இடுகைகள்

ரத்தவங்கிகளுக்கு இல்லாத ஒருங்கிணைப்பு - பறிபோகும் உயிர்கள்

படம்
pixabay பொதுவாக ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு தமிழ்நாட்டில் அதிகம். டைகர் பிஸ்கெட் பாக்கெட்டிற்காக அல்ல, உண்மையாக நாம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுகிறோம் என்ற பெருமிதம் தமிழர்களுக்கு உண்டு. இதனால் ரத்ததான முகாம் நடக்கும்போது மக்கள் பங்கேற்று ரத்ததானம்  செய்கிறார்கள். ஆனால் இந்த ரத்தம் முறைப்படி மக்களுக்கு வழங்கப்படுகிறா? அனைத்து மருத்துவமனைகளில் ரத்தவங்கி இருக்கின்றன. செயல்படுகின்றன. ஆனால் தேவையானவர்களுக்கு அது பயன்படுவதில்லை. குறிப்பிட்ட ரத்த வகை தேவை எனும்போது நீங்கள் ரத்தம் கொடுத்துவிட்டு அந்த ரத்த வகையை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் பெரும்பாலான மருத்துவமனைகளில் நாம் தேடும் ரத்த வகை இருக்காது. எனவே பிற மருத்துவமனைகளை நோயாளிகளின் உறவினர்கள் தேடி ஓடுவது நடைபெறுகிறது. இதற்கு காரணம், மருத்துவமனைகளில் சரியான ஒருங்கிணைப்பு, தகவல் தொடர்பு இல்லாததே காரணம். ரத்தத்தை மாடர்ன் பிரெட் போல ஆறுமாதத்திற்கு அப்படியே வைத்திருந்து பயன்படுத்த முடியாத நடைமுறைப் பிரச்னை வேறு இருக்கிறது. 2016-17 ஆண்டில் மட்டும் 1.9 மில்லியன் யூனிட் ரத்தத்திற்கு தேவை இருக்கிறது. இதனை பற்றாக்குறை என்றும் சொல்லலாம். இத

மலையாளத் திரைப்படங்களை விரும்புகிறீர்களா? - ஆசிப் மீரானின் நூல்

படம்
மலையாளத் திரையோரம் ஆசிப் மீரான் தமிழ் அலை பதிப்பகம்  மலையாள படங்களை பார்த்து ரசித்து ஆசிப் மீரான் எழுதிய கட்டுரைகள். நூல் என்றதும் புகழ்ந்து நெக்குருகி எழுதி விட்டார் என நினைக்காதீர்கள். புகழ்ச்சியும் உண்டு கழுவி ஊற்றுதலும் உண்டு. இதில் மலையாள இயக்குநர்கள் பற்றி சுய தம்பட்டம் பெருமை இருக்கிறது. கலை, வணிகப்படங்களில், பரிசோதனை முயற்சிகளில் மலையாள நடிகர்கள் ஈகோ பார்க்காமல் ஈடுபடுவதை தன் பல்வேறு கட்டுரைகளில் பதிகிறார் மீரான். கூடவே தான் படங்கள் பார்ப்பதில் மலையாளத்தைத்தான் முதல் தேர்வாக கொள்வேன் என்கிறார். விருப்பு வெறுப்புகள்தானே படத்தை தீர்மானிக்கும். பத்திரிகையில் விமர்சனங்களை எழுதினாலும் கூட அது அந்த தனிநபரின் கருத்துக்களை உள்ளடக்கியதுதானே? இந்த நூலையும் நாம் ஆசிப் மீரானின் சினிமா அறிவோடு பொருத்திப் பார்க்கவேண்டும். இந்த நூல் மூலம் மலையாள திரையின் சிறப்பான இயக்குநர்கள், நடிகர்களை அறிய முடியும். அந்த வகையில் இந்த நூல் முக்கியமானது. நூலின் இறுதியில் அவரைக் கவர்ந்த இயக்குநர்கள் பற்றிய குறிப்புகளையும் படங்களையும் கொடுத்திருக்கலாம். உதவியாக இருந்திருக்கும். மற்ற

லவ் இன்ஃபினிட்டி நூலை தரவிறக்க வலைத்தள முகவரி!

