இடுகைகள்

மழை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விண்கல் மோதும் கிராம மக்களின் நிலை! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  18.1.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? இன்று அதிகாலை முதல் மழை பெய்துகொண்டே இருக்கிறது. சூரியனைப் பார்க்கவே முடியவில்லை. டீ குடிக்க வெளியே போனால் மழை விடவில்லை. அதற்கும் போட்டி போட்டு ர.ரக்கள் அதிமுக ஆபீசுக்கு வந்துவிட்டார்கள். சாலை முழுக்க ஆம்புலன்ஸ் நீளத்திற்கு வண்டிகளைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர். போக்குவரத்து நெரிசலுக்கு வேறு என்ன காரணங்கள் வேண்டும்?  ஸ்கைலேப் என்ற தெலுங்குப்படம் பார்த்தேன். ஆந்திராவில் உள்ள ஏழைமக்கள் வாழும் ஊர். அந்த ஊரின்மீது விண்கல் வந்து மோதப்போவதாக செய்தி. அது மக்களை எப்படி பாதிக்கிறது என்பதே படக்கதை. இதனூடே ஜமீன்தார் மகள் கௌரி எப்படி உண்மையான பத்திரிகையாளராகிறாள், மருத்துவ உரிமம் தடைபட்ட ஆனந்த் எப்படி தனது முதல் கிளினிக்கை கிராமத்தில் தொடங்கி வெல்கிறான் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள்.  இன்று ஆபீசில் ஒரு கட்டுரை மட்டுமே எழுதினேன். மழை பெய்தால் மனம் வேலையில் குவிய மாட்டேன்கிறது. படிக்கவேண்டிய அறிவியல் இதழ்கள் நிறைய உள்ளன. அவற்றையும் இனி படிக்க வேண்டும்.  துப்பறியும் சாம்பு - 2 200 பக்கங்களைத் தாண்டிவிட்டேன். தேவனுடைய

கழிவறை, குளியறைகளில் எமர்ஜென்சி! கடிதங்கள் - கதிரவன்

படம்
  30.11.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலம். மழை பெய்தாலும் பத்திரிகைகளுக்கு விடுமுறை கிடையாது. வேலை செய்தே ஆகவேண்டும். நாமும் ஆபீஸ் போயே ஆகவேண்டும். ஆனால் அந்த நேரத்தில் வேலை செய்யும் மனநிலை வரவே மாட்டேன்கிறது. அதுதான் இருப்பதிலேயே கடினமானது.  இனிய உதயம் பத்திரிகை படித்தேன். இதில் சுரா மூன்று சிறுகதைகளை தமிழில் எழுதியிருக்கிறார். அதாவது மொழிபெயர்த்து தமிழில் செய்திருக்கிறார். பூட்டப்பட்ட வீடுகள் உறூப் எழுதிய கதை. சுகுமாரன் என்பவரைக் காதலிக்கும் உடல் ஊனமான பெண்ணின் கதை. அம்முக்குட்டி என்ற பெண்ணை அவளது பெயரைச் சொல்லி அழைக்கும் ஒரே ஆள் சுகுமாரன் மட்டுமே. பிறர் அவளை கேலி செய்து ஊனத்தை பட்டப்பெயராக வைத்து அழைக்கிறார்கள்.  இதனால் அம்முக்குட்டிக்கு கத்தரி வெயிலில் புங்கமர நிழல் கிடைத்தது போலாகிறது. அவள் தனது காதலைச் சொல்லப் போகும்போது சுகுமாரனுக்கு பெண் பார்த்துவிடுகிறார்கள். அம்முக்குட்டியின் நிலை என்னவானது என்பதே கதை.  நன்றி!  அன்பரசு 2.11.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? வெகு நாட்களுக்குப் பிறகு எனக்கு சளி பிடித்துள்ளது. சள

