இடுகைகள்

அசுரகுலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீரியல் கொலைகாரர்களுக்கான கலாசாரம், அறிகுறிகள், குணங்கள் !

படம்
                      சைக்கோ கொலைகாரர்களின் கலாசாரம் சைக்கோ கொலைகாரர்கள் பற்றிய அறிமுகத்தை நான் முன்னமே உங்களுக்கு அசுரகுலம் நூலில் தந்துவிட்டேன் . இந்த இரண்டாம் பாகத்தில் குற்றவாளிகளின் உருவாக்கம் , காலத்தின் பங்கு , அதைச்சார்ந்து இயங்கும் மனிதர்கள் , ஊடகங்களின் பங்கு ஆகியவற்றைப் பற்றி பேசலாம் . ஹிட்லர் , முசோலினி ஆகியோர் கொடுங்கோலர்கள் , அவர்கள் குறிப்பிட்ட மக்களின் மீது வெறுப்பைத் தூண்டினார்கள் , மக்களை அழித்தொழித்தார்கள் என்று ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன . அவை உண்மைதான் . அதேசமயம் அதற்கு தூண்டுதலாக இருந்த காலம் , நாட்டில் நிலவிய வறுமை , பொதுநலனை குலைத்த சுயநலம் , யார் மீது குற்றம்சாட்டுவது என பரிதவித்த மக்களின் மனநிலை ஆகியவையும் சர்வாதிகாரிகள் உருவாகுவதற்கு காரணம் . வரலாற்றில் கொடூரமான ஆட்சியாளர்களை மக்களேதான் வாக்களித்து தேர்ந்தெடுத்தார்கள் என்பது நகைமுரணாக தோன்றலாம் . ஆனால் ஜனநாயகம் இப்படித்தான் இயங்குகிறது . சீரியல் கொலைகாரர்கள் என்பது எப்போதும் ஊடகங்களுக்கு தனி கலாசாரம் போல , சுவாரசியமான விஷயமாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது

நோயாளிகளுக்கு தசை தளர்வு மருந்து கொடுத்து கொன்ற கொலையாளி - நெசட்

படம்
அசுரகுலம் - இன்டர்நேஷனல் ஆர்ன்ஃபின் நெசட் நார்வே  சீரியல் கொலைகாரர்கள் குறிப்பிட்ட துறை சார்ந்து இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் நெசட் மருத்துவத்துறை சார்ந்த கொலைகாரர். 1936ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி பிறந்தவர். ஓர் மருத்துவமனையில் செவிலியராக இருந்தார். அப்பணியில் அங்கிருந்த 22க்கும் மேற்பட்ட நோயாளிகளை விஷம் கொடுத்து கொன்றார். எத்தனை பேரை கொன்றீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு, எனக்கு சரியாக நினைவில்லை என்று தில்லாக பேசினார். அதே தில்லுடன்தான் அனைத்து கொலைகளை சிம்பிளாக செய்தார். ஆர்க்டலிலுள்ள ஜெரியாரிக் இன்ஸ்டிடியூட் எனும் நிறுவனத்தில் நெசட் இயக்குநராக இருந்தார். அங்குதான் கியூராசிட் எனும் தசை தளர்வு மருந்தைப் பயன்படுத்தி பலரையும் வைகுந்தம் அனுப்பி மகிழ்ந்தார். 22 பேர்களை கொன்றதற்காக குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் பின் ஐந்து மாதங்கள் விசாரணை நடந்தது. நார்வே நாட்டு சட்டப்படி உச்ச தண்டனையாக 21 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. விடுதலையானவர் 2004ஆம் ஆண்டு முதல் தன் பெயரை மாற்றிக்கொண்டு நார்வேயில் வேறிடத்தில் வசித்து வருவதாக க

கர்ப்பிணியை தாக்கி குழந்தையை வெளியே எடுத்த ஜப்பான் சைக்கோ!

