இடுகைகள்

விற்பனை மற்றும் ஆராய்ச்சி உலகில் புகழ்பெற்ற ப்ரீத்தி ரெட்டி !

படம்
                                    ப்ரீத்தி ரெட்டி   ப்ரீத்தி ரெட்டி இயக்குநர், காந்தார் சவுத் ஆசியா ப்ரீத்தி ரெட்டி விற்பனை மற்றும் ஆராய்ச்சி உலகில் புகழ்பெற்றவர். இவர் மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகிய துறைகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வருகிறார். இந்த நிறுவனத்திற்கு முன்னர் மைண்ட்ஸ்கேப், டிஎன்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்களில் துணைத்தலைவர் பதவியை வகித்துள்ளார். சிஐஐ வணிக அமைப்பின் பெண்கள் பிரிவு தலைவராக செயல்பட்டுள்ளார். உலகம் முழுக்க இந்த நிறுவனத்திற்கு 28 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். மொத்தம் 90 சந்தைகளில் இவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதில் வருமானம் அடிப்படையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு ப்ரீத்தி ரெட்டியின் தலைமைத்துவம் முக்கியமான காரணம், காந்தார் நிறுவனம், மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை கண்டுபிடித்து ஆய்வுகள் நடத்தி நிறுவனங்களுக்கு அறிக்கை அளிக்கிறது. இதன்மூலம் அந்த நிறுவனங்கள் தங்களின் விற்பனைப்போக்கு அணுகுமுறைகளை மாற்றிக்கொள்கின்றன. இந்த வகையில் காந்தார் நிறுவனத்தை வெற்றிகரமாக செலூத்தி வருகிறார் ப்ரீத்தி ரெட்டி.  

டைட்டன் பிராண்டை மகத்தான வெற்றி பெறச்செய்தவர் சுபர்ணா மித்ரா!

படம்
                                  சுபர்ணா மித்ரா     சுபர்ணா மித்ரா இயக்குநர், வாட்சுகள் அணிகலன்கள் பிரிவு, டைட்டன் அண்மையில்தான் சுபர்ணா மித்ரா நிறுவனத்தின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். இதற்கு முன்னர். விற்பனை விநியோகப் பிரிவின் தலைவராக இருந்தார். டைட்டன் நிறுவனத்தின் விற்பனை பொது தலைவர், ஆசிய பசிபிக் பகுதி தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகுத்துள்ளவர் இவர்.  டைட்டன் நிறுவனத்தின் வாட்சுகள், அணிகலன்களின் விற்பனை பொறுப்பு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சுபர்ணாவின் தலைமையில்தான் நடக்கிறது. டைட்டனின் ராகா, நெபுலா, ஸ்விஸ் பிராண்டான ஸைலஸ் ஆகிய பிராண்டுகளையும் விற்பனை செய்து நிறுவனம் வளர்ச்சி பெற உதவியுள்ளார். இந்துஸ்தான் யுனிலீவர், அரவிந்த் பிராண்ட்ஸ், தஸ்லிமா கார்ப் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். அனைத்திலும் விற்பனை விநியோகம் சார்ந்த வேலைகள்தான். டைட்டன் பிராண்டை புதுப்பித்து சோனாட்டா பிராண்டில் ஆக்ட் எனும் வாட்சை உருவாக்கி விற்பனை செய்து சாதனை செய்துள்ளார். ஜூப், ஆக்டேன் ஆகிய பிராண்டுகளை உருவாக்கி வியட்நாம், சிங்கப்பூர், அரபு அமீரகம் ஆகியவற்றில் பிராண்டை மகத்தான வெற்றி பெற

400க்கும் மேற்பட்ட பிராண்டுகளை அறிமுகப்படுத்திய பெண்மணி! நந்தினி டயஸ், லோட்ஸ்டர் யுஎம் இந்தியா

