இடுகைகள்

நேர்காணல்:"நில நடுக்கங்களை முன்கூட்டியே தடுக்க முடியும்"

படம்
" நில நடுக்கங்களை முன்கூட்டியே தடுக்க முடியும் " நேர்காணல் : ஜெயன் பெருமாள் , நிலநடுக்க ஆய்வாளர் தமிழில் : ச . அன்பரசு ஜெயன் பெருமாள் டேராடூனின் வாடியா புவியியல் ஆய்வை மையத்தில் பணிபுரியும் நிலநடுக்க ஆய்வாளர் . இமாலயத்தில் ஏற்படும் புவியியல் மாறுதல்களை செயற்கைக்கோள் , ஜிபிஎஸ் மூலம் கண்காணித்து வருகிறார் . சென்னை பிரசிடென்சி கல்லூரியில் புவியியல் முதுகலைப்பட்டம் பெற்ற பெருமாள் , முனைவர் பட்டம் பெற்றபின் 4 ஆண்டுகள் சுரங்க புவியியலாளராக பணியாற்றியவர் , 2002 ஆம் ஆண்டிலிருந்து வாடியா ஆய்வுமையத்தில் பணி . தற்போது அமெரிக்க குழுக்களோடு இணைந்து ஆய்வுப்பணி செய்யும் பெருமாளோடு உரையாடினோம் . நிலநடுக்க ஆய்வு என்பது எந்தவகையில் முக்கியமானது ? இமாலயத்தின் நிலத்தட்டு இந்தியாவில் மிக வேகமாக மாறும் தட்டுகள் என்பதால் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது . மக்களின் அடர்த்தியும் , விவசாயமும் இங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதும் , திட்டமிடப்படாத கட்டிட அமைப்பும் நிலநடுக்க அபாயத்தை அதிகரிக்கின்றன . ந

"நாஸ்காமைப் பற்றிய வதந்திகள் உண்மையல்ல"

படம்
" நாஸ்காமைப் பற்றிய வதந்திகள் உண்மையல்ல " நேர்காணல் : நாஸ்காம் தலைவர் ஆர் . சந்திரசேகர் தமிழில் : அன்பரசு ஐ . டி துறையில் வெளியேற்றப்படவிருக்கும் ஊழியர்களின் வேலையிழப்பை பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் ? நான் அதனை ஐ . டியின் வீழ்ச்சி என்றோ , வேலையிழப்பு என்றோ கூற மாட்டேன் . இது ஒரு மறுநிர்மாணம் நிகழ்வு அவ்வளவே . குறைவோ , அதிகமோ தொழில்நுட்பத்துறையில் இது மெதுவாகவேனும் நடப்பதை தவிர்க்க முடியாது . கடந்த மூன்று ஆண்டுகளில் இத்துறையில் 6 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் . 2017 ஆம் ஆண்டின் காலாண்டில் 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் . அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் 2 லட்சம் பேர் தம் வேலையை இழக்கவிருக்கின்றனர் . இது தொடர்ச்சியாக நடந்து வரும் நிகழ்வுதான் . அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் வேலையிழப்பு உண்டு . தற்போது இதில் அரசியல் நுழைவதுதான் நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது .   வேலையிழப்பை சந்திக்கும் ஊழியர்களை பதிவு செய்யும் டேட்டா பதிவேடு ஒன்றை நாஸ்காம் வைத்திருக்கிறதா ? உண்மையில் அது வெளிப்படையாக தன்மை கொண்டதா ? வெளியுலகில் எப்படி நாஸ

முத்தாரம் ஸ்பெஷல்ஸ்- தொகுப்பு: பெல்லம் தேவி

படம்
உப்பில் பிளாஸ்டிக் ! குடிநீர் குழாயில் பிளாஸ்டிக் கலந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உறுதி செய்த நிலையில் , தற்போது கடல்நீரில் அதிகரிக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்கினால் உப்பு மாசுபட்டு வருகிறது என இங்கிலாந்து , சீனா , ஸ்பெயின் , பிரான்ஸ் , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கண்டுபிடித்துள்ளனர் . உலகிலுள்ள கடலில் 12.7 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்துள்ளது என்கிற ஆய்வுத்தகவல் அலற வைக்கிறது . ஒவ்வொரு ஆண்டும் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு இது . ஒரு நிமிடத்திற்கு ஒரு குப்பை லாரி கழிவு கடலில் கொட்டப்படுகிறது என்கிறது ஐநா சபை . 2.3 கிராம் உப்பில் 660 எனும் அளவில் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளதையும் , 90% அமெரிக்கர்கள் அதிகளவு உப்பை சேர்த்துக்கொள்வதும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . " பிளாஸ்டிக் கலப்படமான உப்பு மனிதர்களை மட்டுமல்ல சூழலையும் சேர்த்து கெடுக்கிறது " என்கிறார் நியூயார்க் மாநில பல்கலையைச் சேர்ந்த ஷெரி மாசன் . பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட 21 வகை உப்புகளிலிருந்து பெறப்பட உப்புகளிலும் இருந்த பிளாஸ்டி

முத்தாரம் ஸபெஷல்ஸ்! தொகுப்பு - விக்டர் காமெஸி

படம்
தீவிரவாத தாக்குதல்கள் ! கடந்த மூன்று ஆண்டுகளில் ஐரோப்பா மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை 420. பெல்ஜியம் , ஃபிரான்ஸ் , ஆஸ்திரியா , ஜெர்மனி , இங்கிலாந்து , ஃபின்லாந்து ஆகியவற்றில் புதிதாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன . தாக்குதலை 74% அரசு முன்னே அறிந்திருந்தது . தீவிரவாதிகளில் 50% குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் . இதில் 26% முன்னமே சிறைதண்டனை பெற்றவர்கள் . 64%  பேர் சொந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் . தீவிரவாதிகளின் குறைந்தபட்ச வயது 15, அதிகபட்ச வயது 56. தாக்குதல் நடத்தியவர்களின் சராசரி வயது 27. தாக்குதலுக்குள்ளான நாடுகள் அகதிகளின் குடியேற்றத்தை குறைக்கும் விதிகளை இயற்றுவது எதிர்காலத்தில் நிகழலாம் . ஹிட்லர் நல்ல நோக்கம் கொண்டவரா ? " ஹிட்லர் யூதர்களை கொன்றார் என்ற ஒரே காரணத்திற்காக அவரது நோக்கத்தை தவறு என்று கூறிவிட முடியாது " என புது சர்ச்சையை கிளப்பியுள்ளார் ஜப்பானின் நிதியமைச்சரான தாரோ ஆஸோ . தாரோ ஆஸோ இந்த தத்துவ முத்தை உதிர்த்தது  லிபரல் ஜனநாயக கட்சி மீட்டிங்கில் . எதிர்ப்புகளும் கண்டனங்களும் திகுதிகுவென க