நடப்பதற்கும் கூட ஜிஎஸ்டி வரி விதிப்பார்கள்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  26.11.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? இன்று எங்கள் மயிலாப்பூர் பகுதியில் நல்ல மழை. மழை இடைவேளை விட்டு விட்டு பெய்தது. இதனால் சாலைகள் குட்டைகளாகவே மாறிவிட்டன. சாப்பிட அறைக்கு வரும்போது, பேன்ட் முழங்கால் அளவுக்கு நனைந்துவிட்டது. அடைமழை பெய்யும் நேரத்தில் கூட பெண் ஒருவர் குடை பிடித்துக்கொண்டு என்னிடம் வந்து ஏவிஎம் ராஜேஸ்வரி மண்டபம் செல்ல வழி கேட்டார். ஆச்சரியம்... வழி சொல்லிவிட்டுத்தான் நகர்ந்தேன்.  அடாத மழையிலும் என்னுடைய தேவை  உலகிற்கு இருக்கிறது என நினைத்துக்கொண்டேன். எங்கள் நாளிதழ் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்போதெல்லாம் ஆபீசுக்கு வருவதே சிலசமயம் எதற்கு என மறந்துபோய்க் கொண்டிருக்கிறது.  எழுத்தாளர் பாலபாரதி டெங்குவால் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கிறார். அலுவலகத்தில் அதற்குள் இன்னொருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுமுறை எடுத்துவிட்டார். மழைக்கால காய்ச்சல் என நினைக்கிறேன். ஷோபாடே எழுதிய நூலை தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருக்கிறேன். மத்திய அரசு , அரிசியில் இரும்புச்சத்து சேர்ப்பது பற்றிய கட்டுரை ஒன்றை பிரன்ட்லைனில் பார்த்தேன். படிக்கவேண்டும். நன்றி!  அன்பரசு

இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே கணிப்பதுதான் எனது வேலை - ரோகினி சம்பூர்ணம் சாமிநாதன்

படம்
  ரோகினி சம்பூர்ணம் சாமிநாதன் இயற்கை பேரிடர் வல்லுநர், யுனிசெஃப் தற்போது தாங்கள் என்ன பணிகளைச் செய்துகொண்டிருக்கிறீர்கள்? இயற்கை பேரிடர்களை முன்னமே கணித்து தடுப்பதற்கான பணிகளை செய்துகொண்டிருக்கிறேன். இயற்கை பேரிடர் ,நடந்த முதல் 72 மணிநேரம் முக்கியமானது. அந்த நேரத்தில் நாம் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்.  இதற்கென சில மாதிரிகள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் நாங்கள் மண்டல அளவிலான அலுவலகங்களை தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறுவோம். இப்போது தகவல்களுக்கான ஆன்லைன் டேஷ்போர்டு ஒன்றை உருவாக்கியுள்ளோம்.  நீங்கள் ஜியோமேட்டிக்ஸ் துறையைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? எனக்கு புவியியல் துறையில் ஆர்வம் உண்டு. எனக்கு 14 வயதாகும்போது இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியைப் பார்த்தேன். இந்த இயற்கை பேரிடர்தான் இத்துறையில் நான் இன்று பணியாற்றுவதற்கு முக்கியக் காரணம். தமிழ்நாட்டில் அரசு அதிகாரியான எனது தந்தை அங்குள்ள மீனவர்களை அடிக்கடி சந்திப்பார். நானும் அப்படிப்பட்ட நேரத்தில் அப்பாவுடன் கூடவே செல்வேன்.  சுனாமி பாதிப்பு ஏற்பட்ட பிறகு அக்கடற்புரத்திற்கு நான் சென்றேன். இயற்கை பேரிடரால் மக்கள் எப

நியூரோமார்பிக் கேமரா மூலம் கிடைக்கும் பயன்!

படம்
  தெரியுமா? சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், 2021ஆம் ஆண்டு இறுதியில் நியூரோமார்பிக் கேமரா (Neuromorphic Camera) பொருத்தப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க விமானப்படை அகாடமியும், வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகம் என இரண்டு அமைப்புகள் இணைந்து நிறுவியுள்ளன. இக்கேமரா திட்டத்திற்கு ஃபால்கன் நியூரோ (Western’s Falcon Neuro project ) என்று பெயர். இந்த கேமரா தட்பவெப்பநிலை சார்ந்த மாற்றங்களை படம்பிடிக்க கூடியது. மின்னல், இடி, மேகங்களுக்கு இடையிலான மின்னோட்டம் ஆகியவற்றை பதிவு செய்து தகவல்களை பூமியில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அனுப்புகிறது.  தென்னாப்பிரிக்காவில் எம்போனெங் (Mponeng) என்ற தங்கச்சுரங்கம் உள்ளது. இது பூமியிலிருந்து 4 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகில், 3,900 மீட்டர் ஆழத்தில் டாவ்டானா (Tautona), சவுகா (Savuka) ஆகிய சுரங்கங்கள் தோண்டப்பட்டுள்ளன.  பூமியின் கீழே தோண்டப்படும் சுரங்கத்தில் வெப்பம்  70 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும். இதைக் குறைக்க ஐஸ்கட்டிகள் கரைத்த திரவத்தை சுரங்கத்தில் பீய்ச்சி அடித்து வெப்பம் தணிக்கிறார்கள். பலவீனமான சுரங்கப்பகுதியில் ஷாட

மழையிலிருந்து காத்துக்கொள்ளும் தாவரங்களின் யுக்தி!

