இடுகைகள்

ரோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிஃப்ட் வாங்குவதில் என்ன குழப்பம்?

படம்
மிஸ்டர் ரோனி கிறிஸ்துமஸ், பிறந்தநாள், புத்தாண்டு கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகளின்போது என்ன பரிசு பிறருக்கு கொடுப்பது என்று குழப்பம் ஏற்படுகிறது என்ன செய்வது? யாருக்கு பரிசு கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு என்ன உதவும் என்று பார்த்து பரிசு கொடுங்கள். அதற்கு என்று ஜட்டி, பனியன் வாங்கி தரக்கூடாது. அதெல்லாம் அவரே பார்த்து வாங்கிக்கொள்வார். இன்று பெரும்பாலும் அமேசான், ஃபிளிப்கார்ட்டில் விஷ் லிஸ்டை தயாரித்து வைத்துவிடுகின்றனர். பிறந்தநாளின்போது, அதைப்பார்த்து அதில் ஒன்றை வாங்கிக்கொடுங்கள் என்கிறார்கள். கல்யாணத்திற்கு கூட மொய் எழுதுவதை விட வீட்டுக்கு தேவையான பொருட்களாக கொடுக்கலாம். அல்லது குறிப்பிட்ட ஆபீஸ் சார்பில் கொடுத்துவிடலாம். வேறு எதுவுமே மண்டையில் தோன்றவில்லையா? இரண்டு ரூபாய்க்கு மொய் கவர் வாங்கி அதில் காசை வைத்து கொடுத்துவிடலாம். யாருக்கு கொடுக்கிறோமே அவருக்கு நம்முடைய விருப்பம், ஆசை, ஈடுபாடு சார்ந்தும் பரிசுகளை வாங்கிக் கொடுக்கலாம். அதேசமயம் அவர்களுக்கு பயன்படும்படு இருக்கவேண்டியது முக்கியம். இதற்கெல்லாமா கவலைப்படுவது? பட்ஜெட் போடுங்கள் அப்புறம் அதற்கேற்ப கிஃப்ட் தேடுங்கள்

மேகம் திரண்டால் பூமி கூலிங் ஆகுமா? - மிஸ்டர் ரோனி

படம்
மிஸ்டர் ரோனி பருவநிலை மாற்றத்தால் மழை அதிகமாக பூமிக்கு கிடைக்கிறது. அதேசமயம் இப்படி திரளும் மேகங்களால் பூமியின் வெப்பம் குறையுமா? இப்படியெல்லாம் பாசிட்டிவ்வாக யோசிப்பதால் நீங்கள் விக்ரமன் பட ரசிகராக இருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக மேகங்களை நீங்கள் கூறுவதுபோல முடிவு செய்ய முடியாது. இதனால் அவை பூமியின் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை குறைக்கும் என்று எந்த நம்பிக்கையையும் கொள்ள முடியாது. பருவநிலை மாற்றத்தால் பெய்யும் மழை என்பது மேக உடைப்பு போல ஒரு மணிநேரத்தில் அந்த சீசனுக்கான ஒட்டுமொத்த மழையும் பெய்யும். இதனை நீங்கள் எப்படி நேர்மறையாக பார்க்க முடியும்? ஆய்வாளர்களும் மேகங்களை வைத்து எந்த முடிவுக்கும் வரமுடியாது. காரணம் நிலையின்றி பயணிக்கும் அதன் தன்மைதான். நன்றி - பிபிசி

