இடுகைகள்

குறைந்த வாடிக்கையாளர்கள் மூலம் அதிக வருமானம் பெறுவோம்! - நோயல் டாடா

படம்
நோயல் டாடா டிரெண்ட், வோல்டாஸ் நிறுவனத் தலைவர் டிரெண்ட் நிறுவனத்தின் வருவாய் 85 சதவீத வருவாய், வெஸ்ட்சைட் மற்றும் பிற லேபிள்கள் மூலம்தான் கிடைக்கிறது அல்லவா? நாங்கள் எங்களுடைய நிறுவனத்தின் பிராண்டுகளை அதிகம் காட்சிபடுத்தவிருக்கிறோம். இவை பிற நிறுவனங்களின் பொருட்களிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். பெருந்தொற்று பாதிப்பு முடிவுற்றபிறகு நிறைய கடைகள் டிரெண்ட் மெ பெயரில் திறக்கவிருக்கிறோம். பெருந்தொற்று பாதிப்பால் விற்பனை மையங்களில் ஏதேனும் மாற்றங்களை செய்யவிருக்கிறீர்களா? பலவீனமான பிராண்டுகளை இனி கடைகளில் விற்கவேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம். பெருந்தொற்று காரணமாக நிறைய கடைகளை அடைக்க நேர்ந்துள்ளது. இந்தியாவில் இவணிக வலைத்தளங்களின் வளர்ச்சி 6 சதவீதம்தான் உள்ளது. எனவே, கோவிட் -19 க்கும்பிறகு கடைகளும், இவணிக நிறுவனங்களும் சேர்ந்து வளர வாய்ப்புள்ளது. கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக வாடிக்கையாளர்கள் செலவு செய்வது குறைந்துள்ளது பற்றி உங்களது கருத்து என்ன? இப்போது ஏற்பட்டுள்ள நிலை தற்காலிகமானதுதான். வேலையிழப்பு, எதிர்காலம் குறித்த கவலை ஆகியவை மக்களை குறைவாக செலவழிக்க வைத்துள்ளது. ந

தற்சார்புக்காக அதிக செலவுகளை செய்ய, சேமிப்புகளை கரைக்க தயாராக இருக்கிறீர்களா? - ரதின் ராய்

படம்
பிஸினஸ் ஸ்டாண்டர்டு ரதின் ராய், பொது பொருளாதாரம் மற்றும் கொள்கை அமைப்பு தலைவர் ரதின்ராய், மேற்சொன்ன அமைப்பின் தலைவராக இருந்து வரும் ஆகஸ்ட் மாதம் பதவியைவிட்டு விலகுகிறார். இவருடைய பதவிக்கு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் வரவிருக்கிறார். பிரதமர் மோடிக்கு ஆலோசகராக இருந்த ரதின்ராயின் அடுத்த திட்டம், இந்தியா சீனாவை விட குறைந்த செலவில் பொருட்களை தயாரித்து தர முடியுமா, இந்தியாவின் முன்னுள்ள அடுத்த திட்டங்கள், வாய்ப்புகள் என்னவென்று அவரிடம் பேசினோம். நீங்கள் பதவி விலகுவதற்கும், உர்ஜித் படேல் பதவி ஏற்பதற்குமான நிகழ்ச்சிகளை தற்செயல் என்று கூறலாமா? இந்த அமைப்பின் தலைவர் விஜய் கேல்கர். அவர் தலைவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டதற்கும், உர்ஜித் படேல் அந்த பதவிக்கு அறிவிக்கப்பட்டதற்கும், நான் பதவியை ராஜினாமா செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உர்ஜித் படேலை விட இப்பதவிக்கு வேறு யாரும் பொறுத்தமாக இருக்க முடியாது. உலகளவில் அவர் பிரபலமான ஆளுமை, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகிய அம்சங்கள் நம் முன் உள்ளன. அவர் பதவியேற்றபிறகு நான் பதவி விலகினால் கூட நீங்கள் அதற்குப் பின்னால் ஏதாவது கார

