சேட்டன் பகத்தின் What young india wants
சேட்டன் பகத்தின் What young india wants நூலில் உள்ள Youth பகுதியின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘இளைஞர்களின் இந்தியா’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. ஆக்கம்: வின்சென்ட் காபோ 3 கல்வி இல்லாமை தேவையில்லை குடிமக்கள் அனைவரும் கண்டிப்பான ஆசிரியர்களாக மாறி, தலைவர்களுக்கு பல்வேறு வீட்டுப்பாடங்களை செய்யுமாறு வற்புறுத்தவேண்டும். மனிதவளத்துறை புள்ளிவிவரங்கள் தேசிய அளவிலான தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சியடைந்துள்ளதை விரிவாக காட்டுகிறது. மக்கள்தொகையில் குழந்தைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதைப்பார்த்தால் முடிவுகள் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு இந்தியருக்கும் கல்வி என்ற விஷயத்தில் இன்னும் இரைச்சல்கள் நம்மிடையே குறையவில்லை. நம் நாட்டின் மேம்பட்ட வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் இந்த புள்ளிவிவரம் காட்டும் உண்மையை அறிந்து அதனைப்பற்றி எந்த கவலையும் படாமல் இயல்