இடுகைகள்

வருமானம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கஞ்சாவை பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக்கப்பட்ட நாடுகள்!

படம்
         பெல்ஜியம்  இங்கு 3 கிராம் அளவுக்கு குறைவாக பயன்படுத்துவது குற்றம் கிடையாது என 2003ஆம் ஆண்டு சட்டத்தில் கூறப்பட்டுவிட்டது.  நெதர்லாந்து கஞ்சாவை காபி கடைகளில் பயன்படுத்துவதற்கான அனுமதி 1976ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டுவிட்டது. தனிநபர் பயன்பாடாக ஐந்து கிராம் அளவில் பயன்படுத்தலாம். வீட்டில் கூட ஐந்து செடிகளுக்கு மிகாமல் வளர்த்து வீட்டையும் நாட்டையும் முன்னேற்றலாம்.  போர்ச்சுக்கல்  இங்கு 25 கிராமுக்கு மிகாமல் கஞ்சாவைப் பயன்படுத்தலாம். இதற்கான தடையை அரசு 2001ஆம் ஆண்டு விலக்கிக்கொண்டு விட்டது.  ஸ்பெயின்  இங்கு பொதுஇடத்தில் கஞ்சாவைப் பயன்படுத்த தடை நீடிக்கிறது. மற்றபடி தனிநபராக கஞ்சாவை பயிரிடுவது குற்றமல்ல என 2017ஆம்ஆண்டு சட்டம் இயற்றப்பட்டுவிட்டது.  இத்தாலி இங்கு மருத்துவம், தொழில்துறை சார்ந்து கஞ்சாவைப் பயன்படுத்த உரிமம் பெறவேண்டும். டிஹெச்சி என்ற அளவு குறைவாக உள்ள செடிகளை வளர்த்த அரசு அனுமதி தேவை இல்லை. நாட்டிலுள்ள மாகாணங்கள் கஞ்சா வளர்ப்பதற்கான விதிகளை தளர்த்த முயன்று வருகின்றன.  மேற்கிந்திய தீவுகள் இங்கு ஐந்து கிராமுக்கும் குறைவாக கஞ்சாவைப் பயன்படுத்தலாம். செடிகளையும் வளர்த்தலாம். ஜமை

கொரோ்னா ஏற்படுத்திய பொருளாதார இழப்பு!

படம்
SCMP கொரோனா பாதிப்பால் சென்னை மாவட்டத்தை விட்டு பிழைக்க வந்த அத்தனை பேரும் உயிர்பயத்துடன் ஊரைப்பார்த்து ஓடி வருகின்றனர். இதில் தொழிலாளர்கள்தான் அதிகம். வட இந்தியர்களுக்கு இருக்கும் ஒரே வழி, ரயில்தான். அவர்கள் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்து கிடக்கிறார்கள். நூறு பேர் போகமுடியும் பதிவு செய்யப்படாத பெட்டியில் முன்னூறு பேர்களை அடைத்து பெருமைப்படுகிறது இந்திய ரயில்வே. தொழிலாளர்கள் உயிர்ப்பயத்துடன் ஓடினாலும், முதலாளிகள் ஓட முடியாது. பலரும் கொரோனாவினால் சரிந்தி தொழிலை தடுமாற்றத்துடன் நடத்தி வருகின்றனர். கொரோனா பீதியால் மால்கள், சினிமா தியேட்டர்கள், புகழ்பெற்ற உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் விடுமுறை தினத்திற்கு சம்பளம் கொடுக்க முடியாமல் பலரும் ஆட்களை நீக்கி வருகின்றனர். பிரதமரே சொன்னாலும் வேலை இல்லாதபோது ஆட்களுக்கு சம்பளத்தைக் கொடுப்பது சாத்தியம் கிடையாது என்பதே உண்மை. தேசிய புள்ளியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த சதவீதம் கடந்த பதினொரு ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவாகும். 2016ஆம் ஆண்டு

தடுமாறும் மாநிலங்களின் வருமானம்!

படம்
சர்வதேச ரேட்டிங் நிறுவனமான மூடி, இந்தியாவின் வளர்ச்சிவீதத்தைக் குறைத்துள்ளது. இதனால் மத்திய அரசின் பட்ஜெட் பற்றாக்குறை 3.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் மாநிலங்களின் பங்களிப்பு இதில் குறைந்துபோனதுதான். நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டினாலும் தொடர்ச்சியாக இந்த வருவாய் கிடைத்தால் மட்டுமே இந்திய அரசு பற்றாக்குறை பிரச்னையில் இருந்து தப்பிக்கும். 2019ஆம் ஆண்டு இந்திய அரசு 6.7 சதவீதம் அளவுக்கு உற்பத்தி பற்றாக்குறையை எதிர்பார்த்தது. மாநில அளவில் இது 3.7 சதவீதம் அளவுக்கு உள்ளது. ஜிஎஸ்டி உதவாதது ஏன்? நேர்முகம், மறைமுகமாக பல்வேறு வரிகள் இருந்தன. மத்திய அரசு அதனை மாற்றி 2017 இல் ஜிஎஸ்டியை கொண்டு வந்தது. இதில் நேரும் இழப்பீடுகளுக்கு மாநிலங்கள் மத்திய அரசை நம்பியுள்ளன. இந்த இழப்பீட்டையும் அரசு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே தரும், அதற்கு பிறகு வரி பங்கீடு படி கிடைக்கும் தொகை மட்டுமே மாநிலங்களுக்குச் சேரும். மாநிலங்களில் உற்பத்தி குறைந்து போனதால், ஆண்டுதோறும் பத்து சதவீதம் என வரிவருவாய் குறைந்து வருகிறது. இதன் விளைவாக, மாநிலங்களில் பொருளாதார வள

