இடுகைகள்

நூல்முகம் - வின்சென்ட் காபோ ரிச்சர்ட் மஹாதேவ்(1)

படம்
                                                                                                                                             1 கிரேட் டிக்டேட்டர்  சர்வாதிகாரி திரைக்கதை தமிழில்: விஸ்வாமித்திரன் கருத்துப்பட்டறை வெளியீடு சர்வாதிகாரி திரைக்கதையை படிக்கும் முன் சார்லி சாப்ளினின் சுய சரிதத்தை ஒருமுறை படித்துவிடுவது அவரது படங்களை, அவரை புரிந்துகொள்ள உதவியாய் இருக்கக்கூடும். சர்வாதிகாரி திரைப்படம் எங்கே முக்கியத்துவம் பெறுகிறது என்றால் அது எடுக்கப்பட்ட காலத்தைப் பொறுத்துத்தான்.    ஹிட்லர் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலே அவரை கடுமையாக பகடி செய்த இப்படைப்பு லாப, நஷ்ட கணக்குகளைத் தாண்டி கவனம் ஈர்க்க காரணம் சாப்ளினின் நேர்மைதான் காரணம் என்பேன். நிஜம் இதைவிட கோரமாக இருந்தது.  முடிதிருத்தும் கடை வைத்திருக்கும் யூதன் ஒருவரின் வாழ்க்கையோடு அரசு அதிகாரிகள் அந்நாட்டின் சர்வாதிகாரி அடினாய்டு ஹிங்கல் கட்டளைகளை செயல்படுத்தக் காட்டும் மூர்க்கத்தனம் என காட்சிகள் விரிகின்றன. முதலில் போர்களை பகடி செய்யும் காட்சிகளில் யூதராக ஒரு சாப்ளின் நடி

அமெரிக்காவில் செயல்படும் இந்துத்துவ குழுக்கள் இந்தியாவிற்கு அனுப்புகின்ற நிதி குறித்த அறிக்கை

படம்
அமெரிக்காவில் செயல்படும் இந்துத்துவ குழுக்கள் இந்தியாவிற்கு அனுப்புகின்ற நிதி குறித்த அறிக்கை அமெரிக்காவில் உள்ள இந்து தேசியவாத நிறுவனங்கள் சங் பரிவாரின் பல்வேறு பெயரிலுள்ள நிறுவனங்களுக்கும் உள்ள நிதித்தொடர்புகள் குறித்து இக்கட்டுரை பேசுகிறது. ஆங்கிலத்தில்: ஆரேஃபா ஜோகாரி தமிழில்: வின்சென்ட் காபோ அமெரிக்காவில் இந்து தேசியம் பேசும் லாப நோக்கமற்ற நிறுவனங்கள் குறித்த அறிக்கை சவுத் ஏசியா சிட்டிசன் வெப்பில் ஜூலை 1 அன்று வெளியானது. இதில் இந்தோ அமெரிக்க இந்து குழுக்கள், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உள்ள லாபநோக்கற்ற நிறுவனங்கள்  பரிவார குழுக்களுடன் (ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக், விஷ்வ ஹிந்து பரிஷத்) ஆகியவற்றோடு கொண்டுள்ள தொடர்பு குறித்து கூறுகிறது.  இந்த அமெரிக்க நிறுவனங்கள் பெரும்பாலும் வரிவிலக்கு பெற்ற அறக்கட்டளைகளாகும். இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் வரி கணக்கு ஆவணங்களின்படி அவர்கள் பெறும் நன்கொடை நிதியினை என்ன செய்கிறார்கள் என்று ஆராய்கிறது. இந்த ஆராய்ச்சியால் இந்த அறக்கட்டளைகள் பல மில்லியன் டாலர் தொகையினை இந்த

