இடுகைகள்

ஆல் இன் ஆல் அறிவியல்!

படம்
சிறுவனை காப்பாற்றிய தோல் ! மரபணு நோய்க்காக , லேபில் தோலை வளர்த்து ஏழுவயது சிறுவனை ஜெர்மனைச் சேர்ந்த மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர் . தோலை செயற்கையாக வளர்ப்பது முதல் முறையல்ல என்றபோதும் 80% அளவு தோலை உருவாக்குவது என்பது சாதனைதானே ! ஏழுவயது சிறுவனை junctional epidermolysis bullosa (JEB) எனும் மரபணு நோய் தாக்கியது . தோல்களில் கொப்புளங்கள் உருவாகி புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ள இந்நோயினால் உலகெங்கும் 5 லட்சம் பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . பாக்டீரியா தொற்றால் மூன்றில் இருபங்கு தோலை இழந்த சிறுவனைக் காக்க , ஸ்டெம் செல் மற்றும் தோல் செல்களை பயன்படுத்தி லேபில் தோலை செயற்கையாக உருவாக்கினர் . " எட்டு மாதங்களாக இச்சிறுவனின் உயிரைக்காப்பாற்ற போராடினோம் " என்கிறார் மருத்துவர் டோபியாஸ் ரோதோஃப்ட் . அறுவை சிகிச்சை செய்யப்பட்ட , சிறுவன் தற்போது நலமாக உள்ளான் . 2   பிட்ஸ் ! காலை தூக்கத்தை கலைத்து உற்சாகம் ஏற்படுத்துவதில் காஃபியை விட ஆப்பிள் பழங்கள் சிறந்தவை . ரத்தவோட்ட வேகத்தை அதிகரிக்க  ஆப்பிளிலுள்ள 13 கி . ஃப்ரக்டோஸ் உதவுகிறது . காரின் ஸ்டீரியரிங் வீலை க

அறிவியல் சூழ் உலகு!

படம்
நம்பினால் நம்புங்கள் ! நீர்நாயின் பற்கள் ஆரஞ்சு நிறமாக இருக்க காரணம் , அதிலுள்ள இரும்புச்சத்துதான் . பற்கள் சொத்தை ஆகாமல் இருக்க உதவும் கவசமும் இதுதான் . டெர்ரி டேவிஸ் என்ற ஸிஸோபெரெனிக் பாதிப்பு கொண்ட பொறியாளர் , கடவுளுடன் பேசுவதற்கான கம்ப்யூட்டர் ஓஎஸ் கண்டுபிடிக்க செலவிட்ட காலம் எவ்வளவு தெரியுமா ? 10 ஆண்டுகள் . தன் கால் எலும்பை தானே உடைத்து அதனை நகங்களாக பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் தவளைக்கு Wolverine Frog என்று பெயர் . கட்டிட டிசைனரான பக்மின்ஸ்டர் ஃபுல்லர் 1915-1983 ஆம் ஆண்டு வரை தன் வாழ்வை டைரியில் பதிந்தார் . 14 ஆயிரம் காகிதங்களைக் கொண்ட தொகுப்பின் பெயர் Dymaxion Chronofile. ஸ்காட்லாந்து மன்னரான நான்காம் ஜேம்ஸ் , மக்கள் வாசமே இல்லாத தீவுக்கு வாய் பேசமுடியாத பெண்ணையும் இரு குழந்தைகளையும் அனுப்பினார் . எதற்கு ? இயற்கையாக மனிதர்களின் மொழி எது என அறியத்தான் . 2 வருங்கால கோடிங் மொழிகள் ! எதிர்காலத்தில் முக்கியமாக தொழில்நுட்ப உலகில் ஒருவர் அவசியம் கற்கவேண்டிய கணினி மொழிகள் இவை . Java இணையத்தில் ஏ டூ இசட் பணிகளுக்கு அவசிய மொழி

லேடி டார்ஸான் ஜமுனா!