படம்
  மழையிலிருந்து காத்துக்கொள்ளும் தாவரங்கள்! வெயில் போல மழையும் அனைத்து தாவரங்களுக்கும் தேவையானது. ஆனால், சிலவகை தாவரங்கள் மழை மூலமாக நோய் ஏற்படும் என்பதை உணர்ந்து தன்னைக் காத்துக்கொள்ள சில முன்னேற்பாடுகளை செய்துகொள்கின்றன. அதில் முடிக்கற்றை போன்ற மெல்லிய இழைகளைக் கொண்ட தாவரங்கள் முன்னணியில் உள்ளன. இவை. இழைபோன்ற ட்ரைகோம்ஸ் எனும் அமைப்பைப் பயன்படுத்தி மழையை உணர்கின்றன. இதன்மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடுகின்றன என ஜப்பானின் நகோயா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  தாவரங்களுக்கும் மனிதர்களுக்கு உள்ளது போன்ற நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு உள்ளது. மழை மூலமாக பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை ஆகிய நுண்ணுயிரிகள் எளிதாக தாவரத்திற்குள் நுழைந்து அதை தாக்க முடியும் என்பதுதான்.  அரபிடோப்சிஸ் தலியானா (Arabidopsis thaliana) எனும் தாவரத்தை வைத்து, பேராசிரியர் யாசுவோமி டாடா, உதவி பேராசிரியர் மிகா நோமோடோ ஆகியோர் ஆய்வு செய்தனர். இவர்கள் தாவரத்தின் ஆர்என்ஏ வரிசையை சோதித்து, மழைக்கு எதிராக தூண்டப்படும் மரபணுக்களை அடையாளம் காண முயன்றனர்.  நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களாக காம்டா (

சூழல் பற்றிய முக்கியமான ஆங்கில வார்த்தைகள்!

படம்
  தெரியுமா? Net Zero கார்பன் உமிழ்வை முற்றிலும் ஜீரோவாக்கும் திட்டத்தைப் பற்றி கூறும் வார்த்தை. கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் குறிப்பிட்ட ஆண்டை இலக்காக வைத்துள்ளன. நடைமுறையில், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம் என நிறுவனங்களும் அரசுகளும் கூறுகின்றன.  Sustainability எதிர்கால தலைமுறையினர் தங்களது தேவைகளை சமரசம் இல்லாமல் பெறுவது என ஐ.நா அமைப்பு, இந்த வார்த்தைக்கு விளக்கம் அளிக்கிறது. சூழலுக்கு இசைவான  முறையில் நாம் வாழும் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவேண்டியது அவசியம்.  Mitigation and adaptation பசுமை இல்ல வாயுக்களை குறைக்கும் செயல்கள் என்பது இதற்கான பொருள்.  நிலக்கரியிலிருந்து காற்று, சூரிய ஆற்றல் புதுப்பிக்கும் வழிக்கு மாறுவதை உதாரணமாகக் கூறலாம்.  அடாப்டேஷன் என்ற வார்த்தை, வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகளை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதைக் கூறுகிறது. சூழலுக்கு ஏற்ப சாலைகளை, வீடுகளை அமைப்பதை இதற்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.   Nature based solutions மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கான தீர்வுகளை இயற்கையிலிருந்து பெறலாம்.  கார்பனை உறிஞ்சு

துருவப்பகுதியை உருக்கும் காட்டுத்தீ

படம்
  அலாஸ்காவின் காட்டுத்தீயால் ஆர்க்டிக்கில் உருகும் பனி! உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. இதன் மற்றொரு விளைவாக,  ஆர்க்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. அதிக வெப்பநிலை, ஈரப்பதம் குறைந்த உலர்ந்த மண், அதிக மின்னல், இடி ஆகியவை ஏற்படுவது பெருமளவு காட்டுத்தீயை ஊக்குவிக்கின்றன. உலகின் ஒருபுறம் நடைபெறும் காட்டுத்தீ, துருவப் பகுதியில் பனிப்பாறைகளை உருக வைத்துக்கொண்டிருக்கிறது.   இதுபற்றிய சூழல் ஆய்வு ஒன்று ஒன் எர்த் (One earth) என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கொலம்பியா பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோய்சின் காமன், "எதிர்காலத்தில் நாடுகளின் வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் பாதிப்புகள் உள்ளேயும் எதிரொலிக்கும்" என்றார்.  ஆய்விதழ் கட்டுரையில், அலாஸ்கா பகுதியில், வெப்பமயமாதலின் பாதிப்பால் மீத்தேன், கார்பன் அளவு சற்றே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது ஆண்டு வானிலை ஆய்வில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் ஆகும். அதிகளவு பசுமை இல்ல வாயுக்கள் உயராத காரணத்தால் சூழலியலாளர்கள் நிம்மதி பெரு