சிறிய நாய்களுக்கு ஆக்ரோஷம் ஏற்படுவது ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி பெரிய நாய்களை விட சிறிய நாய்கள் மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொள்வது ஏன்? அக்கறைதான். நாய்களும் ஓர் உயிர் என்று நினைத்தால் பரவாயில்லை. அதனை ஒரு பொருளாக, தொந்தரவாக உரிமையாளர்கள் நினைத்தால் அதனை நாய்கள் உடனே உணர்ந்துகொள்ளும். இதனால்தான் கவனத்தை ஏற்படுத்த சைக்கிளில் வருபவரை கடிக்கப்போவது, வீட்டுக்கார ஆட்களை பிறர் தொட்டால் கூட மேலே விழுந்து பிறாண்டுவது, எப்போதும் ஷோல்டரை தூக்கிக்கொண்டு சண்டைக்கோழி விஷால் மாதிரியே திரிவது என இருக்கும். இதற்கு மரபணு ஒரு காரணம் என்றாலும், நாய்களின் குணம் இப்படி மாற்றுவழியில் போனால் நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். இல்லையெனில் அடுத்த பேண்ட் எய்ட் உங்களுக்குத்தான். நன்றி - பிபிசி 

பாலியல் சந்தோஷம் மனிதர்களுக்கு மட்டும்தானா?

படம்
giphy மிஸ்டர் ரோனி செக்ஸை மனிதர்கள் சந்தோஷத்திற்காக நாடுவது உண்டு. பிற விலங்கினங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவது உண்டா? ஆடியோ பார்னோகிராபி வந்துவிட்ட காலத்தில் இப்படி ஒரு சந்தேகமான கேள்வி. அப்படி விலங்குகளும் உலகில் உண்டு. இறைவன் கொடுத்த உறுப்பை முழுமையாக பயன்படுத்த வேண்டுமே? இல்லையெனில் சாமிக்குத்தம் ஆகிவிட்டால் என்ன செய்வது? போனபோஸ் எனும் சிம்பன்சி இனத்தில் இதுபோன்ற சில்மிஷ சந்தோஷ அனுபவங்கள் உண்டு. இவை சந்தோஷத்திற்காக நிகழ்கிறதா என்று இன்னும் ஆராய்ச்சிகள் முழுமையாக நமக்கு விளக்கவில்லை. இந்த குரங்குகள் கர்ப்பம் தரித்தபோதும், பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போதும் செக்ஸ் உறவு கொண்டு மகிழ்கின்றன. எதற்கு என ஆராய்வது வேண்டாம். சந்தோஷம் தானே முக்கியம்? இதைப்போலவே டால்பின்களும், ஜப்பானிய மக்காவ் வகை குரங்குகளும் செக்ஸ் அனுபவத்தை விமரிசையாக அனுபவிக்கின்றன என்பது ஆராய்ச்சியாளர்கள் சொன்ன தகவல். நன்றி - பிபிசி

வெள்ளியில் வாழ முடியுமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி நாம் வெள்ளி கோளுக்கு சென்று, அதன் வான்பரப்பில்  விண்கலத்தில் வசிக்க முடியுமாழ சயின்ஸ் பிக்சன் படமாக வேண்டுமானால் இதனை முயற்சிக்கலாம். காரணம், அப்படி விண்கலத்தில் மனிதர்கள் வாழ்வது ஆபத்தானது. மேலும் மிதக்கும் நகரங்கள் பெரும் செலவு பிடிப்பவை. வெள்ளி ஏறத்தாழ பூமியைப் போன்ற தன்மையைக் கொண்டவை. அறுபது கி.மீ தொலைவுக்கு பூமியைப் போன்ற ஈர்ப்புவிசை இருக்கும். இதனால் ஆராய்ச்சியாளர்கள் அப்படி நினைத்தார்கள். ஆனால் அது நிறைய நடைமுறைப் பிரச்னைகளைக் கொண்டிருந்ததால் தற்போது, செவ்வாய் பக்கம் திரும்பிவிட்டனர். எனவேதான் எலன் மஸ்க், அமேசான் பெசோஸ் உட்பட செவ்வாயை காலனியாக்கி மனிதர்களை குடிவைக்க திட்டமிட்டு வருகின்றனர்.இப்போதைக்கு வீனஸ் வாழ்க்கை என்ற பெயரில் சயின்ஸ் ஃபிக்ஸன் படம் மட்டுமே எடுக்க முடியும். ஆராய்ச்சிகள் அந்த வேகத்தில்தான் போய்க்கொண்டிருக்கிறது. நன்றி - பிபிசி

பற்பசையில் எதற்கு இனிப்பு சேர்க்கிறார்கள்?

