இடுகைகள்

வளர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காடுகளை வகைப்படுத்துகிறது இந்திய அரசு! - காடுகள் வளருமா?

படம்
pixabay இந்திய அரசு காடுகளை மக்களை உள்ளே அனுமதிக்கும் (Go), அனுமதிக்காத (Non go)  என வகைப்படுத்தி கொள்கைகளை வகுத்துள்ளது. இதன்படி காடுகளில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கங்கள் உள்ள பகுதிகளுக்கு குறைவான அனுமதியே அளிக்கப்படவிருக்கிறது. பிற பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை செய்துகொள்ளலாம். இதனை ஹை, மீடியம், லோ என மூன்று பிரிவுகளாக அரசு பிரித்துள்ளது. இதன்படி ஹை எனும் பிரிவில் உள்ள காடுகளில் எந்த வித வளர்ச்சிப்பணிகளையும் அரசு மேற்கொள்ளாது. பிற நிறுவனங்களும் அப்பகுதியில் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது. மீடியம், லோ ஆகிய பகுதிகளில் வளர்ச்சி சார்ந்த பணிகளை மேற்கொள்ளலாம். 2019ஆம் ஆண்டு தகவல்படி இந்தியாவில் உள்ள காடுகளில் சதவீதம் 21.9 ஆகும். இதுவரை 7,12, 249 சதுர கி.மீ. தொலைவுக்கு காடுகள் பரவியுள்ளன. 1980ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 1.52 மில்லியன் ஏக்கர்கள் அளவுக்கு காடுகள் வளர்ச்சிப்பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்திய காடுகள் மற்றும் ஆராய்ச்சிக்கழகம் மத்திய அரசுக்கான கொள்கைகளை பரிந்துரைத்துள்ளது. இனிவரும் காலங்களில் இது தொடர்பான அறிக்கைகளை அரசு வழங்கலாம்.

பெரியார் சொன்னதை அன்றே மக்கள் ஏற்கவில்லை!

படம்
ஹரிஹரன் ராஜா சர்மா என்றால் பலருக்கும் புரியாது . ஹெச் . ராஜா என்றால் அனைவரும் புன்னகை பூப்பார்கள் . அந்தளவு பா . ஜ . கவின் புகழை தமிழகத்தில் பரப்ப பாடுபட்டு வருபவர் இவர் . பெரியாரை அவதூறு செய்வது , உயர்நீதிமன்றத்தை ஏக வசனத்தில் திட்டுவது என எப்போதும் சர்ச்சையின் மையத்தில் இருப்பது இவரது பாணி . அவரிடம் பேசினோம் . உள்ளாட்சித் தேர்தலில் பா . ஜ . க சொல்லிக்கொள்ளும்படி வெற்றிபெறவில்லையே . தமிழகத்தில் ஏன் உங்கள் கட்சி இன்னும் தடுமாறி வருகிறது ? இது கற்பனையான வாதம் . நாங்கள் சில இடங்களில் மட்டும்தான் போட்டியிட்டோம் . நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பெற்றுள்ள வாக்குகளைப் பார்த்தாலே தெரியும் . நாங்கள் மெல்ல முன்னேறி வருகிறோம் . தமிழகத்தில் பா . ஜ . கவிற்கு எதிராக இருக்கும் மனநிலையைப் பற்றி .... அது உண்மை அல்ல . நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அப்படி ஒரு மனநிலை இருப்பதாக தோற்றத்தை உருவாக்கினார்கள் . இது மாறிவிடும் தன்மை கொண்டதுதான் . பெரியார் இறந்து நாற்பது ஆண்டுகளுக்கும் பிறகு அவரைச்சுற்றி அரசியல் அமைந்திருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

இலங்கையின் வளர்ச்சிக்காக மகிந்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!

