இடுகைகள்

அசத்தும் வள்ளல் பணக்காரர்கள்! - கல்வி, மருத்துவச்சேவைக்காக பணத்தை செலவிடும் பணக்கார தொழிலதிபர்கள்

படம்
                  வள்ளல் பணக்காரர்கள் ஹியூ டங் சூ ஜிஎஸ் கால்டெக்ஸ் - தென்கொரியா கடந்த ஆகஸ்ட் மாதம் ஹியூ ஜி என்ற இவரது நாற்பது வயது மகள் இறந்துபோனார் . அவரது நினைவாக பௌண்டேஷன் ஒன்றைத் தொடங்கி கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறார் . எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனர் ஹியூ டங் சூ , 1.9 மில்லியன் மதிப்பிலான பங்குகளை மகளின் பெயரில் அமைத்துள்ள பௌண்டேஷனுக்கு வழங்கியுள்ளார் . இதற்கு முன்னர் 33 மில்லியன் மதிப்பிலான தொகையை டாங்ஹெங் நலப்பணி பௌண்டேஷனுக்கு வழங்கியுள்ளார் . இந்த பௌண்டேஷன் இவரது குடும்பத்தாரால் நி்ர்வகிக்கப்படுகிறது . இதன் தலைவர் ஹியூ டங் சூதான் . 1973 இல் கால்டெக்ஸ் நிறுவனத்தில் ஹியூ இணைந்தார் . இவரது குடும்ப நிறுவனமான ஜிஎஸ் குழுமத்தை கால்டெக்ஸ் நிறுவனம் கட்டுப்படுத்துகிறது . இவர் செஸ்ட் ஆப் கொரியா என்ற இனக்குழுவை நிர்வாகம் செய்துவருகிறார் . இந்த அமைப்பு நாட்டிலேயே பெரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும் . ராபர்ட் என்ஜி , பிலிப் என்ஜி ராபர்ட் என்ஜி - சினோ குழுமம் பிலிப் என்ஜி - ஈஸ்ட் கார்ப்பரேஷன் இருவருமே சகோதரர்கள் . என்ஜி டெங் பாங் பௌண்டேஷன்

இந்தியா ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் பங்கேற்காதது பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமே! - ஷியாம் சரண்

படம்
              சியாம் சரண் , முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் இந்தியா ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் சேர இன்னும் கூட கதவு திறந்திருக்கிறத . இதனை எப்படி பார்க்கிறீர்கள் . இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இணையவேண்டிய தன்மையைப் புரிந்துகொள்ள இந்த அம்சத்தை முக்கியமானதாக கருதலாம் . இதனை வெறும் வணிக ஒப்பந்தம் என்று மட்டும் புரிந்துகொள்ளமுடியாது . முக்கியமான அரசியல் நிலைப்பாடு எனவும் கொள்ளலாம் . இதில் இந்தியா இணையவில்லை என்பது சரியான பார்வை அரசுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது . இதில் உள்ள தவறுகளை போதாமைகளை வெளியில் இருந்து கொண்டு கூறுவதை விட உள்ளே சென்று கூறுவது சரியாக இருக்கும் . உலகளவில் நடைபெறும் வணிகத்தில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது . இந்த வணிகம் முக்கியமான வணிக ஒப்பந்தங்கள் அடிப்படையில் நடைபெறுகிறது . நாம் இதுபோன்றவற்றில் அங்கம் வகிக்காதபோது , நமது சந்தையின் பங்கு விரிவடையாது . இது பிரச்னைக்குரியது . இந்தியா ஜப்பான் மற்றும் ஆசியான் அமைப்பிலுள்ள பிற நாடுகளிடையே வியாபார ஒப்பந்தங்களை செய்துள்ளதே ? அப்புறமென்ன ? பிராந்திய ஒப்பந்தம் என்பதோடு இதனை நீங்கள் ஒப்பிடமு

புத்தகம் புதுசு! மனிதர்கள் சுயநலமானவர்கள், கெட்டவர்கள் அல்ல என்பதை வரலாறுரீதியாக சொல்லும் படம் !

