இடுகைகள்

கேங்ஸ்டரின் ரீவைண்ட் வாழ்க்கை - ரணரங்கம் படம் எப்படி?

படம்
ரணரங்கம்  தெலுங்கு - 2019 இயக்கம் - சுதீர் வர்மா ஒளிப்பதிவு திவாகர் மணி இசை - பிரசாந்த் பிள்ளை ஸ்பெயினில் வசிக்கும் தேவா தன்னுடைய கதையை சொல்லுவதாக தொடங்கும் கதை ஆந்திராவில் நடக்கிறது. ஆந்திராவில் பிளாக்கில் டிக்கெட் விற்கும் தேவா, அப்போது இருந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி நண்பர்களோடு சட்டவிரோத மதுபான பிசினஸில் இறங்குகிறார். இதை தனக்கு விடப்பட்ட நேரடி சவால் என்று நினைக்கும் அந்த ஊரின் எம்எல்ஏ முரளி சர்மா, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறார். தேவாவின் பக்கத்தில் ஏராளமாக உயிர்ப்பலியாகிறது. முரளி சர்மாவுக்கும் இழப்புகள் அதிகமாகிறது. உச்சமாக அவரின் உயிரும் போகிறது. அதற்கு காரணமான சம்பவத்தால் தேவா கடுமையாக பாதிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு போகிறார். ஆனால் செய்யும் பிசினஸ் ஏதும் மாறவில்லை. அவர் நண்பர்கள் அப்படியே தொழிலை செய்து வருகின்றனர். அப்போது இந்தியாவில் இருந்து வரும் வேலையை தேவா ஏற்க மறுக்கிறார். அதனால் அவரின் மகள், காதலி உள்ளிட்டோரின் உயிருக்கு ஆபத்தாகிறது. இப்போது தனது தொழிலை விட்டு வெளியேறிய தேவா ஆந்திராவுக்கு திரும்ப நேரிடுகிறது. தனது தொழிலை திரும்பவும் செய்தாரா இல்லை

சப்ளிமெண்டுகளை சாப்பிடுவது அவசியமா?

படம்
pixabay சப்ளிமெண்டுகள் நமக்குத் தேவையா?   உணவில் போதிய சத்துகள் உங்களுக்கு கிடைக்காது என எபாங்க் சபாங்க் பானங்கள் வெகு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வருகின்றன. மேலும் அதே நிறுவனங்கள் தனி பிராண்டுகளாக சத்து மாத்திரைகளையும் பிரபல நடிகர்களை வைத்து விளம்பரங்களைச் செய்து வருகின்றன.  உண்மையில் இந்த மாத்திரைகள் நமக்கு தேவைதானா? என நாற்பது வயதுக்குப் பிறகு நமக்குமே தோன்ற ஆரம்பிக்கும். அதைப்பற்றி அறிவோம் வாங்க.  உண்மையில் நமக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் நாம் இயற்கையில் பெறுவது மிகவும் கடினம். சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் பெரும்பாலானவை உலோகங்களை பகுதிப் பொருட்களாக கொண்டவை. முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்று அப்பொருட்களை டப்பா செட்டி கடையில் வாங்கிச் சாப்பிட்டால் விரைவில் உங்கள் அலுவலக நண்பர்கள் மனமகிழ்ச்சியுடன் உங்கள் கல்லறையில் மலர்வளையம் வைத்து விடுவார்கள். எனவே நாம் அவர்கள் அந்த மகிழ்ச்சிக்கு இடம் கொடுக்க கூடாது. உடலை அவ்வப்போது சோதித்து பக்கவிளைவு குறைவான, அடிப்படை விளைவுகள் அதிகமான மருந்துகளை சாப்பிடலாம். காரணம், நாற்பது வயதிற்குப்

பீர் பெல்லிக்கு என்ன கார ணம் அறிவீர்களா?

படம்
பிக்சாபே பீர் பிற மதுபானங்களை குடிக்காத நேர் வகிடு எடுத்து சீவிய நல்லவர்கள் கூட பீர்தானே ஆல்கஹால் குறைவு என கல்பாக எடுத்து அடிப்பார்கள். அந்தளவு நல்லவனா கெட்டவனா என பலருக்கும் புரியாத மதுபானம், பீர். இதனை மனிதர்களே தயாரித்தனர் என்பது நமக்கான பெருமை.  பொதுவாக அனைத்து பானங்களும் எப்படி தயாரிக்கப்படுகின்றன? தானியங்கள் அல்லது பழங்கள்தானே! இதுவும் அப்படித்தான். தானியங்களை சூடான நீரில் ஊறவைத்து அவற்றிலுள்ள சர்க்கரையைப் பெற்று பீர் தயாரிக்கப்படுகிறது. இதில் பல்வேறு பதப்படுத்தும் நிலைகள் உள்ளன.  இன்று காமராஜர் சாலைகளிலுள்ள பேக்கரிகளில் ஃப்ரூட் பீர் ஏகபோகமாக விற்கப்படுகிறது. அதனை அனிமேஷன் படிக்கும் அண்ணாத்தைகள் வாங்கிப் பருகி மகிழ்கின்றனர். இதில் ஆல்கஹாலின் அளவு குறைவு. எனவே டாஸ்மாக்கில் வைக்கப்படவில்லை. அப்படி வந்தாலும் மால்களில் உள்ள எலைட் கடைகளில் நீங்கள் வாங்கிக்கொள்ள முடியும். நம் அந்தஸ்து கூட்டத்தில் முட்டிமோதி கெட்டுவிட்டால் என்னாகும்? ஜென்டில்மேனாக பீர் குடித்தாலே வரலாறு நம்மை மறக்காது.  பீரில் ஆன்டி ஆக்சிடன்டுகள், மினரல்கள் பல்வேறு விஷயங்கள் உள்ள

