இடுகைகள்

குங்குமம் பிட்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜாலி பிட்ஸ் 3 - விக்டர் காமெஸி

படம்
ஜாலி பிட்ஸ் - விக்டர் காமெஸி  வயிற்றுக்குள் மெகா குடல் ! சீனாவின் ஷாங்காய் டென்த் மருத்துவமனைக்கு கர்ப்பிணிபோல வீங்கிய வயிற்றுடன் வந்தார் 22 வயது இளைஞரான சூ ஹாய் . ஸ்கேனில் அவரது குடலின் அளவு 76 செ . மீ நீளம் , எடை 13 கி . கி எனத்தெரிந்து உடனே டாக்டர்கள் கழிவோடு குடலை 3 மணிநேர ஆப்பரேஷன் செய்து டஸ்ட்பின்னில் போட்டுவிட்டார்கள் . குடல் வளர்ச்சி குறைபாட்டு நோய்தான் வீக்கத்திற்கு காரணமாம் . தள்ளிப்போகாதே என் அன்பே ! இந்தோனேஷியாவின் புகிட் லாவாங் வனப்பகுதியில்தான் இந்த அன்பு பரிமாற்றம் . பழம் கொடுத்த இளம்பெண்ணின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்ட குரங்கின் முரட்டு அன்பால் அப்பெண்ணும் , காதலரும் டென்ஷனாகிவிட்டனர் .    5 நிமிடம் நீடித்த இந்த மூர்க்கப்பிடி , பழம் கொடுத்ததும்தான் தளர்ந்திருக்கிறது . அன்புப்பிடி குரங்கு ஆணல்ல , பெண் . பழத்திற்குள் தோட்டா ! அமெரிக்காவின் கொலராடோ நகரிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் அவகாடோ பழத்தை ஆசையாக வாங்கியுள்ளார் நிச்சேவின் நண்பர் . வீட்டில் வந்து பழத்தை வெட்டினால் உள்ளே இருந்தது அசல் துப்பாக்கித்தோட்டா . மிரண்டுபோனவரை , அணில்

ஜாலி பிட்ஸ் 2 - விக்டர் காமெஸி

படம்
ஜாலி பிட்ஸ் -விக்டர் காமெஸி  லைசென்ஸ் இல்லாத பார்பி ஜீப் ! கலிஃபோர்னியாவின் ஹன்டிங்டன் பீச் . க்யூட் பார்பி ஜீப்பில் ரவுண்ட் அடித்த டேவி (3) என்ற சுட்டியிடம் லைசென்ஸ் , ஆர் . சி . புக் கேட்டு பீதி கிளப்பியிருக்கிறார் ஆபீசர் ஒருவர் . சுட்டியின் தாய் பலமுறை கேட்டும் பெயரைச் சொல்லாமல் எஸ்கேப்பாகிவிட்டார் ஆபீசர் . கமிஷன் கேட்கலியா ? சொதப்பிய ஏடிஎம் கொள்ளை ! அமெரிக்காவின் வாஷிங்டனின் எவரெட்டில்  நடந்த ஃபிளாப்பான கொள்ளை அது . கோஸ்டல் வங்கியின் ஏடிஎம் ஸ்டீல் தகடுகளை நெருப்பு மூலம் திருடர்கள் உடைத்தார்கள் . ஜஸ்ட் மிஸ்ஸாகி ஸ்டீலோடு சேர்ந்து கரன்சியும் சாம்பலாகி போனது திருடர்களுக்கே செம ஷாக் . தற்போது அந்த டுபாக்கூர் திருடர்களை போலீஸ் தேடிவருகிறது . சர்ச்சையில் பிரமாண்ட தவளை ! டெக்சாஸின் அசல் வேட்டைக்காரரான மார்க்கஸ் ராங்கெல்லிடம் சிக்கியுள்ளது பிரமாண்ட தவளை . சிங்கத்தை பிடித்துவிட்டது போல மார்கஸ் போஸ் கொடுக்கும் படத்திலுள்ள தவளையின் சைஸ் , படத்தில் பார்ப்பது போல் பெரியது அல்ல என சர்ச்சைகள் கிளம்பியுள்ளன . படேஸ்வில்லே பகுதியில் பிடிபட்ட மெகா புல்ஃபிராக் தவளைய

ஜாலி பிட்ஸ் 1 - விக்டர் காமெஸி

படம்
ஸ்ட்ராபெர்ரி சாதனை ! 105 அடியில் நீளத்தில் தயாரித்த கின்னஸ் சாதனை ஸ்ட்ராபெர்ரி கேக் பற்றித்தான் பிரான்ஸ் எங்கும் நாக்கில் எச்சிலூறும் பேச்சு . 25 ஆம் ஆண்டு ஸ்ட்ராபெர்ரி திருவிழாவுக்கென ஸ்பெஷலாக 720 முட்டைகள் , 440 பவுண்டுகள் ஸ்ட்ராபெர்ரி கொட்டித் தயாரிக்கப்பட்ட கேக்கை விற்று , அறக்கட்டளை நிதிக்கு காசு சேர்க்கப் போகிறார்களாம் . கிழி .. கிழி சுட்டி ! சீனாவின் ஷாங்டன் பகுதியிலுள்ள காவோ என்ற தொழிலதிபர் பேங்கில் கடன் வாங்கிய 5 லட்ச ரூபாயை சிம்பிளாக ட்ராயரில் வைத்ததுதான் அவர் செய்த தவறு . அடுத்த நாள் ட்ராயரை திறந்தால் , அத்தனை நோட்டுகளும் துண்டுகளாக கிடந்தன . அவரின் செல்ல வாண்டுவின் பகீர் வேலைதான் இது . அவன் குழந்தை அவனுக்கென்ன தெரியும் ? என இந்த அப்பாவின் பதில் .   மாரத்தான் காதல் ! அமெரிக்காவின் ஓஹியோவில் நடந்த க்ளீவ்லேண்ட் மாரத்தானில் ஸ்டெபானியாவுக்கு  சர்ப்ரைஸ் பரிசு அது . மாரத்தான் ஓடி முடித்தவரிடம் டக்கென முழங்கால் மடித்து காதல் சொல்லிவிட்டார் பல்லாண்டுத்தோழர் டேன் ஹார்வத் . மூச்சுவாங்க , மகிழ்ச்சியில் கண்கலங்க ஸ்டெபானியா ஓகே சொல்ல , பார்வையாளர்கள்  வாழ்த்து