படம்
இலங்கையில் அதிபர் தேர்தலில் மகிந்தா ராஜபக்சே தேர்வாகியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிராக போராடி வென்று சிங்கள இனவாத த்திற்கு உறுதுணையாக நின்றவர் இவர். இவரின் வெற்றி பற்றி இலங்கையில் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநர்  அசங்கா அபேயாகூனசேகராவிடம் கேட்டோம். இலங்கையில் மகிந்தா அதிபராகியுள்ளார். இந்நிலையில் டெல்லி - கொழும்பு உறவு எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்? மகிந்தா, டெல்லியுடன் சிறப்பான உறவைப் பேணுவதாக முன்னமே கூறிவிட்டார். அதிபரான நிலையில் இதில் சில மாறுபாடுகள் நடக்கலாம். மகிந்தா முன்னமே இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பணிபுரிந்திருக்கிறார். ஆனால் இது தென்னிந்தியாவுக்குப் பொருந்தாது. மொத்தமாக இந்தியா - இலங்கை உறவுகள் சிறப்பாகவும் உறுதியாகவும் இருக்கும் என கூறலாம். மகிந்தா வெற்றி பெற்றதை இலங்கையில் எப்படி பார்க்கிறார்கள்? மக்கள் அவரை வரவேற்கிறார்கள். காரணம் நாட்டின் பொருளாதார நிலைமை படுமோசமாக இருக்கிறது.அதனை சரிசெய்ய மகிந்தாவினால் முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர் தான் செய்யப்போகும் செயல்களைப் பற்றி முன்னமே கூறிவிட்டார். இப்போது அவர் எப

அதிவேகமாக வளரும் இந்திய நகரங்கள்!

படம்
 அண்மையில் தி எகனாமிஸ்ட் எனும் இதழ் செய்த ஆய்வில் இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்திலுள்ள நகரங்கள் அதிவேக வளரும் நகரங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தின் மலப்புரம் உள்ளிட்ட மூன்று  நகரங்கள் அதிவேகமாக வளரும் நகரங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இங்கு குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. ஆனால் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில், நூறு சதவீத மக்கள் நகரவாசிகளாக மாறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தி எகனாமிஸ்ட் இதழ் ஆய்வில் மலப்புரம், கோழிக்கோடு, கொல்லம் ஆகிய மூன்று நகரங்களும் அதிவேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்து ஆச்சரியம் தருகின்றன. நகரங்களின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக ஆய்வாளர்கள் கூறுவது, பல்வேறு தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி, கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருவது என இரு காரணங்களைத்தான்.  கேரள மாநிலத்தில் 50 சதவீதம் பேர், விவசாயத்தை விட்டு வெளியேறி சேவைத்துறை சார்ந்த வேலைகளை செய்து வருகின்றனர். இந்த வேலைகளுக்காகவே கிராமத்தை விட்டு விலகி நகரத்திற்கு வருகின்றனர். இதன் காரணமாகவே வளர்ச்சி வேகம் மக்கள் இடம்பெயரும் நகரங்களில் அத

வேலையின்மை சதவீதம் குறைந்துள்ளதா?

படம்
வேலையில்லாதவர்களின் சதவீதம் குறைவு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 9.9 சதவீதம் இருந்த வேலையின்மையின் அளவு 9.3 சதவீதமாக குறைந்துள்ளது. மார்ச் 23.7 லிருந்து 22. 5 சதவீதமாக மாறியுள்ளது. இதுபற்றிய அறிக்கையை புள்ளியல் துறை வெளியிட்டுள்ளது. 46.8 சதவீதத்திலிருந்து 46.5 சதவீதமாக தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மாறியுள்ளது. மேலும் இதில் பெண்களின் பங்கும் மிகவும் குறைந்துள்ளது. நகரில் வாழும் 57.5 சதவீதம் பேர் உணவு, சுகாதாரம், நீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளைப் பெற்றுள்ளனர். ஆனால் கிராம ப்புறங்களில் இன்றும் 27 சதவீதப்பேருக்கு மட்டுமே இந்த வசதிகள் சென்று சேர்ந்துள்ளன. கல்வி எத்தனை பேருக்கு சென்று சேர்ந்திருக்கிறது? கிராமப்புறங்களில் 73.5 சதவீதம் பேருக்கும், நகர்ப்புறங்களில் 87 சதவீதம் பேருக்கும் கல்வியறிவு கிடைத்துள்ளது. நகரங்களில் சுகாதாரச்செலவு தோராயமாக குழந்தை பிறப்பு உட்பட 26,475 எனில், கிராமங்களில் 16, 676 ரூபாய் எனுமளவில் உள்ளது. நன்றி - இடி மேகசின்