படம்
              புத்தகம் புதுசு எக்ஸ்பிளெய்னிங் ஹியூமன்ஸ் வாட் சயின்ஸ் கேன் டீச் அஸ் அபவுட் லைஃப் , லவ் , ரிலேசன்ஷிப் டாக்டர் கமில்லா பாங் டாக்டர் கமில்லா தன்னுடைய இளம் வயது ஆட்டிச வாழ்க்கை , ஏடிஹெச்டி பிரச்னை ஆகியவற்றை விவரித்துள்ளார் . நோய் பற்றிய பயம் எப்படி வாழ்க்கையை குலைக்கிறது என்பதை விளக்கி நம்பிக்கை தருகிறார் .    தி எண்ட் ஆப் எவ்ரிதிங் டாக்டர் கேட்டி மாக் விண்வெளி பற்றி நமக்கு தெரிந்த விஷயங்கள் , தெரியாத விஷயங்கள் என பலவற்றையும் கேட்டி மாக் விளக்கியுள்ளார் . ஸ்டிரிங் தியரி முதல் குவாண்டம் மெக்கானிசம் வரையில் பல்வேறு விஷயங்களை அழகாக எழுதியுள்ளார் . வாயேஜ் த்ரூ ஸ்பேஸ் கேட்டி பிளின்ட் அண்ட் கொர்னெலியாலி விண்வெளியில் உள்ள பல்வேற விஷயங்களைப்பற்றி அழகான வண்ண படங்களுடன் விளக்கியுள்ள நூல் இது . விண்வெளியின் தொடக்கம் பற்றி பேசியுள்ள நூல் இது . சூரிய குடும்பம் கண்டறியப்பட்டது முதல் இருளில் குளிர்ச்சியில் உறைந்துள்ள கோள்கள் பற்றியும் கூறப்படுகிறது . கே அனாடமி - எ கம்ப்ளீட் கைட் டு தி ஹியூமன் பாடி டாக்டர் ஆடம் கே திஸ் இஸ் கோய

பாம்பே சட்னி மூலம் வாழ்க்கையில் முன்னுக்கு வரும் இளைஞன்! - மிடில் கிளாஸ் மெலடிஸ் -தெலுங்கு 2020

படம்
                மிடில்கிளாஸ் மெலடிஸ் அமேசான் பிரைம் கிராமத்தில் சின்ன சாப்பாட்டுக்கடை நடத்தி வருகிறார் கொண்டல ராவ் . இவரின் மகன் ராகவன் . ராகவனுக்கு கிராமத்தை விட குண்டூர் நகரத்திற்கு என்று ஹோட்டல் திறப்பதுதான் லட்சியம் . எப்படி இதனை சாதிக்கிறார் என்பதான் மையக் கதை . படத்தின் ஆத்மாவே , இதில் நடித்துள்ள நடிகர்களின் நடிப்புதான் . அனைவருமே நாம் தினசரி சாலையில் நடந்துசெல்லும்போது பார்க்கும் மனிதர்களாகவே இருக்கிறார்கள் . கிராமத்தில் வாழும் மனிதர்கள் , பிரச்னை என்று வரும்போது ஒருவருக்கொருவர் எப்படி உதவிக்கொள்கிறார்கள் , அப்பா , மகன் இருவருக்குமான பாசம் , உறவினர்களின் சுயநலம் , ஹோட்டலில் சந்திக்கும் சவால்கள் என படம் அவ்வளவு யதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ளது . துரைசானி படத்தை விட ஆனந்த் தேவர்கொண்டா இந்த படத்தில் நிறையவே நடிப்பில் முன்னேறியிருக்கிறார் . வர்ஷா பொல்லம்மாவின் உடலை விட கண்களே அதிகம் நடிக்கின்றன . இதில் பாவா என்று சொல்லும்போது அவரின் முக உணர்ச்சிகள் அசரடிக்கின்றன .      படத்தில் பெரும்பாலும் நமது கவனத்தை தன்னிடமே வைத்துக்கொண்டிருப்பவர் , ராகவனின்

உலகப்போரை தடுத்து நிறுத்தும் அசாதாரண படை! - டிசி காமிக்ஸின் கொஞ்சம் கிளாசிக் அவெஞ்சர்! லீக் ஆப் எக்ஸ்ட்ராடினரி ஜென்டில்மேன்

