இடுகைகள்

தாவரங்களை பதிவாக்கும் ஓவியர்!

படம்
பெங்களூரைச் சேர்ந்த ஓவியக்கலைஞரான நிருபமா ராவ், தென்னிந்தியாவின் பல்வேறு தாவர இனங்களை ஓவியங்களாக வரைந்து பதிவு செய்து வருகிறார்.  சிறுவயதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா சென்று கோடைக்கால விடுமுறையைக் கொண்டாடிய நிருபமா, தற்போது இன்ஸ்டாகிராமில் பலரும் அறியாத தாவர இனங்களை ஓவியங்களாக பதிவு செய்து வருகிறார். 2016 ஆம் ஆண்டிலிருந்து நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளார். 2017 ஆம் ஆண்டிற்கான நேஷ்னல் ஜியாகிராபிக் இளம் ஆய்வாளர்களுக்கான உதவித்தொகையை நிருபமா ராவ் வென்றவர். மேற்குதொடர்ச்சி மலைகளிலுள்ள தாவர இனங்களைக் குறித்த நூல்களை எழுதியுள்ளார். அது விரைவில் வெளியாக உள்ளது.  " என் சிறுவயதில் நான் ஓவியக்கலைஞராக உருவாவேன் என்று நினைக்கவில்லை.  என் இரு சகோதரிகளோடு இணைந்து நூல்களை படிப்பதும் எழுதுவதுமாக கொண்டாட்டமாக இருந்தோம்.  நூல்களுக்கான அட்டை, இசை விழாவிற்கான போஸ்டர்கள் என பல்வேறு விஷயங்களை நாங்கள் உருவாக்கினோம்" என்கிறார் நிருபமா ராவ்.  "தாவர ஆராய்ச்சி எங்களது தாத்தா மூலம் எங்களுக்கு அறிமுகமானது. கர்நாடகாவிலுள்ள தாத்தாவின் பண்ணைதான் தாவரங்கள் மீதான ஆர்

எலன் மஸ்குக்கு பிடித்த நூல்கள்!

படம்
தொழில்துறையின் சூப்பர் ஸ்டாராக மின்னும் எலன் மஸ்காக எல்லோரும் ஆக ஆசைதான். அதனை எதிர்காலத்தில் செய்ய அவரது அடிச்சுவட்டை பின்பற்றுவது அவசியம். அவரின் பரிந்துரைகளான புத்தகங்கள் அதற்கு உதவலாம். "The Hitchhiker's Guide to the Galaxy" by Douglas Adams எலன் மஸ்க் தன் சிறுவயதில் நைட்ஸ்செ, ஸ்கோபென்ஹாயிர் ஆகியோரின் தத்துவ நூல்களை வாசித்தவர். " எனக்கு வாழ்க்கை மற்றும் அதன் அர்த்தம் குறித்து தீவிர தேடுதல் உண்டு. அப்போது வழிகாட்டியவர் டக்ளஸ் ஆடம்ஸ்' என்று கூறுகிறார் எலன் மஸ்க். இந்த நூல் விடைகளை விட கடினமான கேள்விகளை நமக்குள் உருவாக்குகிறது. கேள்விகளை சரியாக புரிந்துகொண்டாலே பதில்களை கண்டறிவது பெரிய விஷயம் இல்லைதானே! "Einstein: His Life and Universe" by Walter Isaacson ஒரு புத்திசாலி இன்னொரு புத்திசாலியை அங்கீகரித்து அவரின் நூல்களை படிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது? எலன் மஸ்க், ஐன்ஸ்டீன் விண்வெளி குறித்து உருவாக்கிய தியரிகள், ஆய்வுகள் ஆகியவற்றை நம் அனைவரைப் போலே வியந்து பாராட்டுகிறார்.  "Structures

