வயதுவந்தவர்களுக்கு மூளையின் அமைப்புகள் புதிதாக வளர்கின்றன
விட் ஈகிள்மேன் David eagleman நரம்பியல் அறிவியலாளர் , stanford university, california நமது மூளை இன்றும் கூட அதிசயமான பொருள் . அதில் கற்றல் எப்படி நடைபெறுகிறது என்பதை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் இன்றும் கண்டறிய முயன்று வருகிறார்கள் . இப்படி மூளையில் பல்வேறு உணர்வுநிலைகளில் எப்படி கற்றல் நடைபெறுகிறது என டேவிட் ஆராய்ச்சி செய்துவருகிறார் . மனிதர்கள் தாம் பெறும் அனுபவங்களைப் பொறுத்து மூளையின் மாறுதல்களைப் பற்றியதுதானே உங்களது ஆராய்ச்சி ? மூளையின் அமைப்பு மாறுவதைப் பற்றி நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன் . இந்த துறையில்தான் நீங்கள் எனது பெயரைப் பார்க்க முடியும் . இப்படித்தான் என்னை நீங்கள் அடுத்தமுறை நினைவுபடுத்திக்கொள்ளமுடியும் . மூளையை தொடக்கத்தில் பிளாஸ்டிக் பொருள் போல என்றுதான் நினைத்தார்கள் . ஆனால் நான் அதை லைவ் வயர்ட் என்ற அமைப்பாக பார்க்கிறேன் . அதாவது அனுபவங்களுக்கு ஏற்றபடி நிகழ்காலத்தில் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது . இதன் வலிமை மாறிக்கொண்டே இருக்கும் . அதற்கேற்றாற்போல பிளக்குகளை பிடுங்கி வேறிடம் பொருத்திக