இடுகைகள்

செய்திக்கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்விக்கான நிதியை வெட்டும் இந்திய அரசு!

படம்
pixabay இந்திய அரசு, கல்விக்கான பட்ஜெட் தொகை குறைந்து வருவதால், மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.  கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்விக்கான பட்ஜெட் தொகை பெருமளவில் வெட்டப்பட்டு வருகிறது. இதனால், பட்டியலின மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலுள்ள அரசு கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் தம் கல்விக்கட்டணங்களை அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக இந்திய மக்கள் தொகையில் 25 சதவீதம் உள்ள பட்டியலின மாணவர்கள் (SC,ST), கல்வி கற்கும் சதவீதம் 20 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஎஸ்இ வாரியம், பத்தாவது மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுக் கட்டணங்களை உயர்த்தியது. இதன்விளைவாக எஸ்.சி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.50லிருந்து ரூ.1,500 ஆக அதிகரித்தது. இதோடு ஐஐடி, எய்ம்ஸ், ஜேஎன்யு ஆகிய கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணங்களும் கணிசமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. 2014- 15 லிருந்து 2019 -2020 வரையிலான காலகட்டத்தில் கல்விக்கான அரசின் செலவு 4.1லிருந்து 3.4 ஆக சரிந்துள்ளது. இதன் விளைவாக, ம

கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் சம்பார்க் பௌண்டேஷன் அமைப்பு!

படம்
வினீத் நாயர், நிறுவனர் சம்பார்க் அமைப்பு   கிராமப்புற தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.  கல்வியில் இந்திய அரசு கூடுதலாக கவனம் செலுத்தினாலும் கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறன் குறைவாகவே உள்ளது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 60 சதவீதம் பேருக்கு இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்கத் தெரியவில்லை.  99க்கு பிறகுள்ள எண்களை சொல்லுவதில் தடுமாற்றம் உள்ளது. தொடக்க கல்வியில் வாசிப்பு, எழுத்தில் இத்தனை தடுமாற்றங்களை மாணவர்கள் கொண்டிருந்தால், அவர்கள் மேல்நிலைக்கல்வியில் எப்படி சாதிப்பார்கள்? இதில் மாணவர்களுக்குக் கற்றுத்தரும் பழமையான கற்றல்முறைகளின் பங்கும் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் 36 சதவீதம் மாணவர்கள் தொடக்க கல்வியோடு நின்றுவிடுகிறார்கள். இதைத் தடுக்க தொழில்நுட்பத்தோடு இணைந்த ஆசிரியப்பணி ( Technology-driven pedagogy) தேவைப்படுகிறது. ஆங்கிலவழியில் மாணவர்களுக்கு கற்பித்தாலும்,கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் அம்மொழியை எப்படி பயிற்சி செய்வார்கள்? மொழிப்பாடங்களை திறம்பட கற்றுத்தரும் திறன் ஆசிரியர்களுக்கு இல்லையென

அதிவேகமாக வளரும் இந்திய நகரங்கள்!

படம்
 அண்மையில் தி எகனாமிஸ்ட் எனும் இதழ் செய்த ஆய்வில் இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்திலுள்ள நகரங்கள் அதிவேக வளரும் நகரங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தின் மலப்புரம் உள்ளிட்ட மூன்று  நகரங்கள் அதிவேகமாக வளரும் நகரங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இங்கு குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. ஆனால் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில், நூறு சதவீத மக்கள் நகரவாசிகளாக மாறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தி எகனாமிஸ்ட் இதழ் ஆய்வில் மலப்புரம், கோழிக்கோடு, கொல்லம் ஆகிய மூன்று நகரங்களும் அதிவேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்து ஆச்சரியம் தருகின்றன. நகரங்களின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக ஆய்வாளர்கள் கூறுவது, பல்வேறு தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி, கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருவது என இரு காரணங்களைத்தான்.  கேரள மாநிலத்தில் 50 சதவீதம் பேர், விவசாயத்தை விட்டு வெளியேறி சேவைத்துறை சார்ந்த வேலைகளை செய்து வருகின்றனர். இந்த வேலைகளுக்காகவே கிராமத்தை விட்டு விலகி நகரத்திற்கு வருகின்றனர். இதன் காரணமாகவே வளர்ச்சி வேகம் மக்கள் இடம்பெயரும் நகரங்களில் அத

ஆன்டிபயாட்டிக் ஆபத்து!