படத்தின் சூத்திரமே நல்ல கதைக்கருதான்

படம்
     படத்தின் சூத்திரமே நல்ல கதைக்கருதான் இயக்குநர் பிரகாஷ் ஜா தன் படங்களில் எப்போதும் தொடர்ச்சியாக எழுப்பும் கேள்விகள் குறித்து விளக்கமளிக்கிறார். தற்போது உருவாக்கி வரும் ஜெய் கங்காஜல் படம் குறித்தும் நம்மிடையே உரையாடுகிறார். ஆங்கிலத்தில்: அலோக் தேஷ்பாண்டே தமிழில்: அன்பரசு சண்முகம் சத்யகிரஹா படத்திற்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்தும், கங்காஜல் படத்தினை உருவாக்கி 12 ஆண்டுகள் கழிந்த பிறகு ஜெய் கங்காஜல் படத்தினை உருவாக்கி வருகிறார் பிரகாஷ் ஜா. முந்தைய படத்தில் பீகாரைச் சேர்ந்த மோசமான அரசியல்வாதி குறித்து காட்சிபடுத்தியிருப்பார்.  அஜய் தேவ்கன் நடித்த நேர்மையான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இப்படத்தில் தற்போது பரபரப்பாக அனைவரும் பேசி வரும் நிலம் கையகப்படுத்தல் குறித்து பேசப்பட்டுள்ளது.  ஜெய் கங்காஜல் படத்தினை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இயக்குகிறீர்கள். திரையரங்கில் இப்படத்தினை எப்போது காணலாம்? படப்பிடிப்பும், படத்தொகுப்பும் நிறைவடைந்துவிட்டன. படம் நன்றாக உருவாகி வந்திருக்கிறது. படம் ம

மோடி மிகச்சிறந்த நிகழ்ச்சி மேலாளர் என்று கூறியது அத்வானிதான்; நானல்ல;

படம்
  மோடி மிகச்சிறந்த நிகழ்ச்சி மேலாளர் என்று கூறியது அத்வானிதான்; நானல்ல;                                     - சீதாராம் யெச்சூரி      ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துக்களை இணைக்கும் புள்ளியாக உள்ள முக்கியமான தலைவரான சீதாராம் யெச்சூரி செயின்ட்  ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதார முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளவர் ஆவார். இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் சி.பி.ஐ. (எம்) கட்சியின் பொதுச்செயலாளராக பிரகாஷ் காரத்திற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மோடியின் சாதனைகள் குறித்தும் உண்மையில் பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குகின்றனவா என்பதைக் குறித்தும் விரிவாக நம்மிடையே உரையாடுகிறார். ஆங்கிலத்தில்: உஷினார் மஜூம்தார் தமிழில்: அன்பரசு சண்முகம் கடந்த 18 மாதங்களில் மோடி அரசின் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுவீர்கள்? மோடி அரசு தாராளமயமான எப்டிஐ வணிகம் மற்றும் வெளிநாட்டு மூலதனங்கள் மிக எளிதில் தடையில்லாமல் நம் நாட்டு இயற்கை வளங்கள் மற்றும் மலிவான தொழிலாளர் சக்திகளையும் பயன்படுத்தி

பசுமையின் காவலன்

பசுமையின் காவலன் பெங்களூரைச்சேர்ந்த சுற்றுச்சூழலியலாளர் ஒருவர் மாநகரங்களில் உள்ள மரங்களைப் பாதுகாப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது காட்டுயிர் குறித்த தகவல் தெரிவிப்பது குறித்த தனித்துவமான திட்டங்களோடு இயங்கி வருகிறார்.                       ஆங்கிலத்தில்: மீரா பரத்வாஜ்                       தமிழில்: வின்சென்ட் காபோ     பெங்களூரைச்சேர்ந்த விஜய் நிஷாந்த் பெங்களூருவில் உள்ள இயற்கை வளம் செறிந்த பகுதிகளை வேகமான நகரமயமாதல் மற்றும் வளர்ச்சி எனும் பெயரில் அழியாமல் காப்பதற்கான தனித்துவமான திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். விருக்சா எனும் இத்திட்டத்தில் இவரோடு நான்கு உறுப்பினர்கள் குழுவாக இணைந்து செயல்பட்டு இதனை சாத்தியப்படுத்தி வருகின்றனர்.       ‘‘தாவரம் தொடர்பான தகவல்களை எழுத்து, படம் மற்றும் துல்லியமான தகவல்கள் அடிப்படையில் அவற்றினை தயாரித்து கொள்கிறோம். எங்களது மரநில அமைவு முறையினை சோதித்த டெல்லி, அகமதாபாத், ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உயரதிகாரிகள் தங்களது நகரங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் ’’ என்று உற்சாகமாய் பேசும் விஜய் நிஷாந்த்

