இடுகைகள்

விண்வெளி பொறியியல் துறையில் வேலை கிடைப்பது எப்படி?

படம்
  விண்வெளி பொறியியல் துறை அறிவியல்துறையில் இன்று பெரும் வரவேற்பு பெற்று வருவது, விண்வெளி பொறியியல் துறை. விமானம் மற்றும் விண்கலத்தின் வடிவமைப்பு, மேம்பாடு ஆகியவற்றை உருவாக்கும் துறை இதுவே. இன்று உணவுகளை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் டிரோன்கள் முதல் ராக்கெட்டுகள் வரையிலான தயாரிப்புகளை மேற்கொள்வது இத்துறையினர்தான்.  இதற்கு அடிப்படையானது, இயற்பியலில் ஆற்றல், விசை, இயக்கம் குறித்த அறிவுதான். கூடவே கணிதத்தின் உதவியும் தேவை. இதில் ஏற்படும் சிறிய தவறும் கூட விமானம் மற்றும் விண்கலத்தின் இயக்கத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். விண்வெளி பொறியியல்துறையினர், செயற்கைக்கோள், விமானம், விண்கலங்கள் ஆகியற்றைத் தயாரிக்கின்றனர். அதோடு அதன் வடிவமைப்பு, சோதனை, பராமரிப்பு என அனைத்து விஷயங்களையும் மேற்கொள்வார்கள்.  கல்வியை பிரமாதமாக கற்றுவிட்டீர்கள். ஆனால், இதற்கான வேலை எங்கு கிடைக்கும்? போயிங், நாசா, ஸ்பேஸ் எக்ஸ், லோக்கீது மார்ட்டின், ஜேபிஎல், ஜெனரல் எலக்ட்ரிக் என ஏராளமான நிறுவனங்கள் விண்வெளி பொறியியலாளர்களை வரவேற்க காத்துக் கிடக்கின்றன. இதில் வேலைவாய்ப்புகள் என்பது நிறைய மாறுபடும். சில பொறியாளர்களுக்கு

இயற்பியலை மாற்றிய ஃபெய்மன் வரைபடம்!

படம்
  இயற்பியலை மாற்றிய ஃபெய்மன் வரைபடம்! இயற்பியலில் அணுத்துகள்களைக் கணக்கிடுவதில் 1940 ஆம் ஆண்டு ஒரு புரட்சிகர மாற்றம் நடந்தது.  ஆம் ஆண்டில்தான் இயற்பியலாளர் ரிச்சர்ட் ஃபெய்மன், அணுத்துகள்களைக் கணக்கிடுவதற்கான வழியைக் கண்டுபிடித்தார்.  இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற ரிச்சர்ட் ஃபெய்மனை நாம் நினைத்துப் பார்ப்பதற்கான காரணமும் அதுதான். அமெரிக்காவில் மன்ஹாட்டன் ப்ராஜெக்டில்  அணுகுண்டை மேம்படுத்துவதற்கான குழுவில் ஃபெய்மன் பணியாற்றி வந்தார்.  இக்குழுத்தலைவராக இயங்கிய ஹான்ஸ் பெதே(Hans bethe) வுக்கு 1967 ஆம் ஆண்டு  இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது ஹான்ஸ் சொன்ன வாக்கியம் மறக்க முடியாதது. உலகில் இருவகை அறிவாளிகள் உண்டு. ஒருவர் கடினமான உழைத்து பெரிய காரியங்களைச் சாதிப்பார்கள். சிலர் மாந்த்ரீகர்கள் போல செயல்பட்டு எப்படி சாதித்தார்கள் என வியக்க வைப்பார்கள். இரண்டாவது வகையைச் சேர்ந்தவர், ஃபெய்மன் என்று கூறினார்.  மிகச்சிறந்த அறிவாளி, கோமாளித்தனமும் புத்திசாலித்தனமும் நிறைந்தவர் என அறிவியல் வட்டாரங்களும், நண்பர்களும் புகழும் ஆளுமை. 1962 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு இயற்பியல் பற்றி