படம்
அசுரகுலம் - இன்டர்நேஷனல் யோஷிரா கொடைரோ சுருக்கம் ஜப்பானைச் சேர்ந்த ராணுவ வீரர். சீனா - ஜப்பான் போர் நடைபெற்றபோது அதில் பங்கேற்று பல்வேறு கொடூர கொலைகளைச் செய்தார். பத்துக்கும் மேற்பட்ட பெண்களை கொடூரமாக கொன்றார். 1928ஆம் ஆண்டு சீனாவின் ஜினன் எனுமிடத்தை ஜப்பான் ராணுவம் கைப்பற்றியது. இப்போரில் பல்வேறு கொலைகள், வல்லுறவுகள் நடைபெற்றன. சீனாவில் நடைபெற்ற கொடுமைகளை உலகிற்கு சொன்ன வீர ர்களில் யோஷிராவும் ஒருவர். மே, 1945 முதல் ஆகஸ்ட் 1946 வரையில் பத்து பெண்களை கொடூரமாக கொன்றார். இறந்த பெண்ணுடன் பாலுறவு வைக்கு முயன்றபோது காவல்துறையில் பிடிபட்டார். 1946ஆம் ஆண்டில் ஆக. 20 அன்று கைதானவர், அடுத்த ஆண்டு ஜூனில் தன் கொலைகளை ஒப்புக்கொண்டார். 1949 ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இறக்கும்போதும் பெரிதாக யோஷிரோ கவலைப்படவில்லை. அமைதியாக சிகரெட் ஒன்றைப் பிடித்துவிட்டு இறந்தார். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து டோக்கியோ இயர் ஜீரோ என்ற படம் 2007ஆம் ஆண்டு தயாரானது. 1905இல் ஜப்பானில் பிறந்த யோஷிரோ, பள்ளியில் சாகச வீரன். தினசரி வகுப்பில் கிடைக்கும் சோனிப்பயல்களை அடித்

கரும்புத்தோட்டத்தில் மரணச்சத்தம் - அஹ்மத் சூரத்ஜி

படம்
அசுரகுலம் - இன்டர்நேஷனல் அஹ்மத் சூரத்ஜி கேரளத்தில் இன்றும் பில்லி, சூனியம், ஏவல் சமாச்சாரங்கள் உண்டு. அதேபோல இந்தோனேஷியாவில் என்னாலும் முடியும் என்று தொடங்கி பல பெண்களை கொன்று சோதித்துப் பார்த்த கருப்பு மந்திரவாதி சூரத்ஜி. 1997ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று கெம்லா தேவி என்ற பதினைந்து வயது சிறுமி, ரிக்சாவில் ஏறி உட்கார்ந்தார்.  எங்கம்மா போகணும் என்ற ரிக்சாக்காரரிடம் இடம் பற்றிச் சொல்லிவிட்டு, யாரிடம் இங்கு நான் செல்வதை சொல்லிவிடாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டார். அந்த இடத்தில் பெரும் மர்மம் புதைந்திருப்பதை ரிக்சாக்காரர் உணரவில்லை. ஆனால் ஒரு வாரம் கழித்து நாளிதழில் செய்தியைப் பார்த்தவர் அதிர்ந்துபோனார்.கரும்புக்காட்டில் தன் வண்டியில் பயணித்த அந்த சிறுமி இறந்து கிடப்பதைப் பார்த்தார். அந்த சிறுமிதான் என்பதை உடை மூலம் உறுதி செய்துகொண்டவர், போலீசுக்கு தகவல் சொன்னார். தான் ஒரு வாரத்திற்கு முன்பு சூரத்ஜியின் வீடு அருகேதான் சிறுமியை இறக்கிவிட்டதாக ரிக்சாக்காரர் போலீசிடம் சொன்னார். உடனே போலீஸ் சாதாரண விசாரணையாக சூரத்ஜியிடம் சிறுமி பற்றி விசாரிக்க, தான்தான் கொலை செய்து எறிந்தேன் எ

