இடுகைகள்

மின்னூல் 2023 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பதில் சொல்லுங்க ப்ளீஸ் 2 - மிஸ்டர் ரோனி - புதிய மின்னூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
  பதில் சொல்லுங்க ப்ளீஸ 2 அட்டைப்படம்

பேராசை பூதம் - ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை 2023 பாகம் 1 - மின்னூல் வெளியீடு

படம்
  அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றிய அம்சங்களை திரு. இரா.முருகானந்தம் தமிழாக்கம் செய்ய அறிவுறுத்தினார். பங்குச்சந்தை, முதலீட்டு நிதி  என்பதெல்லாம் நான் இதுவரை செய்யாத விஷயங்கள். ஆனாலும் முருகு அவர்களின் நம்பிக்கை என்னை எழுத வைத்தது. அப்படித்தான் ஹிண்டன்பர்க் அமைப்பின் ஆங்கில அறிக்கையின் ஒருபகுதி நூலாகி இருக்கிறது.  அதானி குழுமத்தின் மோசடிகளில் ஒருபகுதிதான் இந்த நூல். மொத்தம் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இவற்றில் நீங்கள் அதானி குழுமம் எப்படி இயங்குகிறது, நிதி பரிவர்த்தனை முறை, மோசடியாளர்களின் கூட்டு, மோசடி முறை, வெளிநாட்டு மோசடி நிறுவனங்கள் எங்கெங்கு உள்ளன, அதற்கான ஆதாரங்கள் என அனைத்தையும் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.  ஒரு நிறுவனம் வளர்கிறது, உச்சமான சொத்து மதிப்பு பெறுகிறது, உலகளவில் தொழிலதிபர் வணிக இதழ்களின் பெருமைக்குரிய பட்டியல்களில் இடம்பெறுகிறார். இதெல்லாம் சாதாரண மக்களுக்கு எள் அளவு கூட பயனில்லாத செய்தி. ஆனால் அந்த தொழிலதிபர், பங்கு விலையை செயற்கையாக உயர்த்தி பொதுத்துறை வங்கிகளில் கடன்களைப் பெறுகிறார். அதை வைத்து முறைகேடுகளில் ஈடுபடுகிறார். இதனால் நிறுவனம் திவால் ஆகும் சூ

நிலவொளிரும் மலைகள் - முத்தாரம் கடைசிபக்க நேர்காணல்கள் - மின்னூல் வெளியீடு

படம்
  முத்தாரம் இதழ் தொடக்கத்தில் பொது அறிவுக் களஞ்சியமாக மாற்றப்படாதபோது, கிளுகிளுப்பான தொடர்களைக் கொண்டு சற்று ஜனரஞ்சமாக இருந்தது. வயதான அதன் வாசகர்கள அதில் நிறைய சரித்திரக் கதைகளைப் படித்திருப்பார்கள். எனது பணிக்காலத்த்தில் பொது அறிவுக் களஞ்சியம் என்ற வகையில் அதன் கேப்ஷனுக்கு ஏற்ப ஏதேனும் மாற்றங்களை செய்யவேண்டும் என முயன்றேன்  தடைகள் இருந்தாலும் விடாப்பிடியாக நின்று பக்க எண்கள் வடிவமைப்பு, தொடருக்கான லோகோ ஆகியவற்றை தனியாக வரைந்து வாங்கி பயன்படுத்தினோம் இந்தியா டுடேவின் சில நேர்காணல்களை படித்தேன். அதில் கடைசிபக்க நேர்காணல் நன்றாக இருக்கும். குறைந்த கேள்விகள், வடிவமைப்பு நுட்பமாக இருக்கும். இன்று வரைக்கும் அந்த இதழில் அப்பகுதி தடைபடாமல் வருகிறது. பெரும்பாலும் சினிமா பிரபலங்கள் வருவார்கள். அந்த ஐடியாவை உருவி, வடிவத்தை மாற்றி முத்தாரத்தில் பயன்படுத்தியதுதான் கடைசிபக்க நேர்காணல், இதை முத்தாரம் மினி என்று பெயர்வைத்து செய்தோம்.  அப்போது குங்குமம் முதன்மை ஆசிரியர் கே.என். சிவராமன் புதிதாக வந்திருந்தார். பத்திரிகையாளர் தி.முருகன் வேறு இதழுக்கு சென்றிருந்தார். திரு.கே.என்.சிவராமன் அவர்கள் குங்கும