படம்
    நந்தினி டயஸ், லோட்ஸ்டர் யுஎம் இந்தியா       இம்பேக்ட் 50! சாதனைப்பெண்கள் நந்தினி டயஸ் லோட்ஸ்டர் யுஎம் இந்தியா நந்தினி லோட்ஸ்டர் யுஎம் இந்தியாவின் இயக்குநராக 400க்கும் மேற்பட்ட பிராண்டுகளை விளம்பரப்படுத்தி அதனை மக்கள் மனதில் பதியவைத்துள்ளார். அமுல், மகிந்திரா, டாடா, பிஎம்டபிள்யூ, மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களுக்காக விளம்பரங்களை உருவாக்கியுள்ளார். மேலும் எஃப்சிபி கம்யூனிகேஷன் என்ற நிறுவனத்தை உருவாக்கி ஊடகங்களுக்கான முதலீடுகளைப் பெறும் வகையில்  உழைத்தார். பிராண்டுகளுக்கான அனுபவம், பிரபலங்களுக்கான விளம்பர பணிகள் என பல்வேறு துறைகளில் நந்தினி வேலை செய்துள்ளார். 2018ஆம் ஆண்டு தனது நிறுவனத்திற்கு சிறந்த நிறுவனம் என்ற பெயரை வாங்கிக்கொடுத்துள்ளார். மேலும், டைம்ஸ் பவர் வுமன், கேம் சேஞ்சர் ஆகிய விருதுகளைப் பெற்றார். கேன்ஸ், ஸ்பைக், ஃபோமா என பல்வேறு விழாக்களில் விருதுகளை வென்றுள்ளார். இவரது தலைமையின் கீழ் லோட்ஸ்டர் யுஎம் இந்தியா நிறைய விளம்பரங்கள்ப் பெற்று வளர்ச்சி அடைந்துள்ளது. 33 சதவீத வளர்ச்சி பெற்று சந்தையில் 10 சதவீத பங்களிப்பை பெற்றுள்ள நிறுவனம் இது.  

5 கோடிக்கு மேல் சொத்துமதிப்பு இருந்தால் அதுதான் எலைட் கல்யாணம்! - இந்தியாவில் பரபரக்கும் கல்யாண பிசினஸ்

படம்
    yaastudio/vinodh       கல்யாணம் செய்வது என்பதைச் செய்ய சிலர் கொரானோ சரியான காலம் என்று தேர்ந்தெடுத்து வருகிறார்கள். ஆனால் பலரும் கல்யாணம் கிராண்டாக நிறைய செலவு செய்து நடைபெறவேண்டும். கல்யாணத்திற்கு வருபவர்கள் பலரும் ஆச்சரியப்படவேண்டும் என்றே நினைக்கிறார்கள். அதற்கு நிறைய நிறுவனங்கள் ஏற்றாற்போல செயல்பட்டு வருகின்றன. அப்படி ஒரு நிறுவனத்தைப் பார்க்கப் போகிறோம். குஜராத்திலுள்ள அகமதாபாத் நகரைச் சேர்ந்த அல்ட்ரா ரிச், என்ற நிறுவனம் குறைந்த பட்சம் ஒருவரின் சொத்து மதிப்பு 15 கோடி உள்ளவர்களை மட்டுமே தேர்வு செய்து கல்யாணம் செய்து வைத்து வருகிறார். இப்படி கல்யாணம் செய்பவர்களை இவர் கண்டறியவது, வாய்மொ்ழி விளம்பரம் வழியாகத்தான். ஆனால் யாருடைய பெயரையும் சொல்லவேமாட்டேன் என்று சொல்லிவிட்டார் கோஸ்வாமி. இவர்களுடைய திருமணம் நிறைய கடினமான சூழல்களை தாண்டி வரும். சாதாரண திருமணங்களைப் போன்ற விஷயங்களில் இதில் நடைபெறாது என்கிறார் கோஸ்வாமி. ஒரு திருமணத்திற்கான வரன்களைப் பார்த்து தருவது அதற்கான ஏற்பாடுகளை் ச் செய்வது ஆகியவற்றுக்கு கோஸ்வாமி 5 லட்சம் ரூபாய் வாங்குகிறார்.இங்கு நாம் குறிப்பிட்டுள்ள தொகை கல்யாண தரப

உலகை காக்க சூப்பர்ஹீரோக்கள் எடுக்கும் அதிர்ச்சி தரும் முடிவு! - வாட்ச்மேன் 2009

படம்
            வாட்ச்மேன் Directed by Zack Snyder Written by David Hayter Alex Tse Based on Watchmen by Dave Gibbons Alan Moore Music by Tyler Bates Cinematography Larry Fong     டிசி காமிக்ஸின் அடர்த்தியான அரசியல் பேசும் படம். மார்வெல் ஃபேன்டசியான உலகை உருவாக்கி ஏராளமான சூப்பர் நேச்சுரல் திறன் கொண்ட ஆட்கள் அதில் உள்ளே இருப்பதாக காட்டுவார்கள். டிசி முழுக்க சாதாரண மனிதர்களை வைத்தே உலக அரசியலைப் பேச வைத்திருக்கிறார்கள். படம் 3 மணிநேரம் 35 நிமிடம் ஓடுகிறது என்பதால் பொறுமையாக பார்க்க முடிபவர்கள்தான் பார்க்கவேண்டும். அதிரடியான திருப்பம் வேண்டும் என்பவர்கள் வேறு படத்தைத்தான் பார்க்கவேண்டும். முதல், இரண்டாம் உலகப்போர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த சூப்பர் ஹீரோக்கள் பங்கேற்கிறார்கள். அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் பனிப்போர் நிகழும் காலகட்டம். அப்போது சூப்பர் ஹீரோக்களை யாரும் தேடவில்லை. அவர்களை மக்களும் எதிர்க்கிறார்கள்.  பின்னாளில் அவர்களுக்கு வயதாகிறது. மெல்ல சூழலைப் புரிந்துகொண்டு அனைவரும் ஒதுங்குகிறார்கள். இரவு ஆந்தை,  ஓஸ்மாண்டிஸ் , ரோச்சார்க் என மூவர் மட்டுமே இக்காகட்டத்திலும் நாயகர்களாக வலம்

