இடுகைகள்

எமர்ஜென்சி முதலுதவிக்கு படிப்பு கட்டாயமாகிறது!

படம்
விபத்துகளில் இந்தியர்கள் பலி! எமர்ஜென்சி மருத்துவ வசதிகள் கிடைக்காததால் ஆண்டுதோறும் 50 ஆயிரம் இந்தியர்கள் இறப்பதாக ஹார்வர்டு பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அவசரநிலையில் நோயாளிக்கு எதுமாதிரியான சிகிச்சைகளை அளிக்கவேண்டும் என்பதை மருத்துவர்களும், செவிலியர்களும் அறியாததால் இந்த அவலநிலை. “அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அக்யூட் கிரிட்டிக்கல் கேர் கோர்ஸ்(ACCC) அனைத்து மருத்துவர்களுக்கும் கட்டாயம். அவசரநிலை உதவிகளால் பத்து சதவிகித மரணங்களை தடுத்து மக்களை காப்பாற்ற முடியும்” என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த மாற்று உறுப்பு அறுவைசிகிச்சை வல்லுநர் அஜய் சர்மா. நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிப்பது தொடர்பான மருத்துவர்- செவிலியர்களின் தடுமாற்றங்களால் இங்கிலாந்தில் ஆண்டுதோறும் 98 ஆயிரம் பேர் மரணித்து வருகின்றனர். 2012 ஆம் ஆண்டு இந்தியாவில் இப்பாடம் அறிமுகமானாலும் இதனைக் கற்றவர்களின் அளவு இந்தியளவில் 450 மருத்துவர்கள் மட்டுமே. எமர்ஜென்சி சூழலில் விபத்துக்குள்ளாகி மருத்துவமனைக்கு வருபவர்களின் மூச்சை சோதித்து ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவது இதில் முக்கிய அங்கம்.

இந்தியாவின் செழிப்பான மாநிலம் எது?

பணக்கார மாநிலம்! – இந்தியாவில் பணக்கார மாநிலங்களின் பட்டியலில்   குஜராத், நான்காவது இடம் பிடித்துள்ளது. மாநிலத்திலுள்ள 58 பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 300 கோடிக்கும் அதிகம். குஜராத் கோடீஸ்வர தொழிலதிபர்களில் இந்திய அரசின் ஆதரவு பெற்ற அதானி ரூ.71 ஆயிரத்து 200 கோடி சொத்து மதிப்புடன் முன்னிலை வகிக்கிறார். இவருக்கு அடுத்து பங்கஜ் படேல்(ரூ.32,100 கோடி), பத்ரேஷ் ஷா(ரூ.9,700 கோடி), கர்சன்பாய் படேல்(ரூ.9,600 கோடி), சமீர் மற்றும் சுதீர் மேத்தா(ரூ.8,300 கோடி) சொத்துமதிப்புடன் கௌரவமாக பார்க்லேய்ஸ் ஹூருன் இந்தியா பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இந்திய மாநிலங்களில் மகாராஷ்டிரா, 271 பணக்காரர்களை உருவாக்கி ரூ.21.14 லட்சம் கோடி சொத்துக்களோடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கடுத்த இடத்தை 163   பணக்காரர்களைக்(ரூ.6.7 லட்சம் கோடி) கொண்டுள்ள டெல்லி பிடித்துள்ளது. இதற்கடுத்த இடங்களை கர்நாடகா(ரூ.3.49 லட்சம் கோடி), தெலங்கானா(ரூ.1.56 லட்சம் கோடி) பெற்றுள்ளன. நகரங்களின் அடிப்படையில் மும்பை 233 பணக்காரர்களை வாழவைத்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கடுத்த இடங்களில் டெல்லி,

இந்தியாவின் ஸ்பெஷல் விழாக்கள்!

