இடுகைகள்

அறநெறி சார்ந்த கல்வியின் தேவை….!!!

அறநெறி சார்ந்த கல்வியின் தேவை….!!!                                                           இரா.முருகானந்தம்             கல்வியளிக்கும் ஆசிரியர்கள் அறம் சார்ந்த பணியாக ஆசிரியர் பணியைக் கருதியும், கல்வி என்பது மதிப்பீடுகள் சார்ந்த வாழ்க்கை முறைக்காகப் பெறும் அறிவு என்கிற மாணவர்களின் எண்ணமும், கல்வியை ஒரு சமூக அறமாக கருத வைத்தன. நான் எனது தோழியுடன் காலச்சுவடு இதழின் நேர்காணல் ஒன்றிற்காக சுதந்திரப்போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமான கோபிசெட்டிபாளையம் ஜி.எஸ் லட்சுமண அய்யரை சந்தித்தபோது, தனக்கு ஆசிரியராக இருந்த கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி ஆசிரியரான தமிழறிஞர் பெரியசாமி தூரன் குறித்து மிகவும் மனம் நெகிழ்ந்து பேசினார். பிறகு பெரியசாமித்தூரன் அவர்களின் பணிகளைக் குறித்து நான் விரிவாக அறிந்தபோது அக்கருத்தின் பொருத்தப்பாடு குறித்து வியந்துபோனேன். தூரன் ஒரு தமிழ் பேரறிஞர் என்பது ஒரு புறம் இருக்க அவர் சிறந்த குழந்தை இலக்கியவாதியாகவும் இருந்திருக்கிறார். ‘’ அம்மா இங்கே வா வா !’’ எனும் நாம் நன்கறிந்த குழந்தைப்பாடல் அவர் இயற்றியதே. கடந்த ஆண்டுகள் முன்பு ‘குழந்தை உள்ளம்’, ‘குழந்தை மனமும்

அழியாத கறைகளும், நீங்காத குருதியின் வீச்சமும்

அழியாத கறைகளும், நீங்காத குருதியின் வீச்சமும் -       முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தமிழில்: ச.ஜெ. அன்பரசு நரேந்திர மோடி பெரும்பகுதி இந்தியர்களுக்கு நவீன மோசஸாக, மேசியாவாக காட்சியளிப்பதோடு, மனச் சோர்வடைந்த இந்தியர்களை பாலும் தேனும் கரை புரண்டோடும் தேசமாக மாற்றும் வல்லமை கொண்டவராகவும், பிரதமர் பதவிக்கு முற்றிலும் பொருத்தமானவராக  அடையாளம் காட்டப்படுகிறார். இதனை பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்புகள் மட்டும் கும்பமேளாவில் கூறவில்லை. இந்தியர்களில் கல்வி கற்ற வகுப்பில் உள்ள படித்த இளைஞர்கள் மோடியால் பெரும் உணர்வெழுச்சிக்கு ஆட்பட்டு அவரை பின்பற்ற விரும்புகிறார்கள் என்று மோடியின் பிரம்மாண்ட விளம்பரங்கள் கூறுகின்றன. நான் தில்லியிலிருந்து போபாலுக்கு விமானத்தில் சென்றபோது, அருகில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அமர்ந்திருந்தார். மோடி பற்றிய அவரது கருத்தைக் கேட்டேன். உடனே மோடி பற்றிப் புகழ்ந்து பேசத்தொடங்கினார். நான் இடைமறித்து, 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டது குறித்து கேட்டபோது, இஸ்லாமிய மக்கள்தான் குஜராத்தில் எப்போதும் பிரச்சனைக

