இடுகைகள்

ஜாரவா பழங்குடிகளை அழிக்கும் ரயில்பாதை!

படம்
ஜாரவா பழங்குடிகளை அழிக்கும் ரயில்பாதை - இந்தியாவின் சீக்ரெட் பிளான் - ச . அன்பரசு ஓர் அரசின் மேலாதிக்கம் , மற்றுமொரு நிலப்பரப்பில் வாழும் மக்களின் வளத்தை உறிஞ்சியே வளர்கிறது என்பதற்கு நிகழ்கால சாட்சி அந்தமான் நிக்கோபார் தீவுகள் . இந்திய அரசு அங்கு விரைவில் அமைக்கவுள்ள 240 கி . மீ ரயில்பாதை அங்கு ஏற்கனவே வாழிடங்களை இழந்து எஞ்சியுள்ள ஜாரவா ஆதிவாசியினத்தை முற்றிலுமாக துடைத்தழிக்ககூடும் என அச்சம் எழுந்துள்ளது . வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமானின் தலைநகரான போர்ட்பிளேரிலிருந்து 90 கி . மீ உள்ளே சென்றால் காதம்தலாவிலுள்ள ஹாம்லெட் என்ற ஜாரவா வனப்பகுதி . சூரியன் மறையத் தொடங்கினாலே அங்கு அமைந்துள்ள அரசு பழங்குடி நலவாழ்வு அமைப்பான அந்தமான் ஜன்ஜதி விகாஸ் சமிதி (AAJVS) யின் அலுவலகம் பரபரப்பாகிவிடும் . அந்தமானின் ஜாரவா பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் அலுவலகத்தில் பாதுகாப்பாக தங்கவைத்து திருப்பி அனுப்புவதே அங்குள்ள அரசு அதிகாரிகளின் தினசரிபணி . ஜாரவா ஆதிவாசி மக்களின் ஆக்ரோஷம் அப்படியே நம் விராட் கோலி போல . தங்கள் பகுதியின் மீது விமானம் பறந்தாலே அதன் மீது அம்பு

அறிவியல் நமதே!

படம்
சூப்பர் எலாஸ்டிக் கண்டுபிடிப்பு ! விண்வெளி போன்ற இடங்களிலும் பயன்படுத்தும் தன்மையிலான நினைவகப்பொருளை யுகான் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் சியோக் வூ லீ தலைமையிலான குழு கண்டுபிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது . இதற்கு முந்தை நினைவகப் பொருட்கள் காந்தம் மற்றும் வெப்பத்தினால் தகவல்கள் அழிக்கப்படும் அபாயமும் இருந்தது . அமெரிக்காவிலுள்ள பால் கான்ஃபீல்டு கால்சியம் அயர்ன் ஆர்சனைடு (CaFe2As2) பற்றி செய்துள்ள ஆராய்ச்சியை லீ எடுத்துக்கொண்டார் . கால்சியம் அயர்ன் ஆர்சனைடு கடுமையான அழுத்தத்தையும் , வெப்பநிலையையும் தாங்கும் பொருள் . இதனுடைய இயல்பு வடிவத்தை விட்டு நீங்கும்போது , அதன் நெகிழ்வுத்தன்மை கூடுவதை கண்டுபிடித்தார் லீ . பிற உலோகங்கள் வடிவச்சிதைவு 0.5% எனில் கார்பன் அயர்ன் ஆர்சனைடில் 13% மட்டுமே . வலிமையானதும் 50 கெல்வின் - -370 வெப்பநிலையிலும் தாக்குப்பிடிக்கும் பொருள் இது . " நாங்கள் 400 பொருட்களை இதுவரை சோதித்துள்ளோம் . இது சூப்பர் எலாஸ்டிக் பொருட்களை பற்றிய ஆராய்ச்சி உலகை திறந்துள்ளது " என உற்சாகமாக பேசுகிறார் லீ .  2 தற்கொலையை தடுக்கும் அல்காரிதம் !

புத்தம் புது அறிவியல் !

