இடுகைகள்

டீ பேகை அழுத்திப் பிழிந்து குடித்தால் என்னாகும்?

படம்
giphy மிஸ்டர் ரோனி க்ரீன் டீ குடிக்கும்போது டீ பேக்கை சிலர் மெதுவாக நனைத்து எடுக்கிறார்கள். சிலர் அதனை கையில் வைத்து பிழிகிறார்கள். இது ஆபத்தானதா? துணியைக்கூட இறுக்கமாக வைத்து பிழியாதீர்கள். ஆயுள் குறையும் என துணிக்கம்பெனி சொல்கிறார்கள். அதற்காக வேலைக்காரர்கள் என்ன இலவம் பஞ்சையா வைத்து தேய்த்து அழுக்கை நீக்குகிறார்கள். அடித்து பிழிகிறார்கள் அல்லவா? அப்புறம் என்ன? டீ பேக்கை அப்படி விரல்களால் கசக்கி பிழிந்தால் என்னாகும் தெரியுமா? அதிலுள்ள டானின் எனும் மஞ்சள் நிற அமிலம் டீயில் அதிகம் கலக்கும். கசப்புச்சுவை அதிகரிக்கும். இது ஒன்றும் உங்களுக்கு பெரிய ஆபத்தை கொண்டு வந்து சேர்க்காது. பயப்படாதீர்கள். நன்றி: பிபிசி 

உடல் களைத்து தளர்ந்து தூங்குகிறீர்களா?

படம்
மிஸ்டர் ரோனி மிகவும் உடல் தளர்ந்து சோர்ந்து தூங்குவது சாத்தியமா? கணக்கு பாடத்தின் முதல் அத்தியாயத்தைப் பார்த்தாலே தலை கிறுகிறுவென்று ஆகி படுத்து தூங்கியவனைப் பார்த்து இந்தக்கேள்வி. பொதுவாக நமக்கு ஐம்புலன்கள் பகலில் வேலை செய்யும். அதில் சிலருக்கு பாரபட்சமாக சில உறுப்புகள் வேலை செய்யப்பட திறன்கள் மாறும். ஆனால் இயல்பாக கண்கள் சோர்ந்து போனால், மூளை படுத்துவிடும். உடனே ரேடியேட்டருக்கு தண்ணீர் ஊற்றுவது போல எதையும் செய்ய முடியாது. உடனே தூங்கிப்போனால் உடல் புத்துணர்ச்சியோடு எழும். அப்போது உணவு, தண்ணீர் கூட உடலுக்கு தேவைப்படாது. பேய்த்தூக்கம் போல சிலர் தூங்குவார்கள். மிகவும் உடல் தளர்ந்து தூங்குவது என்பது அரிசி மூட்டை தூக்குவது, பழக்கமின்றி திருவண்ணாமலை கிரிவலம் சுற்றுவது போன்றவை செய்தால் நிச்சயம் கடுமையாக சோர்ந்து போய் தூக்கம் வரும். நன்றி - பிபிசி

ஏ டூ இசட் இந்தியா எப்படி இருக்கும்?

படம்
அரசியலமைப்புச் சட்டத்தில் ஏ முதல் இசட் வரையில் பல்வேறு அர்த்தங்கள் உண்டு. அவற்றை நாம் இப்போது பார்ப்போம். இவை மிகச்சரியானவையா என்பதைவிட சரியாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதே முக்கியம். ஏ –அம்பேத்கர் காந்தியின் மென்மையான இந்துத்துவத்திற்கு எதிராக போராடி சேகுவேரா. இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த குழுவின் தலைவர். அவர் ஏற்ற அரசியல் பணிகளிலும் தன் கருத்தை உள்ளே நுழைத்து சமூகத்தில் அனைவருக்குமான இடத்தை உறுதி செய்தார். தன் அரசியல் பணிகளுக்கு இடையில் ஏராளமாக எழுதியவர். பி – பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார். ஆனால் இதுபற்றிய எந்த ஆர்வமும் மக்களுக்கு கிடையாது. ஏனெனில் வெங்காயம் விலை ஏறியதிலிருந்து பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் வரை அம்மணி பேசிய அரிய கருத்துக்களை அவரது கட்சியினரே சகித்துக் கொள்ள முடியவில்லை. சட்டப்பிரிவு 112, இதனை ஆண்டுதோறும் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கை என்கிறது. இதனால் என்ன பயன்? பட்ஜெட் தயாரிப்பு அறிக்கை முடிந்தபின் அல்வா கிண்டி சாப்பிடுவார்கள். அதே அல்வாவில் மிஞ்சியதை மக்களுக்கு கொடு

மனிதர்களின் கண்களில் மாற்றம் ஏற்பட்டது எப்படி?