நம்ப முடியாத ஹைட்ரஜன் சக்தி! - இயற்பியல் பிட்ஸ்

படம்
  இயற்பியல்  பிட்ஸ் இயற்பியலில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று கண்டுபிடிப்புகள் நிகழ நிகழ அதுகுறித்த ஆச்சரியங்களும் வெளிப்படுகின்றன. அதில் சிலவற்றைப் பார்ப்போம்.  நேர்ப்பாதையில் ஒளிக்கதிர்கள்! டார்ச் லைட்டிலிருந்து வரும் ஒளி நேராக பாய்ந்து பொருள் மீது படிய, நமக்கு அப்பொருள் கண்ணுக்கு தெரிகிறது. இதன் பொருள், ஒளிக்கற்றைகள் நேராகத்தான் பயணிக்கும் என்பதல்ல. அவை பல்வேறு வடிவங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். 2010 ஆம் ஆண்டு கணினி முறையில் உருவான ஹாலோகிராம், பல்வேறு வடிவங்களில் வளைந்து நெளிந்து உருவங்களைக் காட்டியது.  நம்ப முடியாத ஹைட்ரஜன் சக்தி! ஹைட்ரஜன் மூலம் வாகனங்களை இயக்கமுடியுமா என ஆராய்ச்சி செய்து வருகிறது அறிவியல் உலகம். இதற்கு முக்கியக் காரணம், சூரியன் ஹைட்ரஜன் ஹீலியத்தை எரித்துதள்ளும் வேகம்தான். ஹைட்ரஜனை 620 மெட்ரிக் டன்களும், ஹீலியத்தை 616 மெட்ரிக் டன்களும் நொடிக்கு எரித்துத்தான் சூரியன் பளீரென ஒளிருகிறது. மனிதர்களின் கதிர்வீச்சு! நாம் பயன்படுத்தும் பொருட்கள் மட்டுமல்ல நமது உடலே கதிர்வீச்சுகளை வெளியிடும் தன்மை கொண்டதுதான். மனிதர்களின் உடல்  ஆயிரம் வாட் அளவுக்கு வெப்பத்தை வெளியி

விண்வெளி மர்மங்களை ஆராயும் ஆய்வுக்கூடங்கள்!

படம்
  ஆராய்ச்சிக்கூடங்கள்! விண்வெளிக்குச் சென்று பால்வெளியின் மர்மங்களை அறியும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. அதேவேளையில் இங்கிருந்தபடியே நியூட்ரினோ, மின்காந்த கதிர்வீச்சுகளைக் கண்டறியும் சோதனைகளும் குறைவின்றி நடக்கின்றன. அவை பற்றி பார்ப்போம்.  நியூட்ரினோ ஆய்வகம் (Protodune) நியூட்ரினோ துகள்களைக் கண்டுபிடிக்கும் இந்த ஆராய்ச்சிக்கூடம், பிரான்சுக்கும், ஸ்விட்சர்லாந்திற்கும் நடுவில் அமைந்துள்ளது. இந்த நியூட்ரினோ மையத்தில் 800 டன்கள் ஆர்கன் திரவ வடிவில் சேமிக்கப்பட்டுள்ளது. செர்ன் மையத்தில் டியூன் அமைப்பு சோதிக்கப்பட்டது. நியூட்ரினோ துகள்களின் தன்மை, அதன் எதிர்தன்மை கொண்ட துகள்கள் ஆகியவற்றை இதில் சோதித்து பார்க்க முடியும்.  காமாக்கதிர் ஆய்வகம் (HIGH-ALTITUDE WATER Cherenkov Reservatory) மெக்சிகோவில் அமைந்துள்ள காமா கதிர்களை ஆராய்ச்சி செய்யும் ஆய்வகம் இது. பிகோ டி ஒரிஸாபா எரிமலையின் நிழல் போல அமைந்துள்ள ஆய்வகத்தில் 300 இரும்பு டேங்குகள் உள்ளன. விண்வெளியிலிருந்து வரும் காமாகதிர்களை நீரில் செலுத்தி அதன் விளைவை ஆராய்வதே நோக்கம்.  ஈர்ப்புவிசை ஆய்வகம் (LASER INTERFEROMETER GRAVITATIONAL-WAVE OBSERV

விண்வெளி பயிற்சிகள் எப்படி வழங்கப்படுகின்றன?

