இடுகைகள்

அனைத்து சாலைகளும் அக்ரோபோலிஸ் நோக்கி…

படம்
  அனைத்து சாலைகளும் அக்ரோபோலிஸ் நோக்கி… அமைந்துள்ள இடம் க்ரீஸ் கலாசார அங்கீகாரம் 1987 டிப்ஸ் அனைத்து இடங்களையும் பார்க்க காம்போவாக டிக்கெட் எடுத்தால் நல்லது.   க்ரீசிலுள்ள ஏதேன்ஸ் நகரம். இந்த நகரத்தை காக்கும் கடவுள் பெயர் ஏதேனா.   ஏதேன்ஸ் நகரம், அங்கு வாழும் மக்களுக்கு முக்கியமானது. வணிகம், ராணுவ அணிவகுப்பு, ஜனநாயகம் என அனைத்திற்குமானது. இங்கிருந்து நீங்கள் சுற்றுலாவை தொடங்கலாம். ஏதேன்ஸ் நகரம் , 5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.   இங்குள்ள பார்த்தினோன் கோவிலில் ஏதேனாவின் பெரிய சிலை அமைந்திருந்த்து. இங்குதான் கடவுளை வணங்குபவர்கள் தங்களது பரிசுப் பொருட்களை வைப்பார்கள். பின்னாளில் ஒட்டமான், வெனிடியன் படையினர் செய்த தாக்குதலில் ஏதேனா சிலை சிதைந்துவிட்டது. அப்படி சிதைந்தும் மிச்சமிருக்கும் சிலைத்துண்டுகளை வைத்து மீதியை நீங்கள் உங்கள் கற்பனை நினைவுகளில் நிரப்பிக்கொள்ளலாம். இங்கு செல்ல முதலில் மெட்ரோ   ரயில் பிடித்து அக்ரோபோலி ரயில் நிலையத்திற்கு செல்லவேண்டும். அங்கு பார்த்தினோன் கோவிலைப் பிரதிபலிக்கும் மார்பிள் கற்களை வைத்திருப்பார்கள். அதைப் பார்த்து ரசித்துவிட்டு அப்படியே தெற்க

மதமும், மாந்த்ரீகமும் மனிதர்களை வேட்டையாடியபோது....

படம்
அசுரகுலம் - ரத்தசாட்சி  நிறைய கொலைகளை செய்ய திட்டமிட்டுள்ள தொடர் கொலைகாரர், நான்கு இடங்களையாவது தேர்வு செய்து கொல்வார்.  உள்ளூர், வெளியூர் என இடங்கள் மாறுபடுவது உண்டு. செய்யும் கொலைகளுக்கான இடைவெளி என்பது மெல்லல குறையும். இது கொலை செய்வதன் மகிழ்ச்சி காரணமாக ஏற்படுவது. மகிழ்ச்சியும் அதிகம் கிடைக்கவேண்டுமென்பது அழுத்தமாக மாறும்போது கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கொலை செய்வதற்கான இடைவெளி இருக்கிறதென்றால், கொலைகாரர் நேரம், தயாரிப்பு, திட்டமிடல் ஆகியவற்றை செய்துகொண்டிருக்கிறார் என உறுதியாக கூறலாம். கொலை செய்யும் தொடர் கொலைகாரர்களுக்கு நோக்கம் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். கொலை செய்தால் மனது சந்தோஷமாக இருக்கிறது என ஒருவர் சொன்னால் அவரை நீங்கள் என்ன சொல்வீர்கள்? புணர்ச்சி, திருட்டு, கொள்ளை என லட்சியத்திற்காக மனிதர்களை கொல்பவர்களே அதிகம். முதல் சீரியல் கொலைகாரர் யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் வந்திருக்கும். இங்கிலாந்தில் மக்களை இரவில் தெருவிறங்கி நடக்கவே யோசிக்கவைத்த கொலையாளி  ஜேக் தி ரிப்பர்.ஆறு வாரங்களில் நான்கு கொலைகளை செய்து உலக ஊடகங்களை லண்டனின் ஒயிட்சாப்பல் பகுதியை நோக்கி திர

ரேடார் எப்படி செயல்படுகிறது?

