இடுகைகள்

மனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிந்தனை, காலத்தைக் கடந்தால் காதல் கிடைக்கும் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி தென் தேர் ஈஸ் லவ் ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம் ஒருவரின் மனம், தேடுதலில் வேட்கை கொண்ட மனத்தை பெற்றுத்தராது. காதலைப் பொறுத்தவரை மனம் அதை தேடவேண்டும் என்பதல்ல. தேடாமலேயே அது கிடைத்துவிடும். நாமறியாமல் காதல் கிடைத்துவிடும்.காதல் கிடைப்பது மனிதர்கள்   முயற்சி, செய்து பெறும் அனுபவம் போல இருக்காது. காதலை காலத்தைப் பொறுத்து தேடினால் பெற முடியாது. காதலை ஒன்றாக, பலவாக, தனிப்பட்டதாக, பொதுவானதாக பார்க்கலாம். இதை பூவைப் போல கூறலாம். பூக்களின் மணத்தை, அதை கடந்து செல்பவர்கள் பார்க்கலாம். மணத்தை நுகரலாம். பூக்களை தொல்லையாக நினைப்பவர்களும், அதை மலர்ச்சியாக பார்ப்பவர்களும் உண்டு. பூக்களுக்கு அதைக் காணபவர்கள் அருகில் இருந்தாலும் அல்லது வெகுதூரத்தில் இருந்தாலும்   ஒன்றுதான். பூக்களிடம் நறுமணம் உள்ளது. அதை அனைவருக்கும் பகிர்ந்துகொண்டே இருக்கிறது. காதல் என்பது புதியது, உயிரோடு இருப்பது, உற்சாகம் அளிக்கக்கூடியது. இதில், நேற்று, நாளை என்பது கிடையாது. சிந்தனை என்பதைக் கடந்தது. வெகுளித்தனமற்ற உலகில் வாழும் அப்பாவித்தனமான மனது காதலை தெளிவாக அறியும். தியாகம், வழிபாடு, உறவு, உடலுறவு

காதலனைப் பள்ளித்தோழியோடு சேர்த்து கல்யாணம் செய்து வைக்கும் காதலி! தி வெட்டிங் அன்பிளானர்

படம்
  தி வெட்டிங் அன்பிளானர் மெரினா, கார்லோஸின் அட்டகாச நடனம் தி வெட்டிங் அன்பிளானர்   மெரினா சிறுவயதாக இருக்கும்போதே அவளது பெற்றோர் விவகாரத்து பெற்றுக்கொள்கின்றனர். இதற்கு மெரினாவின் அப்பா, தனது வீட்டுக்கு அருகில் உள்ள பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது காரணமாக அமைகிறது. காதல் என்பது பைத்தியக்காரத்தனம் என அப்பா போகும்போது சொல்லும் வார்த்தை மெரினாவின் மனதில் பதிகிறது. எனவே, அவள் ஆண் தோழன் என யாரையும் ஏற்பதில்லை. திருமணமும் செய்யக்கூடாது என முடிவாக இருக்கிறாள். அவளது வாழ்க்கையில் வரும் கார்லோஸ் என்பவன் ஏற்படுத்தும் பிரச்னைகள், அதன் விளைவுகள்தான் கதை. இரண்டு பெண்கள் ஒரு ஆண் என அடிப்படையில் முக்கோண காதல் கதைதான். படத்தில் சுவாரசியமாக இருப்பது மெரினாவின் குணங்கள் பற்றி மெல்ல பார்வையாளர்களான நமக்குத் தெரிய வருவதுதான். இந்த வகையில் அவர் தனக்கு பிடித்த விஷயங்களை அவ்வளவு எளிதாக பிறருக்கு விட்டுக்கொடுப்பவர் அல்ல. தன்னை அவமானப்படுத்தியவர்களை காலம் கடந்தும் வாய்ப்புகள் அமையும்போது பழிவாங்குகிறார். இதில், அவள் நேசிக்கும் காதலன் கூட உண்டு என்பதுதான் வினோதம். மெரினா, காதலே வாழ்க்கையில் நுழைய விடாமல

