இடுகைகள்

தொன்மையான விதைகள் முளைக்குமா? - பதில் சொல்லுங்க ப்ளீஸ்

படம்
  பதில் சொல்லுங்க ப்ளீஸ்....  விஷமுள்ள பல்லி இனம் உள்ளதா? நிச்சயமாக. கிலா மான்ஸ்டர் (Gila Monster), பியாடெட் லிஸார்ட் (beaded lizard) என இரண்டு விஷம் கொண்ட பல்லி இனங்கள் உண்டு. இவை முறையே வட அமெரிக்கா, மெக்சிகோ, குவாத்திமாலா ஆகிய நாடுகளை பூர்விகமாகக் கொண்டவை. இந்த உயிரினங்களுக்கு விஷம், எச்சிலில் உள்ளது. இவை இரையைக் கடித்தால், விஷம் உடலுக்குள் இறங்கி உயிரைப் பறித்துவிடும்.  தொன்மையான விதைகள் முளைக்குமா? இப்படி நடைபெறுவது அரிதானதுதான். விதைகளை சரியானபடி பக்குவப்படுத்தி அடைத்து வைத்திருந்தால் அவை முளைக்க வாய்ப்புண்டு. கி.மு.155, கி.பி.64 காலத்தில் சேமிக்கப்பட்ட பேரீச்சம் பழத்தின் விதைகள், ஜூடான் பாலைவனத்தில் இருந்து எடுக்கப்பட்டன.  2005இல் இவற்றை மீட்டு எடுத்து விதைத்தபோது, முளைக்கும் திறன் கொண்டிருந்தன. ஆர்க்டிக்கில் கிடைத்த 31,800 ஆண்டு தொன்மையான கேம்பியன் விதைகளை (Campion seeds)ஆராய்ச்சியாளர்கள் மீட்டனர். அதனை விதைத்த முயற்சியும் வெற்றியடைந்துள்ளது.  தகவல் BBC Wildlife  BBC Wildlife   march 2022

உலகளவில் அழியும் நிலையிலுள்ள உயிரினங்களில் முக்கியமானவை.....

படம்
  அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள்! கடந்த பத்தாண்டுகளாக பருவச்சூழல் மாறுபாடுகளால் ஏராளமான உயிரினங்கள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த உயிரினங்களை காக்காவிட்டால், காடுகளின் பல்லுயிர்த்தன்மை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.  தந்த மூக்கு மரங்கொத்தி (ivory billed woodpecker) அமெரிக்கா மற்றும் கியூபா நாடுகளின் ஊசியிலைக் காடுகளில் காணப்படும் மரங்கொத்தி. மரங்களின் பட்டைகளை இடைவிடாமல் அலகால் கொத்துவதால், இதனை நெசவாளர் என பறவையியலாளர்கள் செல்லமாக குறிப்பிடுகின்றனர். 1800 களிலிருந்தே காடுகள் அழிக்கப்பட்டதால் வாழிடம் இன்றி தந்த மூக்கு மரங்கொத்தி அழியத்தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டில் எண்ணிக்கை மிகவும் குறைந்து அழியும் நிலையில் உள்ளது. இறந்துபோன பைன், சிவப்பு மேபிள் மரங்களில் கூட்டை அமைக்கிறது.  வண்டுகளின் லார்வா புழுக்கள், பழங்கள், பருப்புகள் முக்கியமான உணவு. உலகளவில் 1-49 வரையிலான பறவைகள் மட்டுமே இருப்பதாக, சர்வதேச இயற்கைவள பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் (IUCN redlist) தகவல் தெரிவிக்கிறது.  ஸ்பிக்ஸ் மக்காவ் (Spix macaw) அண்மையில் அழிவின் விளிம்பில் உள்ள பறவை என மக்காவ் கிளி இனத்தை

