இடுகைகள்

                                            ஆங் லீ  நேர்காணல் க டலில் ஒரு படகு ; அதில் ஒரு பையன் ; கூடவே ஒரு புலி. இதுதான் ' லைஃப் ஆஃப் பை ’ படத்தின் கதை. ஆனால் , இதை வெற்றிகரமான ஒரு புத்தகமாக்குவதையோ , சினிமாவாக்குவதையோ யோசித்துப்பாருங்கள். பெரிய சவால்!   பாண்டிச்சேரியைச் சேர்ந்தவன் பை. மிருகக்காட்சி சாலை நடத்தும் அவனுடைய தந்தை , அரசியல் சூழல் காரணமாக , விலங்குகளை விற்றுவிட்டு வெளிநாட்டில் குடியேற நினைக்கிறார். பையின் குடும்பம் விலங்குகளுடன் ஒரு சரக்குக் கப்பலில் பயணப்படுகிறது. வழியில் பெரும் புயல். இறுதியில் , உயிர் தப்பும் படகில் ஐந்து பேர். ஒரு கழுதைப்புலி , ஒராங்குட்டான் , வரிக்குதிரை , புலி , பை. முதலில் வரிக்குதிரையையும் ஒராங்குட்டானையும் கழுதைப்புலி கொல்கிறது. அடுத்து கழுதைப்புலியைப் புலி கொல்கிறது. இப்போது மிச்சம் இருப்பது இரண்டே பேர். புலியும் பையும். ஒரு பக்கம் ஆள் அரவமற்ற நடுக்கடல். இன்னொரு பக்கம் இரையாக்கிக்கொள்ளத் துடிக்கும் புலி. 227 நாட்கள். பை எப்படி எதிர்கொள்கிறான் ?                              இதை எழுத்தாளர் யான் மார்டெல் நாவலாக்கிப் பதிப்பிக்க அணுகி
                       துணிச்சலான முயற்சி           ஆ ரம்பத்திலிருந்து ஆரம்பிக்கலாம். இந்தக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்.   ரோச்சுக்கு அப்போது வயது 35. தன்னுடைய இரு பெண் குழந்தைகளும் படிக்கும் பள்ளி ஆண்டு விழாவுக்குச் செல்கிறார் ரோச். விழாவில் அவருடைய பிள்ளைகளின் வகுப்பாசிரியை பேசுகிறார். குழந்தைகள் அதிக மதிப்பெண்களைக் குவிப்பது எப்படி என்று விளக்கும் அவர் , அதற்கான நேர அட்டவணையையும் ஒப்பிக்கிறார். காலை 6 மணிக்குத் தொடங்கும் அந்த அட்டவணை இரவு 10 மணிக்கு முடிகிறது. ரோச் வீடு திரும்புகிறார்.                               நல்லது. நீங்கள் ரோச்சாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? அது ஒருபுறமிருக்கட்டும். ரோச் என்ன செய்தார் தெரியுமா ? மறுநாள் தன் இரு பிள்ளைகளையும் அழைக்கிறார். கதையை நன்றாகக்   கவனித்துக்கொள்ளுங்கள். அப்போது அவரது மூத்த மகள் எஸ்தர் 5- ம் வகுப்பு மாணவி. இளையவர் ஜூடி 3- ம் வகுப்பு மாணவி. இருவரிடமும் ரோச் என்ன கேட்டார் தெரியுமா ?  " இனியும் நீங்கள் இப்படிபட்ட ஆசிரியைகளிடமும் பள்ளிக்கூடத்திலும் படிக்க வேண்டுமா என்ன ?''                                      அப்புறம
நமக்குத் தெரியாத பேக்கர் ( ஆம்னிபஸ் தளத்தில் வெளியான   கட்டுரையின்   மீள்பதிவு)   எலிசபெத் பேக்கர் எழுதியிருக்கும் ‘ பேக்கரின் மறுபக்கம் ’ எனும் நினைவு குறிப்பு பேக்கரின் சுவாரசியமான வாழ்க்கைக்கு நல்ல சாட்சியமாகும். கோட்டயத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து , வேலூர் கிறித்தவ மிஷன் கல்லூரியில் டாக்டர். இடா ஸ்கட்லரின் கீழ் மருத்துவம் பயின்றவர் எலிசபெத். டாக்டர். இடாவின் ஆளுமையால் உந்தப்பட்டு கிராமப்புறங்களில் மருத்துவ சேவையில் ஈடுபட்டார். லாரி பேக்கரை மணப்பதற்கு முன் கரீம் நகரில் (ஆந்திரம்) மிஷன் மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். திருமணத்திற்கு பின்னரும் கூட இமாலய மலையடிவாரத்தில் இருந்த ஒரு கிராமத்தில் மருத்துவ சேவையை தொடர்ந்தார் , பின்னர் கேரளாவின் மேற்குச் தொடர்ச்சி மலை கிராமங்களிலும் தொடர்ந்தது அவருடைய மருத்துவ சேவை.   பேக்கர் அவர் உருவாக்கிய கட்டிடங்களுக்காக என்றும் நினைவுகூரப்படுபவர். பெருந்திரள் மக்களை மனதில் கொண்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் , சூழியல் பிரக்ஞையுடன் , மகத்தான லட்சியத்தை மனதில் சுமந்து , நம் மண்ணுக்கு உகந்த தனித்துவமா