படம்
லவ் இன்ஃபினிட்டி மின்னூலை பீடிஎஃப்பாக தரவிறக்க  http://www.mediafire.com/file/6tdmhfmriy2c3s3/luv_infinitity1.pdf/file லவ் இன்ஃபினிட்டி நூலை இபப் கோப்பாக தரவிறக்க... http://www.mediafire.com/file/avg5czmz4s5k8u9/luv_infinitity.epub/file

ஒரு கி.மீ. தூரத்தில் ஆட்களை அடையாளம் காணும் அமெரிக்கா!

படம்
முகமறிதல் சோதனையில் முன்னேறும் அமெரிக்கா! அமெரிக்க ராணுவம் முகமறிதல் சோதனையில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ராணுவத்துறை உருவாக்கிய சிறிய கருவி, ஒரு கி.மீ. தூரத்திற்கு முன்பாகவே ஒருவரை அடையாளம் கண்டுவிடும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் சிறப்பு பணிகளைச் செய்யும் சோகாம் எனும் அமைப்பு இதற்கான பொறுப்புகளை ஏற்று செயல்பட்டு வந்தது. 2019ஆம் ஆண்டு முகமறிதல் சோதனைக்கான மாதிரி கருவியை உருவாக்கி விட்டனர். மேலதிக தகவல்களை ராணுவ அமைச்சகம் வெளியிடவில்லை. குற்றச்செயல்பாடுகளில் தொடர்புடையவர்களை கண்டறிய இக்கருவி ட்ரோன்களின் பொருத்தப்படவிருக்கிறது. இவற்றை சட்ட ஒழுங்குத் துறைக்கு ராணுவ அமைச்சகம் வழங்கப்போகிறது. இதன்மூலம் குற்றம் செய்பவர்களை எளிதாக ட்ரோனை பறக்கவிட்டே பிடித்துவிடலாம். அமெரிக்காவிலுள்ள செக்யூர் பிளானட் எனும் அமைப்பு, எஸ்எல்ஆர் கேமரா பொருத்தப்பட்டு மக்களை கண்காணிக்க ஏற்பாடானது. ஆனால் இதில் கேமராவின் திறன் மற்றும் ட்ரோன் ஏற்படுத்திய இரைச்சல் தொல்லையாக இருந்தது. இதில் பல்வேறு மேம்பாடுகளை ராணுவ அமைச்சகம் உருவாக்கி வருகிறது. மேற்சொன்ன திறனில் ஒருவரை பாஸ்போர்ட் சைஸ்

அமெரிக்கா போனாலும் அப்பா அம்மா முக்கியம்! - பிரஷர் குக்கர் படம் எப்படி?

