இடுகைகள்

சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் சமூகப் பகிரல் தத்துவம்!

படம்
முதலாளித்துவத்தில் அடிப்படையானது லாபம். இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் ஆப்பிள், கூகுள் தங்கள் அலுவலகங்களை திறப்பது குறைந்த கூலியில் வேலைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்ற கருத்தில்தான். தொழிலாளர் சங்கம் அமைத்து அடிப்படையான உரிமைகளை கேட்க முடிந்தால், இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஆசியா பக்கமே தலைவைத்து படுக்காது. ஒரு தொழிலில் முதலீடு செய்து கிடைத்த லாபத்தை மறுமுதலீடு செய்யவேண்டும். தொடர்ச்சியாக லாபம் வரவேண்டும். லாபம் வரவில்லையா? லாபம் கிடைக்கும் இடத்திற்கு முதலீட்டை மாற்றிக்கொள்ளவேண்டியதுதான். இப்படித்தான் வெளிநாட்டு முதலீடுகள் செயல்படுகின்றன. லாபத்தின் மூலமான பொருளாதார வளர்ச்சியை பல்வேறு நாடுகள் அடைய முயன்று வருகின்றன. இதன் மறுபுறம் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. மக்களின் வாழ்க்கை அவலமான வறுமைக்குள் தள்ளப்படுகிறது. பணக்காரர்கள், தொழிலதிபர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். சாமானிய மக்கள் அரசு வழங்கும் இலவச அரிசியை வாங்கியாவது உயிர்பிழைக்க முடியுமா என அல்லாடுவார்கள். முதலாளித்துவத்திற்கு கருணை தெரியாது. இரக்கம் கிடையாது. மனிதநேயம் பார்க்காது. மக்களை தேவையற்ற ஏராளமான பொருட்களை வாங்க வைத்து க

ஈகோ சோசலிசம் - முதலாளித்துவத்ததிற்கு மாற்றா?

படம்
ஜனநாயகப் பாதை வழியாகவே சர்வாதிகாரம் உள்ளே நுழைகிறது. இதை தவறு என்று சொல்ல முடியாது. அந்தந்த காலகட்ட மக்கள் சர்வாதிகாரியை அவர்களாகவே வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்கள். பின்னாளில் செய்த தவறின் விளைவை அனுபவிக்கிறார்கள். அரசும் அதன் செயல்பாட்டில் பல்வேறு மாற்றங்களைப் பெற்று வந்துள்ளது. இந்தியா போன்ற நாட்டில் என்ஜிஓ அரசு என்பது சற்று புதிது. ஆனால் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற ஒன்றை காங்கிரஸ் காலத்தில் வலதுசாரி ஆளுமைகள் நடத்தினர். அந்த போராட்டத்தின் வழியாக ஆம் ஆத்மி கட்சி தோன்றியது. இந்த கட்சியின் செயல்பாடு, தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒத்தது. மக்களுக்கு நன்மை கிடைத்தாலும் கூட அக்கட்சி தலைவர், தவறான குற்றச்சாட்டில் சிறைபடும்போதுகூட மக்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை, சாலையில் நின்று தாங்கள் தேர்ந்தெடுத்த முதல்வரை விடுவியுங்கள் என்று கோஷமிடமில்லை. அமைதியாக அரசு காரியங்கள் நடைபெறுகின்றன. இப்படிக்கூட அரசு செயல்பட முடியும் என்ற ஜனநாயக அவலத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு நாட்டில் எதற்கு போராட்டம் நடைபெறுகிறது? மக்களின், விவசாயிகளின், தொழில்துறையினரின், சிறுபான்மையினரின் கோரிக

சீரியல்கொலைகாரரா, கொலைகாரரின் மகனா? -பிணவறை மருத்துவரை சுற்றிச்சுழலும் பால்யகால மர்மங்கள் !