படம்
இந்தியாவின் பெருமை சொல்லும் ஸ்பெஷல் விழாக்கள் !- ச . அன்பரசு தமிழகத்தின் பெரும்பாலான விழாக்கள் சித்திரையின் கொளுத்தும் வெயிலிலும் உற்சாக வேகமெடுத்து ஆண்டு முழுவதும் வீரியமாக தொடர்பவை. பெரும்பாலான விழாக்களின் நாயக , நாயகிக ளின் ஆதார வடிவம் இயற்கை தான். பல்வேறு கலாசார வேறுபாடுகளை மறந்து அனைத்து மக்களும் உற்சாகமாக கொண்டாடும்படி இந்தியளவில் வேறென்ன விழாக்கள் உள்ளன?   சம்மக்கா - சரக்கா ஜாத்ரா விழா ( ஜன .31- பிப் .3) தெலுங்கானாவின் மேதரம் பகுதியில் நான்கு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒரு கோடிப்பேருக்கும் மேலான பழங்குடிகள் பங்கேற் கின்றனர். ஆந்திரா , சத்தீஸ்கர் , மத்தியப்பிரதேசம் , ஒடிஷா , ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் சம்மக்கா - சரக்காவுக்காக செய்யும் முக்கிய நிவேதன ப் பொருள், நாட்டுச்சர்க்கரை . இவ்வாண்டு கிடைத்த நன்கொடையான 10 கோடியில் மூன்றில் ஒரு பங்கு 200 கோயா இனக்குழு பூசாரிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது . உற்சாகமாக மது , இறைச்சி விருந்தோடு கொண்டாடப்படும் இவ் விழாவில் எந்த மனிதவடிவ சிலைகளும் கிடையாது . கோயா - காகதியர்கள் என இர

வீகன் உணவுப்பழக்கத்திற்கான காரணம் என்ன?

படம்
புத்தகம் பேசுது! Down Girl: The Logic of Misogyny   Kate Manne ,368 pp Oxford University Press உலகமெங்கும் அதிகரித்து வரும் பெண்வெறுப்புதான் இந்த ஆண்டின் ஹாட் டாபிக். பெண்வெறுப்பின் மூலம், அரசியல், சினிமா, தொழில்துறையில் அது எப்படி வெளிப்படுகிறது என்பதை கார்னெல் தத்துவப் பேராசிரியர் கேட் மனே இந்நூலில் சமகால உதாரணங்களுடன் விளக்கியுள்ளார். The End of Animal Farming: How Scientists, Entrepreneurs, and Activists Are Building an Animal-Free Food System Jacy Reese ,240 pps Beacon Press பாரம்பரிய இறைச்சி உணவுக்கு மாற்றாக தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரிக்கப்படும் உணவுகளை அறிமுகப்படுத்தி, இதற்கான சமூக காரணங்களை விளக்குகிறார் ஆசிரியர் ஜேசி ரீஸ். வீகன் உணவுப்பழக்கம் அதிக மக்களை ஈர்ப்பதற்கான காரணங்களை சமூக காரணங்களுடன் இணைத்து பேசியுள்ளார் ஆசிரியர்.

அகதி கார்ட்டூனிஸ்ட்டின் அலறல்!

படம்
அகதி கார்ட்டூனிஸ்ட்! 2013 ஆம் ஆண்டில் ஆஸி.யின் கிறிஸ்துமஸ் தீவில் அடைக்கலம் தேடிய அலி டொரானியை அரசு, மனுஸ் தீவுக்கு மாற்றியது. பப்புவா நியூகினியாவில் நான்கு ஆண்டுகளாக அகதிகள் முகாமில் வாழ்ந்துவருபவர் ஓசிடி மனநல பிரச்னையில் சிக்கினாலும் தன் பிரச்னைகளை கார்ட்டூன்களாக வரைந்து புகழ்பெற்றுள்ளார். ஈட்டன் ஃபிஷ் என்ற பெயரில் அலி வரையும் படங்கள் 2013 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகி வருகின்றன. கார்ட்டூன்கள் அலியை புகழ்பெறச்செய்தன; அதோடு மக்களை நாட்டிற்குள் அனுமதிக்காமல் முகாமில் வாழவைக்கும் ஆஸி.யின் தந்திரத்தை உலகிற்கு பட்டென சொல்லிய நறுக் படங்கள் கண்டனங்களை பெற்றுத்தந்தன.  2016 ஆம் ஆண்டு கார்ட்டூனிஸ்ட் ரைட்ஸ் நெட்வொர்க அமைப்பு துணிச்சலான கார்ட்டூனிஸ்ட் விருதை அலிக்கு வழங்கி கௌரவித்தது. காரணம், உலகப்போர்கால மக்களின் நிலைமையை அலியின் படங்கள் விவரிக்கின்றன என்பதால்தான். ஆஸி. அரசின் முகாமிலிருந்து வெளியேறிய அலி, தற்போது நார்வேயில் வசிக்கிறார். “முகாமில் நான் உயிருடன் இருந்ததற்கு காரணம், கலைதான். மனநலனை மேம்படுத்த உதவவில்லை என்றாலும் என்னை உளவியல் பிரச்னையிலிருந்து மீட்க கார்ட்டூன்