படம்
  விண்வெளி பயிற்சிகள் எப்படி வழங்கப்படுகின்றன? வானில் மிதந்தபடி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுவதை கவனித்திருப்பீர்கள். சாதாரணமாக பூமியில் ஒரு வேலை செய்யும்போதே, பல்வேறு பிரச்னைகள் உண்டு. எப்படி புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் விண்வெளி உடை அணிந்து வேலை செய்கிறார்கள்? விண்வெளி வீரர்களை இதற்கென தயார் செய்கிறார்கள் என்பதே உண்மை. விண்வெளி மையங்கள், வீரர்களுக்கு பல நூறு மணிநேரங்கள் இதற்காக கடுமையாக பயிற்சியளித்து அவர்களை விண்வெளியில் எச்சூழலையும் சமாளிக்கும்படி தயார் செய்கிறார்கள். இதில் மூன்று பிரிவு உண்டு. புதிதாக பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் முதலில் ஓராண்டு அடிப்படை பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள். விண்வெளி தொழில்நுட்பம், அறிவியல், மருத்துவத் திறன்கள் மற்றும் சர்வதேச விண்வெளி மையம் குறித்து கற்பது அவசியம். இதோடு ஸ்கூபா டைவிங் குறித்தும் கற்றுக் கொடுப்பார்கள்.  முதல் பகுதி நிறைவு பெற்றபிறகு, அடுத்தாண்டு பயிற்சிகள் இன்னும் தீவிரமாகும். சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் குறித்து பயிற்சியாளர்களுக்கு கற்றுத் தரப்படும். விண்கலங்களில்

கடல் பகுதியில் வாழும் வைரஸ்கள்!

படம்
  கடல் வைரஸ்கள்!  கடற்கரையில் நீச்சலடித்து குளிக்கும்போது, கடல்நீரை நீங்கள் குடிக்காமல் இருக்கமுடியாது. அந்த நீரில் இரண்டு லட்சம் கிருமிகள் வாழ்வதாக  ஆய்வாளர் குழு கூறியுள்ளது.  நீரில் நுண்ணுயிரிகள் வாழ்கிறது என்பது அனைவரும் அறிந்த செய்திதான். ஆனால் அவற்றின் எண்ணிக்கை பற்றி பலரும் ஆர்வம் கொண்டது 2015 ஆம் ஆண்டுதான். அப்போது, கடல் ஆராய்ச்சிக்குழு ஒன்று, 5,476 என்ற எண்ணிக்கையிலான வைரஸ்கள் கடல் நீரில் இருப்பதாக கண்டறிந்து கூறியது.  அடுத்த ஆண்டே அக்குழு, கடல் நீரிலுள்ள வைரஸ்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 222 என்று அறிவித்தது. தற்போது இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. பனிரெண்டு சதவீத அதிக வளர்ச்சி இது.  இது அழகான பிரமிக்க வைக்கும் ஆய்வு என்றார் நார்த் கரோலினா க்ரீன்ஸ்போரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரி வல்லுநர் லூயிஸ் மேரி போபே. உலகம் முழுக்க எழுபது சதவீதமுள்ள கடல்நீரை ஆராய்வது சாதாரண காரியம் அல்ல. 2015 -2016 ஆண்டுகளில் ஆர்க்டிக் பகுதிகளில் 43 இடங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.  தாரா ஓசேன் ப்ராஜெக்ட்ட

ராயல் சொசைட்டில் இந்தியப்பெண்!

படம்
ராயல் சொசைட்டில் இந்தியப்பெண்! இங்கிலாந்தின் லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியில் முதல்முறையாக இந்தியப் பெண் ஒருவர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.  நானூறு ஆண்டுகள் பழமையான ராயல் சொசைட்டிக்கு அண்மையில் 51 புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் பத்து நபர்கள் வெளிநாட்டினராகவும், ஒருவர் கௌரவ உறுப்பினராகவும் இருப்பார்.  சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின்(THSTI) இயக்குநராக பணியாற்றி வரும் டாக்டர் ககன்தீப், ராயல் சொசைட்டியில் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளார். இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தின் மேம்பாட்டிற்காக உழைத்து, பயிற்சி திட்டங்களை உருவாக்கியது இவரின் தேர்விற்கான காரணமாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க ரோட்டா வைரஸ் மற்றும் டைபாய்டு காய்ச்சலுக்கு எதிரான செயல்பாடுகளை செய்தவர் ககன்தீப். இதற்கான ஆய்வக வசதிகளை உலக சுகாதார நிறுவனம் செய்துகொடுத்தது. இவரின் ஆராய்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளால் இந்தியா மட்டுமல்லாது, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளிலும் தடுப்பூசி முயற்சிகள் முன்னேற்றம் அடைந்தன.  CHIM( Controlled Human Infection Model) எனும் முறையில் நோய்க்கிருமிகளை உடலில் செலுத்தி ச