தொழிலதிபரின் மகனை மீட்க போராடும் பாடிகார்டுகள்! - சைகான் பாடிகார்ட்ஸ் 2016 கொரியா

படம்
          சைகான் பாடிகார்ட்ஸ் 2016 Director: Ken Ochiai Writers: Ken Ochiai (story), Michael Thai (screenplay) |   Stars: Thai Hoa , Kim Ly , Chi Pu | See full cast & crew  » இரண்டு காமெடியான பாடிகார்ட்ஸ் சீரியசாக வேலைபார்த்து லீ மில்க் கம்பெனியின் புதிய இயக்குநராகும் இளைஞரை எப்படி எதிரிகளிடமிருந்து காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. இரண்டு பேர் நாயகர்களாக நடித்தால் என்னவிதமாக டெம்பிளேட்டை பயன்படுத்துவார்கள். ஒருவர் வேலையில் சீரியசாக இருப்பார். இன்னொருவர் அனைத்தையும் சொதப்பி வைத்தபடி பேசிக்கொண்டே இருப்பார். இந்த கதையிலும் அதேதான். சைகான் பாடிகார்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் இரண்டுபேர். வேலையில் ஆட்களை பாதுகாப்பதை விட போகும் இடமெல்லாம் கடைகளை, பார்களை உடைத்து அதற்கு கம்பெனியை பில் கட்ட வைப்பதுதான் வேலை, ஹாபி எல்லாமே. இந்த நிலையில் இவர்களையும் நம்பி லீ மில்க் என்ற கம்பெனி ஒனரின் இளம் வயது மகனை பாதுகாக்கும் அசைன்ட்மென்ட் வருகிறது. அதுவும் ஏஜெண்ட் ஒருவரின் தங்கை மூலம். அந்த தங்கையை அண்ணனின் நண்பராக மற்றொர

டவர்ஸ்கை என்ற கட்டடத்திற்குள் நேரும் விபத்து, அதைச்சுற்றிய உள்ளே வெளியே விளையாட்டு! - தி டவர் - கொரியா

படம்
            தி டவர்  இயக்குநர், இசை, ஒளிப்பதிவு பல மாடிக் கட்டிடம். கிறிஸ்மஸ் அன்று, ஏராளமான மக்கள் அங்கு ஒன்றுகூடுகிறார்கள். அங்கு மக்கள் வாழிடம், ஆபீஸ் என அனைத்தும் உண்டு. அங்கு பூ தூவுவதற்காக வரும் சாப்பர்  திடீரென கட்டிடத்தின் மீது மோதுகிறது. அங்குள்ள மக்களின் நிலை என்னாகிறது என்பதுதான் படம்.. படத்தின் ஹீரோ என்று யாரை சொல்வது? தீயணைப்புத்துறை கேப்டனாக நடித்துள்ளவரை சொல்லலாம். அவர்தான் இறுதியில் உயிரை நைவேத்தியமாக்கி மக்களை காப்பாற்றுகிறார். இத்தனைக்கும் அவரது மேலதிகாரி கூட மக்களை காப்பாற்ற நினைக்கவில்லை. ஆனால் குழு தலைவராக மக்கள் தான் முக்கியம் என நின்று சாதிக்கிறார். இத்தனைக்கும் கிறிஸ்மஸ் கேக்கை மாலையில் வாங்கிக்கொள்கிறேன் என்று ஆர்டர் செய்துவிட்டு வேலைக்கு வந்தவர். இறுதியில் அஞ்சலிக்கு உடல் கூட கிடைக்காமல் போகிறது. கதைக்குள் ஆழமாக போய்விட்டோம். மனைவியில்லாத செக்யூரிட்டி ஆபீசர், கட்டிட நிர்வாகியான பெண்ணை காதலிக்கிறார் அவரும்தான். ஆனால் இருவரும் சொல்லிக்கொள்வதில்லை. செக்யூரிட்டி ஆபீசரின் மகள்தான் காதல் தூதராக இருவரையும் சேர்த்து வைக்கிறார். உலகில் தன்னுடைய நாயைத்தவிர முக்கியமானது