பள்ளிக்கு செய்யும் நன்றிக்கடன்! - கடிதங்கள் - வினோத் பாலுச்சாமி

படம்
கடிதங்கள்  வினோத் பாலுச்சாமி அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? சென்னையில் மழை வருவது போலவே சூழல் உள்ளது. நாள் தங்கியுள்ள அறை முழுவதும் மழை ஈரத்தால் நனைந்துவிட்டது. இதனால், அறையின் சுவர்களில் பூஞ்சைகள் கரும்பச்சை நிற பூக்களாய் பூக்கத் தொடங்கிவிட்டது. அருகர்களின் பாதை - ஜெயமோகன் இன்றுதான் படித்து முடித்தேன். சமணர்களின் வாழ்க்கை , வரலாறு, உணவு, தர்மச்சாலை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். ஆரியர், பாஜக, தேசியவாதம் தவிர்த்த பிற விஷயங்கள் நன்றாக உள்ளன.  எங்கள் இதழின் தயாரிப்பு இன்னும் தொடங்கவில்லை. பல்வேறு சூழல்களால் வேலை தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. வேலையை செய்வதற்குள் எனக்கு இன்னொரு வயது கூடிவிடுமோ என்று பயமாக உள்ளது. நான் தங்களுக்கு அனுப்பி வைத்த ஜென் கதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நினைக்கிறேன். நான் பரிசாக முதல்முறையாக உங்களுக்குத்தான்  நூலை அனுப்பி வைத்திருக்கிறேன். இப்படி அனுப்புவது பற்றி முதலில் நம்பிக்கை வரவேயில்லை.  குளங்களை தூர்வாரிய செல்ல பெருமாள் பற்றிய செய்தியை ஆனந்த விகடனில் படித்தேன். நல்லவேளை, அவர் தனது பணிக்கு ஊக்கம் தந்தது குக்கூ அமைப்புத

என்னைத் தான் மாற்றிக்கொள்ள வேண்டும்! -- வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  12.12.2021 அன்புள்ள வினோத் அண்ணனுக்கு வணக்கம்.  இன்று வானம் மேகமூட்டமாக இருக்கிறது. மனமும் அப்படித்தான் இருக்கிறது. திருவண்ணாமலை வர நினைத்தேன். சூழல் இசைவாக இல்லை. சிவனின் அனுகிரகம் கிடைத்தால்தான் அங்கு வர முடியும் என நினைக்கிறேன். புஷ்பக விமானம் என்று தெலுங்குப் படம் பார்த்தேன்.  தாமோதர் என்பவர் இயக்கி ஓடிடியில் வெளியான படம். திருமணமாகி சில நாட்களில் மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுவிடுகிறாள். மனைவி போனதை வெளியில் சொல்ல முடியாமல் அரசு பள்ளி ஆசிரியரான கணவர் என்னென்ன விஷயங்களைச் செய்கிறார் என்பதே கதை.  படத்தின் கதை, அதிலுள்ள விஷயம் என்று பார்த்தால் சீரியசான விஷயம்தான். ஆனால் இயக்குநர் நகைச்சுவையை படம் நெடுக சேர்த்திருப்பதால் படம் நன்றாக வந்திருக்கிறது. ஆனந்த் தேவரகொண்டா சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு இணையாக குறும்பட நடிகையாக வந்து போலி மனைவியாக நடித்து கலக்கியிருக்கிறார் ஷான்வி மேகனா.  இன்று காலையில் வானம் மேகமூட்டமாக இருந்தது. இப்போது மழை பெய்துகொண்டு இருக்கிறது. மோகன் ராஜ் அண்ணா போன் செய்தார். மழை பெய்கிறது அடுத்தவாரம் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.  அன்பரசு  12.12.2021