தேசியவாதியா? தேசதுரோகியா? -தலை மர்மம்

படம்
கவிஞரின் தலை மர்மம்! ராஜதுரோக குற்றச்சாட்டிற்காக தலை துண்டிக்கப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த கவிஞர் வால்டர் ராலெய்க்கு(1552-1618), இந்த ஆண்டு 400 ஆம் ஆண்டு நினைவுதினம். துண்டிக்கப்பட்ட தலை சிவப்பு வெல்வெட் பையில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அவரது தலை எங்கே என்ற மர்மம் இன்றுவரையிலும் நிலவி வருகிறது. வால்டரின் உடலை புதைத்த அரசு, தலையை மனைவி எலிசபெத்திடம் கொடுத்ததாகவும் அவர் தான் இறக்கும்வரை அதனை பதப்படுத்தி பாதுகாத்ததாகவும் தி கார்டியன் நாளிதழ் தகவல் தெரிவிக்கிறது. “1665 ஆம் ஆண்டு வால்டரின் மகன் கேரியூ எஸ்டேட்டை விற்றார். அதற்குப்பிறகு சிவப்புபை பற்றிய விஷயங்களை தெரியவில்லை” என்கிறார் வால்டரின் கட்டிடங்களை நிர்வகிக்கும் அறக்கட்டளை தலைவர் பீட்டர் பியர்ஸ். Patriot or Traitor: The Life and Death of Sir Walter Raleigh , ளை நூலை எழுதியவரான அன்னா பீர், வெட்டப்பட்ட தலையை பதப்படுத்தியிருந்தாலும் அதில் சிறு ரத்தக்கறையேனும் இருக்கும். எப்படி புதிதாக இருக்கமுடியும்? என லாஜிக் கேள்வி கேட்கிறார். வரலாற்றில் நிறைய மர்மங்கள் காரணங்கள் இல்லாமல் உண்டு. அதில் வால்டரின் தலை புதிய வரவு அவ்வளவ

முதல் தேர்தல் அதிகாரி தெரியுமா?

படம்
சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலை நடத்திய அதிகாரி!  உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் ஸ்பெஷல், அதன் பிரமாண்டமான தேர்தல் திருவிழாதான். மொழி, மதம், கலாசாரம் என எண்ணற்ற சவால்களைக் கொண்ட இந்தியாவில் மக்களவை, மாநிலங்களவை தேர்தல்களை கண்காணிப்புடன் திறம்பட கட்டுப்பாடு குறையாமல் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்துவதை உலகின் வல்லரசு நாடுகளும் கூட எதிர்பார்ப்பும் ஆர்வமுமாக கவனித்து வருகின்றன.   ஆட்சி மாற்றம், பதவி நியமனம் ஆகியவற்றில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பு குறித்த சந்தேகங்கள் இன்று கிளம்பினாலும் மத்திய, மாநில தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பும் பணியும் அசாதாரணமானது. இந்தியா போன்ற பல்வேறு கலாசாரங்கள், மாறுபட்ட நிலப்பரப்புகள் கொண்ட நாட்டில் பிரச்னைகள், பூசல்கள் இன்றி முன்பு வாக்குச்சீட்டுகள் மூலமும் இன்று வாக்கு எந்திரங்கள் மூலமும் தேர்தலை சுமூகமாக நடத்த எண்ணற்ற குடிமைத்துறை அதிகாரிகளின் உழைப்பே காரணம். அவர்களில் முக்கியமானவர் 1951-52 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலை திட்டமிட்டு நடத்திய முதல் தேர்தல் கமிஷனர் சுகுமார் சென். 1899 ஆம் ஆண்டு கல்கத்தா

