இடுகைகள்

பன் கீ ஜாம் – மக்களோடு ஒரு உளறாடல்(வர்ஷன் 2.0)

படம்
                                                          பன் கீ ஜாம் – மக்களோடு ஒரு உளறாடல் ·          வின்சென்ட் காபோ எனதருமை நாட்டு வைக்கோலே மன்னிக்கவும் மக்களே! வணக்கம். இன்று பன்னின் குரலை ஒலிக்கச் செய்ய , எனது வயிறு இடம் கொடுக்கவில்லை , கனக்கிறது , வயிறு சுண்டல் தின்ற பொருமலில் ஆழ்ந்து கிடக்கிறது. கடந்த மாதம் நான் உங்களோடு பேசிக் கொண்டிருந்த போது , சுஷ்மாவோடு இட்ட சண்டை, வசுந்தரா ராஜேவின் பேராசை, அயல்நாடு தப்பிச்சென்றும் லாட்ஜ் சரியாக அமையாதது, செல்ஃபி புகைப்படத்தில் வெளிச்சம் சரியாக ஒத்துழைக்காதது , காரக்குழம்பு ஏற்படுத்திய வயிற்றுப் பொருமலின்  பெருந்துயரம் ஆகியவை இடம்பெற்றிருந்தன. சில நாட்கள் முன்பாகக் கூட பீஹார் மாநிலத்தில் திடீரென்று பேய்க் காற்று வீசியது , அதில் பல பேர்கள் உயிரிழந்தார்கள் , கணிசமான லாபம் அரசுக்கு ஏற்பட்டது. நேற்று , சனிக்கிழமையன்று பயங்கரமான நிலநடுக்கம் உலகத்தையே உலுக்கியது. நான் பதவி ஏற்றதிலிருந்து ஏதோ இயற்கைப் பேரழிவுகள் சங்கிலித் தொடர் போல நடைபெற்று வருகின்றன. நேபாளத்தில் பயங்கரமான நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவம் ….. இந்தியாவி

தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
கதாபாத்திரங்களோடு பார்வையாளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வது என்று சுருக்கமாக கூறலாமா?        நான் என்னுடைய பதிவுகளைப் பார்க்கும்போது என் முந்தைய படங்களில் உண்மையின் மறுகட்டமைப்பு எந்த ஒரு அடையாளப்படுத்தல்களையும் ஆதரிக்கவில்லை என்பதற்கு சான்றாக உள்ளது. நீண்ட கடினமான காலகட்டத்திற்கு பிறகு உணர்வுகளுக்குத் திரும்பியிருக்கிறோம். சிதெராவிற்கு பயணம் படத்திற்கு கிடைத்த பலன்கள் அத்தனையையும் மற்ற படங்களிலிருந்தும் நான் பெற்றிருக்கிறேன். ஆனால் அவை தொடர்ந்து நீடிக்கவில்லை என்றாலும் இந்த உணர்வுகள் என்னைத் தொடர்ந்து செயலாற்றத்தூண்டுகின்றன. எனது ஓவியங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவு நுணுக்கமாக விஷயங்களை தீட்ட முயற்சி செய்கிறேன். ஆனால் இது பழைய ஏஞ்சலோ பவுலோஸோடு வேற்றுமைப்படுத்தவோ, வஞ்சப்புகழ்ச்சி போன்றவற்றை விலக்கிவிடவில்லை. உதா. ராணுவம் காணாமல் போன முதிய மனிதரை கண்டுபிடிப்பதற்காக கிராமத்தில் வந்து நிற்கும் நிலைகள்...        ஆமாம். பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளும் விதமாக வீட்டைவிட்டு வெளியே வர மறுக்கும் ஸ்பைரோஸ் முன்னமே வன்முறையில் பாதிக்கப்பட்டு இருக்கிறான் என

தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
மக்கள் பலரும் இப்படத்தினை சோகமான படம் என்று கூறுகிறார்கள். கெட்டதை முடிவாகக் கொண்டுள்ள படம் என்றும் கூட கூறுகிறார்களே?        சோகம் பரந்துபட்ட வருத்தம் என பரிகாரம் காணமுடியாத இழப்பினால் ஏற்படுபவையே அவை. ஆனால் இறுதியில் நேர்மறையாக அல்லது எதிர்மறையாக என்றில்லாது ஒரு தெளிவான முடிவிற்கு படம் கொண்டு செல்கிறது. முன்னே செல்ல இது ஒன்றுதான் வழி. சுற்றியிருக்கும் நவீன உலகம் அவரை அதிருப்திக்கு உள்ளாக்குகிறபோது அலெக்ஸாண்ட்ரோஸ் கற்பனைரீதியான பயணத்தை படத்தில் ஏற்படுத்திக்கொண்டு தன்னை இறந்த காலத்திலிருந்து மீட்டுக்கொள்கிறார். வேட்டைக்காரர்கள் படத்தினைப் பற்றிப் பேசும்போது வலதுசாரிகளின் உணர்வுகளைப் பேசுகிறது என்று கூறினீர்கள். இந்தப்படம் இடதுசாரிகளினைக் குறித்ததா? குறிப்பிட்ட வகையிலான இடதுசாரி எனலாம், ஆனால் அனைத்து இடதுசாரிகளையும் அலெக்ஸாண்டரோடு ஒப்புமை படுத்தமுடியாது. இந்தப்படம் வாழ்க்கைக்கான மற்றும் கோட்பாடுகளை மறுகட்டமைப்பு செய்யாமல் நவீன மனிதன் தன் மனநிலையை மாற்றிக்கொள்வது இயலாத ஒன்று என்பதைப் பேசுகிறது. ஒருவரின் நினைவை பிடித்து நிறுத்தாமல் அதனை வரிசைப்படுத்