படம்
unsplash ஆபத்தை ஏற்படுத்தும் ஆன்டிபயாடிக் மருந்துகள்!  ஆன்டிபயாடிக் மருந்துகளை இந்தியர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. 2050இல் உலகமெங்கும் இப்பாதிப்பிற்கு பலியாகும் மக்களின் எண்ணிக்கை பத்து லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நைஜீரியா, ஜாம்பியா போன்ற நாடுகளில் ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி வாங்கி உண்ணுகிறார்கள். இதன் விளைவாக , அவர்களின் உடலில் நோய்களுக்கு எதிராக ஆன்டிபயாடிக் மருந்துகளின் செயல்பாட்டுத் திறன் குன்றுகிறது. இதுபற்றி பற்றிய தகவல்களைக் கொண்ட மருந்து பாதுகாப்பு பட்டியல் (DRI) தயாரிக்கப்பட்டது. இதனை சிடிடிஇபி, வாஷிங்டன் மற்றும் ரோலின்ஸ் சுகாதாரப் பள்ளி, ஜார்ஜியாவிலுள்ள இமோரி பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர். இதில் தெரிய வந்துள்ள உண்மை, இந்தியா ஆன்டிபயாடிக் மருந்துகளைக்  கையாளுவதில் மிக மோசமான நிலையில் உள்ளது என்பதுதான். இதுபற்றி லான்சட் இதழ் 2017ஆம் ஆண்டு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், 2002 முதல் 2012 வரையில் ஆன்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது பற்றி குறிப்பிடப்பட

நெற்பயிரை பயிரிட நாற்றங்காலாக நட வேண்டுமா?

படம்
pixabay நெல்லின் சேமிப்பு வரம்பு நவீன நெல்ரகங்களை ஆலைகளில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே சேமித்து வைக்கின்றனர். காலாநமக், சிவப்பரிசி போன்ற உப்புச்சத்து கொண்ட அரிசி ரகங்களை அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சேமித்து வைக்க முடியும். சேமிக்கும் காலம் அதிகரிக்கும்போது நெல்லின் முளைப்புத்திறன் குறையும்.  நெல்லுக்கு நாற்றாங்கால் எதற்கு? நெற் தாவரத்தின் கனிதான் நெல். நெல் என்பது ஒருவித்திலை தாவரம். கடினமான ஓடுகளைக் கொண்ட தென்னை மரம் போன்றவற்றை மண்ணில் நடலாம். ஆனால் நெல்லுக்கு இந்த வாய்ப்பு இல்லை. இப்பயிருக்கு அதிக நீர்வளம், சரியான சீதோஷ்ணம் தேவை. அதிக மழைப்பொழிவு கொண்ட நிலமாக இருந்தால் நெல் அழுகிவிடும். அதேநேரம், நெல், வறட்சியான மண்ணில் இருந்தால் காய்ந்துவிடும். எனவே நெற்பயிருக்கு நாற்று விட்டு அதன் முளைப்புத் திறன் அதிகப்படுத்தி நடுகிறார்கள். ஒரைசா சட்டவைவா எனும் நெல்லின் காட்டு ரகத்திற்கு இவை எதுவும் தேவையில்லை. அவை தானாகவே நிலத்தில் விழுந்து முளைக்கும். பிற விதை ரகங்களைப் போல நிலத்தில் நெல்லைத் தூவினால் அவை முளைக்க அதிக சவால்களை எதிர்கொள்ளும் எனவே, நெல்லுக்கு நாற்றாங்கால்

மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நினைக்கும் இந்திய அரசு!