வண்ணத்தால் நீர்த்துப்போகும் மக்களின் வாழ்வு

வண்ணத்தால் நீர்த்துப்போகும் மக்களின் வாழ்வு                    அருண் நல்லதம்பி         மஞ்சள், துணிகள், மக்களின் விருந்தோம்பல் என்று பலவகைகளில் பெரும் புகழ்பெற்றது ஈரோடு மாவட்டம். செய்யும் தொழில் என்பது தனக்கு தரும் பயன்களை விடவும் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கணக்கிலெடுத்து செயல்பட்டது முன்னோர்களின் காலமாகிவிட்டது. இன்று பெருகிவரும் உலகமயமாதல் சூழல், தாராளமயக்கொள்கை என பல்வேறு நாடுகள் தொழிற்சாலைகளின் கழிவுகளை இயற்கையை பாதிக்காமல் அழிப்பது குறித்து சிந்தித்து வருகின்றனர். ஆனால் கிடைக்கும் வருவாய் இயற்கையை குறித்து மட்டுமல்ல தன் சக மனிதர்கள் குறித்தும் சிந்திக்க இடம் தர மறுத்து எஜமானனாகிவிடும் போது, நம் நிலைதான் என்ன? வியாபாரத்தில் கெட்டி! மக்கள் நலத்தில்?             ஈரோடு மாவட்டத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு கர்நாடகா, ஆந்திரா, கேரளா என பல்வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. துணிகளுக்கு சாயம் ஏற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சாயத்தொழிற்சாலைகள் பலவும் அரசின் ஒழுங்குமுறைக்குப்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று முறையா

டி.எம் சௌந்தர்ராஜன்

அஞ்சலி வெகுஜன இசையின் செவ்வியல் கலைஞன் டி.எம் சௌந்தர்ராஜன் (24.03.1922 – 25.05.2013)             திரு. டி.எம் சௌந்தர்ராஜன்  அவர்கள் மறைந்த 25.05.2013 அன்று இரவு நான் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன். சில மணி நேரம் முன்புதான் அவரின் மறைவு செய்தி அறியப்பட்டிருந்தது. திருமண கச்சேரியில் சாக்ஸபோன் கலைஞர் திரு. டி.எம்.எஸ் அவர்கள் பாடிய புகழ்பெற்ற ‘’புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…’’ பாடலை தனது இசைக்கருவியில் இசைக்கத்தொடங்கினார். திருமண சந்தடியிலும் எனது கற்பனையின் சஞ்சாரத்தில் அவரின் குரல் ஒலிப்பதாகவே உணர்ந்தேன். பாடல் முடிந்து நிகழ்வுலகில் உணர்ந்த தருணத்தில் டி.எம்.எஸ் இல்லாத உலகில் வாழ்வது என்கிற எண்ணம் தந்த வெறுமை என்னைச் சூழ்ந்தது.             எண்பதுகளின் பிற்பகுதியில் எனக்கு ஆறுவயதிருந்த போதெல்லாம் வானொலியே என் உற்ற துணைவன். தமிழக கிராமப் பகுதியில் அன்று தொலைக்காட்சிப் பெட்டிகள் பரவலாக இல்லை. நான் அதிகாலை 5.30 க்கு டெல்லியிலிருந்து ஒலிபரப்பாகும் ‘’திரைகடலாடி வரும் தமிழ்நாதம் ’’ தொடங்கி ஆல் இந்தியா ரேடியோவின் உள்ளூர் ஒலிபரப்பு, இலங்கை வானொலி, பி.பி.சி தமி

வெகுஜன இசையின் செவ்வியல் கலைஞன் டி.எம் சௌந்தர்ராஜன்

அஞ்சலி வெகுஜன இசையின் செவ்வியல் கலைஞன் டி.எம் சௌந்தர்ராஜன் (24.03.1922 – 25.05.2013)             திரு. டி.எம் சௌந்தர்ராஜன்  அவர்கள் மறைந்த 25.05.2013 அன்று இரவு நான் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன். சில மணி நேரம் முன்புதான் அவரின் மறைவு செய்தி அறியப்பட்டிருந்தது. திருமண கச்சேரியில் சாக்ஸபோன் கலைஞர் திரு. டி.எம்.எஸ் அவர்கள் பாடிய புகழ்பெற்ற ‘’புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…’’ பாடலை தனது இசைக்கருவியில் இசைக்கத்தொடங்கினார். திருமண சந்தடியிலும் எனது கற்பனையின் சஞ்சாரத்தில் அவரின் குரல் ஒலிப்பதாகவே உணர்ந்தேன். பாடல் முடிந்து நிகழ்வுலகில் உணர்ந்த தருணத்தில் டி.எம்.எஸ் இல்லாத உலகில் வாழ்வது என்கிற எண்ணம் தந்த வெறுமை என்னைச் சூழ்ந்தது.             எண்பதுகளின் பிற்பகுதியில் எனக்கு ஆறுவயதிருந்த போதெல்லாம் வானொலியே என் உற்ற துணைவன். தமிழக கிராமப் பகுதியில் அன்று தொலைக்காட்சிப் பெட்டிகள் பரவலாக இல்லை. நான் அதிகாலை 5.30 க்கு டெல்லியிலிருந்து ஒலிபரப்பாகும் ‘’திரைகடலாடி வரும் தமிழ்நாதம் ’’ தொடங்கி ஆல் இந்தியா ரேடியோவின் உள்ளூர் ஒலிபரப்பு, இலங்கை வானொலி, பி.பி.சி தமி