படம்
giphy மிஸ்டர் ரோனி பற்பசையில் எதற்கு இனிப்பு சேர்கிறார்கள்? காலையில் எழுந்து பல் விளக்கும்போது நிறையப்பேர் அதன் காரத்தன்மையை மட்டுமே கவனிப்பார்கள். ஆனால் அவற்றை மறைக்கும் உத்தியாக இனிப்பை சேர்த்திருப்பார்கள். இதனால் பெரும்பாலான பற்பசைகள் இனிப்பைச் சேர்த்திருப்பார்கள். சிலர் மட்டும் பரிசோதனை முயற்சியாக இனிப்பின்றி காரத்தன்மையோடு பற்பசையை உருவாக்கி இருப்பார்கள்.  இனிப்புச்சுவைக்காக சார்பிட்டால், ஸைலிட்டால் ஆகிய வேதிப்பொருட்கள் பற்பசைகளில் சேர்க்கப்படுகின்றன.இவை பற்பசையின் ஈரத்தன்மை கெடாமல் பார்த்துகொள்கிறது. இதனால்தான் பேஸ்ட் வெளியே வந்தபின்பு எளிதில் உலர்வதில்லை.  நன்றி - பிபிசி 

மதுவால் ஏற்படும் ஹேங்ஓவர் பிரச்னை - சமாளிப்பது எப்படி?

படம்
giphy ஆண்டு இறுதியை நெருங்கி விட்டோம். அதனால், பார்ட்டி பண்ணலாம் வா என்றால் கோரிக்கையையும் மறுக்கமுடியாது. பேசியபடி குடிப்பதிலும் அளவு அதிகரிக்கிறது. இதனால் அடுத்தநாள் என்னாச்சு என தலையைப் பிடித்தபடி பலரும் எழுகிறார்கள். உண்மையில் மது அருந்துவதால் உடலுக்கு என்னாகிறது? மது அருந்துவது உடலில் கடுமையான நீரிழப்பை ஏற்படுத்துகிறது. இதனால்தான் மது குடித்தவர்களுக்கு, சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது. கல்லீரலை மட்டும் மது பாதிப்பதில்லை. குடலையும் பாதிக்கிறது. மது அருந்துபவர்களுக்கு, அதன் மூலம் வயிற்றில் அசிட்டால் டிஹைடு என்ற நச்சுப் பொருள் உருவாகிறது. இதுவே ஹேங்ஓவரின் வாந்தி, குமட்டல், சோர்வு ஆகியவற்றின் காரணி. சிலர் சிவப்பு வைன், பார்பன் பருகுவார்கள். அவர்களது நம்பிக்கை, அதில் வாந்தி போன்ற பிரச்னைகள் அடுத்த நாள் ஏற்படாது என்பது அவர்களது எண்ணம். ஆனால் உண்மையில் ஜின், வோட்காவை விட மோசமான பிரச்னைகளை மேற்சொன்ன பானங்களே ஏற்படுத்துகின்றன. இதிலும் சிலருக்கு மட்டும் அதிக போதை பாதிப்பு ஏற்படுகிறது. ஆராய்ச்சியில் அவை மரபணு மற்றும்  குடிப்பவரின் வயது, எடை சார்ந்தவை என்று கண்டறியப்

தானியங்கி கியர் போடும் கார்களின் மீதான மோகம்!