படம்
pixabay இந்திய அரசு, உயர்கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கையை 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்க முயற்சித்து வருகிறது. இந்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சகம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உயர் கல்வித்துறைக்கு ரூ.30,383 கோடிகளைச் செலவிட இருக்கிறது. இத்தொகை மூலம், நாட்டின் பின்தங்கிய பகுதிகளிலுள்ள மாணவர்கள் உயர்கல்வி பெற வாய்ப்பு உள்ளது. இந்திய மாநிலங்களில் சில மாவட்டங்கள், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியே உள்ளன. உயர்கல்வியை எட்டும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 26 சதவீதமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு ,மாணவர்களின் எண்ணிக்கையை 40 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது அரசு. தற்போது உயர்கல்வி படிப்புகளில் சேரும் மாணவர்களின் மொத்த அளவு 25.8 சதவீதம். அதில் ஆதி திராவிடர்கள் எண்ணிக்கை தோராயமாக 21.8%, பட்டியல் இனத்தவர் 15.9% க்கும் குறைவு. உயர்கல்வியில் இந்தியாவை பிரிக்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில், தென் ஆப்பிரிக்காவைவிட(20.5%) மேலே உள்ளது. ஆனால் ரஷ்யா(81.8%), பிரேசில்(50.5%), சீனா(25.8%) ஆகிய நாடுகளை விட கீழே உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பின்தங்கிய பகுதிகளில் மாதிரி

விவசாயிகளுக்கான தகவல்தளம் உருவாகிறது!

படம்
pixabay விவசாயிகளுக்கான தகவல்தளம்! இந்திய அரசு, விவசாயத்துறையை நவீனமாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து  வருகிறது. தற்போது தமிழகத்திலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் தகவல்களை, தமிழக  அரசு சேகரித்து வருகிறது. இத்தகவல்களை பெறும் மத்திய அரசு,  தேசிய  விவசாயிகள் தகவல்தளம் ஒன்றை உருவாக்கத் தொடங்கியுள்ளது. காஞ்சிபுரத்தில் நடைபெறும் ஆய்வு, இது பரிசோதனை முயற்சிதான். இந்த ஆய்வுகளை மத்திய அரசு தனது மானிய உதவிகள் சரியானபடி விவசாயிகளுக்கு சென்று சேர்கிறதா என்பதை அறியவே செய்கிறது.   இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த பரிசோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்திற்கு ஒரு மாவட்டம் என்று மத்திய அரசு தேர்ந்தெடுத்து தகவல்தளத்திற்கான தகவல்களை திரட்டி வருகிறது. பிஎம் கிசான் திட்டத்தின்படி, இந்திய விவசாயிகளுக்கு, ஆண்டிற்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த மானியம் விவசாயக் காப்பீடு,  மண்ணின் தரம், உரங்கள், மின்சாரம் ஆகியவற்றுக்காக வழங்கப்படுகிறது. ஆனால் இவை முறையானபடி விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை என அரசுக்கு புகார்கள் வந்தன. இதற்காக, விவசாயிகள் பற்றி

தாய்மொழியில் அறிவியலை ஊக்குவிக்கும் அமைப்புகள்!

படம்
pixabay தாய்மொழியில் அறிவியல் கற்கலாம்! இந்தியாவிலுள்ள பல்வேறு தன்னார்வலர்கள் ஆங்கிலம் தவிர்த்த உள்ளூர் மொழிகளில் அறிவியல் தகவல்களை ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.  ஆங்கில மொழி அறிந்தவர்கள் எளிமையாக உலகில் உள்ளவர்களோடு தொடர்புகொள்ள முடியும். ஆனால் அம்மொழியை அறியாதவர்களுக்கு அது கடினம். அறிவியல் விஷயங்களை, ஆங்கிலத்தில் கற்பதை விட தாய்மொழி வழியாக கற்பது இன்னும் எளிதாக இருக்குமே! இந்த எண்ணத்தில்தான் இந்தியாவில் உள்ள பல்வேறு தன்னார்வலர்கள் தனியாகவும், குழுவாகவும் இணைந்து அறிவியல் தகவல்களை உள்ளூர் மொழிகளில் பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலும் இத்தகவல்கள் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கானவை.  இம்முறையில் மன்றம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்கள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்றும் அறிவியல் வல்லுநர்கள், அறிவியல் தொடர்பான செய்திகளை எளிமையாக விளக்குகிறார்கள். இந்த நிகழ்ச்சி முழுக்க இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.  இதேபோல கன்னடம், வங்காளம் என பல்வேறு மொழி சார்ந்த தன்னார்வலர்கள் அறிவியல் செய்திகளை தொழில்நுட்பம் சார்ந்த பகிர்ந்து வருகின்றனர். அறிவியல் செய்திக

