடான்யூ தற்போது கோவிட் -19 பெருந்தொற்றுக்கு சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத அரசை எதிர்த்து இஸ்ரேலில் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இதுதவிர தற்போதைய பிரதமரான பெஞ்சமினுக்கு வேறு தலைவலிகளும் உண்டு. அவர் மீத

நியூசிலாந்தின் முன்னுதாரணத் தலைவர் ஜெசிண்டா ஆர்டெர்ன்!

படம்
ஜெசிண்டா ஆர்டெர்ன சிரில் ராம்போசா டைம் 2019 செல்வாக்கு பெற்ற தலைவர்கள் சிரில் ராம்போசா தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அரசியல் தலைவர் சிரில் ராம்போசா. சோவிடோ நகரில் பிறந்தவர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் அதிபராக உள்ளார். இதற்கு முன்னர், சமூக உணர்வு கொண்ட வணிகராக செயல்பட்டார். தேர்தலில் நிற்கும்போது அவருக்கு வயது 66. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் சார்பாக நின்று வென்றார். மக்களின் வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு என பல்வேறு விஷயங்களோடு போராடி வருகிறார். ஒரே இரவில் மாற்றங்கள் நடந்துவிடாது என்று கூறியவர், சிறப்பான நாட்டை உருவாக்க மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி உழைத்து வருகிறார். விவியன் வால்ட் ஜெசிண்டா ஆர்டெர்ன் நியூசிலாந்தில் கிறிஸ்ட் சர்ச்சில் நடந்த தாக்குதல் உலகம் முழுக்க பெரும் பயத்தை ஏற்படுத்தியது. தீவிரவாதி அத்தகையை பயத்தையே ஏற்படுத்த விரும்பியிருந்தார். ஆனால் அதனை அந்நாட்டு பிரதமர் ஜெசிண்டா எதிர்கொண்ட விதம் உண்மையில் பாராட்டுக்குரியது. குற்றவாளியை குறிப்பிட்ட மதம் என்று குறிப்பிடாமல் கைது செய்தார். தான் நடத்திய தாக்குதலை சமூக வலைத்தளத்தில் நேரலை செய்திருந்த விஷயத்தை கண்டறிந்து அதன

சிறைவாசத்திலிருந்து மக்களை மீட்ட ஜனநாயகவாதி! - அபி அஹ்மத்

படம்
அபி அஹ்மத் அபி அஹ்மத் 2016இல் எத்தியோப்பியாவின் நிலைமை படுமோசமாக இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த உண்மையை உலகிற்கு சொல்லவே நான் முயன்றேன். இதற்காக ரியோ ஒலிம்பிக்ஸ் பந்தய ட்ராக்கில்   ஓடி முடித்ததும் இரு கைகளை குறுக்காக கட்டி கைது செய்யவேண்டாம் என்று எதிர்ப்பு தெரிப்பது போல நின்றேன். ஆனால் அதற்குப்பிறகும் அங்கு கொலைகள் நிற்கவில்லை. என்னுடைய அம்மா, இரு ஆண்டுகளாக என்னோடு பேசும்போது அங்குள்ள சூழ்நிலைகளைச் சொல்லியபடி அழுதுகொண்டே இருந்தார். கடந்த ஆண்டு கென்யாவில் நான் பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தபோது புதிய செய்தி ஒன்றைக் கேள்விப்பட்டேன். அபி அஹ்மத் என்ற கல்வி கற்றவர் புதிய பிரதமராகியிருக்கிறார் என்பதே அது. அவர் சிறைப்பட்ட கைதிகளை விடுவித்தார். இருபது ஆண்டுகளாக எத்தியோப்பியா வரலாற்றில் நடக்காத விஷயம் அமைதி. இருபது ஆண்டுகளாக போரிட்டு வந்த எரிட்ரியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைதியைக்கொண்டு வந்தார் அபி அஹ்மத். இதன் காரணமாகவே நான் நாடு திரும்ப முடிந்தது. இன்றும் எங்கள் நாட்டில் மக்கள் போராடிக்

பொறுப்பான மக்கள் சேவகன்! - ராபர்ட் முல்லர்

படம்
ராபர்ட் முல்லர்  ராபர்ட் முல்லர் அமெரிக்காவைச் சேர்ந்த நேர்மையான அரசு அதிகாரி, வழக்குரைஞர் என்றுதான் இவரை சொல்லவேண்டும். தன்னுடைய பதவியில் என்ன செய்யவேண்டுமோ அதனை செய்தார். அதற்கு வரும் விமர்சனங்களைப் பற்றி அணுவளவும் கவலைப்படவில்லை. அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு வருகிறது என்று விமர்சனம் கிளம்ப, அதுபற்றிய விசாரணையைச் செய்து சத்தம் இல்லாமல் சமர்ப்பித்தார். அப்போதும் கூட அவரின் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட கசியவில்லை. வியட்நாம் போரில் சண்டையிட்டு அதற்கான கௌரவப் பதக்கங்கள் பெற்றவர். தன் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களாக நேர்மை, உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்டவர். பள்ளியில் படித்த தனது தோழியை திருமணம் செய்துகொண்டார். எஃப்பிஐயின் தலைவராகவும் பதவி வகித்தார். தனக்கு கொடுக்கப்பட்ட உத்தரவுகளை நேர்மையாக நிறைவேற்றினார். சாலி யேட்ஸ்