படம்
  பிணவறை மருத்துவரை சுற்றிச்சுழலும் பால்யகால மர்மங்கள்  தி லிஸ்டனர் சீன டிவி தொடர்  34 எபிசோடுகள்  சீன தொடர்களில் பிணவறை மருத்துவரைப் பற்றிய தொடர்கள் நிறைய உள்ளன. அவற்றில் அனைத்துமே தரமாக இருப்பதில்லை. கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து அதை அடிப்படையாக கொண்டு அறிக்கை தயாரிப்பதும், பிணத்தை கூராய்வு செய்து கொலை மர்மத்தை உள்ளபடியே கூறுவதும்தான் அவருடைய வேலை. சீன தொடர்களில் அவரே குற்றம், வன்முறை குழுவின் தலைவர் போல செயல்படுவார். விசாரணை செய்வார். குற்றவாளிகளை அடித்து துவைப்பார். இன்னும் என்னென்ன நாயகத்துவங்களை செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்வார். இந்த தொடர் இதே வகையில்தான் வருகிறது.  பிணவறை மருத்துவரான மிங் சுவான், மர்மமான ஆசாமி. அவர் எப்போத ஆய்வகத்தில் இருப்பார். வெளியில் போவார் என அவருடைய உதவியாளருக்கே தெரியாது. ஆனால் வழக்கு சம்பந்தமான விஷயங்களை துல்லியமாக தேடி ஆராய்ந்து வழக்கை வேறு கோணத்தில் அதை விசாரிப்பவர்களுக்கு காட்டி குற்றவாளியின் திசையை ஆருடம் சொல்லிவிடுவார். காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்கு வந்து ஆறு மணிக்கு வீடு செல்லும் ஆள் கிடையாது. மணமாகாதவர். அவருக்கு வளர்ப்பு தந்தை பே

பெண்களுக்கு உடற்பயிற்சி அவசியத்தேவை ஏன்?

படம்
 திருமணமான பெண்கள், ஆண்கள் என இரு பாலினத்தவருமே உடற்பயிற்சி செய்வது குறைந்துபோய்விட்டது. அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதன் காரணமாக நாற்பது வயதிலேயே அறுபது,எழுபது வயது ஆனவர்கள் போல தளர்ந்து தசைகள் தொங்கிப்போய் கண்களுக்கு கீழே கறைபடிந்துவிடுகிறது. குறிப்பாக பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால், எலும்பு பலவீனமாகிறது. இதை சரிசெய்ய எடைப் பயிற்சிகளை செய்யவேண்டும். அதாவது, ஜிம்மில் எடைகளை தூக்கிப் பயிற்சி செய்யவேண்டும்.  எடைகளை தூக்கி உடற்பயிற்சி செய்தால் உடல் பெரிதாக மாறிவிடும். அழகு குறைந்துவிடும் என நினைப்பது மூடநம்பிக்கை. உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கியவர், தினசரி செய்யும் வேலையை ஊக்கமாக செய்யமுடியும். காயம்படாது. எலும்பு முறிவு, சுளுக்கு, தசைப்பிடிப்பு ஆகியவை தவிர்க்கமுடியும்.  ஏரோபிக், டாய்ச்சி, எடைப்பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் உண்டு. ஒருவரின் உடலைப் பொறுத்து எது சௌகரியமோ அதை தேர்ந்தெடுத்து செய்யலாம். அனைத்து உடற்பயிற்சியிலும் பயன்கள் உண்டு. சிலருக்கு ஜிம்மில் சென்று பயிற்சிகளை செய்வதற்கு கூச்சம் இருந்தால், வீட்டில் செய்வதற்கான முயற்சிகளை செய்யலாம். கருவிகளை  வாங்கிப்போட்டு