கல்வியை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள்! - செய்திக்கட்டுரை

படம்
கல்வியை சிறப்பாக்கும் தொழில்நுட்பங்கள்! இந்தியாவிலுள்ள பள்ளிகள், தொழில்நுட்ப நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் செய்து கல்வி தொடர்பான சேவைகளைப் பெற்று வருகின்றனர். கரும்பலகையில் சாக்பீஸ் வைத்து எழுதும் பழக்கம் ஒழிந்து,  அரசுப்பள்ளிகளில் கூட ஸ்மார்ட் வகுப்பறை சாதனங்கள் அறிமுகமாகி வருகின்றன. புரஜெக்டர் மூலம் வகுப்பு எடுக்கப்படுவது, பாடத்திட்டங்களை டிஜிட்டல் முறையில் படிக்க அளிப்பது என பல்வேறு கல்வி தொடர்பான புதிய முயற்சிகள் உருவாகி வருகின்றன. 1995 முதல் 2010 காலகட்டத்திற்குள் பிறந்தவர்களை ஜென் இசட் என்று அழைக்கின்றனர். இத்தலைமுறையினர், முழுக்க டிஜிட்டல் உலகில்தான் வாழ்கின்றனர். இவர்களின் கல்வியும் அதைச்சார்ந்தே அமைகிறது. இணைய வகுப்புகள், பாட்காஸ்ட்கள், வி.ஆர். கருவிகள் என இவர்களின் வாழ்க்கையில் கற்றல் முறைகள் மிகவும் நவீனமாகி உள்ளன. பள்ளிகளின் டெக் தேவைகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் தீர்த்து வைக்கின்றன. 2015 ஆம் ஆண்டு இந்தியாவில்  உள்ள வகுப்புகளில் 26 சதவீதம் மட்டுமே கணினிகள் இருந்தன. ஆனால் இன்று வகுப்பறை மட்டுமல்ல பள்ளிகளே  டிஜிட்டல் வடிவில் மாறியுள்ளன. 2013 ஆம் ஆண்டு மத்திய அரசின்

உலக மக்கள் அனைவருக்கும் ஒரே டயட் சாத்தியமா?

படம்
நன்றி: தினமலர் - பட்டம் உலக மக்கள் அனைவருக்கும் ஒரே டயட்!  பதினாறு நாடுகளைச் சேர்ந்த 30 ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில், உலக மக்கள் அனைவருக்குமான புதிய உணவு முறையைத் தயாரித்துள்ளனர். உலக மக்கள் தம் பொருளாதார வசதி, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு ஏற்ப பல்வேறு உணவுமுறைகளை கடைபிடித்து வருகின்றனர். இந்தியாவில் பல்வேறு கலாசாரம் கொண்ட மக்கள் நிலப்பரப்பு சார்ந்த உணவுமுறைகளைப் பின்பற்றுகின்றனர். இந்த உணவுகளிலும் ஒருவருக்கு தினசரி அவசியத்தேவையான சத்துகள் (தோராயமாக 2500 கலோரி) கிடைக்கிறதா என்றால் இல்லை என்று கூறவேண்டும். புதிய டயட் அறிமுகம் இதற்கு தீர்வாகத்தான் முப்பது ஆராய்ச்சியாளர்கள், மக்களுக்கு பொதுவான உணவுமுறையைப் பரிந்துரைத்துள்ளனர். இதுகுறித்த ஆய்வறிக்கை லான்செட் இதழில் வெளியாகி உள்ளது. கார்போ டயட் முதல் பேலியோ டயட் வரை எக்கச்சக்க டயட்கள் நடைமுறையில் உள்ளன. இப்போது எதற்கு புதிய டயட்? நாம் தற்போது சாப்பிடும் உணவு முறைகள் பூமிக்கும் நம் உடலுக்கும் ஏராளமான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதே இதற்கு காரணம். பசுமை இல்ல வாயுக்கள், செயற்கை உரங்கள்(நைட்ரஜன், பாஸ்பரஸ்), நிலவளம் சீர்குல