ஆசிய மறுகாலனித்துவ தலைவன் ஷி ஜிங்பிங்! - டைம் 2019 செல்வாக்கு பெற்ற தலைவர்கள்

படம்
ஷி ஜிங்பிங் சீனாவின் அதிபர். இப்படி கூட சொல்லவேண்டியதில்லை. நிலம், நீர், வானம் என அனைத்திலும் ஆதிக்கம் செய்யும் வேகத்தைக் கொண்டுள்ள தலைவர். அனைத்து நாடுகளும் சீனாவை கொரோனா வைரஸை உருவாக்கிய நாடு என்று கைகாட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலையேபடாமல், இந்தியாவின் எல்லையில் குடைச்சல் கொடுப்பது, பூடானை என்னுடன் இணைந்துவிடுவது என மிரட்டுவது, ஹாங்காங்கில் தேசியபாதுகாப்பு சட்டம் இயற்றி அதனை தன்னுடைய நாடு என்று சொல்லுவது என பிற நாடுகளை எப்போதும் பரபரப்பாக வைத்திருப்பவர் ஜிங்பிங். இவர் பேசுவதை விட பிறர் இவரைப் பற்றி பேசுவதுதான் அதிகம். சீனா, முன்னால் இருந்த தலைவர்களை விட வேறுபட்ட தலைவருடன் நாளும் வளர்ந்து வருகிறது. மென்மையாகவும், வலிமையாகவும் உள்ள ஜிங்பிங்கின் பல்வேறு நடவடிக்கைகளை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. தனது பதவிக்காலத்தை அதிகாரத்தையும் ஆதரவாளர்களைப் பயன்படுத்தியும் அதிகரித்துக்கொண்டவர் ஒற்றைக்கட்சி மூலம் சீனத்தின் மன்னராகவே இருக்கிறார். பெல்ட் அண்ட் ரோடு திட்டம் மூலம் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் மற்றும் பிற நாடுகள் என அனைவருக்கும் வளர்ச்சி திட்டங்களுக்கு

மக்கள்தொகை கட்டுப்பாடு, பெண்களின் கருத்தரிப்புக்காக பாடுபடும் மருத்துவர்! லீனா வென்

படம்
லீனா வென் மருத்துவர். லீனா வென், திட்டமிட்ட பெற்றோர் என்ற தன்மையை சமூகத்தில் உருவாக்க போராடி வருகிறார். பிறப்புக்கட்டுப்பாடு, புற்றுநோய் கண்டறியும் சோதனை, உளவியல் ஆலோசனைகளள் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சைகள் ஆகியவற்றை வழங்கி வருகிறார். பால்டிமோரின் சுகாதார கமிஷனரான போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க தடுப்பு மருந்தான நாலோக்ஸோனை வீடுதோறும் மக்களுக்கு வழங்கிவருகிறார். நோயாளிகளுக்கு உண்டான அடிப்படை உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வு செய்துவருகிறார். இவர் மருத்துவர்களை பெரிதும் மதிக்க காரணம், லீனா வென் பிறக்கும்போது பெரும் சவால்களை சந்தித்தார். நோயுற்ற குழந்தையாக பிழைக்கவே கஷ்டப்பட்டவரை காப்பாற்றியவர்கள் மருத்துவர்கள்தான். இதுவே அவரை சமூகத்தில் மக்களுக்கான உரிமைகளைப் பெற தீவிரமாக உழைக்க வைத்திருக்கிறது. அவரது அம்மா கண்ணியமான முறையில் இறக்கவும் இதுவே உதவியது. டைம் சிந்தியா நிக்ஸன்