திருட்டு, கொலை ஆகியவற்றில் உள்ள உளவியல் கோட்பாடுகள்

படம்
  மக்கள் கூடும் இடங்களான மதுபானக்கடை, கிளப், பப் ஆகியவற்றில் எப்படியும் வன்முறை சம்பவங்கள் நடந்துவிடுவது வாடிக்கை. மது குடித்துவிட்டு மனிதர்கள் உணர்ச்சிகளை வெளியே கொட்டும்போது, பிறர் அதை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதனால் மதுவைத் தொடர்ந்து அடிதடி, கைகலப்பு,   கொலை வரை நீள்கிறது. மதுபானக்கடைகளைப் பொறுத்தவரை அடிப்பவர், அடிபடுபவர் என இருவருமே மது அருந்திய மது பிரியர்கள்தான். நாட்டின் தூண்களான குடிமகன்கள்தான்.   உளவியலாளர் ஹெண்டர்சன் வன்முறை என்பதை   கைதிகள், சிறை நிர்வாக அதிகாரிகள் என இரண்டு வகையாக பிரித்துக் காட்டுகிறார். குற்றம் செய்துவிட்டு உள்ளே வந்த கைதிகளை அடக்கி வழிக்கு கொண்டுவர, தனக்கேற்றாற்போல நடந்துகொள்ள வைக்க சிறைத்துறை   அதிகாரிகள் வன்முறையைப் பயன்படுத்துகின்றனர். இதற்காக சிறைக்கைதியை அடித்து உதைப்பது, தனிமைச்சிறையில் அடைப்பது ஆகியவற்றை செய்கிறார்கள். சிறை என்பது தனி உலகமாக சமூகத்திற்கு கட்டுப்படாத இடமாக உள்ளது. சிறைக்கு அடுத்து குடிநோயாளிகள் மறுவாழ்வு மையம், மனநல குறைபாடு கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஆகியவற்றில் நோயாளிகளின் மீதான வன்முறை என்பது

இளைஞர்களிடையே வன்முறை இயல்பு எப்போதும் இருப்பதுதான்

படம்
  வன்முறை எப்போடு இயல்பானதாகிறது? அதை நீங்கள் தினசரி வாழ்க்கையில் சந்தித்துக்கொண்டிருந்தால் ஒருவர் அடித்து நொறுக்கப்படுவதை, பிறரை நீங்கள் தாக்கி ரசிப்பதைக் கூட பின்னாளில் செய்யலாம். அந்தளவு மனம் அத்தகைய காட்சிகளால் நிரம்பியிருக்கும். மனதிற்கு முதல்முறை நடக்கும் வன்முறை அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை மனதை மெல்ல மரத்துப் போகச் செய்கிறது. கலைகளில் உயர்வு பெற்ற மேற்குநாடுகளில் அதற்கு இணையான போர் கொடூரங்கள், சித்திரவதைகள் நடந்துள்ளன. மனதிற்கே ஒருபுறம் கலையின் உயர்வு, மறுபுறம் கற்பனை செய்யவே பயப்படும் கொடூரங்களை நடத்த முடிகிறது வன்முறையால் ஒருவருக்கு சாகச உணர்வும், சமூகத்தில் அந்தஸ்தும் கிடைக்கிறது என்றால் எப்படியிருக்கும்? இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் வன்முறையை இயல்பானதாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று உளவியலாளர்களான வோல்ஃப்கேங், ஃபெராகுட்டி ஆகியோர் கூறினர். இதற்கு ஆதாரமாக பெரு நகரங்களில் இளைஞர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை நிறைய ஆய்வுகள் காட்டுகின்றன. வறுமை, இனக்குழு மோதல்கள், முரண்பாடுகள், விரக்தி ஆகியவற்றின் இறுதி வடிவமே வன்முறையாக உருவெடுக்கிறது. இப்ப

மனதில் பெருகும் ஆவேசத்தை, கோபத்தை மடைமாற்ற முடியுமா?