படம்
              லீக் ஆஃப் எக்ஸ்ட்ராடினரி ஜென்டில்ஸ்மேன் 2003   Director: Stephen Norrington Produced by: Trevor Albert, Rick Benattar, Sean Connery, Mark Gordon, Don Murphy, Michael Nelson Screenplay by: James Dale Robinson Based on The League of Extraordinary Gentlemen by Alan Moore , Kevin O'Neill   Music by Trevor Jones Cinematography Dan Laustsen   1899 ஆம் ஆண்டு நடைபெறும் கதை . சீன் கானரிதான் படையின் தலைவர் . படம் இன்றைய மார்வெல்லின் அவெஞ்சர் படத்தின் கதைதான் . படத்தின் கதை , இங்கிலாந்தின் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுகிறது . உளவுத்தகவல்களில் ஜெர்மனிதான் அத்தாக்குதல்களை நடத்தியது என தெரியவருகிறது . உண்மையில் இப்படி ஐரோப்பிய நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதால் ஜெர்மனி நாட்டுக்கு என்ன லாபம் ? இதனால் உலகப்போர் நடைபெறுமா என பலரும் பயந்து நடுங்குகிறார்கள் . இதனை செய்வது பேன்டம் என்ற முகமூடி அணிந்த மனிதர் . இவை அழித்தால் போதும் . போரைத் தடுத்துவிடலாம் என தெரிகிறது . இதனால் எம் என்ற பணக்கார பேராசிரியர் இதற்கென ஒரு படையை அமைக்க திட்டமிடுகிறார் . அத

யோகிபாபுவின் நடிப்பு மட்டுமே ஆறுதல்! நாங்க ரொம்ப பிஸி!

படம்
                  நாங்க ரொம்ப பிஸி இதனை படம் என்றே சொல்லமுடியாது . டெலிபிலிம் போல எடுத்து வைத்திருக்கிறார்கள் . நேர்மையான எஸ்ஐ , எப்படி குடும்ப பிரச்னைக்காக தனது கொள்கை தவறி மோசமான வழியில் செல்கிறார் , தனது காதலியை கைப்பிடிக்க காதலன் எப்படி முறைதவறிய வழியில் பயணிக்கிறான் , சிறிய திருட்டுகளை செய்து வரும் தில்லாலங்கடி திருடன் பெரிய கொள்ளையை செய்து செட்டிலாக நினைக்கிறான் . இந்த மூவரும் ஒன்றாக இணைந்து கருப்பு பணத்தை கொள்ளையடிக்க நினைக்கிறார்கள் . அதனை சரியாக செய்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை . பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டு வந்த காலத்தில் நடக்கும் கதை .   இந்த லைன் மட்டுமே சுவாரசியம் . மற்றபடி ப டத்தின் மற்ற விஷயங்கள் எல்லாமே எப்போது முடியும் என்று என்ற எண்ணத்தை ஏற்படுத்துகி்ன்றன . படத்தின் ஒரே ஆறுதல் , யோகி பாபுவும் , சி . சத்யாவின் இசை மட்டும்தான் . இவர்கள் மட்டும்தான் முடிந்தளவு தங்கள் உழைப்பை போட்டு கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார்கள் . நீங்கள் பிஸியாக ஏதாவது வேலையில் இருந்தால் இந்த படத்தை பார்க்காமல் இருப்பதே நல்லது . பட

சாத்தானின் மகன் வருகையை தடுக்கும் சாபம் பெற்ற நாயகனின் போராட்டம்! கான்ஸ்டான்டின் 2005

படம்
              கான்ஸ்டான்டின்   Director: Francis Lawrence Produced by: Lauren Shuler Donner, Benjamin Melniker, Michael E. Uslan, Erwin Stoff, Lorenzo di Bonaventura, Akiva Goldsman Screenplay by: Kevin Brodbin, Frank Cappello டிசி காமிக்ஸின் படைப்பு   சிறுவயதில் பேய்களை பார்க்கும் அற்புத சக்தி கொண்டவன் கான்ஸ்டைன்டின் . ஆனால் பேய்களை பார்ப்பதாக கூறினால் அவருக்கு என்ன நடக்கும் ? அதேதான் அவரை உலகமே விநோதமாக பார்க்க , அவரை பல்வேறு சிகிச்சைகளுக்கு அனுப்புகிறார்கள் . இதனால் உலக விதிகளுக்கு மாற்றாக தற்கொலைக்கு முயல்கிறார் . ஆனால் அவரின் விதி முடியாததால் அவரை திரும்ப உலகிற்கு அனுப்பி வைக்கிறார்கள் . மா்ந்த்ரீக சக்தியால் கட்டப்பட்ட மனிதர்களை கான்ஸ்டான்டின் விடுவிக்கிறார் . அவருக்கு வாழ்க்கையில் ஒரே லட்சியம் , மறு உலக வாழ்க்கையில் சொர்க்கம் செல்லவேண்டும் . இதனால் பேய் பிடித்தவர்களுக்கு் , சாத்தான்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்து வருகிறார் . இதற்கு இடையில் அவரது நுரையீரலில் புற்றுநோய் வேகமாக வளர்ந்து வருகிறது . உலகில் சாத்தானின் மகனின் மறுபிரவேசம் கடவ