படம்
பிரஷர் குக்கர் - தெலுங்கு இயக்கம் சுஜோய் - சுஷில் கரம்பூரி இசை சுனில் காஷ்யப், ராகுல் சிப்ளிகன்ச், ஹர்ஷ்வர்தன் ராமேஷ்வர், எஸ்மரன் எப்படியாவது மகனை அமெரிக்காவுக்கு அனுப்பிட தந்தை துடிக்கிறார். மகனுக்கு அதில் பெரிய ஆர்வமில்லை. இதற்கிடையில் அல்லாடும் வாழ்க்கைதான் கதை. ஆஹா! இதில் நாயகனின் கதையைவி கணேஷ் தம்பதியின் கதை நன்றாக இருக்கிறது. அமெரிக்கா சென்றுவிட்ட பையன்கள் அப்பாவின் இறப்புக்கு கூட வராத சோகத்தை சொல்லும் கதை நன்று. நாயகன் முடிந்தவரை நடிக்க முயன்று தோற்கிறார். இதில் அவருக்கு பெரிய வாய்ப்பில்லை. ப்ரீத்தி அஸ்ரானி சின்ன கண் அசைவிலும் அழகு காட்டுகிறார். மற்றபடி அம்மணிக்கு சென்டிமெண்ட் சீன்களிலும் பெரிய ஸ்கோப் இல்லை. மொட்டை மாடியில் நாயகனுக்கு முத்தம் கொடுத்து நம்மை ஆசுவாசப்படுத்தி விடுகிறார். அதுமட்டுமே போதுமா? ஐயையோ! பிரதி ரோஜூ பண்டக படத்தின் கதையை ஒட்டி இருப்பதால், என்ஆர்ஐ தெலுங்கு ஆட்களுக்கு எடுத்த படமோ என்று தோன்றுகிறது. டிவி சீரியலுக்கு ஏற்றபடி நீட்டுகிறார்களோ என்று கூட படுகிறது. பாடல்கள் படத்தின் வேகத்திற்கு எந்தளவு உதவுகிறது என்றே தெரியவில்லை. நாயகனின் நோ

உலக வல்லரசுகளின் செயற்கைக்கோள் போர்!

படம்
விண்வெளியில் செயற்கைக்கோள் போர்!   விண்வெளியிலுள்ள புவி வட்டப்பாதையில் பல்வேறு நாடுகளும் தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களை நிறுத்துவதற்காக போட்டியிட்டு வருகின்றன.  இன்று உலக நாடுகள், தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் போன்றவற்றையும் செயற்கைக்கோள் மூலம் கட்டுப்படுத்தி வருகின்றனர். நாட்டின் பல்வேறு துறைசார்ந்த வளர்ச்சியிலும் செயற்கைக்கோள்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதன் விளைவாக பல்வேறு நாடுகளும் விண்வெளியிலுள்ள புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த போட்டியிட்டு வருகின்றன. இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஐரோப்பா நாடுகள் முன்னிலையில் உள்ளன.  1978ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி மையம் நேவ்ஸ்டார் 1 என்ற ஜிபிஎஸ் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இதற்குப்பிறகு பல்வேறு நாடுகளும் ராணுவம், தகவல்தொடர்பு, விவசாயம் என பல்வேறு காரணங்களுக்காக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகின்றன.  அண்மையில், அமெரிக்க விமானப்படை தனது பிளாக் 3 செயற்கைக்கோள்களை மேம்படுத்த 4 பில்லியன் டாலர்களை செலவிட முடிவு செய்துள்ளது. ”விண்வெளியில் சரியான இடத்தில் செயற்கைக்கோள்களை நிறுத்துவதன் மூலம் நாட்டிலுள

கல்வித்துறையில் தனியாரின் பங்களிப்பு உதவுமா?

படம்
pixabay தனியார் வழங்கும் கல்வி உதவுமா?  கல்வித்துறையில் தனியார் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கியுள்ளது.  அண்மையில் இந்திய நிதியமைச்சர் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். இதில் அந்நிய முதலீடு, குறைந்த வட்டியில் கடன் ஆகியவற்றை கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களாக கூறினார். ஆனால் கல்வித்துறை சார்ந்த வல்லுநர்கள், தனியார் நிறுவனங்கள் கல்வித்துறையில் முதலீடு செய்ய மேலும் விதிகளை மாற்றவேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர்.    அமெரிக்காவிலுள்ள ஹார்ட்வர்டு பல்கலைக்கழகம் 4 ஆயிரம் கோடி அளவிலான முதலீடுகளை இந்தியக் கல்வித்துறையில் செய்ய முன்வந்திருக்கிறது. ஆனால் கல்வி நிறுவனங்கள் நிதியை ஏற்கவோ, கையாளவோ தற்போதைய அரசு விதிகள் அனுமதிக்கவில்லை. இதைத்தான் மாற்றவேண்டும் இத்துறை சார்ந்த வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காரணம், இத்துறையில் ஏற்படவிருக்கும் வளர்ச்சிதான்.    ”இன்றுள்ள வளர்ச்சியோடு ஒப்பிட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கல்வித்துறை 80 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டதாக மாறியிருக்கும்” என்றார் கேபிஎம்ஜி ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த நாராயண

சிறந்த அறிவியல் புத்தகங்கள்!