மனைவியை கொன்று பீப்பாயில் ஊற வைத்த பாசக்கார கணவர் - பெலாகிஸ்

படம்
மென்டல் ஃபிளாஸ் அசுரகுலம் - இன்டர்நேஷனல் பெலா கிஸ் ஹங்கேரியின் சின்கோட்டா என்ற நகரில் டின்களை தயாரித்து விற்று வந்தார் பெலா கிஸ். வயது 37. திருமணமாகாத வாலிபர். ஆளும் பார்க்க உயரமாக திடகாத்திரமாக இருந்தார். அதனால் அடிக்கடி அவர் வீட்டில் நடக்கும் பார்ட்டியில் பெண்கள் அவரோடு நடனமாட போட்டியிட்டனர். இதனால் ஒரு பார்ட்டியில் அவரோடு நடனமாடிய பெண் மறுமுறை நடனமாட மாட்டார். அந்தளவு பெண்களின் ஈர்ப்பு இருந்த்து. அவர் தன் தொழில் மூலம் கிடைத்த பணத்தில் பெரிய வீட்டை வாங்கி வசித்து வந்தார். அவருக்கு வீடு தொடர்பான பணிகளை திருமதி ஜாகுபீ செய்துகொடுத்து வந்தார். நேர்மையான பணியாள் என்றால் இவரைத்தான் சொல்லவேண்டும். கிஸ் என்ன சொன்னாரோ அதை அப்படி சாலையில் வெள்ளைக்கோடு மீது மாறாமல் வண்டி ஓட்டுவது போல கடைப்பிடித்தார். கிஸ் வெளியூருகளுக்கு செல்லும்போது வீட்டைப் பராமரிப்பதும் அவள்தான். 1914ஆம் ஆண்டில் உலகப்போர் காலகட்டம். ஹங்கேரி ராணுத்திற்கான அழைப்பு வர அதனை ஏற்றார். வீட்டைப் பார்த்துக்கொள்ள திருமதி. ஜாகுபீயிடம் கேட்டுக் கொண்டார். போர் முடிந்தபிறகும் கிஸ் வரவில்லை. உடனே ஊருக்குள் செர்பியாவிலே

டிராகுலா கொலைகாரர் - பீட்டர் கர்டன் வாழ்க்கையின் இறுதிப்பகுதி

படம்
அசுரகுலம் - இன்டர்நேஷனல் பீட்டர் கர்டன் சிறுமியை துடிதுடிக்க கழுத்தை அறுத்து கொன்றது அடுத்த நாளே நகரில் முக்கியமான விவகாரமானது. மக்கள் அவரை நிழல் ராட்சசனாக பாவிக்கத் தொடங்கினர். அவர்கள் அப்படி பேசுவது, பயப்படுவது பீட்டருக்கு மிகவும் பிடித்திருந்தது. பிறரின் பேச்சின் மையப்பொருளாக இருப்பது யாருக்குத்தான் பிடிக்காது! அடுத்து இருமாதங்கள் கழித்து, பதினேழு வயதுப் பெண்ணை கொலை செய்து இன்பம் அனுபவித்தார். இம்முறை கொலையோடு, கொள்ளையையும் செய்ததில் பீட்டருக்கு கூடுதல் லாபம் கிடைத்தது. முன்னர் செய்த கொள்ளை ஒன்றுக்காக, பீட்டருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. 1921ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை கிடைத்தது. வெளிவந்தவருக்கு அகஸ்டே ஸ்கார்ப் என்ற பெண்ணுடன் நட்பு கிடைத்தது. இவர் காரியக்கார விலைமாது. அப்போது தனியாக சிறு கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார். இருவரும் கைகோர்த்தாலும் தன் பாலியல் வேட்கைக்கு பீட்டரை, அகஸ்டே பயன்படுத்தி வந்தார். இறுதியில் ஒருநாள் தன் கணவரா, காதலனா என்று சிக்கல் வந்தபோது, கணவரைத் தேர்ந்தெடுத்தார். தொல்லையாக இருந்த பீட்டரை வலுக்கட்டாயப்படுத்தி வல்லுறவு செய்தார

ரத்தம் பார்த்தால் இன்பம் பெருகும் - பீட்டர் கர்டன்

படம்
அசுரகுலம் - இன்டர்நேஷனல் பீட்டர் கர்டன் ஜெர்மனியின் கிளின்ஜென்பல்ட்ஸ் சிறைச்சாலை. சூரியன் மெல்ல சோம்பல் முறித்து கதிர்களை விரித்தபோது, அந்த கைதியை கில்லட்டினால் வெட்டுவதற்கு போலீஸ் அழைத்தனர். ஆண்டு 1931 ஜூலை 2 ஆம் தேதி.  அந்தக் கைதியின் பெயர் பீட்டர் கர்டன். 70க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை கடத்தி கொன்று அவர்களின் ரத்தம் குடித்தவர். புகைப்படத்தை நன்கு உற்றுப்பார்த்தால் ஹிட்லர் கூட தெரியலாம். வல்லுறவு, சித்திரவதை, உடல் உறுப்புகளை தின்பது என அனைத்து கொடூரங்களிலும் முனைவர் பட்டம் வாங்கியவர் பீட்டர் கர்டன். மரியாதைக்குரிய ஆள் போல புகைப்படங்களில் தெரிவார். வெளியே ரோஜாப்பூ போல சிரித்தாலும் அவரின் உள்ளுக்குள் மிருகம் உறுமிக்கொண்டிருப்பதை யாரும் அறியவில்லை.  சிறுவயது வாழ்க்கை பிற கொலைகார ர்களை போலவே இவருக்கும் அமைந்தது. குடிகாரப் பெற்றோர். கிடைத்த கேப்பில் எல்லாம் தவறுகளைக் கண்டுபிடித்து பீட்டரின் கன்னத்தில் அறைந்தனர். தாங்கள் பாலுறவு கொள்வதை அவரது தந்தை மகன் முன்னிலையில் நடத்துவார். அவன் கண்டிப்பாக பார்த்தே ஆகவேண்டும், முகத்தை திருப்பினால் நெஞ்சிலேயே மிதிப்பார்