திண்ணையில் அவர் இல்லை

சு.ரா. நினைவுகள்  திண்ணையில் அவர் இல்லை இரா.முருகானந்தம்             இருமாதங்களாகிவிட்ட போதும் சு.ரா மறைந்துவிட்டார் என்ற உண்மையை நம்ப மனம் மறுத்தவண்ணம் உள்ளது. இருந்தாலும் நிதர்சனம் அதுவேயாகும். எதிர்பாராததொரு தருணத்தில் நிகழ்ந்துள்ள இவ்விழப்பு நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே படுகிறது.             அகில இந்திய வானொலியின் மதியச்செய்தியை பெரும் சலசலப்புக்கிடையே கேட்டபோதும் சு.ரா மறைந்துவிட்ட செய்தி உள்வாங்க இயலாத வகையில் கிடைத்தவுடன் ஒரு விதமான பதற்றம் தொற்றிக்கொண்டது. இதனைத் தெளிவு படுத்திக்கொள்ள யாரைத்தொடர்பு கொள்ளலாம்? கண்ணணை தொடர்பு கொள்வது உசிதமாகப்படவில்லை. அடுத்து யாரை?  சென்னையிலிருந்த நண்பர் என். ஸ்ரீராமை தொடர்பு கொண்ட போது, அவருக்கும் ஏதும் தெரிந்திருக்க வில்லை. அவர் மணா உள்பட சிலரிடம் விசாரிப்பதாக சொன்னார். எனது பதட்டமும், தவிப்பும், தாறுமாறாக அதிகரித்தபடியே இருந்தது. அப்படி இருக்கக் கூடாது என மனம் ஓயாது கூவிக்கொண்டு இருந்த தருணத்தில் ஆமாம் சு.ரா காலமாகி விட்டார் என்கிற செய்தி இடியென தாக்கியது எனச்சொல்லமுடியாவிட்டாலும் மிகுந்த மன அதிர்வினை ஏற்படுத்தும

இந்திய வேளாண்மையின் சவால்கள்

இந்திய வேளாண்மையின் சவால்கள்                               இரா.முருகானந்தம்         இந்தியா ஒரு வேளாண்மை சார்ந்த நாடு என நாம் வெகு நாட்களாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். சந்தேகமின்றி இந்தியா இன்றும் கூட வேளாண்மை சார்ந்தே இருக்கின்றது. இந்தியா போன்ற செறிவான மக்கள் தொகை கொண்ட மித வெப்ப மண்டல நாடு வேளாண்மையைச் சார்ந்ததாக இருப்பதால் மட்டுமே ஆயிரம் பின்னடைவுகள் இருப்பினும் ஒரு நாடாக நீடிக்க முடிகிறது. இது இயல்பானதும், புவியியல் மானுடவியல் காரணிகளை உள்ளடக்கியதுமாகும். மக்கள்தொகை பெருக்கமும், நெருக்கமும் மிக்க இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள்  வேளாண்மையை முதன்மைப்படுத்தியே தங்களின் இருப்பை உறுதி செய்து கொள்ள முடிகிறது.             இந்திய வேளாண்மை விரிவானதொரு வரலாறு, பண்பாடு, மரபார்ந்த பின்னணி கொண்டது. வேளாண்மை என்பது முன்னோடிகளால் ஒரு தொழிலாக ஒரு வாழ்க்கை முறையாக கருதி செய்யப்பட்டது. இந்தியாவின் சிக்கலான சமூகப்படி நிலைகளைத் தீர்மானிக்கும் காரணியாக வேளாண்மையும், அதன் முக்கிய ஆதாரமான நிலங்களுமே இருந்தன என்பதை நமது வரலாற்றை ஓரளவு கவனித்தாலே புரிந்துகொள்ள முடியும்.             ஆங்கிலே

