இடுகைகள்

கொல்லைப்புறம் வழியாக வங்கிகளாக மாறும் கூகுள், அமேசான்!

படம்
  தலைப்பை இப்படி வைப்பது குற்றமல்ல. ஆனால் நேரடியாக வங்கி நிறுவனமாக இல்லாமல், டெக் நிறுவனங்களாக இருந்துகொண்டே மக்களிடம் டெபாசிட்டுகளை கூகுளும் அமேசானும் பெறவிருக்கின்றன.  அமேசான் நிறுவனத்தில் அமேசான் பே சேவை வழங்கப்பட்டு வருகிறது. இப்போது கூடுதலாக பஜாஜ் ஃபினான்ஸ் சேவையைப் பயன்படுத்தி வைப்புத்தொகையை சேமிக்கலாம்.  கூகுள் நிறுவனம், ஈக்விடாஸ் எஸ்எஃப்பி, சேது ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து வைப்புத்தொகையை பெறவிருக்கிறது. இதனை முன்பே கூகுள் அறிவித்துவிட்டது.  சட்டப்பூர்வமான சேவை என்றாலும் கொல்லைப்புறம் வழியாக டெக் நிறுவனங்கள் வங்கிச் சேவையில் நுழைவதை ஆர்பிஐ தர்மசங்கடத்துடன் பார்க்கிறது.  அமேசான் பே சேவையுடன் இணைந்து குவேரா.இன் நிறுவனம் பணியாற்றவிருக்கிறது. அமேசான் பே பயனர்கள் எங்களது சேவையைப் பெற்று பணத்தை பல்வேறு முதலீடுகளில் செலுத்த முடியும். 12-23, 24-35, 36-60 என மாதங்கள் குவேரா தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கான வட்டி 5.75 - 6.60 வரை வருகிறது. குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.25 ஆயிரம் ஆகும்.  அமேசான் அல்லது கூகுள் ஆப் வழியாக ஒருவர் தனது பணத்தை கட்டுவதால், அவர் அந்தந்த நிறுவனங்களில்தான் பணத்த

வர்த்தக மையம் தாக்குதல் தொடர்பான நூல்கள்!

படம்
 தி லூமிங் டவர் ஐந்தாண்டு ஆராய்ச்சி, நூற்றுக்கும் மேலான நேர்காணல்கள் ஆகியவற்றைக் கொண்ட நூல். தாக்குதலை நடத்தியவர்களின் மனநிலையை சிறப்பாக பிரதிபலித்து புலிட்சர் விருது வென்றது. இதனை வர்த்தக மையம் சார்ந்த நூல்களில் முக்கியமாக கருதுகிறார்கள்.  ஃபாலிங் மேன் அமெரிக்க வர்த்தக மையம் தாக்கப்பட்டபிறகு டான் டிலில்லோ என்ற நபரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை விவரிக்கிற நாவல் இது.  டைரக்டரேட் எஸ் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் செய்த போர் பற்றிய நூல். அல்கொய்தா எப்படி உருவானது, அமெரிக்காவில் வர்த்தக மையம் தாக்கப்பட்டபிறகு ஆப்கானில் அல் கொய்தா வளர்ச்சி பெற்றதை நூல் விவரிக்கிறது புலிட்சர் விருது பெற்ற நூலை பத்திரிகையாளர் ஸ்டீவ் கோல் எழுதியிருக்கிறார்.  தி ரைஸ் அண்ட் ஃபால் ஆப் ஒசாமா பின்லேடன் பத்திரிகையாளர் பீட்டர் பெர்ஜென் எழுதியுள்ள நூல் இது. அமெரிக்க தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாகவே பின்லேடனின் வாழ்க்கையைப் பதிவு செய்ய முயன்றிருக்கிறது. 

கொலைகாரர்களிடம் குற்றவுணர்ச்சி இருக்குமா?