மின்னூல் வெளியீடு - முத்தாரம் மினி

படம்
அன்புள்ள நண்பர்களுக்கு, முத்தாரம் இதழில் ஓராண்டாக வெளியான முத்தாரம் மினி தொடர் நிறைவுகு வருகிறது. டைம் இதழின் கடைசிபக்க நேர்காணல் ஐடியாவை தழுவி உருவானது இப்பகுதி. இந்தியா முதல் உலகம் வரை பலதரப்பட்ட ஆளுமைகளின் பேச்சுகள் இதில் இடம்பெற்றன. அவுட்லுக், ஓபன், ஃப்ரண்ட்லைன், வீக், லிவ் மின்ட், பிஸினஸ் ஸ்டாண்டர்ட் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் வந்த முக்கியமான பல்வேறு நேர்காணல்களில் சுருக்கமான மொழிபெயர்ப்பு இது. வாசியுங்கள். நன்றி! இணைய லிங்க் இதோ! https://tamil.pratilipi.com/read/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-SxRHtzPNmCB2-5mvi24455137012

சமூகநலத்திட்டங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன

படம்
இந்திய அரசு சிஎஸ்ஆர் திட்டங்களுக்கான நிதியை இரண்டு சதவிகிதம் அதிகரித்து அதனை கட்டாய செயல்முறையாக்கியுள்ளது. பிராண்டு மதிப்பு மற்றும்  கண்துடைப்பாக சிஎஸ்ஆர் செயல்பாடுகளை பெருநிறுவனங்கள் செய்துவருகின்றன. சமூகத்தில் அது என்ன விளைவை ஏற்படுத்தும். விளக்குகிறார் சம்ஹிதா குட் சிஎஸ்ஆர் அமைப்பு நிறுவனர் பிரியா நாயக்.  பெருநிறுவனங்கள் சிஎஸ்ஆர் திட்டத்தை எம்முறையில் செயல்படுத்தியுள்ளன? 2013 ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டப்படி சில கம்பெனிகள் சிஎஸ்ஆர் செயல்பாட்டில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவில் 2015-16 காலகட்டத்தில் 95.4 பில்லியன் டாலர்களிலிருந்து 138.28 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதனை கட்டாயச்சட்டமாக்கும்போது மேலும் பல்வேறு நிறுவனங்கள் இச்செயல்பாட்டை மேற்கொள்வார்கள். அரசுடன் இணைந்து செயல்படுவது இதில் என்ன விளைவை ஏற்படுத்தும்? இந்தியாவில் மக்கள் நல திட்டங்களை பெருமளவில் முன்னெடுப்பது இந்திய அரசு. ஆனால் அதனை ஊக்கமாக செய்வதில்லை. பெருநிறுவனங்கள் அரசுடன் இணையும்போது கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எளிதாக தீர்க்கமுடியும். கேர்மதர் திட்டத்திற்கு மோ

சமர்த்து திருடர்!

படம்
சமர்த்து திருடர்! அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலுள்ள ஹோட்டலில் மர்மக்குரல் கேட்கிறது என புகார். பாய்ந்து சென்ற போலீசார் சீன உணவகத்தின் புகைபோக்கியில் மாட்டி இருநாட்களாக உதவிகேட்டு தவித்த திருடரை குமட்டில் குத்தி மீட்டனர். “ஹோட்டலிலுள்ள செம்பு வயர்களை திருடி விற்க சென்று மாட்டியிருக்கலாம். சிகிச்சை முடிந்ததும் திருடரை தீர விசாரிப்போம்” என்கிறது அலமெடா நகர காவல்துறை. ஓசி பயணம்! வாஷிங்டன் டி.சியின் பென்னிங்டன் சாலையில் காரில் சென்ற ரஸ்தா தாஜ் அதிர்ந்துபோனார். மெட்ரோ பஸ்ஸின் பின்புறம் இளைஞர் ஒருவர் தொங்கியபடி அபாய சவாரி செய்துகொண்டிருந்தார். உடனே அதனை க்ளிக்கி இணையத்தில் பகிர்ந்தார். “இதுபோன்ற பயணங்கள் ஏற்கத்தக்கவை அல்ல; இளைஞர் உயிர்பிழைத்துள்ளது ஆச்சரியமான விஷயம்” என பஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ரிஸ்க் எடுத்த இளைஞர் இதுபோல ஏராளமான சர்க்கஸ் சாதனைகளை முன்பே செய்தவராம். சாப்பாட்டில் முத்து! அமெரிக்காவின் நியூஜெர்சியில் ரிக் அன்டோஸ், உணவகத்தில் நண்பர் சகிதமாக சிப்பி உணவை ஆர்டர் கொடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென வாயில் கடக் என சப்தமெழ, சா

குழந்தைகளை வலிமையாக்கும் மிராக்கிள் பவுண்டேஷன்!