படம்
லேடி டார்ஸான் ஜமுனா !- ச . அன்பரசு ரக் ‌ ஷா பந்தனின் அர்த்தம் தெரியுமா ? சகோதரர்களுக்கு சகோதரிகள் மணிக்கட்டில் அணிவிக்கும் கயிறு , சகோதரனுக்கான நலனைத் தருவதோடு , சகோதரியை பாதுகாக்கும் பொறுப்பையும் வலியுறுத்துகிறது . அதேதான் ஜார்க்கண்டின் புர்பி சிங்பம் மாவட்டத்திலுள்ள முதுர்காம் கிராமத்திலும் நடந்தது . கிராமத்தைச் சேர்ந்த அறுபதுக்கும் மேற்பட்ட பெண்கள் சால் வனப்பகுதியிலுள்ள மரங்களுக்கு ராக்கி கட்டியுள்ளனர் என்பதுதான் மிராக்கிள் மேட்டர் . இப்பெண்கள் படைக்கு தலைமை வகித்த ஜமுனா துடு , 50 ஹெக்டேர் வனப்பகுதியை கடந்த 20 ஆண்டுகளாக டிம்பர் மாஃபியாக்களின் கொலைவெறித் தாக்குதல்களை எதிர்கொண்டு இரவும் பகலுமாக காவல் காத்து வருகிறார் . 1998 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புவரை படித்திருந்த ஒடிஷாவைச் சேர்ந்த ஜமுனா திருமணமாகி , முதுர்காம் கிராமத்திற்கு வந்தார் . காட்டை நம்பியே வாழும் மக்களை ஏமாற்றி வனத்தை சிலர் சுரண்டுவதை விரைவிலேயே அறிந்துகொண்டார் . டிம்பர் மாஃபியா குறித்து பலர் கூறிய கதைகளை கேட்டு பயந்தாலும் , வனத்தை இழந்தால் எதிர்காலம் இல்லை என்று உடனே புரிந்துகொண்டு சக கிராமத்தினர

அறிவியல் அறிவோம்!

படம்
செவ்வாயில் வீடு ! செவ்வாயில் வசிப்பதற்கான வீட்டின் டிசைன்களுக்காக மார்ஸ் சிட்டி டிசைன் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் போட்டியில் இந்த ஆண்டு Redwood Forest தலைப்பிலான எம்ஐடியின் டிசைன் வென்றுள்ளது . எம்ஐடியைச்சேர்ந்த 9 மாணவர்களின் டீம் , கைட்லின் முல்லர் வழிகாட்டுதலில் செவ்வாய் டிசைன் வீடுகளை வடிவமைத்து முதல்பரிசு வென்றுள்ளனர் . 10 ஆயிரம் பேர் தங்கும் வசதி கொண்ட இந்த வடிவமைப்பில் வசதிகளோடு தக்க பாதுகாப்பு வசதிகளும் உண்டு . " செவ்வாயைப் பொறுத்தவரை பனி , நீர் , மண் , சூரியன் என அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ளும்படி உருவாக்கியுள்ளோம் " என்கிறார் ஆராய்ச்சியாளரான சுமினி . இதன் வடிவமைப்புக்கு சொந்தக்காரர் , பிஹெச்டி மாணவரான ஜார்ஜ் லார்டோஸ் .  2 டிஜிட்டல் மாத்திரை ! அமெரிக்காவின் எஃப்டிஏ , நோயாளிகளுக்கான முதல் டிஜிட்டல் மாத்திரைக்கு அனுமதி வழங்கியுள்ளது . Abilify MyCite எனும் இம்மாத்திரை குறிப்பிட்ட சென்சாரை தன்னுள் கொண்டுள்ளது . இதன் விழுங்கிவிட்டு மாத்திரையின் விளைவை மொபைலிலுள்ள ஆப் மூலம் கண்காணித்து தகவல்தளத்தில் பதிவேற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம

அறிவியல் ஈஸி!