கௌரவமிக்க ஒரு இந்தியத்தயாரிப்பு

            கௌர வமிக்க ஒரு இந்தியத்தயாரிப்பு                       ஆங்கிலத்தில்: அனுஜ்குமார்                           தமிழில்: வின்சென்ட் காபோ அமித்ராய் இயக்கியுள்ள ‘ஐ பேட் ’ திரைப்படம் திரைவிழாக்களில் இந்தியப்பெண்களின் குறிப்பிடத்தக்க அவசியமான தேவை குறித்து பேசியதில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.      தான் வாழும் உல்கஸ் நகரில் தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சட்டையில் இருக்கும் அமித்ராயை நாம் எளிதில் புறக்கணித்து கடந்துபோய்விட முடியும்தான். ஆனால் அவர் இயக்கியுள்ள படங்களை அப்படி கடந்துவிட முடியாதபடி, திரையிலிருந்து கண்களை எடுக்க முடியாது தனித்துவ திரைமொழியால் வசீகரிக்கிறார் அமித் ராய். 2010 இல் ரோட் டூ சங்கம் திரைப்படம் இதற்கு உத்தரவாதம் தருவது போல் சாதாரண வாழ்வில் அசாதாரண கதாபாத்திரங்களை நடமாடச்செய்து காட்டியிருப்பார் அமித் ராய்.      மகாத்மா காந்தியின் சாம்பல் திரிவேணி ஆற்றில் கரைக்க எடுத்துச்செல்லப்படும் கார் ஒன்றினை பழுது பார்க்கும் பொறுப்பு ஹஸ்மதுல்லா எனும் மெக்கானிக்கிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியான சம்பவங்கள்தான் கதையாக அமைக்கப்பட்டிருக்க
படம்
நாம் தேர்ந்தெடுத்த பிரதமரிடம் நான் ஏன் பயப்படவேண்டும்?                                                                                             -பாபா ராம்தேவ்                                                             ஆங்கிலத்தில்: பிரக்யா சிங்                                                                         தமிழில்: அன்பரசு சண்முகம் பாபா ராம்தேவ் இந்தியாவிற்கான தனித்துவ யோகி என்பதில் சந்தேகமே இல்லை. பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் தலைமையகத்தில்  மேரே அச்சே தின் சல் ரஹே ஹைன் என உரக்க கூறுகிறார். இதர வணிக சந்நியாசிகளை விட யோகாவினை பெருமளவு புகழ்பெறச்செய்த ராம்தேவ், எப்எம்சிஜி நிறுவனத்தின் வளர்ச்சி, அரசியல் திட்டங்கள், மற்றும் சகிப்புத்தன்மை குறித்து நம்மிடையே உரையாடியதன் சுருக்கம். உடனடி நூடுல்ஸ் வகை ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். ஆனால் அது உடனடியாக சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறதே?                 நூடுல்ஸ் விற்க எங்களிடம் முறையான உரிமம் உள்ளது. அதனை எங்களுக்கு உருவாக்கித் தருபவர்களும் தயாரிப்பதற்கான உரிமம் பெற்றுள்ளனர் எனும்போது ச