பேரிடரின்போது வெளியே வரும் நமது பொறுப்புணர்வு - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  வினோத் பாலுச்சாமி vinodh balusamy மழை பெய்தால் வெளியே வரும் நம் பொறுப்புணர்வு!  புகைப்படம் - வினோத் பாலுச்சாமி  26.11.2021 அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு வணக்கம்.  நலமா?  இந்த கடிதம் எழுதும்போது மயிலாப்பூர் மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை ஆகிய இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் எளிதாக வடியமாட்டேன் என்கிறது. இத்தனைக்கும் ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு கி.மீ. சென்றால் கடல் வந்துவிடும். நிலைமையைப் புரிந்துகொண்ட பணியாளர்கள் பாதாளச்சாக்கடை அடைப்புகளை குச்சி வைத்து எடுத்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள். வேலையை முடித்தவர்கள் வேறு இடங்களுக்கு போகும்போது நீரை காலால் கையால் வீசியபடியும், செல்ஃபி எடுத்து வரலாற்றில் தனக்கான இடத்தை பதிவு செய்தபடியும் சென்றனர்.  ராதாகிருஷ்ணன் சாலை வழியாகவே நான் ராயப்பேட்டை அஜந்தா அருகிலுள்ள நாளிதழ் அலுவலகத்திற்கு சென்று வருகிறேன். இதை விட தினசரி சட்டமன்றத்திற்கு விடியல் முதல்வர் செல்லும் சாலையும் இதுதான். இங்கேயே இப்படிப்பட்ட நிலைமை. நான் நடந்துசெல்லும்போது தேங்கிய நீரில் தனது வீட்டிலிருந்து பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து எறிந்தார். துப்புறவு பணியாளர்

பலவந்தப்படுத்தினால் பாசம் வருமா? - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  வினோத் பாலுச்சாமி/Vinodh Balusamy லினக்ஸிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது!  29.11.2021 அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமா? நேற்று லேப்டாப் திடீரென பிரச்னை செய்தது. இதுவரை எழுதித் தொகுத்து வைத்த நூல்கள் எதையும் திருத்த முடியவில்லை. லிப்ரே ஆபீஸ் ரைட்டர் கோப்பில், கர்சர் தானாகவே எழுதிய வரிகளை அழித்துக்கொண்டே சென்றது. இதை தடுத்து நிறுத்த அடிக்கடி எஸ்கேப் பட்டனை அழுத்திக்கொண்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் முடியல சாமி என்று ஆகிவிட்டது. லினக்ஸிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என நினைத்து, கணினியை அணைத்துவிட்டேன்.  ஜோம்பிலேண்ட் - டபுள்டேப் என்ற ஆங்கிலப் படம் பார்த்தேன். வணிகரீதியான படம். எப்போதும் போல ஜோம்பிகளின் மண்டையை சிதறடித்துக் கொல்லும் படம்தான். உங்களுக்கும் கோபத்தில் யாரையாவது அடித்துக் கொல்லும் உக்கிரம் இருந்தால், படத்தைப் பார்க்கலாம். தமிழ் டப்தான். உறுதியாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.  ஷோபாடே எழுதிய கட்டுரைகளில் பணம், அதன் மதிப்பு, கடன் வாங்குவது பற்றி படித்தேன். அதற்கு மேல் அதில் மனம் செல்லவில்லை. படம் பார்க்கத் தொடங்கி விட்டேன். இன்று வானில் சூரியனே வரவில்லை. இணையம் தான் எனத

புனைவு ஏற்படுத்திய வலி! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
எ மிராக்கிள் - துருக்கி தொடர் தமிழில்   புனைவு ஏற்படுத்திய வலி!  25.11.2021 அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம் நலமாக இருக்கிறீர்களா? அலுவலகம் விட்டு தங்கியிருக்கும் அறைக்கு வரும்போது மழை பிடித்துக்கொண்டது. இப்போது வரை பெய்துகொண்டே இருக்கிறது. அதன் பின்னணி இசையுடன்தான் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.  இன்றுதான் எ மிராக்கிள் என்ற துருக்கி தொடரின் இறுதி அத்தியாயத்தைப் பார்த்தேன். இந்த தொடர், தென்கொரியாவில் வெளியான குட் டாக்டர் என்ற டிவி தொடரைத் தழுவியது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவக்கல்வி கற்ற இளைஞர், அறுவை சிகிச்சை வல்லுநராக மாற முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை.  ஆட்டிசம் பாதிப்பு, இவர்களை எப்படி கையாள்வது, பெற்றோர் எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும், இவர்களின் அறிவுத்திறன், பிறருடன் உரையாடும்போது இவர்களை புரிந்துகொள்வது எப்படி என நிறைய விஷயங்களை காட்சிகளுக்கு இடையில் புரிந்துகொள்ளும்படி அமைத்திருக்கிறார்கள். உங்களுக்கு இதுபோன்ற டிவி தொடர்களில் விருப்பமிருக்காது. முழுக்க வெளிவயமானவர். உள்வயமான எனக்கு கொரியத் தொடரை ரீமேக் செய்த துருக்கி தொடர் பிடித்திருந்தது. டாக்டர் அலி வெஃபா என்

இரண்டு மணிநேர வானிலையை கூகுள் கணிக்கிறது! - சாத்தியமா?