படம்
  ஆவேச உள்ளுணர்வு என்பதை நேர்மறையாக எடுத்துக்கொள்ளலாம். அதை விளையாட்டு மூலம் எளிதாக வெளிப்படுத்தலாம் என்று உளவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்த இடத்திலும் அப்படி வெளிப்படுத்துவது, விதியாக இல்லாதபோதும் வரவேற்கப்படுவதில்லை. தன் கோபத்தை, ஆவேசத்தை வெளிப்படுத்தும் வீரர் ஊடகங்களில் மோசமான முன்னுதாரணமாக காட்டப்படுகிறார். பரிமாண வளர்ச்சிப்படி பார்த்தால் ஆவேச உள்ளுணர்வு என்பதை உயிர்கள் பிழைப்பதற்கான வாசலாக பார்க்கலாம். வெல்லும் வெறி இல்லாமல் நாம் போர், நோய்களைத் தாண்டி பிழைத்து வந்திருக்க முடியாது. ஒருவகையில் உயிர்களை பிழைக்க வைப்பதற்கான ஆற்றலாக ஆவேசத்தைக் கொண்டிருக்கிறோம். மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளுக்கும் இந்த உணர்வு உண்டு. உயிருக்கு ஆபத்து வரும்போது யாரும் பிறருக்கு செல்லம் காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றவே நினைப்பார்கள்.   லோரன்ஸ் என்ற உளவியல் ஆய்வாளர் மனிதர்களுக்கு ஏற்படும் ஆவேசத்தை நேர்மறையாகவே அணுகிறார். தனது கோட்பாட்டை விலங்குகளை வைத்து சோதித்து நிரூபணம் செய்தார். சிக்மண்ட் ஃப்ராய்ட், ஆவேச உணர்வை குறிப்பிட்டபடி செயலில் பயன

மனதில் கிளர்ந்தெழும் ஆவேச உள்ளுணர்வு

படம்
  உளவியல் ரீதியான கோட்பாடுகள், ஒருவரின் ஆக்ரோஷமான குலைந்த மனநிலையை வேண்டுமானால் விளக்கலாம். ஆனால் அவரின் குற்றங்களை விளக்காது. இந்த வகையில் உளவியல் கோட்பாடுகளுக்கு வரம்புகள் உண்டு. குற்றம் செய்தவர்கள் அனைரையும் மனநிலை பிறழ்ந்தவர்கள், குறைபாடு கொண்டுவர்கள் என கூறிவிட முடியாது என உளவியலாளர் சீகல் கூறினார். இவரது கருத்து உண்மையா என்றால் உண்மைதான். துறை   சார்ந்து ஆராய்ச்சிகள் அதிகரிக்கும்போது வரம்புகள் உடையலாம். ஒருவர் தனியாக அமர்ந்து உளவியல் கோட்பாடுகளை உருவாக்கி அதன் நடைமுறை சாத்தியங்களை ஆராய்ந்துகொண்டிருந்தால், அதில் குற்றவியல் சார்ந்த அம்சங்கள் குறைவாகவே இருக்கும். இதற்காக உளவியல் கோட்பாடுகளை ஒருவர் மேலும் துல்லியமாக்க மெனக்கெடலாம். குற்றம் நடைபெறுகிறது என்றால் அதற்கான உயிரியல், சூழல், உளவியல் காரணங்களை கண்டுபிடிக்க முடிந்தால் உளவியலின் பங்கு குற்றவியலில் உள்ளது என நம்பலாம். சூழல் சார்ந்த அம்சங்கள் என்றால் குற்றம் பற்றிய பொதுமக்களின் கருத்து, நீதிமன்றத்தின் தீர்ப்பு, வழக்குரைஞர்களின் வாதம் ஆகியவற்றைக் கூறலாம். இந்த வகையில் குற்றத்தைப் பற்றி தெளிவாக விளங்கிக்கொள்ள உளவியல் விசாரணை பயன

குற்றச்செயல்பாடுகளுக்கு மனமுதிர்ச்சியின்மை அடிப்படையான காரணமா?

படம்
  மனமுதிர்ச்சியும் குற்றமும் - படம்- பின்டிரெஸ்ட் குற்றச்செயல்களை செய்பவர்களுக்கும், அவர்களின் வயதில் குற்றங்களைச் செய்யாத சிறந்த குடிமகன்களுக்கும் முதிர்ச்சி மட்டும்தான் மிச்சமாக இருக்கிறதா? ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு குழுக்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை ஆய்வுப் பூர்வமாக நிரூபணம் செய்யத் தவறிவிட்டனர். இதில் இரண்டு வகையானவர்களைப் பார்க்கலாம். ஒன்று, தங்களின் இயல்புகளை கட்டுப்படுத்த முடியாத ஆட்கள், இவர்களுக்கு அறம் சார்ந்த நிலைப்பாடு மனிதில் உருவாகாது. குற்றங்களை செய்பவர்களுக்கு இடையில் அதில் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதற்கடுத்து வந்த பிற உளவியலாளர்களது கருத்துக்களைக் கேட்போம். தாக்குதல், கொலை, பாலியல் ரீதியான தாக்குதல் ஆகியவற்றில் ஒருவருக்கு பொருளாதார ரீதியான பயன்கள் கிடைப்பதில்லை. ஆனால் இவர்கள் பெற்றுள்ள மனமுதிர்ச்சியோடு ஒப்பிடும்போது, பணம் பொருட்களை கொள்ளையடிப்பவர்களின் மனநிலை அறிவுத்திறன் முதிர்ச்சி குறைவாகவே உள்ளது. தனிநபர்களைப் பொறுத்து காரணங்களை அறியும் திறனும், குற்றங்களின் தீவிரமும் மாறுபடுகிறது. பொதுவாக அறநிலை சார்ந்த மன முதிர்ச்சியை பொதுமைப்படுத்தி கூற முடியாது. இத