ஆப்ரோ அமெரிக்கர்களில் ஒருத்தி! - ரெஜினா கிங் - டைம் 2019

படம்
என்னை உணரவைத்த பெண்! ரெஜினா கிங் நான் சிறுமியாக இருந்து வளரும்போது ஆப்ரோ அமெரிக்கர்கள் நடித்த பல்வேறு தொடர்களைப் பார்த்துள்ளேன். ஆமென், 227, குட் டைம்ஸ் ஆகியவை முக்கியமானவை. அதில் 227 தொடரில் நடித்த ரெஜினா கிங், பிரெண்டா ஜென்கின்ஸ் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் அமெரிக்காவில் உள்ள ஆப்ரோ அமெரிக்க இளம்பெண்ணின் தன்மைகளை அப்படியே உள்வாங்கி உருவாக்கப்பட்டிருந்தது. அவரும் பிரமாதமாக நடித்திருந்தார். அதில் என்னை நானே பார்ப்பது போல இருந்தது. அவரை குறிப்பிட்ட சில நிகழ்வுகளில் சந்தித்தபோது எனது குடும்பத்தில் உள்ள உறுப்பினரை சந்தித்து பேசியது போலவே இருந்தது. என்னை அப்படி உணரவைத்தார். அவர் தனது நடிப்பைக் கடந்து பிறரின் நடிப்பையும் பாராட்டி ஊக்குவிப்பவராக இருந்தார். மேலும் அவர் நடிகை என்பதைத் தாண்டி படத்தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியிருந்தார். அவர் இயக்குநரும் கூட. வணிக உலகில் ஆப்ரோ அமெரிக்கர்களை, பெண்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் மாற்றுவதற்கான முயற்சியில் அவர் இறங்கியிருந்தார். கூட்டுப்புழுவாக இருந்து உலகை பார்ப்பதிலிருந்து அவர் மாறி, வளர்ந்த பட்டாம்பூச்சியாக ம

இசைத்துறையில் சாதனை செய்த பாடகி! - அரியன்னா கிராண்டே - டைம் 2019

படம்
ஃபோர்ப்ஸ் குயில்பாட்டு அரியன்னா கிராண்டே நான் புயல், சூறாவளி போன்ற நிகழ்வுகளை எல்லாம் கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் அத்தனையிலும் நிஜமான பாடகியாக, மனுஷியாக அரியன்னா இருந்திருக்கிறார். மனிதர்களுக்கு ஏற்படும் சோகம், விரக்தி, மகிழ்ச்சி, கோபம் என அத்தனை உணர்ச்சி வெளிப்பாடுகளுடன் அரியன்னாவின் பாடல்களை மக்கள் கேட்கிறார்கள். ரசிக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள். மக்களை மனப்பூர்வமாக நேசிக்கும் இதயம் கொண்டுள்ளதால், அவர் பாடல்களை அனைவரும் இதயம் உருக கேட்டு வருகின்றனர். அவர் இசைத்துறையில் சாதனைகள் செய்துள்ளார். ஏறத்தாழ சில வாரங்கள் இடைவெளியில் தேங்க்யூ, நெக்ஸ்ட் என்ற இரு பாடல்களை எழுதி பாடி வென்றிருக்கிறார். அவர் அடுத்து என்ன பாடலை உருவாக்குவார் என்று ஆவலோடு நான் காத்திருக்கிறேன். ட்ரோய் சிவன் டைம்

மனிதநேயம் கொண்ட நடிகர் டிவைன் ஜாக்ஸன்! - கல் கடோட்- டைம் 2019

படம்
டிவைன் ஜாக்ஸன் ஹாலிவுட்டில் டிவைன் ஜாக்ஸனைப் போல பரபரப்பாக வேலை பார்க்கும் மனிதரைப் பார்ப்பது கடினம். அவரின் ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படம் பார்க்கும் போது அவர் உங்களின் மனதைக் கவரலாம். அவர் சினிமா படப்பிடிப்பின்போதும் பிறருடன் இலகுவாக பழகி சூழலை மகிழ்ச்சிகரமாக மாற்றுபவர்தான். தனது சினிமா பணியோடு டிவைன் ஜாக்ஸன் ராக் பௌண்டேஷனின் அறக்கட்டளைப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். காலம் உங்களை எப்படி நினைவுகூறும் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதையல்ல, அவர்களை எப்படி உணர வைத்தீர்கள் என்பதே நினைவுகூரவைக்கும். டிவைன் ஜாக்ஸன் அப்படி மக்களை உணரவைப்பதில் வல்லவராக இருக்கிறார். கல் கடோட் டைம்

வேட்பாளர்களின் தகவல்களை தவறு என்றால் வழக்கு போடுங்கள்! - தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா

படம்
தேர்தல் ஆணையர், சுஷில் சந்திரா இந்தியன் எக்ஸ்பிரஸ் ரித்திகா சோப்ரா வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிய விவரங்கள் தவறு என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று கூறியிருக்கிறீர்களே? நாட்டிலுள்ள ஜனநாயக முறைப்படி ஒருவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யும் விவரங்கள் உண்மையாக இருக்கவேண்டும். அவர் தவறான, பொய்யான விவரங்களை அளித்துள்ளார் என்று எங்களுக்கு தெரிய வந்து விசாரணை செய்து உறுதி செய்வோம். தொடர்புடைய அரசியல் கட்சிக்கும் அறிவிப்போம். பின்னர் வழக்கு தொடர்வோம். குற்றம் சாட்டப்பட்டவர் தான் தவறு செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை அளித்தால் அதனை ஏற்போம். அப்படியெனில் நீங்கள் நேரடியாக புகார், அதில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கு தொடரமாட்டீர்கள்? உண்மையில் வேட்பாளர் தனது விவரங்களை போலியாக உருவாக்கி ஆணையத்தை ஏமாற்ற முயல்வது உறுதியானால், களப்பணி அலுவலர் காவல்துறையில் புகாரை பதிவார். பின்னர், நீதிமன்றத்திற்கு இதனை எடுத்துச்செல்வோம். இதுமட்டுமன்றி, தனிநபராக கூட ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். அதனை நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம். ஜம்மு காஷ்மீரில் டீலிமிட

பெருந்தொற்றைப் பயன்படுத்தி இணையத் தாக்குதல்களை நடத்துகிறார்கள்!

படம்
பெருந்தொற்று பாதிக்காத நாடுகளை எளிதாக இணையத் தாக்குதல்களுக்கு உள்ளாக்க முடியும்! ராஜேஸ் மௌரியா, ஃபோர்டிநெட் அண்மையில் இணையத்தால் தாக்கப்பட்ட நாடுகள் பற்றிய செய்தியை எப்படி பார்க்கிறீர்கள்? இன்று அனைத்து நாடுகளும் கோவிட் -19 பாதிப்பால் பாதிக்கப்பட்டு சரியான மருத்துவப் பொருட்கள், சிகிச்சைகள், தனிமைப்படுத்தும் வசதிகள் இன்றி கஷ்டப்படுகின்றன. இந்த நேரத்தை இணையத்தாக்குதல்காரர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இப்போது உங்கள் மின்னஞ்சலுக்கு, யாரோ அனுப்பிய மின்னஞ்சல் வந்தால்கூட நிலைமையின் தீவிரத்தில் நீங்கள் அதனை திறந்து பார்த்துவிடும் வாய்ப்புள்ளது. அதனை யோசித்துப்பார்த்து திறக்கலாமா என முடிவு செய்வதற்கு கூட இப்போது பலருக்கும் நேரம் இல்லை என்பதே உண்மை. இந்த தாக்குதல் எப்படி தொடங்கியது? மின்னஞ்சல் வழியாக தொடங்கியது. இப்போது நாம் அனைவருமே இணையம் வழியாக பணிபுரிந்து வருகிறோம். இணையத்தில் விளையாடுகிறோம். படங்கள் பார்க்கிறோம். செய்திகளை அனுப்புகிறோம். நாள் முழுக்க பெரும்பகுதி நேரம் நாம் இணையத்தில் உள்ள சூழலில் போலியான பல்வேறு அமைப்புகளின் பேரில் மின்னஞ்சல்களை அனுப்பி தாக்குகிறார்கள் சைபர்