வாழ்நாள் சாதனையாளர் - ஷிவ் நாடார், ஹெச்சிஎல்!

படம்
தற்போது 74 வயதாகும் ஷிவ் நாடார் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? இவரது பெயரை விட ஹெச்சிஎல் கணினிகள் என்றால் உங்களுக்கு எளிதாக விளங்கும். ஹெச்சிஎல் நிறுவனத்தை 1976ஆம் ஆண்டு தொடங்கியவர் ஷிவ் நாடார். இன்று தொழில்நுட்ப நிறுவனங்களோடு பல்வேறு கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். ஹெச்சிஎல் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 8.6 பில்லியன் டாலர்கள். அண்மையில் கூட ஆறு மென்பொருட்களுக்கான காப்புரிமையை ஐபிஎம் நிறுவனத்திற்கு விற்று 1.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை முடித்துள்ளார். நொய்டாவில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் 14 மாடி மைய அலுவலகம் உள்ளது. ”நாங்கள் இன்று சாதித்துள்ளதாக நீங்கள் கருதினால் அதற்கு பின்னால் கடுமையான உழைப்பு உள்ளது ” என புன்னகையுடன் பேசினார். வாழ்நாள் சாதனையாளர் விருதை ஃபோர்ப்ஸ் இதழ் தேர்வாளர்கள் மூலம் தேர்ந்தெடுத்து வழங்குகிறது. ஹெச்சிஎல் நிறுவனம் , மேலாண்மை நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று ஆட்களை தேர்ந்தெடுக்கிறது. இதனால் இன்று பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்த நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்களாவே இருப்பார்கள். தற்போது கல்வி சார்ந்த பல்வேறு பணிகளை ஷிவ் நாடார

பகோடா விற்பது பொருளாதாரத்தை முன்னேற்றாது - அபிஜித் பானர்ஜி

படம்
newzz நேர்காணல் அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ சீனா அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது. குறிப்பாக வறுமை ஒழிப்பு விஷயங்களில். இதனை எப்படி பார்க்கிறீர்கள். சீனா பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே உற்பத்தி துறை சார்ந்து பணிபுரியத் தொடங்கிவிட்டது. இந்தியா நிலம், சேவைத்துறை சார்ந்த விற்பனையை சாதனையாக பார்க்கிறது. இந்தியாவின் போக்கு, இயல்பாகவே வேலைவாய்ப்புகளை குறைக்கிறது. ஆனால் சீனர்கள் தீவிரமாக உற்பத்தி துறை சார்ந்து உழைத்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் உலக மக்களுக்கான பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு தரமுடிகிறது. இந்தியாவின் வறுமை ஒழிப்பு திட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள். அதில் உங்கள் கருத்தென்ன? இந்தியாவில் மிக குறைந்த பகுதி மக்களே வறுமையில் உள்ளனர். அனைவரும் அல்ல. மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவை அரசு ரீதியான கொள்கைத் திட்டங்களாக உள்ளன. இவையும் பயன் அளிக்கின்றன. ஆனால் எந்த நோக்குமின்றி ஜன்தன் யோஜனா போன்ற திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. என்ன பிரயோஜனம் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். இதனை மதிப்பிட்டு குற

காணாமல் போன பெண் தொழிலாளர்கள்! - ஜிடிபி சரிவுக்கு முக்கியக் காரணம்!

