இடுகைகள்

பழிக்குப்பழி வாங்கத் துடிக்கும் மாபிஃயா குழுக்களின் அதிகார, ரத்தவெறி! - காப்பா - ஷாஜி கைலாஷ்

படம்
காப்பா - ஷாஜி கைலாஷ்   காப்பா இயக்கம் ஷாஜி கைலாஷ் பிரிதிவிராஜ், அபர்ணா, அன்னா பென், ஆசிஃப் அலி திருவனந்தபுரத்தில் வாழும் கொட்டா மது, பினு என இரு குழுக்களுக்கு இடையிலான சண்டையும், வாக்குவாதங்களும்தான் படம். மாஃபியா குழுக்களுக்கு இடையிலான சண்டை, அதில் பறிபோகும் உயிர்கள், வன்மம் ஆகியவற்றை நிதானமாக விவரிக்கிற படம். படத்தை ஆசிஃப் அலிதான் பெரும்பாலான காட்சிகளில் நகர்த்துகிறார். அவர் தனது மனைவி பினுவை, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டி வந்து வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அவரின் வீட்டிற்கு முன் போலீஸ்காரர் ஒருவர் வந்து காத்து நிற்கிறார். அவர் ஆனந்த் (ஆசிஃப் அலி), பினு (அன்னா பென்) ஆகியோரைப் பற்றி விசாரிக்கிறார். அப்போது பினுவின் பெயரின் பின்னே உள்ள திரிவிக்ரமன் என்ற பின்னொட்டு அவரை திடுக்கிடச் செய்கிறது. அவர் ஆனந்தை தனியாக அழைத்து விஷயத்தைச் சொல்கிறார். அதற்காக அவனிடம் 50 ஆயிரம் ரூபாய் காசும் வாங்கிக்கொள்கிறார். ஆனந்தைப் பொறுத்தவரை அவன் பினுவை மணந்துகொண்டதால், அவளை எப்படியேனும் பழிக்குப்பழி வன்மத்தில் இருந்து காப்பாற்ற நினைக்கிறான்.. ஆனால் அவனே எதிர்பார்க்காதபடி விவகாரத்தில் மாட்டிக்கொள்

அம்மாவின் நினைவுகளைக் காப்பாற்ற மகள் செய்யும் போராட்டம்! ஜங்க் இ - கொரியன்

படம்
  காலமான நடிகை கங் சூ இயோன் நடுவில் இயக்குநர் இயோன் சங் ஹோ ஜங் இ கொரிய படம் ஜங்க் இ கொரியப்படம் – நெட்பிளிக்ஸ் ட்ரெய்ன் டு பூசன் படம் எடுத்த இயோன் சங் ஹோ என்ற இயக்குநரின் அறிவியல் புனைகதைப் படம்.   பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றம், மனிதர்களை பாதிக்கிறது. எனவே, அவர்கள் விண்வெளிக்கு சென்று வசிக்கும் நிலை ஏற்படுகிறது. கூடவே, உள்நாட்டுப் போரும் உருவாகிறது. இதில் அரசு தரப்பு ஏஐ அறிவு கொண்ட வீரர்களை வைத்து போரை நடத்துகிறது. இதற்காக ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் ஒன்றில்தான் கதை நடைபெறுகிறது.   இந்த நிறுவனம் ஒருகாலத்தில் பூமியில் நடைபெற்ற போரில் சாதனை செய்த பெண்மணியான யூன் ஜங்கின் நினைவுகளை எடுத்து செயற்கை அறிவை குளோனிங் செய்கிறார்கள். அதை வைத்து அவரின் உருவத்தில் ராணுவ வீரர்களைத் தயாரிப்பதே நோக்கம். இதை குழு தலைவராக இருந்து செய்வது, சியோ ஹியூன். இவர்தான்   யூன் ஜங்கின் மகள்.   தாய் கோமா நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார். மகள் சியோ ஹியூனின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காகவே, அம்மா யூன் ஜங் போருக்கு போகிறார். போருக்கு சென்றால் அவரது மகளுக்கு சிகிச்சை இலவசமாக கிடைக்கும் என்பதுதான் டீல். ஆனால

தனித்தீவில் பனிரெண்டு பணக்காரர்களுடன் இறுதி விருந்து - தி மெனு

படம்
  மெனு ஆங்கிலம் தனியாக ஒரு தீவு. அதில் ஹோவர்தன் எனும் புகழ்பெற்ற உணவகம் உள்ளது. அதனை நடத்தும் சமையல்கலைஞர் பனிரெண்டு ஜோடிகளை   தனது உணவகத்திற்கு விருந்திற்கு அழைக்கிறார். விருந்து நாள் முழுக்க நடைபெறுகிறது. அதில் விருந்தினர்கள் சந்திக்கும் பல்வேறு ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும்தான் கதை. ஒரு உணவை நாம் சாப்பிடுகிறோம், ருசிக்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிற படம், தீவிரமான தொனியில்   காட்சிகளைக் கொண்டிருந்தாலும் அவல நகைச்சுவையை அடிப்படையாக கொண்டது. ஒருவருக்கு 1250 டாலர்கள் என்ற கட்டணத்தை ஏற்றுக்கொண்டுதான் அங்கு பலரும் வருகிறார்கள். அவர்கள் பலருமே தாங்கள் சாப்பிடுவது பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள். அதாவது சாப்பாடு பற்றிய கவனம் குறைந்தவர்கள், அல்லது அறவே கவனம் இல்லாதவர்கள். சமையல் குழு, தலைமை சமையல்காரரின் கைத்தட்டலுக்கு உடல் விறைத்து பிறகு இயல்பாக வேலை செய்கிறார்கள். அவர்கள் ஒரு ராணுவக்குழு போலவே இயங்குகிறார்கள். அப்படி ஒரு கச்சிதம். படத்தில் வரும் கைதட்டல் ஒருகட்டத்தில் ஹிப்னாடிசம் போல நமக்கும் வேலை செய்வதாக தோன்றுகிறது. படத்தில் வரும் அனைத்து பாத்திரங்களையும் விட இயல்பாக இருக்க