என்ஜிஓக்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? ஒரு அலசல்

படம்
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சி! தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயலாற்றத் தொடங்கியபின் அரசின் பெரும் பாரம் குறைந்துவிட்டது. அரசு செய்யவேண்டிய பல விஷயங்களை தன்னார்வ நிறுவனங்கள் செய்து அதற்கு சிறிய தொகையை பெறுவதோடு, சமூகத்தின் நல்ல பெயரையும் பெறுகிறார்கள். ஏறத்தாழ அரசு மீதான கோபத்தை தீர்ப்பவர்கள் என்று கூட இவர்களைச் சொல்ல முடியும். இவர்களால் அரசு அமைக்க முடியுமா என்றால், டில்லியை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைகாட்டலாம். ஊழலுக்கான மசோதா, போராட்டம் எனத் தொடங்கி மக்களின் மீதான கோபத்தை சரியாக அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறினார் அரவிந்த் கெஜ்ரிவால். அவருக்கு ஓட்டுபோட்டது முழுக்க மத்திய நடுத்தர வர்க்கத்தினர்தான். அவர்களின் வளர்ச்சியை டேட்டாவாக பார்ப்போம். 2014- 18 வரை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சி 11 சதவீதமாக உயர்ந்துள்ளது. சமூகச் செயற்பாடுகளுக்கு கிடைக்கும் தனியார் நிறுவன நிதி 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த நிதி மேற்சொன்ன காலகட்டத்தில் கிடைத்ததுதான். மத்திய அரசின் பல்வேறு சுரங்கம் உள்ளிட்ட திட்டங்களை க்ரீன்பீஸ் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்த்து போராடின. உ

செபி அமைப்பு பற்றி அறிவீர்களா?

படம்
தெரியுமா? இந்திய அரசு, 1988 ஆம் ஆண்டு பங்குச்சந்தைகளை முறைப்படுத்தும் நோக்கில் செபி (Securities and Exchange Board of India) அமைப்பைத் தொடங்கியது. 1992 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் செபிக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதிலிருந்து   முறையான அரசு அமைப்பாக வடிவம் பெற்று இயங்கத் தொடங்கியது. செபி அமைப்பின் முதன்மை அலுவலகம் மும்பையில் அமைந்துள்ளது.  டில்லி, கோல்கட்டா, அகமதாபாத், சென்னை ஆகிய இடங்களிலும் இந்த அமைப்புக்கு கிளை அலுவலகங்கள் உண்டு. செபி அமைப்பின் குழுவில் மத்திய நிதித்துறை, ஆர்பிஐ வங்கி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.  ?

அடுத்து வரும் ஏ.ஐ. புரட்சி- அப்டேட்டாகும் துறைகள் ஓர் அலசல்!

படம்
ஏஐ புரட்சிக்கு ரெடியா?  அண்மையில் டெலாய்ட்(Deloitte) என்ற ஆய்வு நிறுவனம் செய்த ஆய்வில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் உலகளவில் பயன்படுத்தும் அளவு 42 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை தொழில்துறை, பொழுதுபோக்கு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். தொழில்நுட்பத்தின் அடிப்படை என்ன? செய்யும் வேலைகளின் எளிமை. அதேதான். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினால் மனிதவளத்துறை முதல் தொழில்துறை வரை வேலைநேரமும் செலவும் பெருமளவு குறைகிறது. மனிதவளத்துறை மனிதவளத்துறையில் செயற்கை நுண்ணறிவு என்பது புதுமையாக இருக்கலாம். பல்வேறு துறைகளில் மனிதர்களுக்கு இணையாக செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்களைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ரோபாட்டிக்ஸ் புரோசஸ் ஆட்டோமேஷன்(Robotics Process Automation RPA) எனும் முறையை மனிதவளத்துறையில் பயன்படுத்துகின்றனர். ஊழியர்களுக்கான சம்பளம், தகவல் மேலாண்மை, கடிதம் எழுதுவது ஆகியவற்றில் இவை உதவுகின்றன. நடப்பு முதல் எதிர்காலம் வரை வியாபார நிலைகளைக் கணித்து வளர்ச்சி எப்படியிருக்கும் என்பது வரை செ