படம்
மிஸ்டர் ரோனி பாலூட்டிகளின் கண்களில் வெள்ளை நிறம் அதிகம் இருப்பதில்லை. ஆனால் நமது கண்களில் வெள்ளை நிறம் அதிகமாக  இருக்கிறது. என்ன காரணம்? பொதுவாக கூடி வேட்டையாடும் விலங்குகள் தமக்குள் செய்திகளை பரிமாறிக்கொள்ள இந்த வெள்ளை நிற சங்கதியை பயன்படுத்திக்கொள்கின்றன. பிற பாலூட்டிகளுக்கு இந்த நிறம் குறைவாக இருப்பதன் காரணம், பரிணாம வளர்ச்சிதான். புலி, சிங்கம்  போன்றவை தனியாக வேட்டையாடும். ஆனால் ஓநாய்கள் கூட்டாக வேட்டையாடும். இந்நேரங்களில் சின்ன சின்ன ஒலிகள், ஊளைகள் என சிக்னல்கள் கொடுத்து வேட்டையாடப் பாயும். இதில் மூத்த ஓநாய்களின் அறிவுரைப்படி இளைய ஓநாய்கள் ஆட்டு மந்தைகளை கொல்லும். பரிணாம வளர்ச்சி பங்காளிகளான மனிதக்குரங்களுக்கு கூட கண்களில் வெள்ளைநிறத் தன்மை குறைவுதான். இதனை உறுதியாக இப்படித்தான் என உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இன்று நம்மிடையே மிக குறைவாக உள்ளன. நன்றி - பிபிசி

மருத்துவமனைக்குள் பேய்! - நந்தினி நர்சிங் ஹோம் படம் எப்படி?

படம்
நந்தினி நர்சிங் ஹோம் - தெலுங்கு இயக்கம் - பிவி கிரி இசை- அச்சு, சேகர் சந்திரா சந்து ஊரில் எம்பிஏ படித்துவிட்டு வேலை தேடி நகருக்கு வருகிறார். வருகிற இடத்தில் மருத்துவமனையில் வேலை கிடைக்கிறது. அப்போது எம்பிஏக்கு பதில் எம்பிபிஎஸ் ரெஸ்யூமில் எழுத்துகள் மாற பிரச்னைகள் தொடங்குகிறது. ஜூனியர் டாக்டராக அவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். தன் நண்பர் மூலம் எப்படியோ சமாளித்து வேலை செய்கிறார். ஆனால் மருத்துவர் என்றால் அடிப்படையே தெரியாமல் உள்ளவர் எப்படி சமாளிக்கிறார்? அங்கு அவருக்கு மருத்துவமனை நிர்வாகி மீது காதல் வருகிறது. காசுதான் முக்கியம் முதல் காதல் காசுக்காக புட்டுக்கொண்டு விட்டது. இதுவும் அப்படி ஆக கூடாது என சந்து நினைக்கிறார். இதற்கிடையில் மருத்துவமனையில் மர்ம நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்குகின்றன. அதனை சந்து உணர்ந்தாரா என்பதுதான் கதை. ஆஹா படத்தில் பெரும்பலம் வெண்ணிலா கிஷோர், சப்தகிரியின் காமெடிக் காட்சிகள்தான். மற்றபடி நாயகி, நாயகன் நடிக்க வாய்ப்பு குறைவு. படத்தின் பாடல்கள் கேட்க கேட்கத்தான் பிடிக்கும். மோசம் படத்தின் நீளம். தக்கனூன்டு கதையை வைத்துக்கொண்டு எவ்வளவு  தூரத்தி

எலிகள் பற்றி நமக்கு என்ன தெரியும்?