குற்றவாளியும், நல்லவனும் ஒரே உருவத்தில்! - முடிஞ்சா இவனப் புடி!

படம்
முடிஞ்சா இவனப்புடி இயக்கம்: கே.எஸ்.ரவிக்குமார் கதை: டி.சிவக்குமார் ஒளிப்பதிவு ராஜரத்தினம் இசை: இமான் கதை: சத்யம் நேர் வகிடு எடுத்து சீவிய நல்ல மனிதர். இவருக்கு எதிராக ஜெல் போட்டு வாரிய தலை, தொப்பி சகிதமாக ஊர்ப் பெருசுகளின் பணத்தைக் கொள்ளையடிக்கும் சாமர்த்தியசாலி சிவம். இருவரும் ஒருவரா, வேறு வேறா என்று காவல்துறை ஸ்கெட்ச் போட்டு கண்டுபிடிப்பதுதான் கதை. ஆஹா கிச்சா சுதீப் நன்றாக நடித்திருக்கிறார். என்ன அவர் பேச்சில்தான் தடுமாற்றமாக இருக்கிறது. தன்னுடைய குரலில் பேசுகிறாரா அல்லது ரஜினி போல மிமிக்ரி ஏதாவது செய்கிறாரா என்று கண்டுபிடிப்பதிலேயே படம் பாதி போய்விடுகிறது. நித்யா மேனன் இந்த படத்திற்கு என்ன செய்யமுடியுமோ அதை செய்கிறார். பிரகாஷ்ராஜின் போர்ஷன் சிறியதுதான் என்றால் கவனிக்க வைக்கிறார்.    ஐயையோ இதுபோல பணத்தைக் கொள்ளையடிக்கும் படம் என்றால், எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பதை கொஞ்சமேனும் டீட்டெய்லாக சொல்லுவார்கள். இதில் படம் தொடங்கும்போது நடக்கும் கொள்ளையைத் தவிர்த்து வேறெங்கும் சிவத்தின் புத்திசாலித்தனத்திற்கு எந்த சாட்சியும் இல்லை. மேலு

எதிர்கால வில்லனை காப்பாற்றும் கூலி கொலைகாரன்! - லூப்பர்

படம்
500 × 500 லூப்பர் 2012 இயக்கம் ரியான் ஜான்சன் ஒளிப்பதிவு ஸ்டீவ் யெடின் இசை நாதன் ஜான்சன் 2044ஆம் ஆண்டு நடக்கும் கதை. நிகழ்காலம், எதிர்காலம் என இரண்டு இடங்களில் பயணிக்கும் கதை. எதிர்காலத்தில் உலகிற்கு ஆபத்து ஏற்படுத்துவார்கள் என தோன்றும் ஏன் சந்தேகப்பட்டாலே அவர்களைப் பிடித்து நிகழ்காலத்திற்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அங்கு அவர்களை போட்டுத்தள்ளி அதற்கான சம்பளத்தை எடுத்துக்கொள்பவர்களுக்குப் பெயர் லூப்பர். எதிர்கால எதிரிகளைப் போட்டுத்தள்ளுவதில் தங்கப்பதக்கம் வாங்கும் தகுதி கொண்டவன், ஜோ. அவனுக்கு எதிர்காலத்தில் இருந்து எதிரி ஒருவன் வருகிறான். அவன் வேறு யாருமல்ல, அவனேதான். எதிர்காலத்தில் வாழும் ஜோவின் மனைவியை எதிரிகள் கொன்றுவிடுகின்றனர். அதற்கு காரணமான ஆட்களைத் தேடி கொல்லவே நிகழ்காலத்திற்கு காலத்தில் பயணித்து வருகிறான். அப்போது அவனுக்கு லூப்பர்களை அழிக்கும் ரெயின் மேக்கர் என்பவன் பற்றிய தகவல் கிடைக்கிறது. அவன் நிகழ்காலத்தில் பிறந்து வளர்ந்து வருகிறான்    அவனை இப்போதே போட்டுத்தள்ளிவிட்டால் அவன் எதிர்காலத்தில் தன் மனைவியைக் கொல்ல வாய்ப்பு கிடைக்காது என பேராசை