படம்
  கொலைக்கு முன்னும் பின்னும் கொலை செய்தபிறகு சீரியல் கொலைகார ர்கள் அதை நினைத்து வருந்துவார்கள். அவர்களின் உடல் எடை குறையும். ஜேக் டேனியலை சரண்டைவார்கள் என மென்மையான விக்ரமன் பட பார்வையாளர்கள் நினைப்பார்கள். உண்மை அப்படியல்ல. கஃபே ஃபிரெஷ்ஷில் ஃபிரெஞ்சு ஃபிரை ஆர்டர் செய்து கோக்கை சுவைத்தபடி சாப்பிடுவார்கள்.  கொலைக்கு முன்னிருந்த ஆவேசமும் இப்போது இருக்காது. அமைதியாக காணப்படுவார்கள். மற்றபடி ஆபீஸ் முடித்து வீட்டுக்கு போய் எம்எக்ஸ் பிளேயரில் வெப் சீரிஸ் பார்ப்பது, குழந்தைகளோடு விளையாடுவது என்பது போலத்தான் சீரியல் கொலைகாரர்களின் வாழ்க்கை இருக்கும். பெரிதாக கொலையை நினைத்து வருத்தமெல்லாம் படமாட்டார்கள். முதல் இரண்டு கொலைகளுக்கு சற்று பதற்றமான சூழலில் அவர்களின் உடல்மொழி இருக்கும். பிறகு இயல்பான நிலைக்கு மாறிவிடுவார்கள்.  ஆதாரங்களை அழிக்கும் முயற்சி குற்றங்களை பிறர் பார்க்கும் வரை செய்யவேயில்லை என்று சாதிப்பவர்கள்தான் இங்கு அதிகம். சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை கொலைகளை செய்தாலும் கூட அவர்கள் தங்களை அங்கிருந்து தப்பிக்க வைக்கும் விஷயங்களை செய்வார்கள்.  கைரேகைகளை அழிப்பார்கள், தங்களது பொருட்க

கொலைக்கணக்குகளை எழுதி வைக்கும் பழக்கமுண்டா?

படம்
  கொல்லப்பட்டவர்களின் ஈமச்சடங்கு பொதுவாக சினிமாவில்தான் இதுபோன்ற கிளிஷே காட்சிகளைப் பார்க்கமுடியும். இப்படியெல்லாம் காட்சிகளை வைத்தால்தான் பார்ப்பவர்களுக்கு நெஞ்சு முழுக்க அமிலம் பரவும், வில்லனை பழிவாங்கும் ஆவல் பெருகும். உண்மையில் மிகச்சிலர் மட்டுமே இறந்தவர்களின் ஈமச்சடங்களுக்கு, கல்லறைகளுக்கு என்னதான் நடக்கிறது பார்ப்போமே என்று வருகிறார்கள்.  அதுகூட அவர்களின் சந்தோஷத்திற்காகத்தான். நீ என்னால் கொல்லப்பட்டாய், இப்போது குழியில் வைத்து மூடப்போகிறார்கள். ஆனால் உயிருடன் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி சந்தோஷப்படும் ஆகிருதிகள் சீரியல் கொலைகாரர்கள். மற்றபடி கொலை  நடந்த இடம் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே அவர்களை அங்கு பார்க்க முடியும். திரும்ப அதே இடத்திற்கு வந்து நினைவு நரம்புகளை மீட்டுவது சினிமாவில் வேண்டுமானால் பார்க்க நன்றாக இருக்கும். நிஜத்தில் அப்படி நடக்காது.  கொலைக்கணக்கு நோட்டு போட்டு அதனை எழுதி வைக்குமளவு சீரியல் கொலைகார ர்கள் நேர்த்தியானவர்கள் கிடையாது. பெரும்பாலான ஐடியாக்களையே சினிமா, நூல்களிலிருந்து காப்பி அடிக்கும் ஆட்கள், தங்களை மாட்டிக்கொள்ள வைக்கும்படி ஆதாரங்களை அவர்களே உர

பொருளாதாரத்தை அடித்து நொறுக்கும் ஊழல்!

படம்
பொருளாதார வளர்ச்சியை சிதைக்கும் ஊழல்!  இந்தியா, சீனா என இரண்டு நாடுகளிலும் ஊழல் பிரச்னை உள்ளது. ஆனால் சீனா ஊழலையும் மிஞ்சி பொருளாதார வளர்ச்சியில் சாதனை செய்து வருகிறது.  2019ஆம் ஆண்டில் வெளியான ஊழல் பட்டியலில் சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் 80ஆவது இடத்தில் உள்ளன. சீனாவில் ஊழல் பிரச்னை இந்தியாவைப் போலவே இருந்தாலும் 1961ஆம் ஆண்டு தொடங்கி அங்கு பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் வளர்ந்து வருகிறது. 1971 தொடங்கி 22 ஆண்டுகளாக 27 சதவீத பொருளாதார வளர்ச்சியை சீனா கொண்டுள்ளது. உலகளவிலான ஏற்றுமதிச் சந்தையில் இதன் பங்களிப்பு 1948இல் 0.3 இருந்து 2019இல் 13.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.  ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆய்வுப்படி உலகளவில் உற்பத்திச்சந்தையில் சீனா, 28.4 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பங்கு அதேகாலகட்டத்தில் 3% ஆகும்.  இரண்டரை லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் ஏற்றுமதியை சீனா செய்து வருகிறது. இந்தவகையில் கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவின் ஏற்றுமதி பங்களிப்பு 1.7 சதவீதமாக உள்ளது.  இந்தியாவில் ஊழல் என்பது தேர்தல் மூலமாக நாடெங்கும் பரவலாக்கப்பட்டது. இதற்கு எதிராக 1974இல் ஜெயப்பி

விண்கலத்திற்கு சக்தியூட்டும் புதிய பேட்டரி!

