இடுகைகள்

மனம் விடு தூது -கடிதங்கள்

மனம் விடு தூது கடிதங்கள் எழுத்தாளர் ஸ்ரீராம்  எழுத்தாளர் ஸ்ரீராம் அவர்கள் நான் சென்னையில் படித்துக்கொண்டிருந்தபோது என் சகோதரர் மூலம் அறிமுகமாகி அவர் வீட்டிற்கு சென்று இன்றுவரையிலும் சென்று வந்துகொண்டிருக்கிறேன். அவர் எழுதும் கதைகள் தொடர்பாக இருவருக்கும் கடும் முரண்பாடுகள், விவாதங்கள் எழுந்ததுண்டு. கடுமையான கருத்து வேறுபாட்டினால் நான் பல மாதங்கள் கடிதங்களே எழுதாமல் இருந்திருக்கிறேன். அவர் நான் எழுதிய எந்த கடித்தத்திற்கும் பதில் எழுதியதில்லை. அவர் பணியாற்றும் தொலைக்காட்சி பணியின் சூழல் அப்படியிருக்கலாம்.  தன் கதைகள் வெளிவரும் போது அதுபற்றிய குறுஞ்செய்தியினை தொடர்ந்து அனுப்பி வைப்பார். நான் இன்று எழுதும் எழுத்துக்கள் அனைத்திற்கும் ஸ்ரீராம் அவர்கள், இரா. முருகானந்தம் ஆகிய இருவருக்கும் பெரும் நன்றிகள் செலுத்த கடமைப்பட்டுள்ளேன். எவ்வளவு கோபமாக இருந்தாலும், எனக்கு புத்தகங்கள் தராமல் தன் வீட்டிலிருந்து விடை தந்ததில்லை ஸ்ரீராம் அவர்கள் என்பது அவரின் குணத்தைக்காட்டும். யாருக்கும் தராத பல புதிய புதுமைகள் கொண்ட புத்தகங்களை வாங்கி பரணில் வைத்திருந்து எனக்கு எடுத்துக்கொடுத்தவர் இவர்த

சேட்டன் பகத்தின் What young india wants

சேட்டன் பகத்தின் What young india wants நூலில் உள்ள Youth பகுதியின்  தமிழ் மொழிபெயர்ப்பு ‘இளைஞர்களின்  இந்தியா’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது.                                                                    ஆக்கம்: வின்சென்ட் காபோ                                                                           3                                             கல்வி இல்லாமை தேவையில்லை குடிமக்கள் அனைவரும் கண்டிப்பான ஆசிரியர்களாக மாறி, தலைவர்களுக்கு பல்வேறு வீட்டுப்பாடங்களை செய்யுமாறு வற்புறுத்தவேண்டும்.       மனிதவளத்துறை புள்ளிவிவரங்கள் தேசிய அளவிலான தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சியடைந்துள்ளதை விரிவாக காட்டுகிறது. மக்கள்தொகையில் குழந்தைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதைப்பார்த்தால் முடிவுகள் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு இந்தியருக்கும் கல்வி என்ற விஷயத்தில் இன்னும் இரைச்சல்கள் நம்மிடையே குறையவில்லை. நம் நாட்டின் மேம்பட்ட வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் இந்த புள்ளிவிவரம் காட்டும் உண்மையை அறிந்து அதனைப்பற்றி எந்த கவலையும் படாமல் இயல்