படம்
மனதின் ஆற்றல் என்ன செய்யும் ? எக்ஸ்மேன் படத்தில் ஜீன் கிரே , புஷ் படத்தில் நிக் கன்ட் என இரு கேரக்டர்களும் மனோஇயக்கவியல் சக்தியை பயன்படுத்தி கெத்து காட்டுவார்கள் . 1800 ஆண்டுகளின் பிற்பகுதியில் மனதின் ஆற்றலைப் பயன்படுத்தி பொருட்களை தூக்குவது , பறப்பது உள்ளிட்ட விஷயங்களை செய்யமுடியும் என அறிவியல் முறையில் நிரூபிக்கப்பட்டது . எழுத்தாளர் ஆர்தர் கானன் டாயல் எழுத்தாளர் , இவற்றை பொய் என நம்பினார் . 1940 இல் ட்யூக் பல்கலைக்கழக பேராசிரியரான ஜே . பி . ரைன் என்று ஆராய்ச்சியாளர் இதுகுறித்து ஆராய்ந்தார் . தாயங்களை உருட்டுவது , பொருட்களை நகர்த்துவது ஆகியவற்றை குறிப்பிட்டார் . ஆனால் இந்த ஆராய்ச்சியில் பல்வேறு தடுமாற்றங்கள் இருந்ததால் பிற ஆராய்ச்சியாளர்கள் இதனை புறக்கணித்துவிட்டனர் . தன் மன இயக்க ஆற்றலால் ( ஸ்பூனை வளைப்பது , வாட்ச் கண்ணாடியை உடைப்பது ) உலகெங்கும் சாதனைகளைச் செய்தவர் , உரி கெல்லர் .  ரஸ்ஸல் டார்க் எழுதிய " The Reality of ESP" (2012, Quest Books) நூல் இது பற்றிய உண்மைகளே ஆதாரப்பூர்வமாக அலசுகிறது .   2 அரிய சாலமாண்டர் பல்லி ! குவாத்திமாலாவில் அழ

புத்தக அறிமுகம்! இந்திராகாந்தி

படம்
புத்தக அறிமுகம்! இந்திராகாந்தி இந்தர் மல்ஹோத்ரா தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி என்பிடி ரூ.80 இந்திராகாந்தி பற்றி ஏராளமான நூல்கள் புகழ்ந்தும் தூற்றியும் வந்திருக்கின்றன. இந்தர் மல்ஹோத்ரா வேறுபடுவது, இந்திராவின் குடும்பம், அரசியல் என அவர் செயல்பாடு இயல்பை விட்டு எப்போது தடம் மாறுகிறதோ அப்போது கண்டிக்கவும், அரசியல் லாபம் கொண்ட மக்கள் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போதும் பாராட்டுவதில்தான். இந்திராவின் வாழ்க்கையை ஒரே வார்த்தையில் கூறவேண்டுமென்றால் போராட்டம் எனலாம். குடும்பம், அரசியல், திருமணம், அங்கீகாரம், வெற்றி என அனைத்திற்கும்  பாரம்பரிய கிரீடத்தை சுமந்து பெறவில்லை. காந்தி,நேரு என அனைத்து தலைவர்களையும் தாண்டிய புகழை தன் செயல்பாடுகளால் எப்படி ஏற்படுத்தினார் என்பதை அறிய வாசிக்க வேண்டிய நூல் இது. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் நேரு என்று கருதாமல், நேரு தன் மனைவி கமலாவை நடத்தியவிதம் குறித்து சம்பவங்கள் கைக்கட்சி உறுப்பினராக இருந்தாலுமே பெரும் அதிர்ச்சியை தரும். அதில் இந்திரா தன் அம்மா கமலாவுக்கு ஆதரவாகவே இருக்கிறார். ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களின் தாக்குதலையும் தனிய

சேகரவீராசாமியின் தன்னம்பிகை கதை! - ச.அன்பரசு

படம்
வீல்சேர் டென்னிஸ்  - சேகர் வீராசாமியின் தன்னம்பிக்கை கதை! - ச . அன்பரசு கடந்த டிசம்பர் மாதத்தில் பெங்களூருவில் நடந்த தபேபுயா ஓபன் வீல்சேர் டென்னிஸ் போட்டியின் ஃபைனல் . சேகர் வீராசாமி மற்றும் பாலச்சந்தர் இருவீரர்களுக்குமிடையேயான அனல் பறக்கும் நீயா , நானா ? சர்வீஸ்களால் பார்வையாளர்கள் கண்ணிமைக்கவும் மறந்து போனார்கள் . பாலச்சந்தரின் தவறுகளை பயன்படுத்திக்கொண்ட சேகர் , ஃபோர்ஹேண்ட் சர்வீஸ்களால் அநாயசமாக வென்றபோது எழுந்த கரகோஷங்கள் அவரின் ஆயுள் வலிகளையும் ஒரு நிமிடம் மறக்கவைத்தது . டென்னிஸ் கோர்ட் தாண்டிய வலிகளையும் சுமந்துதான் சேகர் தபேபுயா ஓபனில் சொல்லியடித்தார் . பின்னே , அர்ப்பணிப்பான விளையாட்டை விளையாட சேகர் தன் இடது காலையே வெட்ட நேர்ந்ததை விட வேறு வேதனை என்ன வேண்டும் ? தினக்கூலியான சேகரின் தந்தைக்கு , அவரை பள்ளிக்கு பசிக்காமல் சோறிட்டு அனுப்பக்கூட இயலாத வறுமை . வயிற்றை அமைதிபடுத்த பத்து வயதிலேயே வெள்ளி விளக்குகளுக்கு பாலீஷ் செய்யும்வேலையில் சேர்ந்தார் சேகர் . அப்போது அவரின் நண்பர் டென்னிஸ்