அன்றைய காலம் தொட்டு இன்றைய வரையில்.... உடற்பயிற்சி

படம்
  காலம்தோறும் உடற்பயிற்சி 1500 கி.மு மெக்சிகோவில் பெருகிய ஆல்மெக் மக்களின் குடியேற்றம் புதிய விளையாட்டை உருவாக்கியது. பெரிய ரப்பர் வளையத்திற்குள் வீரர்கள் தங்கள் இடுப்பு, கால்களை பயன்படுத்தி உள்ளே புகுந்து வெளியே வரவேண்டும்.  1400 கி.மு பரோகா கல்லறையில் மன்னர்கள் குத்துச்சண்டை, வில் போட்டி, ஓடுதல் ஆகியவற்றில் மக்களை ஊக்குவித்திருப்பது தெரிய வந்துள்ளது.  776 கி.மு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறத் தொடங்கியது. ஒருவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது நாடு பிற நாடுகள் மீது போர்தொடுக்க உதவும் என நம்பினர்.  1316 இரு சுவர்களுக்கு நடுவில் கைப்பந்து விளையாடும் பழக்கம் பிரெஞ்சு நாட்டில் இருந்தது. இந்த விளையாட்டிற்கு ஜீ டி பாமே என்று பெயர்.  14-15ஆம் நூற்றாண்டு மத்தியகால ஐரோப்பாவில் கும்பலாக கால்பந்து விளையாடுவது வழக்கமாக இருந்தது. எந்த வரைமுறையும் இல்லாமல் கால்பந்தை உதைத்து விளையாடும் இந்த விளையாட்டு போட்டிகள் பலவும் வன்முறையில் முடிந்தன. எனவே. இந்த விளையாட்டு தடைசெய்யப்பட்டது.  1553 ஸ்பெயின் நாட்டு மருத்துவர் கிறிஸ்டோபல் மென்டெஸ் என்பவர், முதல் உடற்பயிற்சி நூலை எழுதி வெளியிட்டார். நடைபயிற்சி செய்வத

அடிமையின் காதல் - ஓரியண்டல் ஒடிசி - சீன தொடர்

படம்
  ஓரியண்டல் ஒடிசி சீன டிராமா 60 எபிசோடுகள் டேங்க் பேரரசு காலம். மன்னர் நோயுற்றுவிட ராணிதான் நிர்வாகம் செய்கிறாள். அரசில் நிதி நிர்வாகம் செய்யும் அமைச்சர் வீட்டுப்பெண், அசட்டு துணிச்சல் கொண்டவள். நகரில் நடைபெறும் பல்வேறு மர்ம குற்றங்களை துப்புதுலக்குகிறாள். அதன் வழியாக அடிமை ஒருவனை விலைக்கு வாங்குகிறாள். அவன்தான் மூலே. அளப்பரிய வலிமை கொண்டவனுக்கு தொடக்கத்தில் பேச்சு வருவதில்லை. அனைத்தும் சைகைதான். கூடுதலாக, நகர தலைமைக் காவலன் ஒருவன் உதவிக்கு வருகிறான். இவர்கள் மூவரும் சேர்ந்து குற்றங்களின் பின்னணியை அடையாளம் காண்கிறார்கள். குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார்கள்.  அடிமை மூலேவுக்கு, தனது உரிமையாளரான யே யுன்னான் என்ற நிதிஅமைச்சரின் மகள் மீது காதல். ஆனால் யுன்னானுக்கு நகர தலைமைக்காவலர் மீது அதீத பிரேமம். இவரை அந்நாட்டு இளவரசி மிங்காய் காதலிக்கிறாள். இவளை, அடிமை வீரன் ஜென் ஜிங் காதலிக்கிறான். இவன், விபசார விடுதி ஒன்றைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை கடத்துகிறான். ஜென் ஜிங், தன்னை காதலிப்பது தெரிந்தாலும் இளவரசிக்கு அவன் மீது காதல் கிடையாது. அவனை வைத்து சில விஷயங்களை அடையலாம் என முயற்சி செய்கிறாள்.