படம்
giphy மிஸ்டர் ரோனி அமெரிக்கர்கள் தானியங்கி கியர் போடும் முறையுள்ள கார்களை அதிகம் வாங்குகின்றனர். என்ன காரணம்? அமெரிக்காவில் உள்ள சாலைகள் பெரும்பாலும் வளைந்து நெளிந்து செல்பவையல்ல. அங்கு மக்கள் தொகையும் குறைவுதான். எனவே அவர்களுக்கு, தானியங்கி கார்கள் உதவும். இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்த கார்களை எளிதாக பயன்படுத்த முடியாது. குண்டும் குழியுமாக சாலைகள், அதிக திருப்பங்கள் என நீங்கள் கியர்களை அடிக்கடி மாற்றி மாற்றி சோர்வீர்கள். அங்கு தானியங்கி கியர் போடும் முறை பயன்படாது. ஆனால் அமெரிக்காவில் நேராக செல்பவையாக உள்ளன. வளைவு என்பது ஒப்பீட்டளவில் குறைவு. எனவே தானியங்கி கியர் போடும் முறை அங்கு விரும்பப் படுகிறது. முழுவதுமாக கார்கள் கணினியில் இயக்கப்பட்டாலும் அதையும் அமெரிக்கர்கள் வரவேற்பார்கள். அந்த நேரத்தில் ஏதாவது வேலையைப் பார்க்கலாம் பாருங்கள். நன்றி - பிபிசி

மன அழுத்தம் போக்கும் மருந்துகளை மக்கள் நம்புவதில்லை. காரணம் என்ன?

படம்
மிஸ்டர் ரோனி மன அழுத்தம் போக்கும் மருந்துகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருப்பது ஏன்? இன்று மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. வான்டட் ஆங்கிலப் படத்தில் மெக்அவி அடிக்கடி மன அழுத்தப் பிரச்னைக்காக மாத்திரைகள் சாப்பிடுவார். அது இயல்பானதாக இன்று மாறியுள்ளது. காரணம் உணர்ச்சிகளை நாம் எல்லா இடங்களிலும் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத இயலாமை உள்ளது. இவை இரவில் நம் மனதில் குத்தல் கொடுக்க, மூளையில் கனவுகள் உருவாகின்றன. பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைப்பது செரடோனின் சுரப்பைக் குறைக்கும் புரோஸாக், சிட்டலோபிராம் ஆகிய மாத்திரைகளைத்தான். மன அழுத்தம் உங்களுக்கு எந்த அளவில் இருக்கிறது என்பதைப் பொறுத்து மருத்துவர் மருந்துகளின் டோஸ்களை முடிவு செய்வார். எனவே அவசரப்படாமல் மருந்துகளை எடுத்துக்கொள்வது மூளையை அமைதிப்படுத்தி பதற்றம் குறைக்கும். சாதாரணமாக ஒருவரோடு உட்கார்ந்து பேசினாலே மனம் லேசாகும். இதைத்தான் உளவியல் மருத்துவரும் செய்கிறார். நன்றி - பிபிசி

கண்களின் அமைப்பு மாறுபடுவது ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி உலகில் உள்ள பல்வேறு நாட்டினருக்கும் கண்களின் அமைப்பு மாறுபடுவது ஏன்? நம் கண்கள் புற ஊதாக்கதிர்களிடமிருந்து பாதுகாக்கப்படுவது முக்கியம். ஐம்புலன்களில் கண்களை மூடினால்தான் பலருக்கும் தூக்கம் வரும். ஐம்புலன்களும் சராசரியாக செயல்படும்போது அதன் திறன் நமக்குத் தெரியாது. டேர்டெவில் போல கண்கள் செயலிழந்தால், பிற புலன்கள் அதற்கு ஈடுசெய்யும்படி உழைக்கும். கண்களின் அமைப்புக்குக்கு காரணம், நம் உடலிலுள்ள செல்களின் திறன்தான். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் நிலப்பரப்பு தன்மையை உடல் பெற்றிருக்கும். இதனால் உடல் பாதிக்காதபடி உறுப்புகள் அமைகின்றன. கண்களின் மேல் இமை, ரெட்டினாவை சுற்றி அமைந்துள்ள வடிவத்தின் மாறுபாட்டை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். இதனை எபிகான்திக் ஃபோல்டு என்று குறிப்பிடுகிறார்கள். நன்றி - பிபிசி

எலுமிச்சையின் மஞ்சள் நிறத்திற்கு காரணம் என்ன?