உலகின் தொழிற்சாலையாக மாறுமா இந்தியா?

உலகின் தொழிற்சாலையாக மாறுமா இந்தியா?                    ஒரு அலசல் பார்வை                                                 அரசுகார்த்திக் இந்தியாவில் உருவாக்கப்படும் பொருட்கள் உலகமெங்கும் விற்கப்படும் நிலையினை உருவாக்கப்படவேண்டும் என்று இந்தியாவில் உருவாக்குவோம்(Make in India) எனும் திட்டத்தினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்திருக்கிறார். பல முதலீட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதிக்க ஏதுவாக பல்வேறு தொழில் சட்டங்கள், சுற்றுச்சூழல், தொழிலாளர் நலன் உள்ளிட்ட சட்டங்கள் தளர்த்தப்பட இருக்கின்றன. சீனாதான் உலகின் தொழிற்சாலை என்று இன்றுவரை அழைக்கப்படுகிறது. இந்நிலை மாறுமா? சாதக, பாதக அம்சங்களை அலசுகிறது இக்கட்டுரை.  இந்தியாவில் தொழில் இன்றுவரை             இந்தியாவில் தொழில் தொடங்குவது அவ்வளவு எளிதாக எந்த தொழில் முனைவோருக்கும் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் நடைமுறைகள் பல மாதங்களுக்கு நீளும். ஒரு தொழில் செய்கிறார் தன்னிடம் தொழில் தொடங்குவதற்கான உரிமம், சுற்றுச்சூழல் உரிமம் உட்பட பனிரெண்டு உரிமங்களை தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும். இவற்றில் சில உரிமங்களைப் பெற பல மாதங்கள்வரை காத்த

நினைவில் இரண்டு தலைமுறையின் டிக்.. டிக்..டிக் ஒலி

நினைவுக்குறிப்புகள் நினைவில் இரண்டு தலைமுறையின் டிக்.. டிக்..டிக் ஒலி                            டான்ஜூவான் ப்ரூட்             இந்திய மக்களின் நாடித்துடிப்பாக நகர்ந்துகொண்டிருந்த ஹெச்எம்டி வாட்ச் தொழிற்சாலைகள்  தொடர்ந்த வருவாய் இழப்பினால் மூடப்பட்டுவிட்டன. நமது மூத்த தலைமுறையின் கையில் இனி அவை இழந்துவிட்ட வாழ்வின், அணியப்பட்ட தருணத்தின் மகிழ்வான பொழுதுகளை நினைவுபடுத்தியபடி இருக்கும்.             1960 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டு நம் முந்தைய இரு தலைமுறைகளின் கைகளில் அணியப்பட்ட கைகடிகாரம் என்றால் நினைவுக்கு வருவது ஹெச்எம்டி நிறுவனத்தின் கடிகாரங்கள்தான்.  பல வெளிநாட்டு வாட்ச் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வாட்ச் நிறுவனங்களின் கடும் போட்டியை எதிர்கொள்ள முடியாமல் 2000 ஆண்டிலிருந்து ஹெச்எம்டி நிறுவனம் இழப்பை எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டது.             கைகடிகாரங்கள் என்பது இன்றுமே எனக்கு ஒரு பெரிய ஆச்சர்யத்தையும், அற்புதத்தையும் ஒருசேர மனதில் ஏற்படுத்தும் ஒன்றாகவே இருக்கிறது. நாளிதழில் கைகடிகாரங்களின் படங்களைப் பார்த்தாலும் உட்புற டயல், வடிவமைப்பு, நீர் உள்ளே புகாத வசதி என்று திர