படம்
  தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் என்றால் வானிலை ஆய்வு மையத்தில் மைக்குகள் சகிதம் நிருபர்கள் எப்போதும் உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை சமூக வலைத்தளம் மூலம் நிறைய மாறியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தில் செயற்கைக் கோள் படங்களை வைத்துக்கொண்டு தனிப்பட்ட முறையில் சிலர் சொல்லும் கணிப்புகள் மக்களுக்கு நிறைய உதவுகிறது. வானிலை ஆய்வு மையம், அதிகாரப்பூர்வமாக மிகவும் பின்தங்கியுள்ளது. அவர்கள் அடுத்து முப்பது ஆண்டுகளுக்குள் பேஸ்புக், ட்விட்டரில் கணக்கு தொடங்கி மக்களோடு பல்வேறு வானிலை தகவல்களை பகிர்வார்கள் என நம்பலாம்.  இப்படி அரசு அமைப்புகள் அதிகாரப்பூர்வமாக சரியான தகவல்களை அறிவிக்கவேண்டும் என அடம்பிடிப்பதால், நாம் தொழில்நுட்பத்தையே நம்ப வேண்டியதுள்ளது. கூகுள் இந்த வகையில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தி வானிலையைக் கணிக்கலாம் என்று கூறியுள்ளது.  செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை நிறைய தகவல்களைக் கொடுத்தால் போதுமானது. அதை வைத்து காலநிலையை ஓரளவுக்கு துல்லியமாக கடைபிடிக்கலாம்.  லண்டனில் உள்ள கூகுளின் டீப் மைண்ட் குழுவினர், இதற்கான வழிமுறையை உருவாக்கியுள்ளனர். இவர்கள், அடுத்த இரண்டு மணிநேரத்தில் மழை பெ

பறவைகளுக்கு ஒகே ஆனால் நமக்கு விஷம்! - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பறவையும் பெர்ரியும் பூச்சிகளுக்கு மழை ஈரம் பிடிக்காதா? மானாவாரி பூமிக்கார ர்களுக்கு மழை பெய்வது பிடித்திருந்தாலும் அதில் நனைந்துகொண்டே இருப்பார்களா என்ன? அதேதான் பூச்சிகளும் கூட மழை பெய்யும் போது இலைகளின் அடியில் அல்லது புல்லுக்கு அடியில் சென்றுவிடும். சூரியன் எப்போது வெளியே வருகிறதோ அப்போதுதான் வெளியே வரும். அனைத்து பூச்சிகளுக்கும் இதமான வெப்பம் அவசியம். எனவேதான் சூரிய வெப்பம் இருக்கும்போது தனது இரை தேடுதலை வைத்துக்கொள்கின்றன. இதில் நிலப்பரப்பு சார்ந்த வேறுபாடுகள் உண்டு.  அதிக காலம் தூங்கும் விலங்கு எது? ஆஸ்திரேலியாவை பூர்விகமாக கொண்ட கோலா கரடிதான். யூகலிப்டஸ் மரத்தில் ஏறினால் அதை மொட்டையடித்துவிட்டுத்தான் கீழே இறங்கும். இதில் சத்துகள் குறைவு. நச்சுத்தன்மை அதிகம். இதனை செரிக்கவே கோலாவுக்கு பதினெட்டு மணிநேரம் ஆகிறது. ஆனாலும் அடம்பிடித்து அதையே சாப்பிட்டுவிட்டு தூங்கி மீண்டும் சாப்பிட்டு... என வாழ்கிறது.  பெர்ரிகள் நச்சுத்தன்மை கொண்டவை என்றாலும கூட பறவைகள் அதனை எப்படி சாப்பிடுகின்றன? குறிப்பிட்ட உயிரினம் சாப்பிடுகிறது என்றால் அந்த தாவரம், பழம் நமக்கும் செட் ஆகும் என்று கூற முடியாது. ப

இருபது ஆண்டுகளில் பதினெட்டு பஞ்சம்! - விபச்சாரத்தில் தள்ளப்படும் பெண்கள்!