படம்
மிஸ்டர் ரோனி எலுமிச்சம்பழம் மஞ்சளாக தெரிகிறது. எலுமிச்சங்காய் பச்சையாக இருக்கிறது. என்ன காரணம்? எலுமிச்சம்பழத்தில் உள்ள ஆந்தோசயனின் என்ற வேதிப்பொருள்தான் அதனை மஞ்சளாக மாற்றுகிறது. விவசாயிகள் இதனை பச்சையாக இருக்கும்போது பறித்து பழுக்க வைக்கின்றனர். இதனால் அவை கொண்டு செல்லும் வழியில் பழுத்து சந்தையில் பழுக்க வைக்கப்படுகின்றன. மரத்திலிருந்து அதனை பறித்தவுடனே அதன் வேதிமாற்றங்கள் இயல்பானதாக இருப்பதில்லை. நன்றி - பிபிசி

பாக்டீரியாக்கள் பாதிப்பு ஏற்படுத்துமா?

படம்
மிஸ்டர் ரோனி நம் உடல் செல்களை விட பாக்டீரியாக்கள் அதிகமாக உள்ளனவா? அவை அளவில் சிறியன. என்பதால், உடலின் செல்களோடு ஒப்பிட்டால் 50 சதவீதம் இருக்கும். வெய்ஸ்மன் இன்ஸ்டிடியூட் செய்த ஆய்வில் இந்த உண்மை வெளியாகியுள்ளது. இதில் கவலைப்பட ஏதுமில்லை. டெட்டால், லைஃப் பாய் விளம்பரங்கள் பார்த்து பதறாதீர்கள். நன்மை, தீமை செய்யும் பாக்டீரியாக்கள் என நம் உடலில் அனைத்து கலந்தே இருக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது, பாக்டீரியாக்கள், வைரஸ் நம் உடலைத் தாக்குகின்றன. உடல் தனி, பாக்டீரியாக்கள் தனி என்று நீங்கள் பிரித்துப்பார்க்கத் தேவையில்லை. அவை அனைத்தும் சேர்ந்துதான் மனித உடலாக உருவாகியிருக்கிறது. நன்றி - பிபிசி

போதை மருந்துகளைச் சாப்பிட்டால் என்னாகும்?

படம்
போதை மருந்துகளைச் சாப்பிட்டால் கண்களுக்கு விநோத காட்சிகள் தெரியும் என்கிறார்களே. அது உண்மையா?  எனக்கு தெரிந்த நாளிதழ் பொறுப்பாசிரியர் சினிமா வட்டாரத் தொடர்பு கொண்டவர். நான் எல்எஸ்டி கூட பயன்படுத்திவிட்டேன் என மாஸ் என்ட்ரி கொடுத்து டயலாக் பேசினார். போதைப்பொருட்களை சாதாரமாக சாப்பிடும்போது மூளையிலுள்ள செரடோனின் போன்ற சுரப்பிகளின் செயல்பாடு அதிகரிக்கும். இதன்விளைவாக மகிழ்ச்சியான காற்றில் பறப்பது போன்ற எண்ணம் உருவாகும்.  மூளையிலுள்ள தகவல்தொடர்புகளுக்கு நியூரான்கள்தான் பொறுப்பு. அவற்றின் செயல்பாடுகளை போதைப்பொருட்கள் தளர்த்தி விலக்கும். இதனால்தான் இந்த ஆட்களுக்கு அந்நேரத்தில் என்ன நடந்தது என்றே தெரியாது. மூன்றாவது கண் திறந்தது போல மிதமிஞ்சிய உற்சாகத்துடன் திகழ்வார்கள். இதனாலேயே மனக்கோளாறுகளைக் கொண்டவர்களின் மூளைக்கொதிப்பை அடக்க தூக்க மருந்துகளை மனநல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன. கற்றல் குறைபாடு கொண்டவர்களும் இதேபோல்தான். அவர்களுக்கு கண்களை மூடித் தூங்கத் தெரியாது. உடலின் மொத்த ஆற்றலும் காலியானால் மட்டுமே பேட்டரி தீர்ந்த ரோபோ கணக்காக ஓய்வாவார்கள். நன்றி - பிபிசி