ஊரை துண்டு போடும் பெருந்தலைகளை வெட்டி பலிபோடும் அடியாள்! - யக்னம் -2004

படம்
கோபிசந்த் ஸ்பெஷல் யக்னம் -தெலுங்கு 2004 இயக்கம் ஏ.எஸ். ரவிகுமார் சௌத்ரி இசை மணிசர்மா ஒளிப்பதிவு சிஹெச் ரமணா ராஜூ கிராமத்தில் உள்ள   இருதலைவர்கள்(ரெட்டப்பா, நாயுடு) அந்த ஊரையே பகையால் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற அடிக்கடி ரகளை செய்து ரத்தக்களறியாக்குகின்றனர். இதில் ஒரு தலைவரின் வீட்டில் வேலைசெய்து வருபவரின் மகன் சீனு, தலைவரின் மகள் சைலஜா மீது பிரியமாக இருக்கிறான். இருவரும் ஒருநாள் தங்களின் குடும்பத்தோடு ஜீப்பில் போகும்போது, எதிரிகளின் சதியால் குண்டு வெடித்து அத்தனை பேரும் பொசுங்கிப் போகின்றனர். அதில் தப்புவது சிறுமி சைலஜாவும் சிறுவன் சீனுவும்தான். அமேஸான் ஜீப்பை ஒட்டிய தந்தையும் வெடிவிபத்தில் இறந்துபோனதால் அனாதையாகிறான் சீனு. தலைவரின் வீட்டையே தன் வீடாக்கிக் கொள்கிறான். அப்போதிலிருந்து சீனுவை மனதில் வைத்து ரசிக்கிறாள் சிறுமி சைலஜா. அவள் நகரத்தில் படிக்கும்போதும் அதே பப்பி லவ், வாய் வைத்து ஊதிய பலூன் போல பெரிதாகிக்கொ ண்டே போகிறது. தன் தோழிகளைக் கூட்டிக்கொண்டு காதலனைக் காட்ட ஊருக்கு வருகிறாள். ஊர் அப்போதும் அந்த இரு தலைவர்களால் பலர் செத்தும், குற்றுயிருமாக கிடக்கிறார்கள். இந்

சவால்களை சந்தித்து வளரும் திரைக்கலைஞர்- இந்தியா மூர்

படம்
இண்டியா மூர் அமெரிக்க நடிகர் இண்டியா அட்ரியானா மூர், அமெரிக்காவில் நியூயார்க்கிலுள்ள பிரான்க்ஸில் 1995ஆம் ஆண்டு பிறந்தவர். ஃபாக்ஸ் டிவியில் ஒளிபரப்பான போஸ் என்ற டிவி தொடரில் நடித்து புகழ்பெற்றார். இவர் மாற்றுப்பாலினத்தவர் ஆவார். ”நான் இண்டியாவுக்காக ஏஞ்சல் என்ற கதாபாத்திரத்தை எழுதியபோது, அவரைப் போன்ற மாற்றுப்பாலினத்தவருக்கான அங்கீகாரம் கிடைக்கவேண்டுமென மனமார நினைத்தேன். சிறுபான்மையின சமூகத்திலிருந்து மாற்றுப்பாலினத்தவரான இண்டியா நடிகராக, மாடலாக உயர்ந்து வருவது ஆச்சரியமானது. இதற்கு கடினமான உழைப்பு தேவைப்பட்டது” என்கிறார் எழுத்தாளரான ஜேனட் மாக். ஜேனட் மாக் டைம்  

அக்கறையுடன் உணவு சமைக்க கற்றுத் தரும் சமையற்கலைஞர்! - சமின் நொஸ்ரத்

படம்
தி கார்டியன் சமின் நொஸ்ரத், சமையற்கலைஞர். சமின் எழுதிய சால்ட், ஃபேட், ஆசிட் என்ற உணவு நூல் முக்கியமானது. இதோடு, இவரின் உணவு தயாரிப்பு பற்றிய நெட்பிளிக்ஸ் தொடரும் மக்களால் விரும்பி பார்க்கப்பட்டது. வீட்டில் அம்மா சமைப்பதைப் போன்ற எளிமையான ஆர்வமூட்டும் சமையல் குறிப்புகள் எதிர்பார்த்தது போல மக்களால் வரவேற்கப்பட்டது. நம் குடும்பத்தில் சமையற்கலையை எப்படி கற்றோமோ அதேபோலத்தான் சமின் தன் பாட்டி, அம்மா வழியாக சமைக்க கற்றார். அதோடு தான் பயன்படுத்தும் காய்கறி விவசாயிகளிடமிருந்து பெறப்படுவதை மனப்பூர்வமாக உணர்ந்திருக்கிறார். நமது உணவு எங்கிருந்து வருகிறது, அதில் நிரம்பியுள்ள சத்துகள், அவை எப்படி நம் உடலை உருவாக்குகிறது என்பதை விளக்குவது இவரின் முக்கிய அம்சம். சமையல் பற்றி நாம் மறந்துவிட்ட முக்கியமான மந்திரத்தை அடையாளம் காட்டுகிறார். அது என்ன தெரியுமா? சமையல் என்பது பிறர் மீது நாம் காட்டும் அக்கறை என்பதுதான். அலைஸ் வாட்டர்ஸ் டைம்