மனமுதிர்ச்சி அடைந்தவர்களால் குற்றங்களைச் செய்யமுடியாது!

படம்
  குறிப்பிட்ட இடைவெளியில் ஒருவர் பிறருக்கு தெரியாதபடி குற்றங்களை செய்து வரலாம். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அவர் வேறு வாழ்க்கையை வாழலாம். அவருக்கு மனைவி, குழந்தைகள் இருக்கலாம். விடுமுறை என்றால் காரை எடுத்துக்கொண்டு முருகன் கோவிலுக்கு போகலாம். புனித தலங்களுக்கு செல்லலாம். ஆனால் தான் செய்யும் குற்றச்செயல்கள் என்பது பாதிக்கப்படாதபடி தனியாக வைத்துக்கொண்டு இயங்குபவர்களாக இருப்பார்கள். வெளியில் உள்ள பல்வேறு அழுத்தங்களுக்கு பணிந்துவிடாதபடி குற்றவாளிகளின் செயல்பாடு இருக்கும். இவர்கள் தங்களின் இரக்கமில்லாத இயல்பு, கொலை செய்யும் பண்பு ஆகியவற்றை மறைத்து தனிப்பட்ட ஒழுக்கத்துடன் செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். இதற்கு மூளையில் அவர்களுக்கென தனி கட்டுப்பாடு இருக்கிறது என விசாரணையில் கூறியிருக்கிறார்கள். இந்தக் கருத்தை 1966ஆம் ஆண்டு ரோட்டர் என்ற உளவியலாளர் லோகஸ் ஆஃப் கன்ட்ரோல் என்ற வார்த்தை மூலம் குறிப்பிட்டு வரையறை செய்தார். வெளி உலகத்தில் ஏற்படும் தாக்கத்திலிருந்து தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதில் குற்றவாளிகள் திறமையாக செயல்பட்டனர் என்பது உண்மை. குற்றவாளிகள், குற்றவாளிகள் அல்லாதோரை விட உள்மன ஆற்ற

ஒருவர் குற்றங்களைச் செய்ய தயங்குகிறார் - அதற்கு என்ன காரணம்?

படம்
  ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவரது முன்னே உள்ள மேசையில் நிறைய ஆயுதங்கள் உள்ளன. கத்தி, ஆணி, சுத்தி, கோடாரி, சாட்டை, கயிறு என நிறைய பொருட்கள். அனைத்துமே ஒருவரை தாக்குவதற்கும் சித்திரவதை செய்வதற்குமானது. நாற்காலியில் அமர்ந்திருப்பவர், தன் எதிரே இருப்பவரிடம் சொல்லுகிறார்.  மேசையில் உள்ள எந்த பொருட்களை வேண்டுமானாலும் எடுத்துக்கொள். என் மீது பயன்படுத்து என்கிறார். இப்படி சொல்லப்படும்போது எதிராளி என்ன செய்வார்? தான் செய்வதை பிறர் பார்த்தால் கவனித்தால் நிச்சயம் நாற்காலி மனிதரை தாக்க மாட்டார். ஆனால் யாரும் கவனிக்கவில்லை என்றபோது நிச்சயம் ஆயுதங்களை பயன்படுத்த மனம் அரும்பாடு படும். அதை தடுத்து நிறுத்தும்போதுதான் நம் மனது பற்றிய தெளிவு கிடைக்கும். மேலே சொன்ன சோதனை அகிம்சை பற்றி உண்மையாகவே நடத்தப்பட்டதுதான். அறம், நீதி, குற்றம் என்பதெல்லாம் நாம் மெல்ல உலகைப் புரிந்துகொண்டு வாசித்து பிறரை பார்த்து அறிந்துகொண்டு வாழ்வதுதான். குற்றம் செய்வதில் ஏற்படும் தடைகள் பற்றி பார்ப்போம். தண்டனை காரணமாக ஏற்படும் ஒழுக்கம். அரசு, குறிப்பிட்ட குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்குகிறது., இல்லையெனில் ஆயுள