பன் கீ ஜாம்: மக்களோடு ஒரு உளறாடல்

படம்
எனதருமை நாட்டு மக்களே! வணக்கம். இன்று மனதின் குரலை ஒலிக்கச் செய்ய , எனது மனம் இடம் கொடுக்கவில்லை , கனக்கிறது , மனம் கவலையில் ஆழ்ந்து கிடக்கிறது. கடந்த மாதம் நான் உங்களோடு பேசிக் கொண்டிருந்த போது , ஆலங்கட்டி மழை , பருவம் தப்பிப் பெய்யும் மழை , விவசாயிகளின் பெருந்துயரம் ஆகியவை நடைபெற்றிருந்தன. சில நாட்கள் முன்பாகக் கூட பீஹார் மாநிலத்தில் திடீரென்று பேய்க் காற்று வீசியது , அதில் பல பேர்கள் உயிரிழந்தார்கள் , கணிசமான லாபம் அரசுக்கு ஏற்பட்டது. நேற்று , சனிக்கிழமையன்று பயங்கரமான நிலநடுக்கம் உலகத்தையே உலுக்கியது. நான் பதவி ஏற்றதிலிருந்து ஏதோ இயற்கைப் பேரழிவுகள் சங்கிலித் தொடர் போல நடைபெற்று வருகின்றன. நேபாளத்தில் பயங்கரமான நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவம் ….. இந்தியாவிலும் கூட இந்த நிலநடுக்கம் சில மாநிலங்களின் பல பகுதிகளில் பல பேர்களின் உயிரைக் குடித்திருக்கிறது. பலரது உடைமைகள் அழிந்து பட்டிருக்கின்றன ஆனால் நேபாளம் சந்தித்திருக்கும் பேரழிவோ படு பயங்கரமானது. நான் 2001 ம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ம் தேதி குஜராத்தின் கட்ச் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன

தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
முந்தைய தங்களது படங்களைப் போலில்லாது இதில் நீங்கள் ஏராளமான புராணங்கள் தொடர்பான விஷயங்களை பயன்படுத்தியிருக்கிறீர்கள். இங்கே இதுபோன்ற ஒன்றை கூறலாம் என்று நினைக்கிறேன் – புராணத்தின் சங்கேதக்குறிப்பு போல முதிய மனிதர் கிராமத்தில் சந்திக்கும் தனது நாயை அர்கோஸ் என்று அழைப்பதைக் கூறலாம். யுலிசஸ்- பெனலோப்- டெலிமாச்சஸ் எனும் இந்த முக்கோண அமைப்பானது பயணம் முடிவைதக் குறிக்கிறது. ட்ராய் போரினை ஒத்தது போல கிரீஸில் கடந்த நாற்பது ஆண்டுகளாக சிக்கலில் இருப்பது, யுலிசஸ் திரும்பி தன் நாடான அங்கு வருவது தெளிவான முடிவைக்காட்டுகிறது. எனது முந்தைய படங்களான 36 நாட்கள், மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் ஆகிய படங்களில் போர் மட்டுமே முக்கியமானதாக கவனப்படுத்தப்பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியாக பின் எதுவும் நீளாது அப்படியே நிறைவுற்றிருக்கும். கதையின் பாத்திரங்கள் கொண்டுள்ள முந்தைய கருத்து பேதங்கள் புரட்சி நாட்டில் ஏற்பட்டாலும் நாடு அதனை மறுக்கும்போது அவனுக்கு அதனால் எந்தப் பலனும் இல்லை. முதிய யுலிசஸ் எந்த சமரசங்களையும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்; அதனால் அவர் எதற்கும் தகுதி பெறாமல் போகிறார்; அவருக்கான பாத்திரம் அங்கு

நேர்காணல்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
முதல் விஷயமாக இதில் நாம் கவனிப்பது கப்பலிருந்து பிரிந்து வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் முதிய மனிதரைக் கூறலாம். காலத்தைப் பொறுத்தவரையில் நிழலை விட அவர் அதிக மதிப்பானவரில்லை. இயக்குநரின் தங்கையான ஊலா தான் வராததற்கான காரணத்தை விளக்குகிறார்: யாருக்கு கவலை? அப்பாவுக்காக இல்லை. இதற்கெல்லாம் என்ன அர்த்தம், ஏன் நாம் நிழலைத் துரத்துவதில் நம் நேரத்தை வீணடிக்கவேண்டும்? புனைவுக்குள் புனைவு என்பதாக அதன் தொடக்க நிலையிலிருந்து மெல்ல நமது கண்களில் முதிய மனிதனின் உருவம் வளரத்தொடங்குகிறது. இதற்காக அவரை ஒரு சித்திரமாக வரைவது போல காட்ட விரும்பி இதில் ஜூம் லென்ஸ்களை பயன்படுத்தினேன். படத்தின் முதிய மனிதர் கூறுகிறார்: ‘இகோ இமே’ என்று..? ஆமாம். இயக்குநர் இறுதியாக அவரது கதாபாத்திரத்தை கண்டுபிடித்துவிட்டார். வெள்ளைக் கப்பலிலிருந்து அவர் திரும்ப வருவது ஒடுக்கப்பட்ட தன்மையிலான கடந்த காலத்தை குறிக்கின்ற அடையாளமாக கூறலாமா? அப்படியும் கொள்ளலாம். கிரீசில் சமநிலையான அரசியல் நிலைமை இருக்கும்போது திடீரென அவலமான இறந்த காலத்தை அடையாளப்படுத்துவதாக அந்தக் காட்சியைக் கருதலாம். கிரீ