படம்
foreign relation council மாருதி, ஹோண்டா, பஜாஜ் கம்பெனிகள் பற்றி கவலைப்பட்ட அளவுக்கு நாம் பெண் தொழிலாளர்கள் பற்றி கவலைப்படவில்லை. காரணம், பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து குறைந்துவரும் காலகட்டம் இது. பெண் தொழிலாளர்களை பார்ப்பது அரிதாகி வருகிறது. என்ன காரணம்? பெண்கள் பெருமளவு கல்வி அறிவு பெற்றுள்ளார்கள். இதனால் பாமர பெண்கள் பார்க்கும் வேலைகளைச் செய்யத் தயங்குகிறார்கள். கிராமத்து பெண்கள் கூட சற்றே ரிஸ்க் எடுத்து நகருக்கு வந்தால், அவர்கள் நல்ல வேலையில் சேருவார்களே தவிர காட்டு வேலைக்கோ, கட்டட வேலைக்கோ போவது சாத்தியமில்லை. கிராம ப்புறத்தில் கூட குறைந்தபட்சம் பிஹெச்டி வரை படித்து விடுகிறார்கள் பெண்கள். காரணம், கல்விக்கட்டணம் குறைவு. மற்றொன்று கருத்தாகப் படிப்பதும்தான். பெண்கள் வேலைக்குச்சென்றாலும் கல்வித்தகுதி சார்ந்தே யோசிக்கிறார்கள். ஆனால் திருமணம் என்று வரும்போது, பெரும்பாலும் வேலையைக் கைவிடும் முடிவை அவர்களே எடுக்கிறார்கள். காரணம், குடும்பத்திற்கான நேரத்தை  செலவிடுவதுதான். சென்னை போன்ற மாநகரங்களில் இருவரும் வேலைக்கு செல்வது அவசியம். பெரும்பாலும் அதனை புகாரின்

வேலைவாய்ப்பை குறிப்பிடாத நிதியமைச்சர் - எதிர்காலம் என்ன?

படம்
வேலைவாய்ப்பில் தடுமாற்றம்! இந்திய அரசு பட்ஜெட்டில் பல்வேறு வரிகளை விதித்துள்ளது. கூடவே பல்வேறு திட்டங்களையும் கூறியுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை வெளியாகும்போதே, தணிக்கைத்துறையின் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிதியும், தற்போது நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ள நிதித்தொகையும்(வரவு, செலவு) பொருந்தவில்லை என சர்ச்சையானது. தற்போது இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவாக வேலைவாய்ப்பு சதவீதம் சரிந்துள்ளது. 6.1 சதவீதமாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இந்தியாவின் மொத்த வேலையின்மை அளவைவிட பதினொரு மாநிலங்களின் வேலையின்மை அளவு அதிகமாக உள்ளது. இதைப்பற்றி நிதிநிலை அறிக்கையில் பேசவேண்டிய நிர்மலா, மாற்றுப்பாதையில் வண்டியைத் திருப்பிவிட்டார். கேலோ இந்தியா, விளையாட்டிக்கல்வி போர்டு, ஆராய்ச்சி மையம் என அறிவித்த அறிவிப்புகள் சாத்தியமா என்று அவருக்கே கூட தெரியாது. நிதியமைச்சர் நேரடியாக வேலைவாய்ப்பு பற்றி கூறவில்லைதான். ஆனால் இந்தியாவில் படியுங்கள் எனும் திட்டம் மூலமாக வெளிநாட்டு மாணவர்கள் இங்கு படிக்க வருவதற்கு வாய்ப்புள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள் மேலும் தரமாக உருவானால் வேலைவாய்ப்

கருத்து சொல்லுங்க பாஸ்! - வற்புறுத்தப்படும் கார்ப்பரேட் நிறுவனங்கள்!

படம்
பன்னாட்டு நிறுவனங்களின் அரசியல் நிலைப்பாடு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வணிகம் தடையில்லாமல் நடைபெற என்ன அவசியமோ அந்த காரியங்களை ஆங்கிலேயர் செய்தனர். அதில் சில நல்ல விஷயங்களும் நடந்தன. உடன்கட்டை ஏறும் பழக்கம் ஒழிப்பு போன்ற மூடநம்பிக்கை சார்ந்த பிற்போக்குதனங்களும் குறைந்தன. அதேநேரம் இந்த செயற்பாடுகள் கூட படித்த இந்தியர்களின் செல்வாக்கு, உழைப்பு காரணமாகவே சட்டமாக்கப்பட்டன. அதேசமயம் அன்று நிலவிய சமூகப்பழக்க வழக்கங்கள் பற்றி எந்த வர்த்தக நிறுவனங்களும் கவலைப்படவும் இல்லை. அதுபற்றி கருத்துகளைச் சொல்லவும் இல்லை. சமூக வலைத்தளங்கள் வந்தபிறகு காட்சிகள் அனைத்தும் மாறின. வலைத்தளத்தில் பல்வேறு விளம்பரங்கள் இடம்பெறத்தொடங்கின. இதனை விளம்பரத்துபவர்களுக்கு இன்ஃபுளுயன்சர் என்று பெயர். இதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு பணமும் வழங்குகின்றன. இன்று தேசியமயம், வலதுசாரி பாபுலிச கோஷங்கள் உச்சம் பெற்றுவருகின்றன. இந்நிலையில் பல்வேறு நிறுவனங்களும் அந்தந்த நாட்டு அரசுகளின் நிலைப்பாடு, அல்லது அனைவரும் ஏற்கும்படியான நிலைப்பாடுகளை தங்களின் நிறுவன மதிப்பு கெடாமல் எடுத்து வருகின்றன. முன