படம்
30-Second Zoology Edited by Mark Fellowes உலகிலுள்ள விலங்குகளைப் பற்றி அறிவது கடினமான ஒன்று. இந்த நூல் அழகான விலங்குகளின் ஓவியங்களோடு மனதைக் கவருகிறது. ஒரு விஷயத்தைக் கற்க நீங்கள் 30 நிமிடம் செலவு செய்தால் போதும். நூலில் விலங்குகளை 50 பிரிவுகளாக பிரித்து வைத்து விளக்கியிருக்கிறார்கள்.  Our House is on Fire Malena and Beata Ernman, Svante and Greta Thunberg கிரேட்டா துன்பெர்க்கின் அம்மா எழுதியுள்ள நூல். கிரேட்டாவுக்கு எப்படி சூழலின் மீது ஆர்வம் ஏற்பட்டது என்பதை இந்த நூல் விளக்குகிறது. முழுக்க கிரேட்டாவின் சுயசரிதையாக நூல் செல்லாமல், உலகின் மீதான அக்கறை கொண்டதாக எழுத்துகள் இருப்பது வாசிக்க நன்றாக இருக்கிறது. சூழல் அக்கறை கொண்டவர்களுக்கான நூல் இது.  Footprints: In Search of Future Fossils David Farrier எதிர்கால மனிதர்களுக்காக நாம் என்ன விதமான விஷயங்களை விட்டுவிட்டு போகிறோம் என்று இந்த நூலில் கூறியிருக்கிறார் ஆசிரியர். இந்த நூல் நாம் வாழும் வாழ்க்கை, நாம் எப்படி பின்னர் நினைவுகூரப்படவேண்டும் என்பதைப் பற்றிய கவனத்தை ஏற்படுத்துகிறது.  Death By Shakespea

உங்கள் லைஃப்ஸ்டைலை மாற்றும் ஆப்கள்!

படம்
லைஃப்ஸ்டைல் ஆப்ஸ்! பாக்கெட் கோச் தினசரி நீங்கள் மெசேஜ் அனுப்பும் பிற ஆப்களைப் போலவே இருக்கும். ஆனால் இதில் பல்வேறு டிப்ஸ்களை உங்களுக்கு மெசேஜ் போலவே தருகிறார்கள். இதில் உங்களுக்கு விரக்தி, மனச்சோர்வு இருந்தால் சரிசெய்ய உதவுகிறார்கள். டெசர்ட் ஐலேண்ட் இது ஒரு சர்வே போலத்தான். நீங்கள் எந்த ஆப்பை எத்தனை முறை ஆன் செய்து என்ன வேலை பார்க்கிறீர்கள் என்பதை கண்டுபிடித்து டைம்ஸ் ஆப் இந்தியா போல சார்ட் போட்டு விளக்குகிறார்கள். இதிலிருந்து நமக்கு ஏற்படும் மனநிலை பாதிப்பை அடையாளம் காணலாம். ஸ்மைலிங் மைண்ட் தியானம் செய்வதும் இன்று டிஜிட்டலாகி விட்டது. இந்த ஆப்பில் அதனைப் பார்ப்பதோடு அதிகாலையில் எழுந்து செய்தால் உங்கள் உடல்நலமும், மனநலமும் தேறுவதற்கு வாய்ப்புள்ளது. மூட்ஃப்ளோ உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் ஆப் இது. இதில் மனநிலை பற்றிய அறிக்கையைப் பெற்றால் உங்களது மனநிலையை மேம்படுத்தும் வாய்ப்பு உள்ளது. நன்றி - ஸ்டஃப் இதழ்