படம்
  விண்கலத்திற்கு சக்தியூட்டும் புதிய பேட்டரி! அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, விண்கலத்திற்காக புதிய வகை பேட்டரிகளை கண்டுபிடித்துள்ளது.  நாசா நிறுவனம் விண்வெளிக்கு பல்வேறு விண்கலங்களை தயாரித்து அனுப்பி வருகிறது. இவை செயல்படுவதற்கான ஆற்றல் தேவைக்கு சோலார் பேனல்கள், பேட்டரிகள், அணு பேட்டரிகள் உதவி வருகின்றன.  விண்கலத்தில் உள்ள கேமராக்கள், ரோவர்கள், வழிகாட்டும் வசதிகள் செயல்பட ஆற்றல் தேவை. இதனை சூரிய ஆற்றல் மட்டும் நிறைவு செய்துவிட முடியாது.  ஒளி படாத இருளிலும் ஆராய்ச்சிகள் தடைபடாமல் இருக்க பேட்டரிகள் உதவுகின்றன. கோள்களில் இருளான பகுதிகளில் ஆராய்ச்சி தடைபடாமல் இருக்க கொசுவர்த்தி சுருள் போல மெதுவாக ஆற்றல் செலவிடும்படியான பேட்டரிகள் தேவை. இதற்காக நாசா நிறுவனம், புளோரிடா பல்கலைக்கழகம், டெக்சாஸ் பல்கலைக்கழகம் சார்ந்த இரண்டு குழுக்களுக்கு ஆராய்ச்சி செய்ய நிதியுதவி அளித்து வருகிறது.  செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ஆப்பர்சூனிட்டி, ஸ்பிரிட் என இரண்டு ரோவர்களிலும் சோலார்பேனல்கள், பேட்டரிகள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் இவை செவ்வாயில்  நிலவிய தூசிப்புயல் சூழல்களுக்கு தாக்குப்பிடிக்கவில்லை. அடு

பிணங்களை விதைப்போம்!

படம்
  உடலை மறைக்க சாமர்த்தியம் தேவை கொன்ற உடலை தூக்கிச்சென்று மலைகள் உள்ள இடம், மரங்கள் அடர்ந்த இடம்  என்று போடுவது ஒருவர் தனது அடையாளத்தை எந்தளவு மறைக்கிறார் என்பதைப் பொறுத்ததே ஆகும். பெரும்பாலும் கொலை செய்துவிட்டு உடலை அதே இடத்தில் போட்டுவிட்டு வருவதே எளிதானது. அதை தூக்கிக்கொண்டு அலையும்போது, போக்குவரத்து விதிமீறல்களை செய்து மாட்டிக்கொண்டு சிறைக்கு போன சீரியல் கொலைகாரர்கள் அதிகம். மண்டையிலேயே தாக்கி பெண்ணைத் தூக்கி தொலைதூரம் செல்பவர்கள், வழியில் நல்ல இடமாக பார்த்து வல்லுறவு செய்துவிட்டு கொன்று புதைத்துவிடுவார்கள். இத்தகைய வழக்கை காவல்துறை கையாள்வது கடினம். உடலை துண்டுகளாக்கி வீசுவதையும் இதில் சேர்க்கலாம்.  வாழும் சுற்றுப்புறத்திலேயே புதைப்பது, தூக்கி எறிவது ஆபத்தானது. யாரேனும் ஒருவர் எளிதாக பார்த்துவிட வாய்ப்புள்ளது. கைவிடப்பட்ட வீடு, மறைவாக இருளாக உள்ள பார்க்கிங் பகுதி ஆகியவை இதற்கு உதவலாம். நெடுஞ்சாலையில் உடலை தூக்கி போடுவதற்கு முன்னர் சாலையை கவனிக்கவேண்டும். வாகனங்களில் செல்பவர்கள் கவனித்து விட்டால், சோலி முடிந்துவிடும்.  பிணங்களை விதைப்போம் ஒரே இடத்தில் நிறைய பிணங்கள் கண்டெடுக்கப்பட்