36 நாட்களில்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ் நேர்காணல் (தமிழில்:லாய்ட்டர் லூன்)
மறுகட்டமைப்பு படமானது ஜெர்மன் தொலைக்காட்சியில் திரையிடப்பட்டது தங்களுக்கு பெரும் உதவியாக இருந்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். உண்மைதான். ப்ரான்சில் அப்படம் விருதுபெறவும் அதுதான் காரணம். இங்கிலாந்தில் பிபிசியில் அப்படம் திரையிடப்பட்டது. கிரீஸ் எனும் சிறிய நாட்டில் இப்போது நான் முக்கியமான மனிதராக மாறி இருக்கிறேன் உலகளவிலான அங்கீகாரம் பெற்ற ஒருவரை நீங்கள் எந்தக்காரணமும் இல்லாமல் சிறையில் அடைக்கமுடியாது. கிரீசில் கலாசார, பண்பாட்டு முயற்சிகளுக்கு இருக்கும் வாய்ப்பு, இடம் என்று இதனைக் கூறலாமா? எந்தப்பணியிலும் நாங்கள் இதனை மனதில் கொண்டுதான் வேலை செய்கிறோம். எ.கா: சின்குரோனோஸ் கினிமாடோகிராபோஸ் எனும் சினிமா தொடர்பான பத்திரிகையில் நான் தனிப்பட்டரீதியாக அதில் பங்காற்றவில்லை. அது என்னை அடையாளப்படுத்தும்போது மிக எளிதாக இடதுசாரி பதிப்பகமாக அடையாளப்படுத்தப்படும் அபாயம் உள்ளது என்பதை நான் மறுக்கமுடியாது. உங்களுடைய திரைப்பட பாணி மிகவும் நீள்வடிவம் போலானது. திரையில் இருப்பதை புரிந்துகொள்ள பார்வையாளர்களும் பங்களிக்கவேண்டும் என்ற முறையில்தான் அது உள்ளது.