சூப்பர் ஆப்ஸ் 2020

படம்
Pixelmator  Photo நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை, செல்ஃபீக்களை அழகாக்க வேண்டாமா அதற்காகவே இந்த ஆப். எப்படி கண்ணாடியை தேய்த்து ஷைனிங் செய்கிறார்களோ அதேபோல உங்கள் புகைப்படத்தை வேறு லெவலில் மாற்றுகிறது இந்த ஆப். pixaloop இந்த ஆப் மூலம் இமேஜ் அனிமேஷன் சென்டருக்கு டஃப் கொடுக்கும் அமெச்சூர் அனிமேஷன்களை உருவாக்கலாம். எப்படி ப்ரோ என்கிறீர்களா? இதில் படங்களை கொடுத்தால் அதனை அனிமேஷன் செய்து தரும். Duetcam பிரபலத்தை இன்டர்வியூ எடுக்கிறீர்கள். அப்போது அவரின் முகபாவம் பதிவாகும். ஆனால் நீங்கள்தான் அந்த இன்டர்வியூவை எடுத்தீர்கள் என்று என்ன அத்தாட்சி இருக்கிறது? அதற்குத்தான் டூயட்கேமை பயன்படுத்துங்கள் என்கிறோம். இதில் போனிலுள்ள இரு கேமராக்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இதன்மூலம் உங்கள் ரியாக்ஷன்கள் பிரபலத்தின் ஆவ்.. தருணங்களையும் எடிட் செய்து மகிழலாம். Spectre மிஷ்கின் போல லாங் ஷாட்டில் ஓடிவரும் உங்கள் நண்பரை புகைப்படமாக எடுக்க இந்த ஆப் உதவும். ஏதாவது ஜாலி டிரிப் சென்றால் அங்குள்ள சுற்றுலா தளங்களை புகைப்படங்களாக எடுக்க இந்த ஆப் சூப்பராக உதவும். நன்றி - ஸ்டஃப் இதழ்

2020ஆம் ஆண்டின் அசத்தல் விளையாட்டுகள்

படம்
தி லாஸ்ட் ஆஃப் அஸ் பாகம் 2 சோனியின் தயாரிப்பு. அதற்கேற்ப அசரடிக்கும் சூழல்களும், சவால்களும் நாயகியான எல்லியைப் போலவே நம்மையும் அதிர்ச்சியடைய செய்கின்றன. இந்த விளையாட்டை விளையாடும் முன்பு இதற்கு முந்தைய பாகத்தை விளையாடிவிட்டு இதனை தொடுவது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள மாற்றங்கள் தெரியும். சைபர் பங்க் 2077 எதிர்காலத்தில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை டிஜிட்டல் இயந்திரங்கள் ஆக்கிரமிக்கின்றன. அதனை எதிர்த்து மனிதர்கள் போராடுகிறார்கள். பல்வேறு திரைப்படங்கள் உங்கள் மனதில் ஓடினால் அதற்கு ஹாலிவுட்தான் காரணம். இந்த விளையாட்டு அல்ல. இந்த கொடுமையை செஞ்சவன சுட்டுப் பொசுக்கணும் சார் என பொங்கினால் நீங்கள் இந்த விளையாட்டை மதர் பிராமிசாக விளையாடலாம் ப்ரோ. ஃபைனல் ஃபேன்டசி 7 இதுவும் சோனியின் கைவண்ணம்தான். பழைய கிளாசிக் விளையாட்டை ரீமேக்கியிருக்கிறார்கள். விளையாடிப் பார்த்துவிட்டு நீங்களே நன்றாக இருக்கிறதா என்று சொல்லுங்கள். அனிமல் கிராசிங் நினென்டோவின் விளையாட்டு. 2020க்கான தன் திட்டங்களை கம்பெனி நிறுத்திவிட்டதாக சொல்லும் நிலையில் இந்த விளையாட்டின் பொசிஷன் என்னவென்று யாரிட