கண்களை நீலநிற ஒளி பாதிக்கிறதா?

மிஸ்டர் ரோனி நீல நிற ஒளி தூக்கமின்மைக்கு காரணமா? இன்று போன், கணினி என பல்வேறு டிஜிட்டல் சாதனங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதில்தான் படிக்கிறோம். சிரிக்கிறோம். சம்சாரிக்கிறோம். இதன் பாதிப்புகள் பார்வை இழப்பு, தூக்கமின்மை என்று கூறுகிறார்கள். உண்மையா? நிச்சயம் இல்லை. எலிகளிடம் இதுபற்றி சோதனை நடத்தப்பட்டது. அதிக செறிவிலான நீலநிற ஒளிக்கதிர்கள் அவற்றின் பார்வைத்திறனை பாதித்த து உண்மைதான். ஆனால் மனிதர்களின் விஷயத்தில் இது மாறுபட்டது. உண்மையில் சூரியனிலிருந்து வெளிவரும் நீலநிற ஒளி என்பது மிக அதிகம். அதை எப்போதேனும் பார்த்திருப்பீர்கள். அதைவிட கணினி, டேப்லட், ஸ்மார்ட்போன் ஆகியவை குறைவான ஒளியைக் கொண்டவை.அவை எப்படி உங்கள் பார்வையைப் பாதிக்கும்? இதன் பொருள் அவை பாதிக்காது என்பதல்ல. அதன் அலைநீளம் இதில் முக்கியமானது. கண்களிலுள்ள அமைப்பு இயல்பாகவே நீலநிறத்தை தடுக்கும் திறன் கொண்டது. குளிர்கண்ணாடிகள் கண்களின் பாதிப்பைக் குறைக்கின்றன என்பது உண்மைதான். கண்களிலுள்ள ஆர்பிசிசி எனும் செல்கள் கணினியிலுள்ள நீலநிற ஒளியைப் பார்த்து விழித்திருக்கலாம் என்ற சிக்னலை மூளைக்கு கொடுக்கிறது. இதனால்தான

கற்பனையான நண்பர் ஆபத்தை ஏற்படுத்துவாரா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி என் மகன் கற்பனையாக ஓர் நண்பனை உருவாக்கி விளையாடிக்கொண்டிருக்கிறான். இது ஆபத்தானதா? அவன் சிறுவனாக இருக்கும்வரையில் அப்படி விளையாடுவது எந்த ஆபத்தையும் தராது. தனக்கான நண்பராக ஒருவரை கற்பனை செய்து விளையாடுவது சிறுவயதில் அவனின் மொழிவளர்ச்சிக்கு உதவும். அதனால் இம்முயற்சிகளை தடுக்காதீர்கள். அதேசமயம் இதே தன்மை வளர்ந்து வரும்போது குறையும். குறைய வேண்டும். அப்படி இல்லாதபோது நீங்கள் கவனிப்பது அவசியம். மற்றபடி நீங்கள் கேள்வி கேட்டு பதில் பெறுமளவு இது முக்கியமான விஷயம் அல்ல. நன்றி - பிபிசி 

மனிதர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வளர்ப்பு பிராணிகள்!