புதிய உயிரினங்கள் - 2021

படம்
  2021 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட புதிய உயிரினங்கள்! உலகின் சிறிய பல்லி, புதிய இன ஆக்டோபஸ், எறும்பு என பல்வேறு புதிய உயிரினங்கள் உலகில் கண்டறியப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. உலகம் முழுவதையும் மனிதன் ஆக்கிரமித்துவிட்டான் என்று தோன்றினாலும் கூட நாம் நினைத்துப்பார்க்க முடியாத ரகசியங்களை இயற்கை கொண்டிருக்கிறது. அப்படி கடந்த ஆண்டில் கண்டறியப்பட்ட உயிரினங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.  எறும்பு (Strumigenys ayersthey) ஈகுவடார் நாட்டில் சாகோ டேரியன் எனும் பகுதியில் புதிய எறும்பு கண்டறியப்பட்டது. யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டக்ளஸ் பூஹெர் எனும் ஆய்வாளர் எறும்பைக் கண்டுபிடித்து அதனை உறுதி செய்தார். எறும்புக்கு ஸ்ட்ரூமிஜெனிஸ்  அயர்ஸ்தே (Strumigenys ayersthey) என்று தனக்கு பிடித்த ராக் இசைக்கலைஞரின் பெயரை சூட்டியிருக்கிறார் டக்ளஸ்.   நிறம் மாறாத பச்சோந்தி (Brookesia nana) நகத்தை விட சற்றே பெரிதாக இருக்கும் பச்சோந்தி (B.nana) இது.  ஆராய்ச்சியாளர்கள் இந்த இனத்தில் ஆண், பெண் என இரண்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மடகாஸ்கரில் உள்ள மழைக்காடுகளில் அமைந்துள்ள மலைத்தொடர்தான் பச்சோந்தியின் இருப்பிடம். பச்சோந்தி
படம்
  இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய பாலூட்டி! இந்தியாவின் விலங்கியல் ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர்கள் (ZSI), புதிய பாலூட்டி இனத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். வெள்ளைக் கன்ன மக்காவ் குரங்கு (White Cheeked Macaque)                                           தான் அது. சீனாவில் 2015ஆம் ஆண்டு இந்த மக்காவ் குரங்கினத்தைக் கண்டறியப்பட்டது. தற்போது, இந்தியாவில், அருணாசலப் பிரதேசத்தின் அஞ்சா மாவட்டத்தில் மக்காவ் குரங்கினத்தை அடையாளம் கண்டிருக்கிறார்கள். சீனாவுக்கும் இந்த இடத்திற்குமான தொலைவு 200 கி.மீ. ஆகும்.  இதுபற்றிய கட்டுரை, சர்வதேச ஆய்விதழான அனிமல் ஜீனில் வெளியாகியுள்ளது.  ”இப்போது நடந்துள்ள கண்டுபிடிப்பு என்பது தற்செயலான விபத்து. இமாலயத்தில் உள்ள தாவர இனங்கள், விலங்கினங்களைப் பற்றி ஆய்வு செய்து வருகிறோம். அதில்தான் குரங்கினத்தைப் பற்றி தகவல் கிடைத்தது” என்றார் அறிவியல் ஆராய்ச்சியாளரான மருத்துவர் முகேஷ் தாக்கூர்.  இந்த ஆய்வுக்குழுவினர் அருணாசலப் பிரதேசத்தில் வாழும் மக்காவ் குரங்கினத்தையும், சிவப்பு பாண்டாவையும் தேடி வந்திருக்கின்றனர். ஆய்வில் கிடைத்த கழிவு, தோல் மாதிரிகளை ஆய்வகத்தில் டிஎன்ஏ சோதன

அடேலி பெங்குவின்களின் வாழ்க்கைப்பாடு!

படம்
  பிட்ஸ்  பெங்குவின்  அன்டார்டிகாவில் பொதுவாக காணப்படும் பெங்குவின் இனத்திற்கு அடெலி பெங்குவின் என்று பெயர். இவை உண்ணவும், குடிக்கவும் கடல்நீரை நாடுகின்றன. சாதாரணமாக ஒருவர் உப்பு அதிகமுள்ள உணவை சாப்பிட்டால் நோய்வாய்ப்படுவார். அடெலி பெங்குவின்கள், கண்களுக்கு மேலுள்ள உறுப்பு மூலமாக அதிகப்படியான உப்பை வெளியேற்றுகிறது. இந்த உறுப்பு வடிகட்டி போல செயல்படுகிறது. ”அடிக்கடி தலையை உதறுவது, தும்மல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான உப்பை வெளியேற்றுகிறது. இப்படி நடக்கும்போது அதனை சுற்றிலும் உப்புநீர் தெறிப்பதைப் பார்க்கலாம்” என்றார் பெங்குவின் ஆராய்ச்சியாளரான டையான் டேநெபோலி.  அடேலி பெங்குவின்களின் உடலிலுள்ள தோல்தான் அவற்றைக் குளிரிலிருந்து பாதுகாக்கிறது. நீரால் உடல் நனைவதை தடுப்பதோடு, உடல் வெப்பம் வெளியேறி செல்லாமல் பாதுகாக்கிறது. உடலில் உள்ள முடிகளை சிறு துண்டுகளாக உள்ள பார்புலஸ் எனும் உறுப்பு ஒன்றாக இணைக்கிறது. இதன் உரோமங்களை வெல்க்ரோ (velcro) அமைப்பு போல இணைக்கிறது. உரோம அமைப்பு, வெளியிலுள்ள காற்று உள்ளே வரும்போது அதனை கதகதப்பானதாக மாற்றுகிறது.  பெங்குவின்களால் பறக்க முடியாது. ஆனால் அதன் கால்களில