ரூ.10 ரூபாயில் பெண்கல்வி சாத்தியம்தான்!

படம்
பத்து ரூபாயில் பெண் கல்வி!- ச.அன்பரசு பெண்கள் நாட்டின் கண்கள் என பட்டிதொட்டியெங்கும் பேசினாலும் எழுதினாலும் இன்றுவரை இந்தியக் கிராமங்களிலுள்ள ஏழைக்குடும்பங்களில் பெண்களுக்கு அடிப்படைக் கல்விகூட கிடைப்பதில்லை என்பதுதான் நாட்டின் அவல உண்மை. படிப்பறிவற்று வேலைக்கு செல்லும் பெண்குழந்தைகளை பாதுகாக்க ஒரே வழி என குழந்தை திருமணத்தை பெற்றோர்கள் தேர்ந்தெடுப்பதும் கல்வியறிவின்மையின் பக்கவிளைவு சமூகத்தை குலைத்துபோடுகிறது. இதைத் தடுத்து பெண்களுக்கு கல்வியெனும் சிறகு தந்து வாழ்வில் உயர வைக்கிறார் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வீரேந்திர சாம்சிங். 2000 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வேதிப்பொருள் நிறுவமான டூபாண்டில் பணியாற்றிய வீரேந்திர சாம்சிங், பெண்கள் கல்வி கற்காமல் வேலைக்கு அனுப்பியும், குழந்தை திருமணம் செய்விக்கப்படும் அவலத்தையும் கண்டு மனம் வெதும்பினார். உடனே தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு சேமிப்புத்தொகையோடு உத்தரப்பிரதேசம் வந்து சேர்ந்தார். அனுப்ஷர் என்ற கிராமத்தில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கி காத்திருந்தார். ம்ஹூம் ஒருவர் கூட தன் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க வரவில்லை. வேலை

ஹோவர்பைக் போலீஸ்!- தயாராகிறது க்ரைம்படை

படம்
போலீசுக்கு வாகனப்பயிற்சி! அமெரிக்காவைச் சேர்ந்த ஹோவர்சர்ஃப் நிறுவனம் துபாய் போலீசாருக்கு ஹோவர்பைக்கில் பறந்துசென்று குற்றங்களை குறைப்பதற்கான பயிற்சிகளை அளித்துவருகிறது. 2020 ஆம் ஆண்டில் ஹோவர் பைக்கில் போலீஸ்காரர்கள் குற்றங்களை குறைக்க வானில் பறந்துவருவது விரைவில் சாத்தியமாகலாம். ஹோவர்சர்ஃப் நிறுவனம், s3 எனும் ஹோவர்பைக்கை போலீசாருக்கு பயிற்சியளிக்க அளித்துள்ளது. “தற்போது ஹோவர் பைக்கில் இருகுழுக்கள் பயிற்சி எடுத்துள்ளனர்.விரைவில் இந்த எண்ணிக்கையை அதிகரிப்போம்” என்கிறார் பிரிகேடியர் காலித் நாசர் அல்ராஸூக்கி. ஹோவர் சர்ஃப் நிறுவனத்திடம் 1,50,000 டாலர்களை கட்டினால் தனியாகவும் ஹோவர்பைக்கை வாங்கி பறக்கமுடியும். விமானத்துறை அனுமதி வாங்கினால் போதும்; இதற்கென தனிலைசென்ஸ் தேவையில்லை. evTol எனும் இவ்வாகனம் பேட்டரியால் இயங்க்கூடியது. இதில் கிராபீன் பயன்படுத்தும்போது எடைகுறைந்து பறக்கும் திறன் எதிர்காலத்தில் கூடலாம். நூறு ஹோவர் பைக்குகளை துபாய் வாங்கவுள்ளது. இதில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம். உலகிலேயே மணிக்கு 253 கி.மீ வேகத்தில் பாயும் அதிவேக போலீஸ்காரை துபாய் மட

மும்பை தாக்குதல்: நடந்தது என்ன?