படம்
மிஸ்டர் ரோனி நாய், பூனை ஆகியவை உணவுக்காகத்தான் நம்மை சார்ந்துள்ளதா? மனிதர்கள் நாய், பூனைகள் வாழ்வதற்கான இடங்களை அழித்துவிட்டார்கள். பின் அவை எங்கே ஏர்பிஎன்பியில் அறை புக் செய்தா வாழ முடியும்? எனவே அவை மனிதர்களை தாஜா செய்தே சந்தோஷமாக வாழ்கின்றன. இயல்பாகவே வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பவர்கள் மனிதர்கள் மீது நம்பிக்கை இழந்தவர்களாகவே இருப்பார்கள். இந்த வகையில் முதியவர்களுக்கும் சிறிதேனும் வாழ்வு மீது நம்பிக்கை இருக்க வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை ஆகியவை உதவுகின்றன. காவல், பூனையைத்துரத்த என்பதெல்லாம் மாறி அதிக காலமாகிவிட்டது. இன்று நாய்களை தன் நண்பர்கள் போலவே மனிதர்கள் கருதுகிறார்கள். பரிவோடு நடத்துகிறார்கள். இவை மனிதர்களுக்கு மிகச்சிறந்த நண்பன் என்பதோடு, அடிமையாகவும் இருப்பதால் எதையாவது கட்டுப்படுத்த நினைக்கும் மனிதர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இதனால் அவர்களின் மன அழுத்தம் குறைகிறது. இந்த தன்மை அவர்களின் வாழ்நாளை அதிகரிக்கவும் உதவும் என்கிறது மேற்குலகின் ஆராய்ச்சி. இயற்கையில் எதையும் தனியுடையாக பார்க்காதீர்கள். இயற்கையிலிருந்து நம்முடைய திறன் மூலம் உணவைப் பெற்றாலும் பகிர

பேட்டரிகளின் மறுசுழற்சி!

படம்
மிஸ்டர் ரோனி பேட்டரிகளை எப்படி மறுசுழற்சி செய்கிறார்கள்? லித்தியம் அயன் பேட்டரிகளை தற்போது மறுசுழற்சி செய்யும் முறை சரியானது அல்ல. இதற்கு ஆகும் செலவு அதிகம். எனவே புதிய பேட்டரிகளை செய்வதே சரியானது. பழைய பேட்டரியில் அதாவது கார்களுக்கு பயன்படும் பேட்டரிகளை உடைத்து, மீண்டும் அதில் புதிய முறையில் தயாரிப்பார்கள். காரீய அமிலம் கொண்ட பேட்டரிகளை இம்முறையில் மறுசுழற்சி செய்கிறார்கள். இதேபோல அல்கலைன் பேட்டரிகளில் ஜிங்க். மாங்கனீசு ஆகியவற்றை இம்முறையில் மாற்றம் செய்து தயாரிக்கின்றனர்.  நன்றி - பிபிசி

தலையில் பந்தை முட்டினால் நினைவிழப்பு குறைபாடு ஏற்படுமா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி கால்பந்தை தலையில் முட்டி விளையாடுவதை பார்த்திருப்பீர்கள். தற்போது ஆராய்ச்சியாளர்கள் அப்படி விளையாடுவதை ஆபத்து என்கிறார்களே? ஸ்காட்லாந்து நாட்டில் பன்னிரண்டுக்கு வயதுக்கு குறைவான சிறுவர்கள் கால்பந்தை தலையில் முட்டி விளையாடக்கூடாது என்று தடை விதிக்கலாமா என யோசித்து வருகின்றனர். காரணம், தலையில் முட்டி விளையாடும்போது, மூளை பாதிக்கப்பட்டு டிமென்ஷியா எனும் நினைவிழப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. 1970 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஜெஃப் ஆஸ்டில் ஃபிபா கோப்பையில் பங்கேற்றவர். இவர் விளையாட்டில் ஏற்பட்ட காயங்களால், 59 வயதில் தன் மகளின் வீட்டில் இறந்துபோனார். இவரின் தலையை ஆராய்ச்சி செய்தபோது, குத்துச்சண்டை வீர ர்களுக்கு தலையில் ஏற்படும் சிடிஇ எனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். காரணம், கால்பந்து விளையாட்டில் வேகமாக வரும் வந்தை தலையில் முட்டி கோல் அடிப்பதுதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. சாதாரண மக்களை விட கால்பந்து வீரர்கள் 3.5 மடங்கு டிமென்சியா குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. டாக்டர் வில்லி ஸ்டீவர்ட் என்பவர்