ஹென்றி லெண்டரு - விதவைகளை தீர்த்துக்கட்டிய குரூரன்!

படம்
அசுரகுலம் - இன்டர்நேஷனல் ஹென்றி லெண்டரு பிரான்சைச் சேர்ந்தவர் ஹென்றி. அவசரவேலையாக ஊருக்கு போகும்போதுதான் சாவிக்கொத்தை மனைவியிடம் கொடுத்தார். ஒரே ஒரு விஷயத்தைத்தான் கசியவிட்டார். அனைத்து ரூம்களையும் திறந்துகொள். கடைசி ரூமை மட்டும் திறக்காதே என்றார். அப்படியென்றால் நம் மனதில் என்ன தோன்றுமோ அதே குறுகுறுப்புதான் அவர் மனைவிக்கும். உடனே அவர் தலை தெருவில் மறைந்ததும், மனைவி அந்த அறையை திறந்து பார்த்தார். மயக்கமே வந்துவிடும் போல இருந்தது. அந்த  அறை கீழேயுள்ள அறைக்கும் செல்லும் வழி கூடத்தான். அந்த அறையில்தான் ஏழு சடலங்கள் வைக்கப்பட்டிருந்தன. அத்தனை பிணங்களிலும் கழுத்து மட்டும் அறுக்கப்பட்டிருந்தன. பார்சி இனத்தைச் சேர்ந்த நாற்காலி  விற்பவராக இருந்தார். ஓவியங்களையும் வரைந்து கொண்டிருந்தார். சின்ன வயதில் தன் சகோதரியோடு பாலுறவு வைத்திருந்தார். நான்கு குழந்தைகளையே இம்முறையில் பெற்றெடுத்தார். ஆனால் அவர்களை வளர்க்க காசு வேண்டுமே? பல்வேறு தில்லுமுல்லுகளை செய்யத்தொடங்க சிறை வாசம் தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை கிடைத்தது. சந்தோஷமாக வாழ வேண்டும்? என்ன செய்வது? வசதியான விதவைப் ப

பிணத்துடன் திருப்தியான தூக்கம் - டென்னிஸ் நீல்சன் விளையாட்டு

படம்
அசுரகுலம் - இன்டர்நேஷனல் டென்னிஸ் நீல்சன் 1945ஆம்ஆண்டு நவ.23 அன்று, ஸ்காட்லாந்தில் ஃபிராசர்பர்க்கில் பிறந்த சீரியல் கொலைகாரர். 1970 முதல் 80 வரை தீவிரமாக செயல்பட்டு நிறைய பேரை வைகுண்ட பிராப்தி அடைய வைத்தார். ஓரினச்சேர்க்கை மீது ஆர்வம் கொண்டவர். 1978ஆம் ஆண்டில் முதல் ஆளை போட்டுத்தள்ளி எலுமிச்சம்பழத்தை வண்டிச்சக்கரத்தில் நசுக்கி கணக்கைத் தொடங்கினார். அதன்பின்னர் போலீஸ் கணக்கெடுத்தபோது, பன்னிரண்டு பேர்களை விசா வழங்காமல் மேலே அனுப்பி இருந்தார். பெரும்பாலான சீரியல் கொலைகார ர்களின் வாழ்க்கையில் என்ன நடந்ததோ, அதுதான் இவருக்கும் நடந்தது. குடும்ப வாழ்க்கை பெரியளவு இவருக்கு உதவ வில்லை. அம்மா, தனியாக பிரிந்து வாழ்ந்தார். அப்போது அவருடன் தங்கி பாட்டியுடன் வாழ்ந்தார். பின் அம்மா மற்றொரு திருமணம் செய்தபோது, நீல்சன் தனிமரமானார். அவரின் தாத்தா இறந்தபோது நீல்சனின் மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது. அவரின் இறந்த உடல் அவரின் மனநிலையில் உறுத்தலாக இருந்தது. பின்னர், படிப்பு முடிந்த தும், ராணுவத்தில் சேர்ந்தார். அங்கு போரிடவெல்லாம் செல்லவில்லை. சமையல்கார ராக இருந்தார். பின்னர் அங்கிருந்து வெ