படம்
  quantum radar, china ரேடார் எப்படி செயல்படுகிறது? இரண்டாம் உலகப்போர். அதுதான் பிரிட்டனுக்கு ரேடாரின் முக்கியத்துவத்தை சொன்ன முக்கியமான வரலாற்று காலகட்டம். அப்போது ஜெர்மனியின் அதிபர் ஹிட்லர், தன்னை உலக அதிபராக நினைத்து பல்வேறு நாடுகளை ராணுவத்தால் ஆக்கிரமித்து வந்தார். அந்த வகையில் பிரிட்டனை எப்படியாவது அடக்கி ஆளவேண்டும் என்பது அவரது ஆசை.   வெறும் ஆசை மட்டுமல்ல, அதற்கான தயாரிப்புகளோடுதான் அவர் கனவையும் கண்டார். ஜெர்மனியின் விமானங்கள், கப்பல்கள் களம் கண்ட போர்களில் எல்லாம் வெற்றிவாகை சூடின. நோக்கம் உயர்வாக இருந்தாலும் அதைநோக்கிய பயணத்திற்கு உழைப்பும் முக்கியம். அதுவும் ஹிட்லரிடம் இருந்தது. ரேடியோ அலைகளை வானில் ஏவி அது விமானத்தில் பட்டு திரும்பி வந்தால் வல்லுநர்கள் மூலம் விமானத்தின் அளவு, வேகம், தூரம் என அனைத்தையும் கணக்கிட முடியும். இதற்கு பயன்படுவதுதான் ரேடார். ரேடியோ டிடெக்ஷன் அண்ட் ரேஞ்சிங். 1885ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து இயற்பியலாளர் ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வேல்   ரேடியோ அலைகள் உலோகங்களில் மோதும்போது பிரதிபலிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்தார். ஏறத்தாழ ஒளி அலைகளின் இயல்பும் அதுதான

விஷம் கொண்ட தாவரங்கள்- விஷத்தை எப்படி பக்குவப்படுத்தி உண்பது?

படம்
  விஷம் கொண்ட காய்கறிகள் நாம் உண்ணும் நிறைய காய்கறிகள் விஷத்தன்மை கொண்டவைதான். அதாவது மனிதர்களின் செயல்பாடு இல்லாமலேயே இயற்கையாகவே தன்னை பாதுகாத்துக் கொள்ளும் விஷம் உண்டு. இவற்றை இன்றுவரை மனிதர்கள் விஷம் என்ன விட்டுவிடவிலை. அதை பதப்படுத்தி பக்குவப்படுத்தி மருந்துகள், உணவு, வாசனை திரவியங்கள் என பல்வேறு வகையில் பயன்படுத்தி வருகிறார்கள். இதைப்பற்றி பார்ப்போம் வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகள் விஷத்தன்மை கொண்ட கொட்டைகளை சாப்பிட்டு வந்தனர். இரண்டு கொட்டைகளே ஒரு விலங்கை கொல்ல போதும். இப்படி விஷம் கொண்ட தாவர விதைகளை சைகாட்ஸ் என்று பெயர். இதிலுள்ள விஷம் சைகாசின் என அழைக்கப்படுகிறது. குடலில் சென்று செரிமானம் ஆகும்போது விஷம் வெளிப்பட்டு குடல் செல்களை தாக்குகிறது. பிறகு கல்லீரலையும் பாதிக்கிறது. குடல் எரிச்சல், கல்லீரல் செல்கள் இறப்பு, கல்லீரல் செயலிழப்பு ஆகியவற்றால் மனிதர்களுக்கு இறப்பு நேர்கிறது. பழங்குடிகள் இதை அறிந்துதான் விஷம் வாய்ந்த விதைகளை நீரில் அலசி நிலத்தில் துளையிட்டு அதை ஒரு வாரம் அல்லது சில மாதங்கள் வைத்திருந்து எடுத்து உலர்த்தி பிறகு உண்கிறார்கள். இந்த செயல்முறையில் தாவரத

கிராமத்தை அழித்த களிமண் எரிமலை - இந்தோனேஷியா

படம்
  களிமண் எரிமலை பெரிய மலை உச்சியில் எரிமலை பொங்கி வழிந்து புகையும், பாறைக்குழம்பும் வெளியே வருவதை டிவி, நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள். இந்தோனேஷியாவில் உள்ள சித்தோர்ஜோவாவில் களிமண் எரிமலையில் பாறைக்குழம்பு வெடித்து வெளியாகிறது. எண்ணெய் தோண்டி எடுக்க ஒரு தனியார் நிறுவனம் ட்ரில்லரை உள்ளே விட்டு துளையிட்டது. அப்போதுதான் எரிமலைக் குழம்பு தலைகாட்டியது. அப்போது 155 மைல் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது அதன் விளைவுதான் எரிமலைக் குழம்பு என நிறுவனம் சொன்னது. உலகம் முழுக்க ஆயிரம் களிமண் எரிமலை கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இந்தோனேஷியாவில் கண்டறியப்பட்டது, மனித செயல்பாடுகளால் உருவானது.   2006ஆம் ஆண்டு மேமாதம் 28ஆம் தேதி துளையிட்டபோதுதான் முதல்முதலில் லூசி எரிமலை உருவானது தெரியவந்தது. நீர், நீராவி, வாயு என முதலில் வெளியானது. பிறகு முழுக்க மண்ணும், உலோகமும் வெளியேறத் தொடங்கியது.     ஒருநாளுக்கு 1,80,000 க்யூபிக் மீட்டர் களிமண் வெளியேறத் தொடங்கியது. 2011ஆம்ஆண்டு வெளியாகும் களிமண் அளவு 10 ஆயிரம் க்யூபிக்காக குறைந்தது.   அங்கிருந்த மக்களை அரசு காலிசெய்யச் சொல்லியது. 30 ஆயிரம் பேர் வீட்டை காலிசெய்த

