இடுகைகள்

நேருவுக்கும் சோவியத்திற்குமான உறவு! கடிதங்கள்- கதிரவன்

படம்
          நட்பா , பணமா ? அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? நாளிதழ் வேலைகள் மெதுவாக செல்கின்றன . பாட நூல்களிலிருந்து கருத்துகளை எடுத்து கட்டுரைகளை எழுதுவது கடினமாக உள்ளது . அடிப்படையில் பொதுவான செய்திகளை எடுத்து எழுதுவது ஈஸி . கடந்த ஞாயிறு குங்குமம் தலைமை உதவி ஆசிரியரான சக்திவேல் சாரின் அறைக்குப் போக நினைத்தேன் . இதை செய்தியாக அவருக்கு போனில் அனுப்பியபோது , போனில் அழைத்து தான் இன்னொரு நண்பரைப் பார்க்கப் போவதாக கூறிவிட்டார் . எனவே , வேறு வழியில்லை . அறையில்தான் ஜாகை . மோகன் அண்ணா ஷேர் மார்க்கெட்டில் வெறியாக இருக்கிறார் . அவர் கேட்டதற்காக நட்பிற்காக எனது கையிருப்பில் உள்ள தொகையை இழக்கவிரும்பவில்லை . அவரிடம் நான் இப்போது பேசுவதில்லை . ட்ரெய்ன் டூ பூஷன் தென்கொரியப் படம் பார்த்தேன் . ஜோம்பி படம்தான் . படத்தில் வைரஸ் பற்றி பேசாமல் நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் உணர்வுகள் , கடமைகள் , பொறுப்புகளைப் பற்றி பேசியிருக்கிறார்கள் . நன்றாக எடுத்திருக்கிறார்கள் . நேற்று இயர்போன் ஒன்றை புதிதாக வாங்கினேன் . பிலிப்ஸ் இயர்போன் வலது பக்கம் கேட்கிறது . ஆனால் இடது பக

சுதந்திரமான மணத்தேர்வு சாத்தியமில்லாத இந்தியா! - கடிதங்கள் - கதிரவன்

படம்
          சுதந்திர மணத்தேர்வுக்கு தடை ! அன்பு நண்பர் கதிரவனுக்கு வணக்கம் . நலமா ? ஞாயிறு மட்டுமே அலுவலக விடுமுறை . நேற்று நான் எழுதிய கட்டுரை ஒன்றை அமேஸானில் பதிவிட்டேன் . மயிலாப்பூர் டைம்ஸ் என்ற பெயரில் மயிலாப்பூரில் அறை எடுத்து வாழ்ந்த அனுபவங்களை கோமாளிமேடை வலைப்பூவில் எழுதி வந்தேன் . உற்சாகம் , துக்கம் , துயரம் , வியப்பு என அனைத்து அனுபவங்களும் இந்த கட்டுரைகளில் உண்டு . குங்குமம் டாக்டர் இதழைத் தொடங்கியது மகிழ்ச்சி என பொறுப்பாசிரியர் ஞானதேசிகனிடம் பேசினேன் . நன்றி என்றார் . மரியாதை நிமித்தமாக பேசிவிட்டு வந்து விட்டேன் . ஹைதராபாத்தில் முஸ்லீம் பெண்ணை தலித் ஒருவர் மணந்தார் என்பதற்காக அவரை கொலை செய்த செய்தியைப் படித்தேன் . கஷ்டம் . ஒரு பெண் குடியரசு நாட்டில் தனக்கான துணையை சுதந்திரமாக தானே தேர்வு செய்யமுடியவில்லை . இப்போது மட்டுமல்ல . இனிமேலும் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நேரும் இறுக்கமான காலம்தான் . நாளிதழ் வேலைகள் தடுமாறுகின்றன . வேகமாக நடைபெறவில்லை . பக்கங்களுக்கு ஏற்ற எழுத்தாளர்கள் இன்னும் கிடைக்கவில்லை . துருக்கி டிவி தொடரான ஹெகிமோக்ளுவைப் பார்த்துக்கொண்