விடுதலை ஆனால் சிறுமிகளை மீண்டும் கொல்வேன் - பெட்ரோ லோபெஸ்

படம்
அசுரகுலம் பெட்ரோ லோபெஸ்  2 பாதிரியார் போலீஸ் ஆள் என்று தெரியாமல் குற்றங்களை ஒப்பித்துவிட்டார் லோபெஸ். இதனால் போலீஸ் இப்போது சொல், உன் குற்றங்களை என்றபோது விராட் கோலியின் ரன் ரெக்கார்டுகளை தந்தி எழுதுவது போல அத்தனையும் வந்து விழுந்தன. ஈகுவடாரில் நூறு, பெருவில் நூறு, கொலம்பியால் நூறுக்கும் அதிகம் என சிறுமிகளை பதம் பார்த்து வைகுண்டம் சேர்த்திருந்தார் லோபெஸ். எப்படி சிறுமிகளை பிடிக்கிறார்? தெருவில் நோட்டம் விடுவதற்காக செல்வது அவரின் வழக்கம். கேண்டி மேன் தருகிறேன், ஹால்திராம் சோன் பப்டி தருகிறேன் என்று சொல்லி சிறுமிகளை கூட்டி வந்து பேசிக்கொண்டிருப்பார். இனிமையாக பேசுவது எல்லாம் இரவு மட்டும்தான். சூரியன் உதயமாகும்போது, சிறுமியை வல்லுறவு செய்து, கழுத்தை நெரித்து கொல்வார் லோபெஸ். இதில் உயிருக்குப் போராடி ஆன்மா கண்களின் வழியாக பிரிவதைப் பார்ப்பது லோபெசுக்கு மிகவும் பிடிக்கும். அதோடு சிறுமிகளின் சடலங்களை போட்டு வைக்க, குகை ஒன்றைத் தோண்டியிருந்தார். வல்லுறவு செய்து சிறுமிகளை கொன்றபிறகு டைம்பாசுக்கு என்ன செய்வது? அதற்குத்தான் பிணங்கள் இருக்கிறதே? அழுகும் பிணங்களோடு பேசிக்கொண்ட

விடாது துரத்தும் காமவெறி - பெட்ரோ லோபெசின் அவல வாழ்க்கை!

படம்
கொலை அணிவகுப்பு அசுரகுலம் பெட்ரோ லோபெஸ் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர். ஏறத்தாழ 350க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற சாதனையாளர். 1948ஆம் ஆண்டு பிறந்தார். இவரது அம்மா, விலைமாதாக இருந்தார். மொத்தம் பதிமூன்று பிள்ளைகள். அதில் எட்டாவது ஆள், லோபெஸ். சிறுவயதில், தன் சகோதரியின் மார்பை பிடித்து விளையாடியதை அம்மா பார்த்து வெறியானார். மகனை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றினார். அதன்பிறகு அவனை தன் மகனாக அங்கு சேர்த்துக்கொள்ளவில்லை. அதன் விளைவை பின்னர் சமூகம் அனுபவித்தது. தெருவுக்கு வந்தவர் என்ன செய்வார்கள்? அதேதான் கைகளை ஏந்தி பிச்சை எடுக்கத் தொடங்கினார். அப்போது சிரித்தமுகமாக குழந்தைகளுக்கு உதவுவதாக வாலிபர் ஒருவர் வந்தார். லோபெசுக்கு தங்க இடமும் உணவும் கொடுத்தார். ஆனால் பதிலுக்கு லோபெஸை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்தார் கருணை வாலிபர். எரிச்சலான லோபெஸ், அந்த காப்பகத்திலிருந்து சிறுமிகள் மீது பாய்ந்து வேட்டையாடினார். ஓநாயைப் பார்த்து ஆடு மிரள்வது போல பீதியான சிறுமிகள் புகார் கொடுத்தால், இனிமேல் அப்படி நடந்துகொள்ளமாட்டேன். சாமி சத்தியமாக என்று சர்க்கரை பொங்கலாக பேசுவார் ல