குற்றம் செய்பவர்களை அடையாளமறியும் உளவியல் கோட்பாடு!- டிப்ரசன்ஷியல் அசோசியேஷன் தியரி

படம்
  டிஃப்ரன்சியல் அசோஷியேஷன் தியரி   என்ற கோட்பாட்டை சூதர்லாந்த் என்பவர் உருவாக்கினார். 1939இல் எழுதப்பட்ட இக்கோட்பாடு, பின்னாளில் சற்றே மாறியது. இதன் வழியாக குற்றம் நடைபெறுவதற்கான காரணம், எப்படி குற்றம் என்பது நடக்கிறது, அதை செய்பவர் பற்றியும் குறிப்பிடுகிறது. அதுபற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். குற்ற இயல்பு என்பது கற்றுக்கொள்ளக் கூடியது. குற்றச்செயல்பாடுகளை அதை செய்பவர்களிடமிருந்து எளிதாக கற்கலாம். இப்படி கற்கும் செயல்பாடு நெருங்கிய நண்பர்கள் குழுவில்தான் தொடங்குகிறது குற்றங்களை செய்வதற்கான நுட்பங்கள், பாணிகள், காரணங்கள் மாறுபடக்கூடியவை. குற்றத்தின் காரணங்களைப் பொறுத்து அதற்கான தண்டனை என்பது சட்டத்தின் கீழ் ஆதரவாக அல்லது எதிர்ப்பாக அமையலாம். இது, சட்டத்தின் பார்வைக் கோணத்தைப் பொறுத்தது. ஒருவர் தரும் வாக்குமூலப்படி அவர் சட்டத்தை மீறிய குற்றவாளியாக கருதலாம் அல்லது அவர் கூறும் கூற்றுப்படி சட்டத்தை மீறவில்லை என்றும் முடிவெடுக்கலாம். ஒரு விஷயத்தைக் கற்பது என்ற அடிப்படையில் அவரின் ஆர்வம், ஆழமாக ஆய்வு செய்யும் தன்மை, ஒத்த அலைவரிசை என பல்வேறு அம்சங்கள் மாறுபடலாம். ஒருவர் செய்யும

திட்டமிடாமலேயே குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் சைக்கோபாத்கள் - காரணம் என்ன?

படம்
    சைக்கோபாத்கள் எப்படி உருவாகிறர்கள் என்று பார்த்தால் இன்னும் அதற்கான விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வறுமை, வளரும் சூழல் என்று பார்த்தாலும் அதிலுமும்முழுமையான திருப்தியான வரையறை கிடைக்கவில்லை.   மரபணு சார்ந்து யோசித்தாலும் அதிலும் விடை இல்லை. ஆனால் இரண்டுமே ஏதோ ஒருவகையில் சைக்கோபாத் விஷயத்தில் பங்களிக்கிறது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சைக்கோபாத்கள் குற்றங்களை செய்தாலும் கூட மணவாழ்க்கை அடிப்படையில் கவனமாக இருப்பவர்கள்தான். விலக்கப்பட்ட கனிகள் சுவையுடையவை என எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் சொல்வது போல, சைக்கோபாத்கள் மீது காதல் கொண்டு ஈர்ப்பு கொண்டு மணம் செய்துகொள்ளும் பெண்கள் பலருண்டு. இவர்களைப் பயன்படுத்திக் கொண்டு கழற்றிவிட்டு செல்லும் ஆட்கள் நிறையப் பேர் உண்டு.   இதனால் குழந்தைகளுக்கு குறைவேதும் கிடையாது. இப்படி வளருபவர்கள் பின்னாளில் என்னவாகிறார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. இதுபோல ஒரு குற்றவாளியின் கதையைப் பார்ப்போம்.   இந்த குற்றவாளி, இசைக்கலைஞர்களை அறிமுகம் செய்துகொண்டிருந்தார். எனவே, அவர்களுடன் இருந்த தொடர்பை பயன்படுத்தி அடுத்த தலைமுறை இசைக்கலைஞர்களாக ஆக

இன்ஸ்டன்டாக மகிழ்ச்சி பெற கொலை செய்யவேண்டும்!