படம்
  அனந்தப்பூர், ஆந்திரப் பிரதேசம் தெலுங்கில் அனந்தப்பூர் என்றால் நிறைய விஷயங்களால் ஆசிர்வதிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் நிஜமோ படுமோசமாக இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் வறட்சி, பஞ்சத்தால் பதினெட்டு முறை பாதிக்கப்பட்டுள்ளது இந்த ஊர். காரணம் மழைப்பொழிவு குறைந்ததுதான். இதனால் அங்குள்ள மக்கள் நிறையப் பேர் இடம்பெயர்ந்து வருகிறார்கள்.  தென்னிந்தியாவின் வறண்ட மழைமறைவுப் பகுதியாக ராயலசீமாவின் அருகில் உள்ளது அனந்தப்பூர். இதன் வரலாற்றைத் தேடிப் பார்த்தால் 1882ஆம் ஆண்டு நெடும் பஞ்சங்களும் நீர் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது நடைபெற்றிருக்கும் பஞ்சங்கள் அதை விட மோசமாக இருக்கிறது.  இப்படி பஞ்சங்கள் வந்துகொண்டிருந்தால் எப்படி இங்கு விவசாயம் நடைபெற முடியும்.? கேள்வி நியாயமானதுதான். அதனால்தான் 30 லட்சமாக இருந்த விவசாய பரப்பு இப்போது 15 லட்சமாக குறைந்துவிட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு ஏற்படும் பஞ்சத்தின் நடைமுறை மாறுகிறது.  1989 முதல் 2018 வரையில் பெய்த மழை அளவை கணக்கிட்ட வானிலை ஆராய்ச்சி நிலையம், இங்கு பஞ்சம் அல்லது வெள்ளம் வரும் என கூறியுள்ளது. அனந்தப்பூரில் நடைபெ

மழை பெய்யும்போது இணையமும், செல்போனும் செயல்படாது! - இதற்கான அறிவியல் காரணம் என்ன?

படம்
    மழைக்காலத்தில் ஏற்படும் இயற்கையான தடங்கல்கள் ! மழைக்காலத்தில் ஸ்மார்ட்போன்கள் , இணையப் பயன்பாடு என இரண்டுமே பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றன 1860 ஆம் ஆண்டு , ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் ஜேம்ஸ் மேக்ஸ்வெல் , புதியவகை மின்காந்த அலையை கண்டுபிடித்தார் . அதற்குப்பிறகு இயற்பியலாளர் ஹென்ட்ரிச் ஹெர்ட்ஸ் , மேக்ஸ்வெல்லின் கோட்பாட்டை சோதித்துப் பார்த்து , அதனை உறுதியும் செய்தார் . 1895 ஆம் ஆண்டு கோல்கட்டாவில் சர் ஜெகதீஷ் சந்திரபோஸ் , மின்காந்த அலை மூலம் 23 மீட்டர் தூரத்தில் வயர்களின்றி செய்தியை அனுப்பமுடியும் என்பதை செய்து காட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தார் . இன்று நாம் செய்தியை இணையத்தின் வழியாக எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும் . இதற்கு காரணமாக இருப்பது எலக்ட்ரான்கள் . அவற்றில் உருவாகும் மின்காந்தவிசை .   இரு எலக்ட்ரான்களுக்கு இடையில் மின்காந்த விசை உருவாகும்போது நாம் செய்தி அனுப்ப முடிகிறது . எளிய உதாரணமாக நாம் ஒளியை குறிப்பிட்ட கோணத்தில் அலைநீளத்தில் கண்களால் பார்ப்பதால் , அதனை எளிதாக உணர்ந்துவிடுகிறோ்ம் . தொலைத்தொடர்பு வசதி முன்னேறாத

