சிந்தனை, காலத்தைக் கடந்தால் காதல் கிடைக்கும் - ஜே கிருஷ்ணமூர்த்தி
ஜே கிருஷ்ணமூர்த்தி தென் தேர் ஈஸ் லவ் ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம் ஒருவரின் மனம், தேடுதலில் வேட்கை கொண்ட மனத்தை பெற்றுத்தராது. காதலைப் பொறுத்தவரை மனம் அதை தேடவேண்டும் என்பதல்ல. தேடாமலேயே அது கிடைத்துவிடும். நாமறியாமல் காதல் கிடைத்துவிடும்.காதல் கிடைப்பது மனிதர்கள் முயற்சி, செய்து பெறும் அனுபவம் போல இருக்காது. காதலை காலத்தைப் பொறுத்து தேடினால் பெற முடியாது. காதலை ஒன்றாக, பலவாக, தனிப்பட்டதாக, பொதுவானதாக பார்க்கலாம். இதை பூவைப் போல கூறலாம். பூக்களின் மணத்தை, அதை கடந்து செல்பவர்கள் பார்க்கலாம். மணத்தை நுகரலாம். பூக்களை தொல்லையாக நினைப்பவர்களும், அதை மலர்ச்சியாக பார்ப்பவர்களும் உண்டு. பூக்களுக்கு அதைக் காணபவர்கள் அருகில் இருந்தாலும் அல்லது வெகுதூரத்தில் இருந்தாலும் ஒன்றுதான். பூக்களிடம் நறுமணம் உள்ளது. அதை அனைவருக்கும் பகிர்ந்துகொண்டே இருக்கிறது. காதல் என்பது புதியது, உயிரோடு இருப்பது, உற்சாகம் அளிக்கக்கூடியது. இதில், நேற்று, நாளை என்பது கிடையாது. சிந்தனை என்பதைக் கடந்தது. வெகுளித்தனமற்ற உலகில் வாழும் அப்பாவித்தனமான மனது காதலை தெளிவாக அறியும். தியாகம், வழிபாடு, உறவு, உடலுறவு