இந்தியாவை உடைக்கும் வலதுசாரித்துவம்! - கபில்சிபல்

படம்
பிரிவினையின் விதைகள் தூவப்படுகின்றன! கபில் சிபல், காங்கிரஸ். அதிகாரம், உடல் பலத்தை வைத்துச் செய்யும் அரசியல், சில ஆண்டுகளுக்கு மட்டுமே பயனளிக்கும். மோடி அரசு இதனை திடமாக நம்பி, அதற்கான திட்டங்களோடு பயணிக்கிறது. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற மோடி, உணர்ச்சிகரமான இந்துவின் மனநிலையைப் பிரதிபலித்தார். விளைவு, அதுபோலவே போலியாகப் பேசினார். வரலாற்றில் நடந்த தவறுகளுக்கு, இந்துக்களுக்கு நேர்ந்த பிரச்னைகளைத் தீர்ப்போம் என விநோதமாக பேசினார். கூட்டணி ஆட்சியில் சில விஷயங்களை துணிச்சலாக பாஜக செய்யவில்லை. ஆனால் இம்முறை கிடைத்த பெரும்பான்மை  பல அதிரடி முடிவுகளை எடுக்க வைத்திருக்கிறது. கர்வாப்சி எனும் திட்டத்தை ஆர்எஸ்எஸ் அதன் துணை அமைப்புகளாக பஜ்ரங்தள் ஆகியவை முன்னிலைப்படுத்தி சமூக ஒழுங்கை சீர் குலைத்தன. மெல்ல சமூகத்திலுள்ள மக்களிடையே அமைதியை உடைத்து பயத்தை உண்டாக்கும் சம்பவங்களை கலாசார காவலர்கள் ஏற்படுத்தினர். ஆண், பெண் காதலித்து திருமணம் செய்வது கிரிமினல் குற்றமல்ல. ஆனால் அதனையும் லவ் ஜிகாத் என்ற பெயரில் இழிவு செய்தனர். சாதியை அழிக்கும் காதல் திரு

மிட்டாய் தரும் தலைவர் வேண்டாம்! - சேட்டன் பகத்!

படம்
தேர்தல் வரும்போதுதான் பல அரசியல்கட்சிகள் நமக்கு மிட்டாய்கள் வழங்கின்றனவா, அல்லது அறிவை வளர்க்கும் புத்தகங்கள் வழங்குகின்றனவா என்று தெரியும். பல்வேறு கட்சிகளும் சாத்தியமோ இல்லையோ ஏராளமான கனவு லட்சியங்களை மக்களிடம் கூறுகின்றன. வெகுஜன ஈர்ப்புவாத பிரசாரங்களில் மக்களை கனவு காண வைக்கின்றனர். இவை சாத்தியமா என்று மக்களும் கேட்பதில்லை. அரசியல்வாதிகளும் அதனை மேற்கொண்டு ஜெயித்தபிறகு பேசுவதில்லை.  மக்களும் கனவு வாக்குறுதிகளை நம்புகின்றனர். அவை தற்காலிகமானவை என்று புரியாமல் அவற்றை கண்ணை மூடிக்கொண்டு  நம்புகின்றனர். இதன் விளைவு,  ஜனநாயகச் சீரழிவுகள் தொடர்கதையாகி வருகின்றன. இந்தியர்கள் கூட்டாக ஏன் வளரமுடியவில்லை. காரணம், அவர்களுடைய சாதி வெறி. பிறரை விட தன்னுடைய குழு, இனம் உயர்ந்தது என்ற எண்ணம். இதன் விளைவாக அவர்கள் தங்கள் சாதி, இனத்துக்குள்ளேயே திருமண உறவுகளை அமைக்கின்றனர். இது எப்படி இந்தியாவை வளர்ச்சி பெறச்செய்யும்? இது குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியை பெரிதும் முடக்குகிறது. அதோடு தனது மகள், மகன் இன்னொரு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்யக்கூடாது என்று நினைப்பவர்கள், எப்படி பிறருடன்