பிபிசி 100 பெண்தலைவர்களின் ஒருவர், விஜி பென்கூட்டு

படம்
நாற்காலிக்கான போராட்டம்! கேரளாவைச் சேர்ந்த தையற்கலைஞரான விஜி பென்கூட்டு, பிபிசி நிறுவனத்தின் 100 பெண் தலைவர்கள்  பட்டியலில் இடம்பிடித்துள்ளார். கேரளாவில் எளிய தையற்கலைஞராக பணிபுரிந்து வரும் விஜி பென்கூட்டு, போராடியது நாற்காலிக்காகத்தான்.  பதவிக்கான நாற்காலி அல்ல; பெண்களின் உரிமைக்கான நாற்காலி அது. கோழிக்கோட்டிலுள்ள  ஸ்வீட் மீட் தெருவில் தையற்கலைஞராக உள்ள விஜி, பெண் தொழிலாளர்கள் கடைகளில் அமர்வதற்கான  சட்ட உரிமையை கேரள அரசிடம் போராடிப் பெற்றுத் தந்துள்ளார். மற்றுமொரு மகிழ்ச்சிகரச் செய்தியாக, பிபிசி பெண்கள் பட்டியலிலும் இடம்பிடித்து நம்பிக்கை மனுஷியாக சாதித்துள்ளார் விஜி. ” 2009 ஆம் ஆண்டு பெண் தொழிலாளர்களுக்கான கழிவறைக்காக போராடி வசதிகளைப் பெற்றோம். தற்போது இங்கு பணியாற்றும் எண்ணிக்கையில் முன்பு பெண் தொழிலாளர்கள் பணிபுரிய வாய்ப்பு தரவில்லை. ” என்கிறார் விஜி. ஏஎம்டியூ(Asankhaditha Meghala Thozhilali Union - AMTU)  என்ற பெண் தொழிலாளர்களுக்கான சங்கத்தை தொடங்கி பெண்களின் உரிமைகளுக்காக மாநில அரசிடம் பேசத் தொடங்கினார் விஜி. 2014 ஆம் ஆண்டு மே 1 அன்று, இரிக்கல் சமரம் என்ற பெண்தொழில

குறைந்தபட்ச மாத வருமானம்(UBI) சாத்தியமா?

படம்
Government Yojana குறைந்தபட்ச மாத வருமானத்தை வழங்குவது சாத்தியமா? இந்திய அரசு, ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியை வழங்கவிருப்பதாக பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளது. அண்மையில் இந்திய அரசு தாக்கல் செய்துள்ள 2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் குறைந்தபட்ச  வருமானமாக வழங்க உள்ளது. ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் அரசு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளது. குறைந்தபட்ச மாத வருமானம் என்றால் என்ன? வறுமையைக் குறைப்பதற்கு இதில் என்ன வாய்ப்பு உள்ளது?  மக்களின் வேலை, சொத்து, வருமானம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அரசு, அவர்களுக்கு வழங்கும் குறைந்தபட்ச மாத வருமானம்(Universal basic income UBI) ஆகும். இதனை இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பின்பற்றிவருகின்றன. இந்தியாவில் இதனைப் பின்பற்ற முடியுமா? முடியாதா? என பொருளாதார வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர். குறைந்தபட்ச வருமானம் எதற்கு? அரசு மக்களுக்கு அளிக்கும் மானியமாக குறைந்தபட்ச மாத வருமானத்தை கருத முடியாது. அரசு வழங்கும் இத்தொகை, ஒருவரின் அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே தீர்க்கும். நாட்டில் அதிகரிக்கு