உடல்பசி, வயிற்றுப்பசி என இரண்டாலும் தவிக்கும் ராமோஜி ராவின் சுயசரிதை! - ராமோஜியம் - இரா முருகன்

படம்
  ராமோஜியம்  இரா முருகன் கிழக்கு பதிப்பகம் பிரிட்டிஷாரின் ஆட்சியில் நடக்கும் கதை. அக்காலகட்டத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கிளர்க்காக வேலை செய்யும் ராவ்ஜி, அவரது மனைவி ரத்னாபாய் ஆகியோரின் வாழ்க்கை கதைதான் நாவல்.  கொரிய டிவி தொடர்களில் பன்றிக்கறி, மாட்டிறைச்சி, நூடுல்ஸ், முட்டை எப்படி நீங்காமல் இடம்பெறுகிறதோ அதுபோல இந்த நாவலெங்கும் உணவு வகைகள் ஏராளம். தாராளம். உணவு கதையில் ஒரு பாத்திரம் போலவே வருகிறது. ராவ்ஜிக்கு அரசு வேலை என்பதால் அவர் வேறு எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. எங்கு சென்றாலும் அவரது உறவினர்கள் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் அத்தனை ருசியாக, வகை வகையாக சமைத்து போடுகிறார்கள். கும்பகோணத்தில் டீ ஆபீசராக சென்று வேலை பார்த்து, அங்கு விடுமுறைக்கு வந்திருந்த இளம்பெண் ரத்னாபாயை காதல் வலையில் வீழ்த்துகிறார். அவருமே வீழ்கிறார். பிறகுதான் அரசு தேர்வு எழுதி கிளர்க்காக சென்னையில் உத்தியோகமாகிறது. அதை வைத்தே மராட்டிய மாமனார், மச்சினன் ஆகியோரை சரிகட்டி ரத்னாவை கல்யாணம் செய்கிறார்.  1975 நாவலைப் போலவே இதிலும் நாயகன் ராவ்ஜி, அரசு விவகாரங்களை விமர்சிக்க விரும்பாத குடும்பஸ்தான். அவருக்க

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் போதும் - ராபர்ட் புல்லார்ட், ஃபேஷன் டிசைனர் கேப்ரியல்லா, ஜான் கெர்ரி

படம்
  ராபர்ட் புல்லார்ட்  robert d bullard நான் வியட்நாம் கால கடற்படையில் பணிபுரிந்தவன். ஒருவகையில் பூமர் என்று கூறிக்கொள்வதில் பெருமைதான். 1979ஆம் ஆண்டு தொடங்கி சுற்றுச்சூழலுக்காக பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறேன். அன்று செய்த வேலைகள் இன்று தலைப்புச்செய்தியாக நாளிதழ்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. நடப்புகாலத்தில் புதிய தலைமுறையினரான மில்லியனியல், ஜென் இசட், எக்ஸ், ஒய் ஆகியோர் நிறையபேர் வந்துவிட்டனர்.  எனவே, நாம் எதிர்கால தலைமுறையினருக்காக காலநிலை பாதிப்புக்கு தீர்வு தேடும் இனக்குழுவை உருவாக்கும் தேவையிருக்கிறது. மக்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி வீடு, போக்குவரத்து, உணவு, நீர், ஆரோக்கியம், தூய ஆற்றல் வளங்கள் கிடைக்கவேண்டும்.அதற்கான அரசு கொள்கைகளை வகுக்க நாம் ஒன்றாக சேர்ந்து வலியுறுத்த வேண்டும். காற்று மாசுபாடில்லாத சூழ்நிலை அனைவரின் உரிமை. வேதி தொழிற்சாலைகள், குப்பைகள் கொட்டப்பட்ட நிலங்கள் இல்லாத இடத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடவேண்டும் என்ற கனவு எனக்குள்ளது.  இன்றைய உலக நாடுகளில் சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில் ஏராளமான இளைஞர்கள் தெருக்களில் களம் கண்டு போராடி வருகிறார்கள். போர