பதில் சொல்லுங்க ப்ளீஸ் - மிஸ்டர் ரோனி - மின்னூல் வெளியீடு

படம்
  பதில் சொல்லுங்க ப்ளீஸ்... அட்டைப்படம் தினகரன் குழுமத்தில் இருந்து வெளிவந்த வார இதழ், முத்தாரம். அந்த  இதழில் வெளியான ஏன்? எதற்கு? எப்படி? தொடரின் செழுமைபடுத்தப்பட்ட வடிவம்தான் இந்த நூல்.  பதில் சொல்லுங்க ப்ளீஸ் நூலில் என்ன எதிர்பார்க்கலாம்? தினசரி வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சந்தேகங்கள், படிக்கும் நாளிதழில் உள்ள அறிவியல் தொடர்பான கேள்விகள் ஆகியவைதான் நூலில் இடம்பெற்றுள்ளன.  நூலின் தலைப்பை எழுத்தாளர் சுஜாதா தனது நூல்களுக்கு ஏற்கெனவே வைத்துவிட்டார் என பின்னர்தான் தெரிந்த்து. ஆனால் அதற்குள்  தலைப்பு வைத்து தொடரை தொடங்கியாயிற்று. ஆனாலும் தலைப்பு தொடருக்கு சரியாக இருந்த காரணத்தால் அதை மாற்றவில்லை. இந்த நேரத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு, அவரின் தலைப்புக்காக நன்றி கூறிக்கொள்கிறேன்.  நூலின் அட்டைப்படம், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது. ஃபோடார் வலைத்தளத்தில் படத்திற்கான குறிப்புகளைக் கொடுத்து உருவாக்கியது. அறிவியல் தொடருக்கு, அட்டைப்படமும் சாதாரணமாக இருந்தால் எப்படி? அறிவியல் என்பது காலம்தோறும் மாறிக்கொண்டே இருப்பது, நிறைய தகவல்கள் மாறிக்கொண்டே இருக்கும்தான். அதை மறுக்கவில்லை.

காந்தியின் ராமன் - புதிய மின்னூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
  காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையொட்டி ஆங்கில நாளிதழ்களில் சிறப்புக்கட்டுரைகள் வெளிவந்தன.அதனைத் தொகுத்து தமிழாக்கம் செய்துதான், காந்தியின் ராமன் நூல் வெளியாகியிருக்கிறது.  இந்த நூலின் தொடக்க வடிவம் பிரதிலிபி தமிழில் வெளியானது. ஆனால், அந்த கட்டுரைகள் எழுதப்பட்ட வேகத்தில் பதிவிடப்பட்டதால் அதில் ஒரு சீரற்ற தன்மை இருந்தது. காந்தியின் ராமன் நூல் வடிவத்தில் பிழைகள் நீக்கப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளன.  நூலின் அட்டைப்படம் மட்டும் இப்போது.... பின்னாளில் நூலை தரவிறக்கி வாசிக்கும்படியான இணைய முகவரி வெளியிடப்படும். நன்றி! நன்றி அட்டைப்படம் - dough belshaw, creative commons பிரதிலிபி தமிழ் வலைத்தளம்   டைம்ஸ் ஆப் இந்தியா  நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

அசுரகுலம் 5 - ரகசிய நரகம் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  ரகசிய நரகம், அசுரகுலம் தொடர்வரிசையில் ஐந்தாவது நூல். இந்த சிறுநூல், குற்றங்களை செய்வதில் உள்ள பல்வேறு உளவியல் அணுகுமுறைகளை ஆராய்கிறது. சிக்மண்ட் பிராய்ட் தொடங்கி அதற்கு பிறகு உருவான உளவியல் கோட்பாடுகள், குற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை எளிமையாக விளக்குகிறது. நூல்களை அமேஸானில் தரவிறக்கி வாசிக்க.... https://www.amazon.in/dp/B0BTY7MZQV

அசுரகுலம் 5 - ரகசிய நரகம் மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
 

சுவனபதியின் கீழே ஓடும் ஆறு - புதிய மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்