பார்க்க வேண்டிய இடம் - மான்ட் செயின்ட் மிச்செல் , பசிபிக் கடலில் ஏற்படும் மாசுபாடு

படம்
  மான்ட் செயின்ட் மிச்செல் பிரான்ஸ் நாட்டில் நார்மாண்டியில் அமைந்துள்ள தீவு. மத்திய காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் தீவுக்கு அழகு சேர்க்கின்றன. பெரும்பாலான கட்டிடங்கள் எல்லாமே கிரானைட்டில் உருவாக்கப்பட்டவை. அனைத்தும் மலைமீது அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஜாலி சுற்றுலா செல்ல நினைத்தால் காலையில் நேரமே எழுந்தால் சூரியக் கதிர்கள் உங்கள் மீது படும்போது புகைப்படம் எடுக்கலாம். அதை இன்ஸ்டாகிராமில் பதியலாம். நேரம் ஆனால் நீங்கள் மட்டுமல்ல, பிறருக்கும் தூக்கம் கலைந்துவிடும். எனவே நிறைய பேர் வந்துவிடுவார்கள். நெரிசலில் புகைப்படம் எடுத்து நமது வரலாற்றை நிரப்பவேண்டியிருக்கும். கார்களை இரண்டு கி.மீ. தூரத்தில் நிறுத்திவிடவேண்டிய நிபந்தனை உண்டு. தொன்மை கட்டுமானங்களை மக்களின் புகைப்பட பரவசத்திலிருந்து காப்பாற்றவே இந்த ஏற்பாடு. ஆண்டுக்கு 3 மில்லியன் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து போகிறார்கள். மான்ச் செயின்ட் மிச்செலில் அற்புதமாக கட்டப்பட்ட தேவாலயம் உண்டு. அடுத்து, இங்கு பாறைகளை பிளந்து உருவாக்கப்பட்ட இடம், போர்க்காலத்தில் மக்கள் ஒளிந்துகொள்ள பயன்பட்டது. பிறகு மக்களை சிறை வைக்கும் சிறையாகவும் பயன்பட

குற்றம் செய்தது யார் என கண்டறிவது எப்படி?

படம்
  ரத்தசாட்சி ஒருவர் இன்னொருவரை கத்தியால் குத்திக்கொல்கிறார். சுத்தியால் தலையை சிதைக்கிறார். அல்லது கோடாரி வைத்து நெஞ்சை அல்லது கபாலத்தை பிளந்து கொல்கிறார். இப்படி கொல்லும் முறையைப் பொறுத்து சில பாணிகள் அமைந்துவிடும். செல்வராகவன் படம் என்றால் நெருப்பு டான்ஸ் எங்கேப்பா என்கிறார்களே அதுதான். ஆனால் இப்படி இந்த பாணி கொலை என்று சொல்ல முடியாதபடி கொலைகளும் நிறைய நடந்தபடி உள்ளன. காவல்துறையினரும் ஏபிசி என வரிசைமுறைப்படி பழகிவிட்டதால், இது அவனாக இருக்குமோ, இல்லை இவனாக இருக்குமோ என குழம்பும்படி ஆகிவிட்ட வழக்குகளும் ஏராளம் உண்டு. இங்கு நாம் அதுபோல சில விஷயங்களைப் பார்ப்போம். நியூயார்க்கில் ரோசெஸ்டர் நகரம். 2005ஆம் ஆண்டு. இங்கு ராபர்ட் ஸ்பாஹால்ஸ்கி என்பவர் தான் நான்கு கொலைகளை செய்ததாக கூறி சரண் அடைந்தார். காவல்துறையினருக்கு எப்போதும் ஈகோ அதிகம். நீ வந்து சரணடைந்தால் நாங்கள் விசாரிக்காமல் இருக்க முடியுமா விசாரித்து, முதலில் இரண்டு வழக்கு, பிறகு இரண்டு வழக்கு என சோதித்து உண்மையை அறிந்தனர். மூன்று கொலைகள் நடந்த ஆண்டு 90 முதல் 91 என ஓராண்டு என்றால் அடுத்த கொலை பதினைந்து ஆண்டுகள் கழித்து நடைபெற்றுள