விளம்பர இடைவேளை - அமேஸானில் வெளியாகியுள்ள மின்னூல்கள்

படம்
 

விளம்பர இடைவேளை - பிரதிலிபி தமிழ் வலைத்தளத்தில் வெளியான நூல்கள், தொகுப்பு நூல்கள்

படம்
 

குற்றங்களை அடையாளம் காண்பதில் பயன்படும் பல்வேறு கோட்பாடு முறைகள்

படம்
  குற்றத்தை எப்படி புரிந்துகொள்வது, இதில் பல்வேறு கருத்துகள், கோட்பாடுகள் உள்ளன. உளவியல், சமூகவியல், பொருளாதாரம் ஆகியவையும் இதில் உள்ளடங்கும். அதற்கு ஏற்ப அவரவர் துறை சார்ந்த கருத்துகளைச் சொல்லி குற்றங்களை பிறருக்கு புரிய வைக்கலாம். சமூகவியல் அடிப்படையில் ஒருவரின் சமூகம், அவரின் இனக்குழு, குடும்ப நிலை, வேலை செய்பவரா, வேலை கொடுப்பவரா என்றெல்லாம் பகுத்தாய்ந்து  குற்றத்தின் அடிப்படையை நோக்கம் என்ன என்று கண்டறியலாம். பத்தொன்பதாவது நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் புகழ்பெற்ற மருத்துவர் இருந்தார். அவர் பெயர், சீசர் லாம்ப்ரோஸா. இவர், பரம்பரையாக வரும் குணங்கள்  காரணமாக ஒருவர் தவறுகளை செய்கிறார். இப்படி தவறு செய்யும் குணம் நட்பு மூலமாகவும் இன்னொருவருக்கு பரவலாம். குடிநோயாளிகள் நிறைய குற்றங்களை செய்கிறார்கள் என கருத்துகளை எழுதினார். பரவலாக்கினார். வறுமையான சூழ்நிலை, கல்வி அறிவின்மை ஆகியவை குற்றங்களுக்கு முக்கியமான காரணங்கள் என்று கூறினார். மூன்றில் ஒரு பங்கு குற்றவாளிகள் பிறக்கும்போது குற்றவாளிகள் என்று எழுதினார். பிற்காலத்தில் லாம்ப்ரோஸாவின் ஆய்வுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. குற்றங்களை செய்யும்

வாழ்க்கையின் போக்கிலேயே வாழ்ந்தால் ... உல்லாசம் - ஷான் நிகாம், பவித்ரா லட்சுமி

படம்
  உல்லாசம் மலையாளம் ஷான் நிகம், பவித்ரா லட்சுமி லட்சியத்தைக் கொண்ட துயரங்களா, இலக்கைப் பற்றி கவலைப்படாத மகிழ்ச்சியா என இரு வேறுபட்ட விஷயங்களைப் பற்றி பேச முயல்கிற படம்தான் உல்லாசம். ஹாரி மேனன் என்ற இளைஞரும், யாரிடமும் அதிகமாக பேசாத கர்ப்பிணிகளைக் கண்டால் மட்டும் மனம் பதைபதைக்கிற இளம்பெண்ணும் ஊட்டியில் சந்திக்கிறார்கள். மோதல் தொடங்கினால் காதலாகத் தானே மாற வேண்டும். அந்த வகையில் காதல் ஆகிறது. ஆனால் இதில் இளம்பெண், ஹாரி மீது நம்பிக்கை வராமல் தன்னைப் பற்றிய எந்த விஷயங்களையும் கூறுவதில்லை. ஹாரிக்கு அந்த பெண்ணை திரும்ப சந்திக்க ஆசையிருக்கிறது. மனதில் காதலும் இருக்கிறது. ஆனால், அவள் எங்கே இருக்கிறாள் என்று கூட தெரியாது. ஹாரி கோவையிலும், இளம்பெண் கேரளாவுக்குமாக பிரிந்து செல்கிறார்கள். இருவரும் பிறகு சந்தித்தார்களா இல்லையா என்பதே கதை. ஹாரியாக ஷான் நிகம் நடித்திருக்கிறார். படம் நெடுக   ஷானின் இளமைத் துடிப்பும் நடிப்பும்தான் படத்தை காப்பாற்றுகிறது. இதில், நிமா என்ற பாத்திரத்தில் பவித்ரா லட்சுமி நடித்திருக்கிறார். மாடல் போல தோற்றமிருந்தாலும் இந்த படத்திற்கு அவரின் பங்களிப்பு என்பதே குறைவ