மோடியின் இந்தியா எப்படியிருக்கவேண்டும்? - சேட்டன் பகத்

படம்
மோடி என்ன செய்யவேண்டும்? - சேட்டன் பகத் மோடி, 2014 ஆம் ஆண்டில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு வாக்களித்த மக்கள், எதிர்கட்சிகள், அரசியல் சட்டங்கள் ஆகியவற்றையெல்லாம் தாண்டிவிட்டார் . இனி அவர் எதிர்பார்ப்பது, பயணிப்பது 2024 ஆம் ஆண்டு  நோக்கித்தான். ஏறத்தாழ அவரின் பயணம் தடங்கலற்று அவரே ஏற்படுத்திக்கொண்ட பாதையில் வேகமாக சென்று வருகிறது. அவர் ஆட்சிக்கு வந்தபோது சேட்டன் பகத் சில விஷயங்களை பரிந்துரைத்தார். வெளிநாட்டு இந்தியர்களுடன் பாஜக அரசுக்கு நல்லுறவு இருக்கிறது. அதன்மூலம் இந்தியா வளமடைவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனை உருவாக்க முயலலாம். மன் கீ பாத்  - மனதின் குரல் போன்ற நிகழ்ச்சிகள் ஒருவழிப்பாதையாக அமையக்கூடாது. மக்களிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளை அறிவது அவசியம். இதுவே ஜனநாயகப்பாதையில் பாஜகவை நடக்க வைக்கும். பாஜக வெற்றியடையும் அதே நேரத்தில் கட்சிக்குள்ளிருந்து இந்து மத வெறிக் கருத்துகளைக்  கேட்கிறோம். பாஜக, இந்துக்களை பெரும்பான்மைப்படுத்தினாலும் மோடிக்கு வாக்களித்தது நாட்டின் வளர்ச்சிக்காகத்தான். இதனை  அனைத்து மக்களுமே செய்தனர் என்பதை மறந்துவிடக்கூடாது.

மூக்கு தினந்தோறும் வளருகிறதா? - அறிவியல் என்ன சொல்லுகிறது?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி எனக்கு என் பெரிய மூக்கைப் பிடிக்கவேயில்லை. அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்குமா? உங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதுதான். மூக்கும், காதும் தொடர்ந்து நம் வாழ்நாள் முழுக்க வளர்ந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் அனிமேஷன் படங்களில் வருவது போல, படுவேகமாக அல்ல; நிதானமாகத்தான். மிலன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 65 வயதுடையவர்களையும், இளைஞர்களையும் ஆராய்ச்சி செய்தார்கள். இதன் விளைவாக, வயதானவர்களுக்கு இளைஞர்களை விட 20 சதவீதம் மூக்கு நீளமாக வளர்ந்துள்ளது தெரிய வந்தது. மூக்கின் அமைப்பு வயதாகும்போது நிறையவே மாறும். ஆனால் என்ன பெரிய குடைமிளகாய் மூக்குள்ளவர்கள் புத்திசாலிகள் என்று வதந்தியைக் கிளப்பிவிடுங்கள். அவ்வளவுதான். துப்பறியும் சாம்பு போல தானாகவே விஷயங்கள் அனுகூலமாக நடக்கும் பார்த்துக்கொள்ளலாம். நன்றி: பிபிசி

வங்கிகள் தேசியமயமாக்கம் - உதவிய வங்கிச்சட்டம்!

படம்
வங்கிகள் தேசியமயமாக்கல்! தனியார் நிறுவனங்களாக செயற்பட்டு வரும் வங்கிகளை அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் மசோதாவை சட்டமாக்கி, அதனை அரசின் நிர்வாகத்திற்குள் கொண்டுவருவதே, தேசியமயமாக்குதல் எனப்படும். வங்கி மற்றும் வங்கி சார்ந்த சொத்துக்களும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரும். இந்தியாவில் இதுவரை 20 வங்கிகள் இம்முறையில் தேசியமயமாக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிகள் வங்கி நிறுவனங்கள் சட்டப்படி (“Banking Companies (Acquisition and Transfer of Undertaking) Bill) அரசு நிறுவனங்களாக மாற்றப்பட்டன. 1969ஆம் ஆண்டு பதினான்கு வங்கிகளும், 1980 ஆம் ஆண்டில் 6 வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன. 1894 ஆம் ஆண்டு பஞ்சாப் தேசிய வங்கி கம்பெனிகள் சட்டப்படி உருவாக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரான லாலா லஜபதி ராய் இந்த வங்கியை உருவாக்கிய நிறுவனர்களில் ஒருவர். இந்த வங்கி 1969ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. அதேசமயம் இது பொதுத்துறை வங்கியும் கூட. 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரதிய மகிளா வங்கி, பொதுத்துறை வங்கி. ஆனால் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்ல. குறிப்பு: தேசியமயமாக்கம் என்றால், அந்த வங்கி பெருநகரம்,சிறு