குரல் வழியாக நீர்யானை தன் குழுவை அறியுமா?

படம்
  எதிரிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் நீர்யானை! அண்மையில் நீர் யானைகள் எப்படி தகவல் தொடர்பு கொள்ளும் என்பதைப் பற்றிய ஆய்வு நடைபெற்றது. இதில், இந்த உயிரினம் எப்படி தனது நண்பர்கள், அந்நியர்களை அடையாளம் காண்கிறது என்பதே ஆய்வின் முக்கியமான கருத்து.   நிலத்தில் வாழும் பாலூட்டி இனங்களில் முக்கியமானது, நீர்யானை. இதனை பொதுவாக அறிந்தவர்கள் கூட இதன் குணங்களை பற்றி அதிகம் தெரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். பகலில் நீர்நிலையில் இருக்கும் நீர்யானைகள், இரவில் மட்டுமே நிலத்திற்கு வருகிறது. இதனை நாள் முழுவதும் கவனித்து பார்த்து ஆய்வு செய்வது கடினமான பணி. நீர்யானை மட்டுமல்ல பிற விலங்குகளையும் அதன் குணங்களை அறிய அதிக ஆண்டுகள் தேவை. அப்போதுதான்,  கவனித்து கண்காணித்து தகவல்களை சேகரிக்க முடியும்.  பிரமாண்டமான நீர்யானை , அதேயளவு ஆபத்தும் நிறைந்தது. பெரிய உடம்பு என்றாலும் அந்நியர்களைக் கண்டால் முரட்டு கோபத்தோடு தாக்க முயலும். நீர், நிலம் என இரண்டிலும் ஓடக்கூடிய, நின்ற நிலையிலேயே சடாரென திரும்பும் திறன் கொண்ட விலங்கு என்பதை விலங்கு ஆய்வாளர்கள் அறிந்துள்ளனர்.  அருகில் போகாமல் நீர்யானைகளை ஆராய, அதன் ஒலியை ஆய்வு செய்

வியக்க வைக்கும் புறாக்களின் ஞாபகசக்தி!

படம்
  நினைவுகளை மறக்காத பறவை! தொன்மைக் காலத்தில், புறாக்களை தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி வந்ததை பலரும் அறிவோம். புறாக்களை அக்கால மக்கள், தேர்வு செய்ததற்கு அதன் திசையறியும் திறன்தான் காரணம். ஒருமுறை பறந்த வழித்தடத்தை புறா, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் வைத்திருப்பது ஆச்சரியம்தானே? இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புறாவின் நினைவுகூரும் திறனை ஆய்வு செய்து வியப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.  மனிதர்கள் அல்லாத உயிரினங்களின் நினைவுகளை சோதிப்பது சவால் நிரம்பியது.  “இப்படி நடைபெறுவது மிகவும் அரிதானது. ஒரு நிகழ்ச்சி நடைபெற்று இத்தனை ஆண்டுகள் ஆனபிறகும் கூட தேவைப்படும்போது, அதனைப் புறா மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வது  ஆச்சரியப்படுத்துகிறது” என்றார் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக விலங்கியலாளர் டோரா பைரோ.  2016ஆம் ஆண்டு தொடங்கி, புறாவின் நினைவுகள் பற்றிய ஆராய்ச்சியை பைரோ தலைமையிலான ஆய்வுக்குழுவினர் செய்து வருகிறார்கள். இவர்களின் ஆய்வுக்கட்டுரை, புரோசீடிங் ஆஃப் தி ராயல் சொசைட்டி என்ற இதழில் வெளியாகியுள்ளது. இக்குழுவினர் வீட்டில் வளர்க்கும் புறாக்களை 8 கி.மீ. தொலைவிற்கும் அதிகமாக தூரத்திற்கு பறக