புயல்களுக்குள் புகுந்து ஆராயும் ஆராய்ச்சியாளர்கள்! - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
          பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ புயல்களை பின்தொடர்ந்து எப்படி தகவல்களை சேகரிக்கிறார்கள்? இதற்கென பயிற்றுவிக்கப்பட்ட வல்லுநர்கள் படை உண்டு. அந்த விமானத்தில் என்னென்ன சமாச்சாரங்கள் இருக்கும் என்று பார்த்துவிடுவோம். புரோப் பாராசூட் இந்த பாராசூட் மெல்ல கீழே விழும்படி அமைக்கப்பட்டிருக்கும். இதுவே புயலின் பல்வேறு தகவல்களை சேகரிக்கிறது. ஆறு கி.மீ. தூரத்தை கடக்க ஏழு நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று கடலில் செலுத்தப்படுவது, மற்றவை காற்றின் அழுத்தம் ஈரப்பதம் வேகம், திசை ஆகியவற்றை கணக்கிட உதவுவது. ஜிபிஎஸ் ஆன்டெனா இருக்கும் இதன் மூலம் ஜிபிஎஸ் செயற்கைக்கோள்களிலிருந்து தகவல்களை சேகரிக்கிறார்கள். புயலின் வேகம். திசை ஆகியவை இதில் தெரிய வருகிறது. மைக்ரோபுரோச்சர் இந்த சிறு கருவி மூலம் சென்சார்களில் உள்ள தகவல்களை பெற்று அதனை டிஜிட்டல் வடிவிலாக்க முடியும். ரேடியோ டிரான்ஸ்மிட்டர் 0.5 நொடிகளுக்கு ஒருமுறை தட்பவெப்பநிலை, ஈரப்பதம் அழுத்தம். புயலின் தகவல்கள் ஆகியவற்றை விமானத்தின் கணினிகளுக்கு அனுப்பி வைக்கும். புயலின் நடுப்பகுதிக்கு விமானம் சென்றபிறகுதான் பாராசூட்டை கீ

புயல்களின் வரலாறு! - அமெரிக்காவை பாதித்த புயல்களை அறிவோமா?

படம்
            புயல்களின் வரலாறு! ஒக்கிசோபீ 1928ஆம் ஆண்டு 6-21 செப்டம்பர் பலி- 4 ஆயிரம் புளோரிடாவில் இந்த புயல் ஏற்படுத்திய நிலச்சரிவு பாதிப்பு அதிகம். இதனால் பால்ம் பீச் அருகே குடியிருப்புகளில் வாழ்ந்த மனிதர்கள் இறந்துபோனார்கள். கரீபியன் பகுதியில் இதன் காரணமாக 1500 பேர் பலியான செய்தியை முன்னமே கிடைத்தும் மக்களின் இறப்பைத் தடுக்க முடியவில்லை. விவசாயம் செய்யப்பட்டு வந்த ஏரி ஒக்கிசோபீதான் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி. 225 கி.மீ வேகத்தில் அடித்த புயல் காற்று அனைத்தையும் சர்வநாசம் செய்துவிட்டது. பல தொழிலாளர்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டனர். லேபர் டே புயல் 1935ஆம் ஆண்டு 29 ஆக. 10 செப்டம்பர் பலி 485 இந்த புயலை சரியாக அதிகாரிகள் கணிக்கவில்லை. எனவே 485பேர் பலியாகும்படி சூழல் உருவாகிவிட்டது. புளோரிடாவை 2ஆம் தேதி புயல் தாக்கியது. சீர்குலைந்த சாலைகளை சரிசெய்ய முதல் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீர ர்கள் அனுப்பினர். இவர்களில் 250பேர் வேலை செய்த இடத்திலேயே பலியானார்கள். காரணம் ஒருங்கிணைப்பாளர் புயலின் பலத்தை முன்னமே அறிந்திருக்கவில்லை.  கடற்பகுதியில் மனிதர்கள் உருவாக்கிய எந்த கட்டுமானமும் உடையாமல்,

மேகம் திரண்டால் பூமி கூலிங் ஆகுமா? - மிஸ்டர் ரோனி

படம்
மிஸ்டர் ரோனி பருவநிலை மாற்றத்தால் மழை அதிகமாக பூமிக்கு கிடைக்கிறது. அதேசமயம் இப்படி திரளும் மேகங்களால் பூமியின் வெப்பம் குறையுமா? இப்படியெல்லாம் பாசிட்டிவ்வாக யோசிப்பதால் நீங்கள் விக்ரமன் பட ரசிகராக இருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக மேகங்களை நீங்கள் கூறுவதுபோல முடிவு செய்ய முடியாது. இதனால் அவை பூமியின் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை குறைக்கும் என்று எந்த நம்பிக்கையையும் கொள்ள முடியாது. பருவநிலை மாற்றத்தால் பெய்யும் மழை என்பது மேக உடைப்பு போல ஒரு மணிநேரத்தில் அந்த சீசனுக்கான ஒட்டுமொத்த மழையும் பெய்யும். இதனை நீங்கள் எப்படி நேர்மறையாக பார்க்க முடியும்? ஆய்வாளர்களும் மேகங்களை வைத்து எந்த முடிவுக்கும் வரமுடியாது. காரணம் நிலையின்றி பயணிக்கும் அதன் தன்மைதான். நன்றி - பிபிசி