பன்னீர் சோடா வாங்கித்தரும் பாக்கியத்தை அருளிய எழுத்தாளர்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
              ஆண் வாரிசுதான் எல்லாமே ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா |? நேற்று குங்குமம் டாக்டர் இதழை பீடிஎஃப்பாக படித்தேன் . ஹோமியோபதி பற்றிய கட்டுரையைப் படித்தேன் . நின்றுபோன டாக்டர் இதழ் மீண்டும் தொடங்கப்பட்டு வருவது சந்தோஷமான விஷயம் . அறையில் வெப்பம் கூடிவருவதால் , மொட்டைமாடியில் சற்றுநேரம் இருந்துவிட்டு வந்தால்தான் தூங்கவே முடிகிறது . நாங்கள் ஜூன் மாத நாளிதழுக்கான வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டோம் . பாடத்திட்டம் சார்ந்து எழுதும் ஆட்களைக் கண்டுபிடித்து வேலை சொல்லி எழுதி வாங்குவது கடினமாக உள்ளது . என்னுடைய மடிக்கணினி சீராக இயங்குவதில்லை . லினக்ஸ் இயக்குமுறை என்பதால் அதில் நேரும் பிரச்னைகளை விளக்கிக் கூறவும் முடியவில்லை . எழுத்து வேலைகள் தேங்கிவிட்டன . இனி இந்த வேலைகளை க்ளவுட் முறையில்தான் செய்து சேமித்துக்கொள்ள வேண்டும் . அண்மையில் எனக்கு பள்ளிக்கால நண்பர் ஒருவர் போன் செய்து பேசினார் . அவருக்கு இரண்டாவதாகவும் பெண் பிள்ளை பிறந்திருக்கிறது . ஆதங்கமும் , கோபமுமாக பேசினார் . எனக்கு அவருக்கு எந்த முறையில் ஆறுதல் சொல்லுவது என்றே தெரியவில்லை . அமைதியாக க

தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகரிக்கிறது!

படம்
           ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகரிக்கிறது! இந்தியாவில் தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம், சுதந்திரமடைந்த காலம் தொட்டு தமிழ்நாடு மத்திய அரசுக்கு ஈட்டித்தரும் வரி வருவாய் அதிகம். மக்கள்நலத்திட்டங்களால் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி கிடைத்துள்ளது. ஆனால் குழந்தைகள், பெண்களின் ஆரோக்கியம் பற்றிய விவகாரத்தில் இன்னும் பின்தங்கியே உள்ளது. அண்மையில் ஐசிடிஎஸ் - தமிழ்நாடு அரசு இணைந்து செய்த மருத்துவ ஆய்வில் தமிழ்நாட்டில் மதுரை மாநகரம் குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் முதலிடத்தில் உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளில் 2.5 சதவீதம் பேர் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் பாடிமாஸ் இன்டெக்ஸ் என்ற அளவுகோல் மூலம் அங்கன்வாடிகளில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் உள்ள நகரங்களாக மதுரை - 3,322, திருவண்ணாமலை - 2,369, சேலம் - 2,175, கடலூர் - 2,128, திண்டுக்கல் - 1,917 அடையாளம் காணப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து பற்றாக்குறை குறைவாக உள்ள மாநிலங்கள் தூத்துக்குடி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை

கல்விச்சான்றிதழ் மோசடிகளை வெளியே கொண்டு வரும் டிவி ரிப்போர்ட்டரின் அக, புறவாழ்க்கை! - அர்ஜூன் சுரவரம் - நிகில் சித்தார்த்

படம்
                  பேக் டூ பேக்காக நிகில் சித்தார்த்தின் அடுத்த படம் இது.  அர்ஜூன் சுரவனம் நிகில் சித்தார்த், லாவண்யா திரிபாதி இயக்கம் டி சந்தோஷ் இசை சாம் சிஎஸ் கணிதன் படத்தை தெலுங்கு மொழியில் எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தில் உருப்படியான விஷயம். காதல், காதல் தொடர்பான காட்சிகளுக்கு அதிக நேரம் ஒதுக்கவில்லை. படத்திலும் அதற்கான தேவையில்லை. போலி கல்வி சான்றிதழ்களை உருவாக்கி தவறான மனிதர்களை தற்குறிகளை அரசு வேலை, தனியார் வேலைக்கு அனுப்பும் பணியை தனியார் நிறுவனம் மாபியா ஆட்களை வைத்து செய்கிறது. இதை அடையாளம் கண்டுபிடித்து தனது மீதுள்ள களங்கத்தையும் பிற மக்களையும் எப்படி ஒருவன் காப்பாற்றுகிறான் என்பதே.... முதல் காட்சியில் ப ப் ஒன்றில் கார் கீ போல தெரியும் ஸ்பை கேம் ஒன்றை பொறுத்தி காட்சிகளை படம் பிடிக்கிறார்கள். அதை ஒருவன் தட்டிவிட்டுவிட அது நாயகி கையில் மாட்டுகிறது. அவள் அதை உடனே தரமாட்டேன் என நிறைய விவரங்களைக் கேட்கிறாள். அதற்கு அர்ஜூன் போலியான தகவல்களைக் கொடுக்கிறான். பிறகு சூழல் என்னாகிறது என்றால், அதே டிவி சேனலில் பப்பில் குத்து ஆட்டம் ஆடிய நாயகியும் சேர்கிறாள். பிறகுதான் அர்ஜூன் சொன்ன பொய