படம்
குழந்தைகளுக்கு வானம் தேவை! - ச.அன்பரசு குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்றும் அமைப்பு! அமெரிக்காவைச் சேர்ந்த கரோலின் பௌட்ரியாக்ஸ் டிவி ஸ்டேஷனில் வேலை செய்துவந்தார். இந்தியாவுக்கு ஜாலி சுற்றுலாவாக தோழி கிறிஸ் மான்ஹெய்ம் உடன் கிளம்பினார். அப்போது கூட அவரது வாழ்க்கை மாறப்போவதை கரோலின் நினைத்து பார்த்திருக்கவில்லை. கரோலினின் தோழி மானுஸ் என்ற சிறுவனுக்கு நிதியுதவி செய்து வந்தார். அவனை சந்திக்கத்தான் அந்த கோடைக்கால ட்ரிப். கிறிஸ் தனது சேமிப்பு பணத்தை வெட்டியாக செலவழிக்கிறார் என்று கரோலின் அவரிடமே கூறினார்தான். ஆனால் கிறிஸ்ஸை வரவேற்ற கிராமத்தையும் ஆதரவற்றோர் இல்லத்தையும் பார்வையிட்டு பேரதிர்ச்சி அடைந்தார் கரோலின் “எனது நாயைக்கூட அங்கு வசிக்கவிடமாட்டேன். அப்படியொரு மோசமான சூழலில் ஆதரவற்றோர் காப்பகம் நடந்துவந்தது. குழந்தைகளின் தலைகள் மொட்டையடிக்கப்பட்டு உட்குழிந்த வெறுமையான கண்களால் எங்களைப் பார்த்தனர். அந்த நினைவு என்னை தீவிரமாக தாக்க சில மாதங்களிலேயே எனது வேலையை விட்டு விலகி மிராக்கிள் பவுண்டேஷனை தொடங்கினேன்” என்கிறார் கரோலின். 2000 ஆம் ஆண்டில் தொடங்க

இலக்கியங்களைத் தேடும் சினிமா உலகம்!

படம்
சினிமா இலக்கியம்! - ச.அன்பரசு திடீரென வந்த திரைப்பட நிறுவன அழைப்பை சாய்ஸ்வரூபா, நண்பர்கள் யாரோ கிண்டல் செய்வதாகவே நினைத்தார். பிறகுதான், தான் ஆன்லைனில் வெளியிட்ட இ-புக்கின் உரிமைக்கான ஒப்பந்த அழைப்பு என புரிந்துகொண்டு பரவசமானார். இது சின்ன உதாரணம்தான். தற்போது டிஜிட்டல் வடிவில் டிவி சீரியல்களுக்கு நிகராக இணையத்தில் உருவாகும் டஜன் கணக்கிலான நிகழ்ச்சிகள், தொடர்களுக்கு பல்வேறு இணைய எழுத்தாளர்களின் படைப்புகள்தான் முதுகெலும்பு. பல்வேறு இணைய எழுத்தாளர்களின் புதுமையான பரவலாக வாசிக்கப்படும் நாவல்களின் உரிமைகளை வாங்க நெட்ஃபிளிக்ஸ், அமேஸான் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் நீயா?நானா? என போட்டியிட்டு வருகின்றனர். இவ்வாண்டில் வெளியாகி இந்தியாவெங்கும் சூப்பர்ஹிட்டான ‘ராஸி’ திரைப்படம் எழுத்தாளர் ஹரீந்தர் சிக்காவின் காலிங் ஷெமத் என்ற நாவலைத் தழுவியது இதற்கு மிகச்சிறந்த உதாரணம். “இது எழுத்தாளர்களுக்கான பொற்காலம். சினிமாவுக்கான கதையில் நிறைய கதாபாத்திரங்கள், திருப்பங்கள், அடுத்தடுத்த பாகங்களுக்கான விஷயங்கள் இருப்பது அவசியம். குறைந்தபட்சம் கதையில் கதாபாத்திரங்களின் குணாம்சங்களேனும்