ஷெட்யூல்டு டிரக் என்றால் என்ன?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி ஷெட்யூல்டு டிரக் என்று சிவப்பு நிறத்தில் ஆயின்மென்டுகளில் பிரின்ட் செய்யப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இதற்கு என்ன பொருள்? ஷெட்யூல்டு டிரக் என்பதற்கு தமிழில் பட்டியலிடப்பட்ட மருந்துகள் என்று பெயர். இதிலுள்ள மருந்துகள் அடிமையாக்கும் தன்மை கொண்டவை, பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துபவை. தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளவை என அடையாளம் காணப்பட்டு அரசு மூலம் இவை பட்டியலிடப்பட்ட மருந்துகள் என கூறப்படுகின்றன. மருந்துகள் என்றால் அதில் உள்ள வேதிப்பொருட்களின் சேர்மானம் என்று பொருள் கொள்ளுங்கள். அதுவே சரியாக இருக்கும். கீழே கூறுவது அமெரிக்க அரசு விதிமுறைகளின் படி வரும் பட்டியலிடப்பட்ட மருந்துகள் 1 உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் மருந்துகள் இவை. இவற்றை நடப்பு காலத்தில் முறையாக மருத்துவரின் பரிந்துரை இன்றி பயன்படுத்தக்கூடாது என அரசு கூறியுள்ளது. எ.கா - ஹெராயின்,  பியோட்டே , மெத்திலீன் டையாக்சி பீட்டமைன். பட்டியலிடப்பட்ட மருந்துகள் 2 இம்மருந்துகளும் உளவியல் சார்ந்த உடல் சார்ந்த அடிமைத்தனத்தை பாதிப்பை ஏற்படுத்துபவையே. ஆனால் பட்டியல்

சாகசப்படங்களைப் பார்ப்பது ஆபத்தா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி திகில் படங்களைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். அதில் ஆபத்து ஏதேனும் உள்ளதா? ஆல்பிரட் ஹிட்சாக் கூட பயந்த சுபாவம் கொண்டவர்தான். அதனால்தான் அவர் பேர்ட்ஸ் போன்ற திகில் படங்களை எடுக்க முடிந்தது என்று அவரே கிண்டலாக கூறுவார். காரணம், பயம் பற்றி பிறரை விட அவரே நன்றாக அறிவார். பொதுவாக மூளையின் செயல்பாடு, நரம்புத் துடிப்புகள் ஆகியவை பேய்ப்படங்களை சாகசங்களை விரும்புபவர்களுக்கு அதிகமாக இருக்கும். இவர்களுக்கு சாதாரணமாக நகரும் மெலோடிராமா குடும்ப படங்களைப் பார்க்கும்போது தூங்கிவிடுவார்கள். இதற்காகவே அவர்கள் பாய்ன்ட் பிரேக் போன்ற அதிசாகச படங்களைப் பார்க்கிறார்கள். ஸ்கை டைவிங், மலையேற்றம் போன்ற மிஷன் இம்பாசிபிள் விஷயங்களைச் செய்கிறார்கள். தம்பதிகளாக உட்கார்ந்து பேய்ப்படங்களை, திரில்லர், சாகசப்படங்களை பார்ப்பதை உளவியலாளர்கள் ஸ்னக்கில் தியரி என்று குறிப்பிடுகின்றனர். நன்றி - பிபிசி