சீப்பான சீனக்கம்பெனிகள் ஜெயித்தது எப்படி?

படம்
www.scmp.com சீனக் கம்பெனிகள் சாதித்தது எப்படி? இந்தியாவில் மொபைல் கம்பெனிகளுக்கு குறைவில்லை. ஆனால் தரம் என்று பார்த்தால், ஒனிடா, வீடியோகான், மைக்ரோமேக்ஸ் ஆகிய கம்பெனிகள் மேட் இன் இந்தியா என பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் இப்போன்களை வாங்கியவர்கள் சந்தோஷப்பட ஏதுமில்லை. அப்படியே மலிவான கொரிய போன்களுக்கு பெயரை மட்டும் லாவா, ஒனிடா, வீடியோகான் என வைத்து பரபரப்பான விற்றனர். இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது, மைக்ரோமேக்ஸ் போன்ற கம்பெனிகள் போன்களை வேகமாக விற்க முயற்சித்தனரே தவிர அதில் தரத்தையோ தனித்துவத்தையோ பராமரிக்க முயற்சிக்கவில்லை. இந்த நேரத்தில் இந்தியச் சந்தையில் சாம்சங் கோலோச்சிக் கொண்டிருந்தது. நோக்கியா சரிவில் இருந்தது. பிளாஸ்டிக் போன்களை அதிக விலை வைத்து விற்ற எல்ஜியின் சுவடையே காணோம். அப்போது பீக்கில் கிராக்கி காட்டியது கொரியா செட்டுகள்தான். திருவிழா செட்டு போல முத்துக்கொட்டை பல்லழகி என எங்கு பார்த்தாலும் சத்தம். அந்த நேரத்தில்தான் சீன போன்களாக ஹூவெய், ஆப்போ, விவோ களமிறங்கின. குறைந்த விலையில் ஐபோன் வசதிகளோடு போன் விற்றால் வாங்க மாட்டார்களா? தூள் கிளப்பிய

மேஜிக் பஸ் சாதித்தது எப்படி?

படம்
மேஜிக் பஸ் சாதித்தது எப்படி? 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மேஜிக் பஸ் என்ஜிஓ அமைப்பு, குழந்தைகளுக்கு ஆளுமை தொடர்பான வகுப்புகளை எடுப்போடு அவர்களுக்கு கல்வி மூலம் வறுமையிலிருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஏறத்தாழ இருபது ஆண்டுகால பணியில் 3,75,000 குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி சாதித்துள்ளது இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம். இந்தியா, மியான்மர், நேபாளம், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிற அமைப்பு இது. அதன் இயக்குநர் ஜெயந்த் ரஸ்தோகியிடம் பேசினோம். கல்வியை அளித்து மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணம் எப்போது வந்தது? முதலில் எங்கள் பணியை மும்பையின் குடிசைப்பகுதிகளில்தான் தொடங்கினோம். குறிப்பாக, இந்தியாவில் எங்களுடைய செயல்பாடு சிறப்பாக பயனளித்துள்ளது. அதனால்தான் எங்கள் கல்வித்திட்டத்தை விளையாட்டுடன் இணைந்ததாக உருவாக்கினோம். நீங்கள் இந்தியாவிலுள்ள எந்த கிராமத்துக்கும் கால்பந்தை எடுத்துக்கொண்டு செல்லலாம். பாடநூலை விட கால்பந்து நிறைய மக்களை, குழந்தைகளை நம்முடன் ஒன்றாக இணைக்கிறது. சிறுவர்கள் குறைந்த பட்சம் பனிரெண்டாவது வரை படி