பசுமைக்கட்சியின் எழுச்சி

படம்
ஐரோப்பாவில் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜெர்மனியில் வலுவான அரசியல்கட்சியாக பசுமைக்கட்சி உள்ளது. அறுபது எழுபதுகளில் மாணவர்கள் போராட்டம், அணுசக்தி போராட்டம் ஆகியவற்றின் அடையாளமாகவே பசுமைக்கட்சியின் எழுச்சி அமைந்தது. வலதுசாரி கட்சிகளின் தாராளவாச, அணுக்க முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக, பாப்புலிச கொள்கைகளுக்கு எதிராக பசுமைக்கட்சி நிற்கிறது. இன்றுள்ள நிலையில் யாருமே சூழலைப் பற்றிய கவலையின்றி வாழ முடியாது. அரசியல்கட்சிகளும் அதை தங்களது தேர்தல் அறிக்கையில் புறக்கணிக்க முடியாது. அகிம்சை, சூழல் கவனம், பசுமைக் கொள்கைகள், தூய ஆற்றல் ஆகியவற்றை பசுமைக்கட்சி அடிப்படையாக கொண்டுள்ளது. பசுமைக் கட்சி கூட்டமைப்பில் மொத்தம் எண்பது பசுமைக் கட்சிகள் இணைந்ததுள்ளன. இவற்றின் கொள்கைகள் குறிப்பிட்ட வரையறையில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. நிலப்பரப்பு சார்ந்து பல்வேறு கொள்கைகள், லட்சியங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவற்றின் அடிப்படையான கொள்கைகளைப் பார்ப்போம். சூழலைப் பாதிக்காதவாறு வாழ்க்கை அடிப்படையான ஜனநாயகத்தன்மை சமூக நீதி அகிம்சை ஆதரவு என்றால் எதிர்ப்பும் இருக்கத்தானே வேண்டும்? ஆயுத தொ

15 நொடி குரல் இருந்தால் போதும்- பேச்சு, பாட்டு எதையும் உருவாக்க முடியும்!

படம்
  ஏஐ மூலம் எந்த குரலிலும் எந்த மொழியிலும் பேசலாம்! ஓப்பன் ஏஐ நிறுவனம், அடுத்த சர்ச்சைக்குரிய தயாரிப்பை உருவாக்கியுள்ளது. இதன்படி, ஏதேனும் ஒருவரின் குரலைக் கொடுத்தால், அதை வைத்து தேசியகீதம் பாடச்சொன்னால் அல்லது குத்துப்பாட்டு பாடச்சொன்னால் கூட அதைச் செய்யமுடியும். மார்ச் 29 வெளியாகியுள்ள இந்த குரல் எஞ்சினில் ஒருவர் பதினைந்து நொடிக்கு குறையாத ஆடியோ கிளிப் ஒன்றை பதிவேற்றினால் போதும். அதை வைத்து, பல்வேறு மொழிகளில் அந்த குரலை பேச வைத்து பாடவைத்து மஜா செய்ய முடியும். தற்போதைக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குரல் எஞ்சின் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.  குழந்தைகளுக்கு குரல் வழியாக பாடங்களை எளிதாக நடத்தலாம். மாற்றுத்திறனாளிகளுக்கும் இது பிரயோஜனமாக இருக்கும். எழுத்து வழியாக ஒலி என்ற நோக்கத்தில் குரல் எஞ்சின் செயல்படுகிறது. மாணவர்களுக்கு பல்வேறு குரல் சாம்பிள்களை வைத்து குரல் பதிவுகளை உருவாக்கி பாடங்களை நடத்த முடியும். படிக்கத் தெரிந்தவர், தெரியாதவர் என அனைவருக்கும் பயன்படும்படியான படைப்பு இது. இதன் தயாரிப்பில் சாட்ஜிபிடி 4 பயன்பாடும் உள்ளது.        2022ஆம் ஆண்டு தொடங்கி, குரல் எஞ்சின் ஆராய்ச்சி