காதலுக்காக சாராய வியாபாரியுடன் மோதும் காதலன்! - வீடு தேடா - நிகில் சித்தார்த், பூஜா போஸ்

படம்
                      வீடு தேடா நிகில் சித்தார்த், பூஜா போஸ்  இயக்குநர் சின்னி கிருஷ்ணா இசை சக்ரி         திருப்பதியில் தனது அக்கா, மாமாவுடன் வாழ்ந்து வருகிறான் கத்தி சீனு. சீனுவைப் பொறுத்தவரை காதல் கடிதம் கொடுப்பதே முதல் பணி. பெண் ஒகே என்றால் மஜாப்பா மஜா என வாழ்ந்து வருகிறான். இந்த நேரத்தில் அவனுக்கு லவ்குமார் என்ற மனிதர் கிடைக்கிறார். அவரை ஏமாற்றி உடை, உணவு என அத்தனையும் ரெடி செய்துகொண்டு திருமணம் ஒன்றுக்கு செல்கிறார்கள்.    அங்குதான் சீனு, மேக்னா என்ற வெள்ளை அழகியைப் பார்க்கிறான். பார்த்தவுடனே பென் ஹியூமன் தமிழ் பாப் பாடல் வரியைப் போல ஃப்யூச்சர் ஆத்துக்காரி என மனதில் விதை விழுந்துவிடுகிறது. அப்புறம் என்ன அந்த பெண்ணை வளைக்க தன்னால் முடிந்த அத்தனையும் செய்கிறார். இத்தனைக்கும் அந்த பெண் குடிமைத்தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கிறார். காதல் கூடாது என்பதே ஒரே கொள்கை. எப்படியாவது அவளை கரெக்ட் செய்துவிட முயல்கிறான் சீனு. அந்த பெண்ணும் அவனின் கடி ஜோக்குகளுக்கு மயங்கி சிரித்து தனது சோகங்களை மறந்துவிடும் நேரத்தில் அவளது தோழிகள் அவள் சந்தோஷத்தைப் பொறுக்காமல் நீ காதலிக்கிறே இது பாவம் கிறிஸ்துவ பாதிர

சவால் விடும் காதலிக்காக நண்பர்களை ஏமாற்றி பாங்காங் செல்லும் அக்மார்க் காதலன்! -டிஸ்கோ -நிகில் சித்தார்த், சாரா சர்மா

படம்
                 டிஸ்கோ நிகில் சித்தார்த், சாரா சர்மா இன்னும் உங்களின் அபிமான நட்சத்திரங்கள் பலர் தெலுங்கு கதை, இயக்கம் - ஹரி கே சந்தூரி டிஸ்கோ, நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்க கூடியவன். அதேசமயம் அவனுக்குத் தேவையென்றால் நண்பர்களென்று பாராமல் சித்திரவதை செய்தாவது தேவையானதைப் பெற்றுக்கொள்ள தயங்காத ஆள். அப்படிப்பட்டவன், நண்பன் ஒருவனுக்கு ரௌடி ஒருவரின் குடும்பத்தில் திருமணத்தை செட் செய்கிறான். பிறகு, அதற்காக பார்ட்டி செய்வோம் என நண்பர்களை பாங்காங்கிற்கு அழைத்து செல்கிறான். இதற்கான பணம் வங்கியில் கடன் வசூலிக்கும் வேலையில் இருந்து கிடைக்கிறது. கிடைக்கிறது என்பதை விட பாஸ்கர பட்லா என்ற சிறு ரௌடியின் ஆட்களை அடித்துப் புரட்டி பணத்தைப் பெறுகிறார்கள். அந்தப் பணம் தெலுங்கு பேசும் டான் ஒருவருக்கு சொந்தம் என பில்ட் அப் கொடுக்கிறார்கள். உண்மையில் அந்த பணம் யாருடையது, அவர் பாங்காங்க் செல்லும் நான்கு நண்பர்களையும் பழிவாங்கினாரா என்பதே கதை. படம் பாதி நேரம் எதைநோக்கி செல்கிறது என்றே தெரியாமல் பயணிக்கிறது. அந்த நேரலத்தில் எல்லாம் நம்மை காப்பாற்றுவது நிகில் சித்தார்த்தான். அவர் தான் படத்தில் டிஸ்கோ. இவரின் அ