படம்
துயரத்திற்கு வயது 10! 2008 ஆம் ஆண்டு நவ.26 ஆம் தேதி. பாகிஸ்தானிலிருந்து மும்பையில் ஊடுருவிய பத்து தீவிரவாதிகளின் தாக்குதலில் 166 பேர் பலியாயினர். 60 மணிநேரத்தில் நடந்த இப்பயங்கர தாக்குதலில் 300 பேர்களுக்கு மேல் படுகாயமுற்றதும், மக்களுக்கு அரசு மீது அவநம்பிக்கை ஏற்பட்டதும் தனிக்கதை. நவ.26 பத்து தீவிரவாதிகள் மும்பையை நண்பகல் 1 மணிக்கு அடைகின்றனர். இரவு 9.30க்கு சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் முதல் தாக்குதலை நடத்துகின்றனர். பல்வேறு இடங்களி லும் தாக்குதல்கள் நடைபெற்றன. நவ.29 என்எஸ்ஜி கமாண்டோ மூன்று இடங்களிலுள்ள தீவிரவாதிகளை கொல்கிறது. டிச.2 அன்று பாகிஸ்தானிலிருந்த லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் முகமது சயீத் வீட்டுக்காவலில் வைக்கப்படுகிறார். ஜன.6 இந்தியா பாகிஸ்தான் தீவிரவாதிகள் பற்றிய தகவலை பாக்.அரசுக்கு தெரிவித்தது. அடுத்தநாள், தீவிரவாதி அஜ்மல் கசாப், பாகிஸ்தானி என்று ஒப்புக்கொண்டார் பாக்.ஐடி அமைச்சர் ஷெரி ரஹ்மான்.  26/11 தாக்குதலுக்கு பாகிஸ்தானில் திட்டமிட்டதை பாக்.அரசு இந்திய அரசின் கேள்விகளின் பின்னணியில் ஏற்றது. அஜ்மல் கசாப், 2012 ஆம் ஆண்டு ஏர்வ

உண்ணாவிரதம் உடல்நலனை காக்குமா?

ஏன்?எதற்கு?எப்படி? – உண்ணாவிரதம் இருப்பது உடல்நலத்திற்கு நல்லதா? அகோர பசி உடலில் அடங்குவதற்கு காரணம், உணவுப்பொருட்களிலிருந்து கிடைக்கும் குளுக்கோஸ். உண்ணாவிரதம் இருக்கும்போது உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பு உடலின் பசியை குறைத்து உடல் இயங்குவதற்கு உதவுகிறது. உண்ணாவிரதம் இருக்கும்போது பசி மெல்லியகோடாக தோன்றக்காரணம், கொழுப்பில் இருந்து கிடைக்கும் கீட்டோன் என்ற பொருள். எடைக்குறைப்புக்கு உண்ணாவிரதம் உதவும் என கூறினாலும் நான்கு நாட்கள் முழுமையாக மாவுச்சத்துப்பொருட்களே சாப்பிடாமல் இருந்தால் அது சாத்தியம். இதனை மருத்துவரின் பரிந்துரைப்படி ஏற்பதே நல்லது. உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகரிப்பதும், மார்பக புற்றுநோயை ஊக்குவிக்கும் காரணிகள் குறைவதாகவும் மருத்துவர்கள் டிம் ஸ்பெக்டர், மிட்செல் ஹார்வி ஆகியோர் ஆய்வுகளின் அடிப்படையில் தகவல் தெரிவிக்கின்றனர்.