இத்தாலியின் அதிரடி அரசியல்வாதி - மேட்டியோ சால்வினி

படம்
இத்தாலி முன்னால் துணை பிரதமர் மேட்டியோ சால்வினி  மேட்டியோ சால்வினி இன்று இத்தாலியைச்சேர்ந்த சால்வினி பற்றிதான் ஐரோப்பாவே பேசிக்கொண்டிருக்கிறது. அகதிகள் பிரச்னை, நிர்வாக செயல்பாடு என அனைத்திலும் இவர் தனிரகம். தனது தேர்தல் பிரசாரங்களை அப்படியே ஃபேஸ்புக்கில் ஏற்றி லைவாக தொண்டர்களை பின்தொடர வைத்தார். ஐரோப்பாவில் உள்ள மேல்குடிமக்கள் அதிக காலத்திற்கு சால்வினியை தவிர்க்க முடியாது. ஐரோப்பிய யூனியன் அகதிகள் கொள்கையை அறிவிக்கும் முறையை முதலில் விமர்சித்த அரசியல்வாதி இவர்தான். தேசியவாத கட்சியில் இருந்துகொண்டு வலதுசாரியான ஃபைவ் ஸ்டார் இயக்கத்துடன் இணைந்து ஆட்சி அமைப்பது என சால்வினி தொடும் அனைத்துமே பலருக்கும் திகைப்பான செயல்பாடாகவே இருக்கும். இத்தாலியின் இறையாண்மைக்காக என்று சொல்லுவது முதல் அகதிகள் நாட்டில் வருவதற்கான கட்டுப்பாடு, ஆட்கடத்தல் தடுப்பு சட்டங்கள், நடவடிக்கைகள் என பல்வேறு விஷயங்களில் அடுக்கடுக்காக அதிரடி காட்டுகிறார். டைம் ஸ்டீவ் பன்னோன்  

சிம்பன்சிகளைப் பற்றிய ஆய்வுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்! - ஜேன் குட்டால்

படம்
ஜேன் குட்டால் ஜேன், சிம்பன்சிகள் பற்றிய ஆராய்ச்சிக்கு தன்னையே அர்ப்பணித்து பணி செய்தவர். நான் அவரது பணியை பெரிதும் மதிக்கிறேன். அவரை சந்திக்கும் முன்னரே நான் அவர்  எழுதிய நூல்கள், கட்டுரைகளை படித்திருந்தேன். அதன்பிறகு, அவரை சில ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரைச் சந்தித்து பேசியவுடனே எனக்கு தெரிந்தது உலகிலேயே பெரும் தாக்கம் கொண்ட தலைவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று. தான்சானியா காடுகளில் சிம்பன்சிகளை ஆராய ஜேன் சென்றபோது அவரின் வயது 26. அதன்பிறகு நடத்தை உளவியல் துறையில் நிறைய ஆராய்ச்சிகள் நடைபெற்றன. இன்று தன்னுடைய 85 வயதிலும் கூட சூழல் பாதுகாப்பு பற்றி இடையறாது விழிப்புணர்வு செய்துவருகிறார். உலகிலுள்ள ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்கவேண்டி நேர்மறையாக இவர் தெரிவிக்கும் செய்திகள் ஆச்சரியமூட்டுகின்றன. இவரின் சூழல் பற்றிய பேச்சைக் கேட்டால் அவரின் திட்டங்களுக்கு உடன்படாமல் இருக்கமுடியாது. எதிரிலுள்ளவர்கள் என்ன மனநிலையில் இருந்தாலும் அவர்களை தனக்கு இணக்கமான தன்மைக்கு கொண்டுவரும் உண்மை அவரது பேச்சில் உள்ளது. இன்று அவர் எனக்கு மிகச்சிறந்த நண்பராக திகழ்கிறார். நாங

உலக வல்லரசுகளை பிரமிக்க வைக்கும் ஹூவெய் நிறுவனம்! - ரென் ஜெங்ஃபெய்

படம்
ரென் ஜெங்ஃபெய் அமெரிக்கா, இங்கிலாந்து என பல வல்லரசு நாடுகள் அடித்துவிரட்டும் பன்னாட்டு நிறுவனத்தை தொடங்கியவர் இவர்தான். இவரின் ஹூவெய் நிறுவனம், ஸ்மார்ட்போன்களை மட்டும் தயாரிக்கவில்லை. தொலைத்தொடர்பு தொடர்பான சாதனங்களை தயாரித்து வருகிறது. பிஎஸ்என்எல் 4ஜி லைசென்ஸ் வாங்கவே முக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஹூவெய் நிறுவனம், 5 ஜி சேவையை வழங்குவதற்கு தயாராகிவிட்டது. ரென், கேட்ஸ் போல டெக் விஷயங்களில் கெத்தான ஆள் கிடையாது. ஆனால் 1987ஆம் ஆண்டு 5, 600 டாலர்கள் முதலீட்டில் ஹூவெய் நிறுவனத்தை தொடங்கினார். தி ஹூவெய் ஸ்டோரி என்ற நூலை படித்தால் நிறுவனத்தை எப்படி வளர்த்தார் என்பதை உணர முடியும். 2018ஆம் ஆண்டு 170 நாடுகளில் கிளைபரப்பி 107 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டியது. ரென், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பில் இருக்கிறார் என்று ஆஸ்திரேலியா, ஜப்பான், ஆகிய நாடுகள் ஹூவெய் நிறுவனத்தின் ஒப்பந்தங்களை ரத்து செய்து அதன் தொழில்நுட்பத்தை தடை செய்துள்ளனர். மேலும் இந்த நிறுவனத்தின் தொழில்நுட்பங்கள், பிற நாடுகளை சீனா உளவு பார்க்க பயன்படுத்தும் என்றும் வதந்திகள் பரவின. இதற்கெல்லாம் மேலாக நிறுவனத்தின் இயக