படம்
  நிகழ்கணத்தில் வாழவேண்டும் என்று எனது நண்பர் சொல்லுவார். அவர் தனது மனைவி, குழந்தையோடு வாழ்வதால் துறவு நிலையில் இதைக் கூறியிருக்க வேண்டும். பரவாயில்லை. நான் அவளைப் பார்த்தேன். அழகான புட்டம் . எனவே அவளை முயன்றேன் என்று சொல்லிய கைதி வல்லுறவு செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டிருந்தார். ஒரு நகரில் ஏற்கெனவே இதுபோல நிறைய சரித்திர சாதனைகளை செய்திருந்தார். அதுவும் இல்லாமல் டிவி சேனல் ஒன்றின் விளையாட்டு நிகழ்ச்சியில் வேறு கலந்துகொண்டிருந்தார். டிவியில் முகம் பார்த்தே காவல்துறை அவருக்கு கைவிலங்கு பூட்டியது. கேரி கில்மோரின் ஐக்யூ அதிகம். ஆனால் கூட காவல்துறையிடம் மாட்டிக்கொண்டார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, நான் எதையும் திட்டமிடுவதில்லை. சிறந்த திருடன் கிடையாது. அதிகம் பொறுமை கிடையாது. அதிகம் கோபப்படுவேன். நான் பேராசைக்காரன் கிடையாது. யோசிப்பது, திட்டமிடுவது ஆகியவற்றை பல்லாண்டுகளுக்கு முன்பே கைவிட்டுவிட்டேன். என் மனதில் நிறைய விஷயங்கள் இருந்தன என்றார் . சைக்கோபாத்கள் பிறர் செய்யும் வன்முறையை விட கொடூரமான உறுதியான மனதோடு வன்முறையை செய்வார்கள். நிச்சயம் மகிழ் திருமேனி உருவாக்கும் வன்முறை, வல்லுற

நல்லவர், கெட்டவர் யார், எங்கிருக்கிறார்கள் என்பதை புரிய வைக்கும் கிராமத்து சிறுமி -

படம்
    தி ஸ்கூல் ஆஃப் குட் அண்ட் ஈவில்   ஒரு கிராமம். அங்கு சோபியா என்ற சிறுமியும், அகதா என்ற சிறுமியும் நண்பர்களாக வாழ்கிறார்கள். இதில் சோபியாவுக்கு கிராமத்தில் வாழ்வதில் விருப்பமில்லை. தனித்துவம் கொண்டவள் என அவளது அம்மா சொன்னது சோபியாவுக்கு அடிக்கடி மனதில் ஒலிக்க, பகல் கனவு கண்டபடி வாழ்கிறாள். கிராமத்திலுள்ள சுடுகாட்டின் அருகில் வாழ்கிறாள் அகதா. அவளது அம்மா, மந்திரவாதிக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளை மந்திரவாதி ஆக்குவதுதான் அவளது லட்சியம்.   ஆனால் அகதாவுக்கு   அமைதியாக வாழ்ந்தால் போதும் என்று இருக்கிறது. இந்த நேரத்தில் சோபியாவுக்கு புத்தக கடையில் உள்ளவர், மந்திரப் பள்ளி பற்றி சொல்லுகிறார். எனவே, அவள் தான் எப்படியாவது மந்திரப்பள்ளிக்கு சென்று இளவரசியாகி சந்தோஷமாக இருக்கவேண்டும் என நினைக்கிறாள். இதை வேண்டுதல் மரத்தில் எழுதி வைக்கிறாள். ஆனால் அகதாவுக்கு சோபியா தன்னை விட்டு செல்வதில் விருப்பமில்லை. கிராமத்தில் அவள்மீதும், அவளது அம்மா மீதும் பாசம் காட்டுபவள் சோபியா மட்டும்தான். பிறர் அவளை மந்திரவாதி என்று சொல்லி தீயிட்டு எரிக்க நினைக்கிறார்கள். சோபியா எங்கு சென்றாலும் தானும் வருவேன் எ