படம்
தெரிஞ்சுக்கோ - எலிகள் எலிகள் என்றால் டிஸ்னியின் எலிகள் நினைவுக்கு வருகிறதா? அல்லது அறுவடை காலத்தில் நெற்கதிர்களை திருடி வைத்து பஞ்சத்தை உருவாக்குகிறது. பிளேக் போன்ற நோய்களை உருவாக்குகிறது. நாய்களைப் போலவே நம் காலுக்கடியில் குறுக்கும் மறுக்குமாக ஓடினாலும் எலிகளைப் பற்றி நாம் அறிந்தது மிக குறைவுதான். கஷ்டமோ நஷ்டமோ அத்தனை பிரச்னைகளையும் கடந்து குட்டி போட்டு ரேஷன் கார்டு வாங்காமல் அடுத்தவன் சோற்றில் கைவைத்து பிழைத்து வாழும் எலியை மக்கள் மறக்கவே முடியாது. ஜெனஸ் ராட்டுஸ் இனத்தில் பழுப்பு நிற எலிகள் உட்பட 51 இனங்கள் உண்டு. இவை ஒவ்வொன்றும் உடலில் செயலில் மாறுபட்டவை. பழுப்பு நிற எலியின் எடை 0.8 கி.கி என பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பௌண்டு எடை கொண்ட எலியை யாராவது பார்த்து பதிவு செய்தால் 500 டாலர்களை தான் பரிசளிப்பதாக ஆராய்ச்சியாளர் ராபர்ட் காரிகன் கூறியுள்ளார். சாதாரண எலி 2.5 செ.மீ. அளவுள்ள துளையை எலிகள் உருவாக்குகின்றன. எலிகள் பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரைகள் ஒரு மணிநேரத்திற்கு ஒன்று என்று என உலகம் முழுக்க வெளியாகி வருகின்றன. ஆப்பிரிக்க வயல்களில் எலிகள் ஏறத்தாழ 15 சதவ

கலாசாரத்தை காக்கும் மனவாடுகள் ஸ்ரீனிவாச கல்யாணம்

படம்
ஸ்ரீனிவாச கல்யாணம் இயக்கம் - சதீஸ் வகீஸ்னா ஒளிப்பதிவு - சமீர் ரெட்டி இசை - மிக்கி ஜே மேயர் கலாசாரம், பாரம்பரியம் என வாழும் ஒருவரின் வாழ்க்கை. ஷெட்யூல் போட்டு வாழும் தொழிலதிபரோடு முட்டிக்கொண்டால் என்னாகும்? இதுதான் கதை. ஆஹா தெலுங்கு கலாசாரம் விரும்புவர்களுக்கான படம் இது. அனைத்து பிரச்னைகளையும் ஸ்ரீனிவாசன் பேசியே சமாளிக்கிறார். இதுவே நாயகி ஸ்ரீக்கு பிடித்தமானதாக இருக்கிறது. மேலும் அவரின் பெரிய குடும்பத்தோடு அவருக்கு இருக்கும் அப்டேட், ஸ்ரீக்கு ஸ்ரீனிவாசனின் மீது பொறாமையை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அவரது குடும்பம் தொழில், வருமானம் ஆகியவற்றுக்கு மட்டும் கைதட்டி மகிழும். இந்த வேறுபாட்டை நன்றாக விளக்கி எது வாழ்க்கை என்று சொல்லி இருக்கிறார்கள். படத்தை உறுத்தலின்றி நிதானமாக பார்க்கலாம். நிதின், ராசி கண்ணா, பிரகாஷ்ராஜ், ராஜேந்திர பிரசாத் நன்றாக நடித்திருக்கிறார்கள். ஐயையோ படம் மெதுவாகவே நடக்கிறது. ஸ்ரீனிவாச கல்யாணம் என்பதால் சடங்கு நடைபெறும் வேகத்தில் படத்தை அழைத்து சென்றால் எப்படி? கிராமம் என்றால் சாணி தட்டுவதை ஏன் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. நந்தி