கற்பழித்து, முதுகெலும்பில் கத்தியை பாய்ச்சி... - சுற்றுலா கொலைகாரர்

படம்
அசுரகுலம் இவான் ராபர்ட் மிலாட் சுற்றுலா வரும் பெண்களை கடுமையாக தாக்கி வல்லுறவு செய்துவிட்டு அதை மறைப்பது மிலாட்டின் ஸ்டைல். ஆனால் அவரின் கத்தியை அவரால் மறைக்க முடியவில்லை. பெண்களை கண்டதும் முதுகை துளைத்து இறங்கும் கத்தி முதுகெலும்பை நொறுக்கி இருப்பது அவரைக் காட்டிக்கொடுத்துவிட்டது. இச்சம்பவத்தில் பெண்கள் பிழைப்பது கடினம். பிழைத்தாலும் வாழ்நாள் முழுக்க சக்கர நாற்காலிதான். கொலை அடையாளங்களை ஆராய்ந்த ராட் மில்டன் என்ற தடய அறிவியலாளர், கொலைகாரர் சீரியல் கொலைகாரர் இல்லை என்று கூறினார். அதேபோல கொலைகாரரின் வயது முப்பது இருக்கலாம் என்றும் கூறினார்.   அதேபோல முதலில் சில சடலங்கள் கிடைத்ததோடு கொலைப்பயணம் தொடரவில்லை. பின்னர், ஓராண்டு கழித்து பிணங்கள் கிடைக்கத் தொடங்கின. 1993ஆம் ஆண்டு இருபிணங்களை போலீசார் பொறுக்கி எடுத்தனர். ஆய்வுகளை சோதித்ததில், இருவரும் 1989ஆம் ஆண்டே காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இருவரின் வயதும் பதினைந்துதான். நான்கு ஆண்டுகள் கழித்து ஆட்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்றால் அவர்கள் அந்த நேரத்தில் எங்கிருந்தார்கள் என்று போலீஸ் யோசித்தது. எனவே, கொலை நடந்த காடு,

சுற்றுலா பயணிகளை கொல்லும் சைக்கோ கொலைகாரர்! - இவான் மிலாட்

படம்
அசுரகுலம் இந்த தொடரில் நீங்கள் ஏற்கனவே அமெரிக்க ஆட்களை நிறைய பார்த்துவிட்டீர்கள். எனவே அந்த அத்தியாயம் இத்தோடு முடிந்தது. இனி உலகம் முழுக்க உள்ள சில முக்கியமான சைக்கோ சீரியல் கொலைகார ர்களை பார்ப்போம். இப்போது ஆஸி.யைச் சேர்ந்த இவான் மிலாட்டைப் பார்ப்போம். ஆஸ்திரேலியாவில் தொண்ணூறுகளில் இவர் பிரபலம். ஏழு பேர்களை கொன்று புதைத்தார். அதற்கான பெருமை இவானையே சேரும். இதற்கான காரணங்களைப் பார்ப்போம். வாங்க. இவான் மிலாட்டை மையமாக வைத்து பத்திரிகையாளரும் எழுத்தாளருமான விட்டேகர் சின்ஸ் ஆப் தி பிரதர் என்ற நூலை எழுதினார். பின்னாளில் இந்த நூல் திரைவடிவமானது. அதன் பெயர் வோல்ஃப் க்ரீக். 1944ஆம் ஆண்டு பிறந்தவர் இவான். இவரது தந்தை கடும் முன்கோபி. அதிலும் ரொமான்ஸ் மூடு ஏகத்திற்கும் ஏற, பதினான்கு பிள்ளைகளை பெற்றார் அவரது அம்மா. அதில் வறுமை காரணமாக 13 பிள்ளைகள் சிறுவயதிலேயே இறந்து போனார்கள். குரோஷிய நாட்டுக்கார குடும்பம் இது. அகதிகள் குடும்பம் என்றால் எடுப்பார் கைப்பிள்ளை போலத்தானே? ஆஸி.யின் சிட்னிக்கு வெளியே உள்ள மூர்பேங்கில்தான் வீடு. அங்கு கத்தோலிக்க பள்ளிக்கு இவான் மற்றும் அவர்களின்