படம்
டாப் 5 தகவல் திருட்டு ! இமெயில் திருட்டு ! பிரான்சின் தற்போதை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் , மரைன் லெ பென் இருவருக்கும் கடுமையான அரசியல் போட்டி இருந்தது . மேக்ரானின் என் மார்ச்சே கட்சியின் இமெயில் கணக்கு ஹேக் செய்யப்பட்டு 9 ஜிபி அளவிலான தகவல்கள் வெளியானது பெரும் அதிர்ச்சி தந்த நிகழ்வு . PasteBin எனும் தளத்தில் வெளியாகி , பின் விக்கிலீக்ஸில் பரவலானது . பேங்க் கொள்ளை ! 2016 ஆம் ஆண்டு பிப் .26 வங்க தேசத்தின் மத்திய வங்கியில் SWIFT எனும் பணப்பரிமாற்ற முறையில் 951 மில்லியன் டாலர்கள் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு Dridex எனும் ட்ரோஜன் ப்ரோகிராம் பயன்படுத்தப்பட்டது . வேர்ட் மற்றும் எக்ஸல் பைல் இணைப்பு வழியாக வங்கி கணக்குகளை தாக்கியது . WannaCry தாக்குதல் ! 2017 ஆம் ஆண்டு மே மாதம் Wannacry எனும் ரான்சம்வேர் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கணினிகளை ஆட்டிப்படைத்தது . 2003 இல் NSA விலிருந்து ரிலீசான மால்வேர் , விண்டோஸ்களை தாக்கி 1 லட்சத்து 26 ஆயிரம் டாலர்கள் நஷ்டம் ஏற்படுத்தியது .  2016 ஆம் ஆண்டு யாஹூ வின் தகவல்தளம் கொள்ளையிடப்பட்டு பல கோடி பயனர்கள

அறிவியல் செய்திகள்!

படம்
ஸ்மார்ட் பாதுகாப்புக்கு நெஸ்ட் கேமரா ! முகத்தை ஸ்கேன் செய்து பாதுகாப்பதோடு , பத்து நாட்கள் வீடியோ சேமிப்பும் கொண்டு அசத்துகிறது நெஸ்ட் Cam IQ. கூகுளின் சகோதர நிறுவனமான நெஸ்ட்டில் முகமறியும் டெக்னாலஜியும் இதில் இணைந்துள்ளது . நெஸ்ட் கேமராவை கதவில் பொறுத்தி பாதுகாப்பை வஜ்ரமாக்கலாம் . அறிமுகமற்றவர்களை கேமராவில் பார்த்து உடனே அலர்ட் மெசேஜ்களை அனுப்பும் திறன் புதுசு . இதில் கூகுளோடு கனெக்ட் செய்வதும் , ஸ்மார்ட்போனை இயக்குவதும் ஸ்பெஷல் திறன்கள் . மைக் , ஸ்பீக்கர் இணையத்தில் இணைக்கும்போது நெஸ்ட் கேமராவின் திறன் கூடும் . உட்புறம் , வெளிப்புறம் என இரண்டுக்கும் தனி கேமராக்கள் உண்டு . விலை ரூ .19,518 பிளஸ் மாத வாடகை ரூ .650 செலுத்தி பயன்படுத்தலாம் .    2 2017: விண்வெளி கண்டுபிடிப்புகள் ! Boeing's Starliner Space Suit டேவிட்கிளார்க் கம்பெனி இந்த சூட்டை தயாரித்துள்ளது , முந்தைய உடையைவிட 20 பவுண்டுகள் எடை குறைவு , லைட்டான கச்சித வடிவம் கொண்டது . சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடக்க பயன்படும் சூட் இது . உடையில் காலணிகளின் டிசைனுக்கு ரீபோக் பொறுப்பு .  ஜனவரி